ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!- Part 3 (Post No.10,209)

Jungle babblers , mostly fly in a group of Seven

Research article WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,209

Date uploaded in London – 14 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ம்ருகய  10-49-5

காற்றில் வசிக்கும் ஒரு அரக்கன்

4-16-13 மந்திரத்திலும், 8-3-19 மந்திரத்திலும் இச் சொல் வருகிறது

நாலாவது மண்டலத்தில் பிப்ரு என்னும் மற் றொரு அரக்கனுடன் சேர்த்துப் படுகின்றனர் ரிஷிகள்; அதே மந்திரத்தில் 50,000 கருப்பு அரக்கர்களை அழித்தான் என்பதில் வெளிநாட்டார் விஷம் கலந்து எழுதுகின்றனர். அவர்களை பூர்வ குடி மக்கள் என்று வருணிக்கின்றனர். உலகில் மனிதர்கள் தோன்றியது முதல் போர்கள் நடந்து வருகின்றன. வெளிநாட்டு பத்திரிகைகளில் வெளியாகும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலகில் எப்போதும் குறைந்தது 50 இடங்களில் போர்கள் அல்லது மோதல்கள் நடப்பதைக் காட்டுகின்றன. அவர்களுக்கு ஆயுதங்களை விற்பதில்தான் மேலை நாடுகள் உயிர் வாழ்கின்றன. எந்த சண்டையிலும் ஒருவர் எதிரி என்னும் பெயரில் இருப்பர். ரிக் வேதத்தில் வரும் எதிரிகள் அனைவரையும் பூர்வ குடி மக்கள் , கறுப்பர் என்று வெளிநாட்டினர் முத்திரை குத்திவிடுகின்றனர்!!

நல்ல வேளை ! வெள்ளைக்காரன் முதலில் தமிழைப் படிக்கவில்லை. கால்டுவெல்கள் முதலிய பேர்வழிகள் மதத்தைப் பரப்ப மட்டுமே படித்தனர் . நம் தமிழ் இலக்கியத்தில் சேர, சோழர் ,பாண்டியர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதும் பல்லாயிரம் பேரைக் கொன்றதையும் புலவர்கள் பாடி வைத்துள்ளனர். அவர்களையும் ஒரு பகுதி ஆரியர் மற்றோரு தரப்பு திராவிடர் என்று முத்திரை குத்தி இருப்பார்கள்!! 1400 ஆண்டுகளுக்கு தமிழர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு செத்தார்கள்; உலகில் ஒரே இனத்தில் இப்படி ஒரு பூசலை வேறு எங்கும் காண முடியாது ! மேலும் எப்போதும் எதிரியையோ , தீமை யையோ ‘கருப்பு’ என்று வருணிப்பது இந்திய இலக்கிய மரபு. தீமையை இருளுக்கு ஒப்பிட்டு தீபாவளி கொண்டாடுவர். மெய்ப்பொருள் நாயனாரைக் கொல்ல வந்த தமிழனை- முத்தநாதனை – ‘மனதினுள் கருப்பு வைத்து’ என்றே சேக்கிழார் பெருமான் படுகிறார். ஆக கருப்பு (கிருஷ்ண) என்று இம்மந்திரத்தில் சொல்லப்படுவது கறுப்பர் அல்லர்; தீயோர் என்றே பொருள் கொள்ள வேண்டும் .

Xxx

கவி 10-49-3

உசன கவியின் தந்தை ; இது கோத்திரப் பெயர்; ஆதலால் சுக்ராச்சார்யார் வரை இதே பெயர் பலருக்கும் உண்டு .  மேல் விவரம் உசனன் என்ற தலைப்பில் முன்னரே கொடுத்துள்ளேன்.

Xxx

ஸ்ருத வர்ணன் , பட்கிரிபி  10-49-5

ஸ்ருத வர்ணன் என்பவனை வாரி வழங்கும் மன்னன் என்று சொல்லிவிட்டு பட்கிரிபி என்பவன் ஏ தோ ஒரு அரக்கனாக இருக்கலாம் என்று சொல்லி முடித்து விடுகின்றனர். அந்தப் பெயர் வேறு எங்கும் வரவில்லை. இவ்வாறு பல புதிர்கள், புரியாத விஷயங்கள் ரிக் வேதம் நெடுகிலும் உளது !

xxxx

10-56-2 வாஜினன்

இந்தச் சொல்லுக்கு பொதுவாக குதிரை  என்று பொருள்.ஆனால் இங்கே  கவி பாடிய புலவரின்  மகனான வாஜிநன் என்பவனாக இருக்கலாம் என்று எழுதுகின்றனர்

xxx

அசு நீதி, அனுமதி, உசீனராணி 10-59-5, 10-59-10

இவை எல்லாம் ஈமச் சடங்கு விஷயங்களில் வரும் பெயர்கள். மரணச் சடங்குகள் பற்றிய எல்லாம் புதிராகவே உள்ளன . எதற்கெடுத்தாலும் ஐரோப்பாவில் உள்ள சம்பந்தமில்லாத விஷயங்களைத் தொடர்புபடுத்தி ஆரியர்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு உண்டு என்று கதைக்கும் வெள்ளைத் தோல்கள் , நூற்றுக் கணக்கான விஷயங்களில் ஒன்றையும் காட்ட முடிவதில்லை. குறிப்பாக சோம ரசம் பற்றி சுமார் ஆயிரம் இடங்களில் வேதம் பேசுகிறது ; மரணம் , கல்யாணம் பற்றி பல விஷயங்களைச் சொல்கிறது; அவற்றைப்பற்றி எதையுமே ஐரோப்பாவுடன் தொடர்பு படுத்தமுடிவதில்லை.

அசுநீதி என்பவர் யமனா அல்லது மரணச்  சடங்குகளின் அதி தேவதையா என்று கேள்வி எழுப்புகின்றனர்.. ஆனால் இந்துக்களின் ‘மரணச்  சடங்கு தேவதை’ என்பது உறுதி. வாழ்க்கைக்கான வழி , வாழ்க்கைக்கான வழிகாட்டி என்பது இதன் பொருள். இது போல எகிப்தின் மரணச் சடங்குகளிலும் உண்டு.

அனுமதி என்பதை தமிழில்கூட நாம் இப்போது permission பெர்மிஷன் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். ‘அவி’ (Havis) களை விருப்பத்துடன் ஏற்று கடவுளுக்கு அனுமதிக்கும் தேவதை இது. கருணை மிக்க தேவதை என்பது இதன் பொருள். வெள்ளைக்காரர்கள் இவ்விருவரையும் தேவதைகளாக காணாமல் (personification) உருவகம் என்று நினைக்கின்றனர். இதே துதியின் முதல் மந்திரத்திலேயே மரண தேவதை நிர்ருதியின் பெயர் வந்துவிடுகிறது. அதை அவர்கள் கவனிக்கத்  வறிவிட்டனர்

உசீனராணியை உசீரநா என்பவனின் மனைவியாக்கி அவர்கள் இப்போதும் மத்திய தேசத்தில் வாழ்வதாக அடிக்குறிப்பில் எழுதுகின்றனர். அத்தோடு இது புரியாத மந்திரம் என்ற வழக்கமான பல்லவியையும் சேர்த்துவிட்டனர்! உண்மையில் சொல்லப்போன்னால் அர்த்தம் தெரியாத ஆராய்ச்சிக்குரிய சொல் இது . பிற்காலத்தில் மத்திய தேச மக்களுக்கு இந்தச் சொல் இருப்பதாக எழுதுவது எப்படி ரிக்வேத காலத்துடன் பொருந்தும்?

இதுவும் ஈமச் சடங்கு தொடர்பானது என்றே நான் கருதுகிறேன்; காரணம் முதல் மந்திரமும் மரணம் தொடர்பான தேவதை. இந்தக் கடைசி மந்திரமும் மரணம் தொடர்பானது. இடையிலும் மரண விஷயங்களையே பேசுகின்றனர்

Xxxx

அசமாதி , பஜேரத வம்சம் ,10-60-2

பஜேரத என்பது இளவரசன் பெயரா, நாட்டின் பெயரா என்றே தெரியவில்லை என்று அடிக்குறிப்பில் எழுதிவிட்டனர்!!!!

அசமாதி என்பவரை அரசர் என்கிறார் சாயனர். ஆனால் இதன் பொருள் ‘சமம் இல்லாத’ என்பதாகும். ஆக இங்கும் வெள்ளைக்காரன் கணக்குப் படி பொருள் தெரியவில்லை! ஆனால் பெயர்களில் இப்படி இருப்பதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. சாயனர் சொல்லுவது அக்காலத்தில் கிடைத்த, நமக்கு இப்போது கிடைக்காத, ஆதாரத்தை வைத்து எழுந்ததே. ஒரு பிரபல ரிஷியின் பெயர் ‘மான் கொம்பன்’= ரிஷ்ய ச்ருங்கன் = கலைக்கோட்டு முனிவன் என்பது கம்ப ராமாயண  மொழிபெயர்ப்பு.

இன்னொரு முனிவரின் பெயர் எட்டு கோணல் = அஷ்டாவக்ரன் ; அப்பா, தப்பாக வேதத்தை உச்சரித்ததால் கர்ப்பப்பையிலேயே உடலை சுருக்கி கோணல் மாணலாகப் பிறந்த ரிஷி . (இதுபற்றி ஏற்கனவே வேத ஒலிகளின் சக்தி பற்றிய கட்டுரையில் எழுதி இருக்கிறேன்)

Xxx

SEVEN BIRDS, SEVEN SISTERS, JUNGLE BABBLERS.

10-67-7 காட்டுப் பன்றி BOAR- 10-67-7

உஷ்ணத்தினால் வியர்த்து, பிருஹஸ்பதி, வலிமையும் வீரமும் உள்ள காட்டுப் பன்றிகளுடன் ஏராளமான செல்வத்தைக் கைப்பற்றினான் .

இந்த மந்திரத்தில் காட்டுப் பன்றிகள் என்பன பலம் வாய்ந்த மருத் தேவர்கள் அல்லது நல்ல நீரைக் கொண்டு வருபவர்கள் என்று அடிக்குறிப்பு கூறுகிறது. சாயனர் ‘நல்ல நீரைக் கொண்டு வருவோர்’ என்றே எழுதுகிறார். ஏன் காட்டுப் பன்றி உவமை என்று வினவத் தோன்றுகிறது .

Xxxx

ஏழு பறவைப் பாடகர்கள் 10-71-3

இங்கு 7 பறவைகள் பாடகர்கள் என்ற குறிப்புக்கு பறவை இயல் வல்லுநர் Mr Dave தவே இது வங்காளத்தில் உள்ள ஏழு சகோதரிகள் என்ற பாடும் பறவை வகை என்கிறார். மர்றவர்கள் காயத்ரி முதலான 7 யாப்பிலக்கண சந்தங்கள் என்பர்.

இந்தப் பாட்டே  வினோதமானது  ‘ஞானம்’ என்ற தலைப்பில் அமைந்த ஒரே துதி இதுதான். இதை பிரம்ம ஞானம் என்று சாயனர் கூறுகிறார் . அவ்வகையில் பார்த்தாலும் ஞானிகளை பரம ஹம்சத்துடன் (அன்னம் என்னும் பறவை) ஒப்பிடுவதால் பறவை என்பதே சரி என்று துணியலாம்.

Xxx

To be continued………………………..

TAGS – பேய்கள், தேவதைகள், PART 3

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: