உலக இந்து சமய செய்தி மடல் 17-10-2021 (Post No.10,223)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 10,223

Date uploaded in London – 17 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை  அக்டோபர் 17-ம் தேதி 2021

ஆம் ஆண்டு

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்

வங்கதேசத்தின் கொமில்லா நகரில் உள்ள இந்து கோவிலில் குர்ஆனை அவமதித்ததாக  வதந்தி பரவியதையொட்டி, அந்த நகரில் இந்து கோவில்களும், துர்கா பூஜை பந்தல்களும் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டன.

இதனையடுத்து, கொமில்லாவிற்கு அருகிலுள்ள மேலும் மூன்று நகரங்களில் கோவில்களும், துர்கா பூஜை பந்தல்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கொமில்லா பகுதியில் தொடங்கிய கலவரம் மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இந்தக் கலவரத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், 22 பேர் காயமடைந்துள்ளதாகவும் வங்கதேச ஊடகங்கள் கூறுகின்றன.

இதையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த வங்கதேசத்தின் 22 மாவட்டங்களில் பாராமிலிட்டரி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வங்கதேச காவல்துறை, இந்து கோவில்கள் மற்றும் துர்கா பூஜை பந்தல்களைச் சேதப்படுத்தியது தொடர்பாக 43 பேரை கைது செய்துள்ளனர்.

, வங்கதேசத்தில் இந்து கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, இந்திய தூதரகம் வங்கதேச அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், “வங்கதேசத்தில் மதக் கூட்டங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த சில செய்திகளை நாங்கள் பார்த்தோம். வங்கதேச அரசாங்கம் அதற்கு  எதிராக நடவடிக்கை எடுத்திருப்பதையும் கவனத்தில் கொண்டுள்ளோம். துர்கா பூஜை கொண்டாட்டங்கள் வங்கதேசத்தில் தொடர்கின்றது. அதிகாரிகளுடன் நமது தூதரகம் நெருங்கிய தொடர்பில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஹிந்து கோவில்களில் துர்கா பூஜை விழா தடையின்றி நடக்கவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், 22 மாவட்டங்களில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஹிந்து கோவில்களை தாக்கியவர்கள் எம்மதமாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: வங்கதேச பிரதமர்

வங்கதேசத்தில் துர்கா பூஜை பந்தலுக்குள் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி சிலைகளை சேதப்படுத்தியது. கலவரத்தில் நால்வர் உயிரிழந்தனர். ஹிந்து கோவில்களை தாக்கியவர்கள் எம்மதமாக இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார்.


கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க 22 மாவட்டங்களுக்கு துணை ராணுவப் படை அனுப்பப்பட்டுள்ளது.

தசாரா விழாவுக்காக டாக்காவில் உள்ள தாக்கேஸ்வரி ஹிந்து கோவில் நிகழ்ச்சியில்  பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்றார். “குமில்லாவில் நடந்த கலவர   சம்பவங்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. யாரும் தப்ப முடியாது. அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.” என்றார்.

Xxxx

நவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே

நவராத்திரிவிழாவை, இலங்கை பிரதமர் ராஜபக்சே, தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் அக்டோபர் 14 ம் தேதி நடந்த நவராத்திரி விழாவில், ராஜபக்சே, குடும்பத்தினர், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி , மற்றும் நண்பர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் கலந்து கொண்டனர். கொலு வைக்கப்பட்டு பாரம்பரிய பூஜை, வழிபாடுகள் நடந்தது.

டுவிட்டரில் ராஜ பக்சே பதிவேற்றியது, எனது நீண்டகால நண்பர் மற்றும் சகாக்களுடன் நவராத்திரி கொண்டியது மிகவும் மகிழ்ச்சி. அனைவருக்கும் பாதுகாப்பான, வளமான , ஆசீர்வதிக்கப்பட்ட நவராத்திரியாக அமைய வாழ்த்துக்கள். கடவுளின் ஆசிர்வாதங்களுடன் நாம் பயணிக்கும் பாதையில் வெற்றி ஒளிர வேண்டும். இவ்வாறு ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சாமி, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் 2 நாள் தனிப்பட்ட பயணமாக இலங்கை சென்றுள்ளார். கொழும்புவில் உள்ள பிரதமர் ராஜபக்சேவின் அலுவலக இல்லத்தில் நடந்த நவராத்திரி பண்டிகை கொண்டாட்டத்தில் சுப்பிரமணிய சாமி கலந்து கொண்டார்.

தனது இல்லத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் தனது நண்பர் சுப்பிரமணிய சாமி கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக ராஜபக்சே தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

தனது பயணத்தில் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சாமி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார்.

xxxxx

ராமர், கிருஷ்ணருக்கு தேசிய கவுரவம்; சட்டம் நிறைவேற்ற அலகாபாத்  ஐகோர்ட் உத்தரவு

 72

‘இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கடவுள்களான ராமர், கிருஷ்ணருக்கு தேசிய கவுரவம் அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என, அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மனு தாக்கல்உத்தர பிரதேசத்தின் சத்ரசைச் சேர்ந்த ஆகாஷ் ஜாதவ் என்பவர், சமூக வலைதளத்தில் ஹிந்துக் கடவுள்களை அவமதித்து பதிவு வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அவர், ஜாமின் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

ஹிந்துக் கடவுள்களான ராமர், கிருஷ்ணர், காப்பியங்களான ராமாயணம், பகவத் கீதை, அவற்றை எழுதிய மகரிஷி வால்மீகி, மகரிஷி வேத வியாசர் ஆகியோர் போற்றப்பட வேண்டும். நம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அவர்களுக்கு தேசிய கவுரவம் அளிக்கும் வகையில் பார்லிமெண்டில், சட்டம் இயற்ற வேண்டும்.இந்திய கலாசாரத்தை குழந்தைகள் தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை பள்ளிகளில் பாடங்களாக சேர்க்க வேண்டும்.

அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், ‘ராமர் நம் கலாசாரத்தின் ஆன்மா; ராமர் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது’ என கூறியுள்ளது.ஒருவர் நாத்திகராக இருக்க அரசியல் சாசனம் அனுமதி அளிக்கிறது. அதற்காக மதங்களை இழிவுபடுத்த எவருக்கும் அதிகாரம் இல்லை. தான் வாழும் நாட்டின் கலாசாரம், கடவுள்களை மதிக்க வேண்டும். இதுபோன்று அவதுாறாக கருத்து தெரிவிக்கக் கூடாது.

Xxxx

மைசூரு தசரா 411-வது ஆண்டு விழா – தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவி

மைசூரு தசராவின் முக்கிய நிகழ்வான 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவியை யானை சுமந்து செல்லும் நிகழ்ச்சி அக்டோபர் 15ம் தேதி நடைபெற்றது.

கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் தசரா விழா உலக புகழ் பெற்றது. இது நவராத்திரி மற்றும் விஜயதசமியையொட்டி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் விழாவாகும். கர்நாடக காவல் தெய்வமாக கருதப்படும் மைசூரு சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மன், மகிஷாசூரனை வதம் செய்த நாள்தான் விஜயதசமி நாளாகவும், தசரா விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு கொண்டாடப்படும் தசரா விழா 411-வது தசரா விழா ஆகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவியை யானை சுமந்து செல்லும் நிகழ்ச்சி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, யானை மீது அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி தேவியை மலர் தூவி வணங்கினார். தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அரண்மனை வளாகத்திற்குள் 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Xxxx

பாகிஸ்தான் என்றும் மாறாது ” – மோகன் பகவத் பேச்சு

‛‛ தலிபான்கள் மாறியிருக்கலாம். ஆனால், பாகிஸ்தான் மாறப்போவது கிடையாது” என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில், விஜயதசமியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பிரிவை அதிகப்படுத்தும் கலாசாரம் நமக்கு தேவையில்லை. ஆனால், நாட்டை ஒற்றுமைபடுத்தவும், அன்பை முன்னிலைப்படுத்தும் கலாசாரம் தான் நமக்கு முக்கியம். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் போன்ற சிறப்பு பண்டிகைகளை அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும்.

நாடு பிரிவினை செய்யப்பட்டது வரலாற்றில் சோகமான நாள். இழந்த பெருமையை மற்றும் ஒற்றுமையை மீட்கவும், வரலாற்றை புதிய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், உண்மையான வரலாற்றை நாம் எதிர்கொள்ளவது அவசியம். இந்திய கலாசாரத்தை மதிக்க வேண்டும். தற்போதைய இந்திய கலாசாரம், மதம், வரலாற்றை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது.

தலிபான்கள் வரலாறு நமக்கு தெரியும். சீனா மற்றும் பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது. தலிபான்கள் கூட மாறியிருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் மாறவில்லை, அது மாறாது. இந்தியா குறித்த சீனாவின் நோக்கம் மாறி உள்ளதா? நமது எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.


சுற்றுச்சூழலுக்கு உகந்த கொள்கையை உருவாக்குவதுடன். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்திற்காக ஆர்எஸ்எஸ் பாடுபடுகிறது.கோவிட் 3வது அலையை எதிர்கொள்ள தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

ஓடிடி தளங்களில் எதை காட்ட வேண்டும் என்பதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. கோவிட் பரவலுக்கு பிறகு குழந்தைகளின் கைகளில் மொபைல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இதனை தடுப்பது எப்படி? இதன் மூலம் கிடைக்கும் வருமானம் தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவது அவசியம்.

மக்கள் தொகை கொள்கையை மீண்டும் பரிசீலனை செய்து, அடுத்து 50 ஆண்டுகளுக்கு ஏற்றவாறு புதிய கொள்கை உருவாக்கி அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

Xxxx

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் வருமானம் ரூ29 லட்சம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அக்டோபர் 13  உண்டியல் திறக்கப்பட்டது. அதில் பக்தர்கள் செலுத்திய சுமார் ரூ 29 லட்சம் வருமானம் கிடைத்தாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. அதில் பக்தர்கள் செலுத்திய சுமார் ரூ.29 லட்சம் வருமானமாக கிடைத்தாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒரே கல்லினால் ஆன 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இவை 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்த வகையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் உள்ள காணிக்கை பக்தர்கள் மூலம் எண்ணப்பட்டன.

அந்த உண்டியலில் ரூ.28 லட்சத்து 92 ஆயிரத்து 819 ரொக்கம் இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் நரசிம்மசாமி கோவில் உண்டியலில் ரூ.2 லட்சத்து ஆயிரத்து 647 ரொக்கம், 15 கிராம் தங்கம், 100 கிராம் வெள்ளி இருந்தது.

கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி உண்டியல் திறக்கப்பட்டபோது ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் ரூ.34 லட்சத்து 19 ஆயிரம் ரொக்கம், 26 கிராம் தங்கம், இருந்தது குறிப்பிடத்தக்கது.

xxxx

பாளையங்கோட்டையில் தசரா திருவிழா:12 அம்மன் கோவில் சப்பரங்கள் அணிவகுப்பு

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை தசரா திருவிழாவுக்கு புகழ்பெற்ற இடமாகும். இங்கு உள்ள ஆயிரத்தம்மன், பேராத்து செல்வி அம்மன், முப்பிடாதி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளி அம்மன், உலகம்மன் உள்ளிட்ட 12 அம்மன்கள் சப்பரங்களில் வீதி உலா வந்து, பாளையங்கோட்டை ராமர் கோவில் திடல், கோபாலசாமி கோவில் திடல், மார்க்கெட் ஆகிய இடங்களில் அணிவகுத்து நிற்கும்.

போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே மாரியம்மன் கோவில் முன்பு சப்பரங்களில் எழுந்தருளும் அம்மன்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து அங்கு நடைபெறும் சூரசம்ஹார விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.


தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில்களுக்கு உள்ளேயே தசரா திருவிழாவை எளிமையாக நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

நேற்று ஆயிரத்தம்மன், பேராட்சி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், உலகம்மன், முப்புடாதி அம்மன் உள்ளிட்ட 12 அம்மன் கோவில்களிலும் காலையில் துர்கா ஹோமமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. இரவு 10 மணிக்கு 12 அம்மன்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் பவனி வந்தனர்.

இதைத் தொடர்ந்து 12 அம்மன் சப்பரங்களும் பாளையங்கோட்டை போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் மைதானத்தில் ஒன்றுகூடி அணிவகுத்து நின்றன. அப்போது சூரசம்ஹாரம் நடந்தது. பின்னர் 12 அம்மன்களுக்கும் தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND

நன்றி, வணக்கம்

TAGS —உலக இந்து, சமய செய்தி மடல்17102021

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: