உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை-PART 2; ரிக் வேதத்தில் தாவரவியல் செய்திகள் (Post.10,235)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,235

Date uploaded in London – 20 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் BOTANY தாவரவியல் செய்திகள்

ரிஷி புதன் என்பவன் சோமனுடைய புதல்வன்; அவன் விஸ்வே தேவர்களை நோக்கிப் பாடும் பாடல் ரிக் வேதத்தில் பத்தாவது மண்டல 101 (RV. 10-101) ஆவது துதியாக அமைந்துள்ளது. இது முழுக்க  முழுக்க வேளாண்மை AGRICULTURE  பற்றியது !

நவக்கிரகங்களில் ஒன்று புதன். அதை சந்திரனின் குமாரன் (MERCURY son of MOON)  என்று பிற்காலத்தில் எழுந்த  நவக்கிரஹ ஸ்தோத்திரம் புகழ்கிறது. அதற்கு ஆதாரம் இங்கே உளது. ஸோமனின் புதல்வன் புதன் (SON OF MOON) என்று.

இதில் பெரிய விஞ்ஞான உண்மையும் பொதிந்து கிடக்கிறது. அதாவது புதன் காரணமாக உருவானதே சந்திரன். அதாவது பூமியும் புதனும் மோதிய காலத்தில் துண்டாக உடைந்ததே சந்திரன். எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடிப்பர் ; இந்துக்கள் ரிக் வேதத்திலேயே சொல்லிவிட்டார்கள்!!!

இன்னொரு அதிசயமும் இந்த துதியில் உளது. தாவர வளர்ச்சிக்கு சந்திரன் காரணம் என்பது இந்துக்களின் வாதம். ஆகவே உலகிலேயே மிக அற்புதமான மூலிகைக்கும் சோமன் (சந்திரன்) என்று இந்துக்கள் பெயர் கொடுத்தார்கள் ; ஏனெனில் நிலவு போல 15 நாள் வள ருமாம் ; நிலவு போல 15 நாள் தே யுமாம் ; சோம மூலிகைக்கு பஞ்சதஸ சோமம் (திருவாளர் 15, மிஸ்டர் 15) என்று ஏன் பெயர் ஏற்பட்டது என்று ரிக் வேத வியாக்கியானத்தில் சாயனர் இயம்புகிறார்  இங்கு ரிக் வேதத்திலும் விவசாயம் பற்றிய பாடலுக்கு ‘சோமனின் மகன் புதன்’ என்னும் ரிஷி என்கின்றனர். ஆகவே தாவரத்துக்கும் சந்திரனுக்கும் தொடர்பு உண்டு என்பதை ரிக் வேதமே சொல்லிவிட்டது. இதையும் இதுவரை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கவில்லை. இனிமேல் கண்டு பிடிப்பார்கள் அப்போது இந்துக்கள் மார் தட்டிக்கொள்ளலாம் .

Botanical Science in Bhagavad Gita

பகவத் கீதையில் கண்ணனும் இந்த மாபெரும் விஞ்ஞான உண்மையை உறுதி செய்கிறார் .

சோம ரசம் பற்றி இரண்டு குறிப்புகள் பகவத் கீதையில் வருகிறது

கீதை 9-20; 15-13

“நான் ரஸ மயமான சந்திரனாக இருந்து கொண்டு எல்லா பயிர்களையும் போஷிக்கின்றேன் ; அதாவது சத்துள்ளவையாக வளர்க்கின்றேன் “-15-13

புஷ்ணாமி செளஷதீ : ஸர்வா : சோமோ பூத் வா ரசாத்மக: 15-13

இங்கு கிருஷ்ணர்  சந்திரனை சொல்கிறாரா அல்லது சோம மூலிகையைச் சொல்கிறாரா என்ற வினா எழும். ஆனால் பிற்கால நூல்களிலும் ‘சந்திரன் – தாவர  வளர்ச்சி’ பற்றியே உளது

ரிக் வேதத்திலேயே சோம என்ற சொல்லுக்கு அர்த்தம் சொல்ல உரைகார்கள் திணறுகிறார்கள். அந்தச் சொல்லை சந்திரனுக்கும் சோம ரசத்துக்கும் பொருள் தரும்படி சிலேடையாகவும் புலவர்கள் பாடுகிறார்கள் !!

“மூன்று வேதங்களையும் கற்றவர்கள் வேள்விகளால் என்னை பூஜித்து ஸோம பானத்தால் பாவம் தோய்ந்தவர்களாய் ஸ்வர்கம் செல்லுதலை வேண்டுகிறார்கள்” – 9-20

சோமபா: பூதபா : யக்ஞய் ரிஷ்ட்வா ஸ்வர்கதிம் ப்ரார்த்தயந்தே  9-20

Soma Herb in Tamil Inscription

சோமபானம் என்பது மனதை சுத்தப்படுத்தும் அரு மருந்து , டானிக் என்று தமிழ்க் கல்வெட்டும் பகர்கிறது.

பராந்தக வீரநாராயணன் என்ற பாண்டிய மன்னரின் 45 ஆவது ஆட்சி ஆண்டில் வெளியான (ஒன்பதாம் நூற்றாண்டு) தளவாய்புரம் செப்பேடுகள் சோம பான மனோ சுத்தராகிய காடக சோமயாஜிக்கு முன்னொரு காலத்தில் கழுதூரில் உயிர் நீத்த பாண்டியன் ஒருவன் சோமாசிக்குறிச்சி என்னும் ஊரை தானம் கொடுத்தது குறித்து பேசுகிறது. ஆக ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ் நாட்டில் சோம யாகம் நடந்ததும் அதற்காக அவருக்கு , அந்தப் பிராமணனுக்கு , சோமாசிக்குறிச்சி என்னும் ஊர் தானம் கொடுக்கப்பட்டதையும் அறிவதோடு ‘மனோ சுத்தர்’ ஆன அதிசயமும் தெரிகிறது. சோம பானம் குடித்தால் ஏற்படும் அற்புதங்கள் பற்றி ரிக்வேதத்தின் ஒன்பதாவது மண்டலம் முழுதும் காணக்கிடக்கிறது  .

சிந்து சமவெளி நாகரீகத்தை தோண்டி எடுத்த  மார்ஷல், மார்டிமர் வீலர், மகே போன்றோர் ஆரம்பத்திலேயே அதுபற்றி தவறான கருத்துக்களைக் சொல்லி திசை திருப்பிவிட்டதால் இன்று வரை அந்த எழுத்துக்களைப் படிக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அது போலவே சோம பானம் குறித்து 150 ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளைக்காரர்களும் , மார்க்சீய வாதிகளும் தவறான கருத்துக்களைப் பரப்பியதால் இன்று வரை அந்தத் தாவரத்தை அடையாளமும் காணமுடியவில்லை. அதற்கு இணையான பானத்தைத் தயாரிக்கவும் முடியவில்லை ; கள் , சாராயம் , மதுபானம் குடித்தால் மனம் அசுத்தம் அடையும் ; சோமபானம் குடித்தால் மனம் சுத்தம் அடையும் ; காஞ்சி பரமாசார்யார் செய்த ‘விஜய யாத்திரை’ என்ற நூலில் சோமபான யாகம் செ ய்தோருக்கு  அரசனைப் போல வெண்கொற்றக்கு டை முதலியன தருவது பற்றி எழுதியுள்ளார்.

xxxx

இனி ரிக் வேதம் 10-101 துதியைக் காண்போம்

Andal and Rig Veda

முதல் மந்திரம் 10-101-1

“நண்பர்களே ஒரு மனத்துடன் விழித்து எழுங்கள் !” என்று அழைக்கிறார் ரிஷி.

“இனித்தான் எழுந்திராய்  ஈதென்ன பேருறக்கம்” — என்று திருப்பாவையில் ஆண்டாள் தூங்கும் ஆன்மாக்களைத் தட்டி எழுப்புகிறார். உத்திஷ்ட = எழுந்திரு என்று பகவத் கீதையில் 5 இடங்களில் அர்ஜுனனைத் தட்டி எழுப்புகிறார் பகவான் .

பகவத் கீதை – உத்திஷ்ட – 2-3; 2-37; 2-69; 4-41; 1-33

ஆக ரிஷியின் முதல் மந்திரம் அக்நியை ஏற்றி வழிபட எல்லோரையும் அழைப்பதால்  இதை ஞானத் தேடலாகவும் நோக்கலாம் !

(ரிக் வேத மந்திரங்கள் பலதரப்பட்ட மக்களுக்கு பல்வேறு அர்த்தம் (MYSTICAL, ETHICAL, MORAL, SPIRITUAL, PHILOSOPHICAL, LITERAL, SCIENTIFIC ) கொடுக்கும் வகையில் சிலேடைப் பாங்கில் அமைந்துள்ளன; ஆகையால் இலக்கிய ரீதியில் மட்டும் அர்த்தம் காண்பது பொருந்தா ; சங்கராசார்யார் போன்ற பெரியோர் இதன் ஒலிக்கே (Magical Sound Effect)  பலன் உண்டு; பொருள் காணத் தேவையில்லை என்பர்.

XXXX

இரண்டாவது மந்திரம் 10-101-2

“இன்பம் ஊட்டும் பாடல்களை இயற்றுங்கள் துணி நெய்பவனைப் போல பாடல்களை நூற்றுத் தையுங்கள் .

துடுப்புகளை கையில் எடுங்கள் ; கப்பல்களை/ படகுகளை விடுங்கள்

உபகரணங்களை, கருவிகளை (உழு படைகளை) ஆயத்தப் படுத்துங்கள்; அக்கினியை முன்னெடுத்துச் செல்லுங்கள் “.

இதில் பல்வேறு தொழிலில் உள்ளோருக்கு ரிஷி அறைகூவல் விடுப்பது போலத் தோன்றுகிறது

“பிராமணர்களே ; யாகம், யக்ஞம் செய்யுங்கள்;

வணிகர்களே , திரைகடல் ஒடித் திரவியம் ஈட்டுங்கள் ;

உழவர்களே , உழுவதற்குப் புறப்படுங்கள்!”

XXX

மூன்றாவது மந்திரம்

ஏர்களை இணையுங்கள் ; நுகத்தைப் பூட்டுங்கள் ; உழுத நிலத்திலே விதைகளைத் தூவுங்கள்  எங்கள் பாட்டுக்களால் அறுவடை பெருகட்டும் ; முதிர்ந்த  தானியத்திடையே அரிவாள் செல்க”.

எனது உரை

இதுவரையுள்ள மூன்று பாடல்களில் மிக முக்கியமான கருத்துக்கள் உள்ளன :

1. இது உழவர் ஓதை ; அதாவது உழவர்கள் உழும்போது , அறுவடை செய்யும்போது பாடும் பாடல்கள். மதர்  இந்தியா Mother India, Hindi Film போன்ற இந்தி சினிமாக்களைப் பார்த்தோருக்கு இத்தகைய பாடல்கள் புரியும் ஆக ரிக் வேத காலத்திலே யே உழவர் ஒதை Farmers Songs தோன்றிவிட்டது.

2. விவசாயத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் எடுத்துரைக்கிறது; உழுதல், வரப்பு கட்டுதல், விதை விதைத்தல், அறுவடை செய்தல் ……

Musical Effect on Plants

3.பாடல்கள் மூலம் அறுவடை பெருகும் என்பது இசைக்குள்ள சக்தியைக் காட்டுகிறது

இந்தத் துறையில் இந்துக்களை மிஞ்ச எவராலும் முடியாது . அமிர்தவர்ஷனி ராகத்தின் முலம் முத்துசாமி தீட்சிதர் மழை பெய்வித்தார்; தான்சேன், , ராகத்தின் மூலம் அக்கினியை உண்டாக்கினார்; ஆதி சங்கரர் கனக தாரா தோத்திரம் மூலம் தங்க மழை பொழியச்  செய்தார். ரிக் வேத விவசாயிகள் ‘பாடல்கள் மூலம் அறுவைடையை பெருக்கினர்’ என்பது மூன்றாவது மந்திரத்தில் தெரிகிறது .

4. பெயர் தெரியாத காரணத்தாலோ, அல்லது அவர்கள் பயன்படுத்திய முக்கிய, புகழ்பெற்ற

 சொற்றொடர்களாலோ  (Cliché) புலவர்களுக்குப் பெயரிடும் மரபு ரிக் வேதத்தில் வருகிறது. அதற்கு எடுத்துக் காட்டு இந்தக் கவிதை; ‘சோமன் மகன் புதன்’ என்ற புராணக்கதையை இங்கே புலவர் பெயர்களாகத் தந்துள்ளனர்.

Sangam Age Tamils Copied Rig Veda

ரிக் வேதத்தைத் தொகுத்து நமக்கு அளித்த வியாசர் என்ன என்ன செய்தாரோ, அதை அப்படியே சங்க நூல்களை தொகுத்தோரும் செய்தனர். ரிக் வேத வியாசருக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்குக்குப் பின்னர்!

தேய் புரிப்  பழங்கயிற்றனார் , செம்புலப் பெயல் நீற்றனார் , காக்கை பாடினியார் என்றெல்லாம் காரணப் பெயர்கள், ரிக் வேதத்தை அடி ஒற்றி எழுந்தனவே. இது போல தமிழிலும் ரிக் வேதத்திலும் சுமார் இருபது பெயர்கள் உண்டு.

புற நானூற்றுப் புலவர் பாடல்களைத் தொகுத்தோர் செய்த, அகநானூற்றுப் பாடல்களைத் தொகுத்தோர் செய்த, அற்புதங்களை எல்லாம் முன்னரே பட்டியலிட்டு விட்டேன். எண்கள் வாரியாக அகத்திணைப் பாடல்களை அமைத்தல், இரங்கற் பாடல்களை ஒருசேரத் தொகுத்தல், வெள்ளி கிரகம் பற்றிய பாடல்களை அடுத்தடுத்து வைத்தல், மிகப் பழங்காலப்  பாடல்களை முன்னே வைத்தல், முதலிய பல விஷயங்களைக் கண்டோம். இது வியாசர் பின்பற்றிய முறை. மரணம், ஈமச் சடங்குகள், கல்யாணம், கிரஹப் பிரவேசம், உழவர் ஓதை முதலியவற்றை பத்தாவது மண்டலத்தில் வைத்தார் வியாசர். இதை அறியாத மாக்ஸ்முல்லர் கும்பல், அசிங்கப்பட்ட மார்க்ஸீயக் கும்பல், இவை எல்லாம் கடைசி காலப் பாடல்கள் என்று உளறிக்கொட்டி கிளறி மூடி இருக்கின்றனர்.

இந்தப் பயல்கள் தமிழ் இலக்கியத்தையும் விடவில்லை. கலித்தொகை, திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலியன பிற்கலத்தியவவை என்று எழுதிவிட்டனர். இவர்களுக்குப் புரியாத விஷயம் என்ன தெரியுமா?

 நமது இந்துப்பவர்கள் , சில சில விஷயங்களை சொல்லும்போது,  சில பாணியை, ஒரு ஸ்டைலைப் (certain genre, particular style) பின்பற்றுவர். இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இந்திய கல்வெட்டுகள். அவற்றின் பாஷை, பேச்சு நடையிலும் அதே கால புலவர் பாடல்கள் இலக்கிய நடையிலும் இருக்கும். இது தெரியாத அசட்டுப் பிச்சுக்கள் உளறிக்கொட்டி வைத்துள்ளன.

அதுகளைக் கேளுங்கள்:

ஏண்டா மண்டு ! தமிழ்க் கல்வெட்டு ‘கொச முச’ நடையில் இருக்கும்போது எப்படியடா அற்புதமான இலக்கிய நடைப் பாடல்கள் எழுந்தன? என்று .

இரண்டும் ஒரே காலத்தில் இயங்க முடியும். ஒன்று பேச்சு நடை; மற்றது இலக்கிய நடை !

மூன்றாவது பகுதியில் மேலும்பல அதிசய விஷயங்களை திருக்குறளுடன் ஒப்பிட்டுக் காண்போம் –தொடரும் TO BE CONTINUED…………………………..

tags- ரிக் வேத,  தாவரவியல், செய்திகள், உழவுக்கும் தொழிலுக்கும் 2

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: