Post No. 10,243
Date uploaded in London – 22 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சென்ற மூன்று கட்டுரைகளில் ரிக் வேதம் 10-101 விவசாயக் கவிதை பற்றிய விமர்சனங்களைக் கண்டோம் . இங்கு ரிக் வேதம் 4-57 கவிதையைக் காண்போம். இதுபற்றி விமர்சிக்கும் பகவான் சிங் என்ற அறிஞர் அவர் எழுதிய ‘வேத கால ஹரப்பா’ THE VEDIC HARAPPANS BY BHAGAWAN SINGH என்ற புஸ்தகத்தில் அந்தக் காலத்தில் விவசாயத் தொழிலாளர்களும் நிலச் சுவான்தார்களும் இருந்ததை இந்தக் கவிதை காட்டுவதாகச் சொல்கிறார்.
இந்த நாலாவது மண்டலம், ரிக் வேதத்தின் பழைய பகுதியாகும். இதைப் பாடுபவர் ரிஷி வாமதேவ கெளதமன்
முதல் மந்திரமே நிலத் தலைவன், அதாவது நிலக் கிழார் பற்றிப் பேசுகிறது.
“எங்கள் நண்பன் நிலத்தலைவன். அவன் தயாள குணத்தால் எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறான். அவன் மூலம் எங்களுக்குப் பசுக்களும் குதிரைகளும் கிடைக்கின்றன”.
க்ஷேத்திரபதி என்னும் நிலத் தலைவன் இங்கே புகழப்படுகிறான். அவரை நில தேவதையாகவும் கொள்ளலாம் .”பால் தரும் பசு போலவும் தேன் போலவும் அவன் இனியவற்றைத் தருவானாக”.
“நிலத்தில் விளையும் செடி கொடிகளும், வானமும் பூமியும் இனியவை ஆகுக” என்று மந்திரம் கூறுகிறது .
நாலாவது மந்திரம் மிகத்தெளிவாக உள்ளது
“காளைகள் சுகமாக இழுக்கட்டும்;
மனிதர்கள் உற்சாகமாக உழைக்கட்டும் ;
கலப்பைகள் நன்கு உழட்டும்;
கயிறுகள் நன்கு பிணையட்டும்
சாட்டைகள் நன்கு சொடுக்கட்டும்”
ஐந்தாவது மந்திரம் முதல், சுனா , சீரா, சீதா முதலிய தேவதைகள் போற்றப்படுகின்ற ன.
கடைசியில் வரும் எட்டாவது மந்திரமும் “கலப்பை நன்கு உழட்டும்” என்கிறது.
ஆக எட்டு மந்திரங்களும் விவசாயம் பற்றி இருப்பதால் இதையும் அக்கால விவசாயப் பாட்டாகவே சொல்லலாம்.
வேத காலத்தில் கலப்பை முதலியன, உயிருள்ள பொருட்கள் போல உருவகப்படுத்தப் பட்டு துதிக்கப்படுகின்றன. ராமாயணத்தில் வயல் வரப்பில் சீதை கிடைத்ததால் அவள் பெயரே வயல் வரப்பு= சீதை ஆகிவிட்டது இதற்குப் பின்னரும் வேத கால இந்துக்களை எவரும் நாடோடி என்று கூற நா எழாது.
இனி பகவான் சிங் கொடுக்கும் ரிக் வேத விவசாய சொற்களைக் காண்போம். இவை பத்து மண்டலங்களிலும் பரவலாகக் காணப்படுவதால், வேத காலத்தில் துவக்கம் முதல் கடைசி வரை விவசாயிகள் கொடிகட்டிப் பறந்தனர் என்பது தெரிகிறது
ரிக் வேதம் முழுதும் ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற வாசகமும், ‘அரசன், சபை’ போன்றவையும் விவசாயமும் பேசப்படுவதால் நால் வருணத்தாரும் அவரவர் தொழிலைச் செய்து இனிதே வாழ்ந்தனர் என்று ஊகித்ததறியலாம்.
Xxxx
விவசாய சொற்கள் பட்டியல்
ரிக் வேத விவசாய சொற்கள் மண்டலம்- துதி எண் – மந்திர எண்களோடு:–
அப்சவா 7-46; 10-65-3 பாசனம் செய், நீர் பாய்ச்சு
அபிதர்த 6-17-1 தோண்டி தண்ணீர் எடு
அப்ரி – 1-179-6 மண்வெட்டி
அப்ரி காட – அதர்வண வேத 4-7.5-6
அஸ்த்ரா – 4-57-4 அங்குசம் ; குச்சி
அஸ்வின்ஸ் 1-117-21 முதலில் விவசாயம் செய்தவர்கள்
இந்த்ர 1-112-15 ; 8-9-10 நில தேவன்; சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்தவன்
ஊர்தர 2-14-11 அரசாங்க தானியக் களஞ்சியம்
( சுமேரியாவில் ஊர் UR IN SUMER என்பதுடன் தொடர்புடைய சொல்)
ரிஷப 1-94-10; 6-46-4 காளை
கரீச – அதர்வண வேதம் 3-14-3 உரம், சாணம்
கினாச 4-57-8 குடியானவன்
கினார 10-106-10 சாகுபடி செய்வோன்
க்ருஷ்டபச்ய – யஜுர் வேதம் 28-14 சாகுபடி தாவரங்கள், பயிர்
க்ஷேத்ர 10-33-6; 3-31-15; 5-62-7 நிலம்
(பிற்காலத்தில் உடல், புனிதத் தலம் ஆகியவற்றுடன் தொடர்பு)
க்ஷேத்ரம் இவ மமுஸ் 1-110-5 நிலம் என அளக்கப்பட்ட
க்ஷேத்ரசாடா 7-19-3 ஒதுக்கப்பட்ட நிலத்தை கவனிப்போர்
க்ஷேத்ரசாத 3-8-7; 8-31-14 நிலத்தை அளந்து எல்லை குறிப்போர்
க்ஷேத்ர சா 4-38-1 நிலத்தை கொள்முதல்/ ஆர்ஜிதம் செய்வோர்;
க்ஷேத்ர பதி – நிலத் தலைவன்; நிலத்திற்கான கடவுள்;
கணித்ர 4-57-4 தோண்டும் குச்சி; கடப்பாரை
கள 10-48-7 களம் , நெல் அடிக்கும் இடம் ;தமிழ் சொல்
திதவ் 10-72-2 சல்லடை, முறம்
தில்வில – 5-62-7 , 7-78-5- வளமான ; நன்செய் ; நஞ்சை
தெ ஜன 1-110-5 அளக்கும் குச்சி; மூங்கில் கம்பு
தாத்ர 8-78-10 அரிவாள் த்வி பஞ்ச அன்னஸ் 1-122-13 பத்து வகை தானியங்கள்
தான்ய 5-53-13; 6-13-4 அரிசி, பயிர், ;தானியம் இன்றும் புழக்கத்தில் உள்ள சொல்
தான்யக்ருத் 10-94-13 சாகுப்படியாளர் ; தானியம் புடைப்போர்
நஹனா – 10-67-3 மூக்கணாங் கயிறு
பய ஸ்வதி 2-3-6; 6-70-2 நன்கு நீர் பாய்ச்சப்பட்ட
பர்ஸ 10-48-7பயிர்க் குவியல்; தானியக் குவியல்
பூசா – 4-57-6 தூவுதல் , விதைத்தல் ,பரப்புதல்;
பிருது 8-9-10 விவசாய முன்னோடி
பீஜ 5-53-13 , 10-85-37 ; 10-94-13 விதை
மருத்ஸ் – 4-57-8 குடியானவர்; குத்தகைதாரர்
பத்ர க்ஷேத் ர 5-62-7 நன்கு உழப்பட்ட நிலம்
மஹி க்ஷேத்ர- 3-31-15 அகலமான / பரந்த நிலம்
மாஷ – 9-86-1 பாட்டின் ரிஷி; 9-86-31 மூன்று பயறு வகைகள்
யவ 1-23-15; 2-5-6; 5-85-3 பார்லி ; பல வகை பயிர்
யோனி 10-101-3 வரப்பு எல்லைக் குறி
லாங்கல 4-57-4 உழுகலன் ; கலப்பை; ஏர்
வத் ரி வ்ரஷ – 2-25-3 காயடிக்கப்பட்ட மாட்டு
வத்ரி அஸ்வ 6-61-1; 10-69-1 காயடிக்கப்பட்ட குதிரை –
சரஸ்வதியை , அக்கினியை பூஜிப்பவன் என்ற பொருளும் தரப்பட்டுள்ளது; ஆக ஒரு மனிதரின் பெயராகவும் இருக்கலாம்
வந்துர 1-34-9; ;3-14-3; 3-41-1 அணி, குழு
வரத்ர 4-57-4; 10-60-8 தோல் வார், கச்சை
வாஹ 4-57- 40 அல்லது 8 முகத்தில் பூட்டப்பட்ட பிராணிகள்
வ் ர்க 1-117-21; 8-22-6 கலப்பை; ஏர்
வ்ரஷ ப 4-41-5 , 6-46-4 காளை
சகன் ; அதர்வ வேதம் 3-14-4 சாணம், உரம், எரு
சுனா 4-57- 5; 8 கலப்பை தேவதை
சனத் க்ஷேத்ரம் 1-100-18 பிரிவினை செய்த நிலம்
சீதா , –4-57-6; 7 வரப்பு , பள்ளம் ; அதன் தேவதை
சிரா 10-101-3; 4 – ஏர்,
ஸ்திவி 10-68-3வ தானியத்தைப் பிரிக்கும் சாதனம், முறம்
இது தவிர நீர்நிலைகள், கால்வாய்கள், கிணறுகள் பற்றிய நீண்ட பட்டியல் உள்ளது.
கால்வாய்; கூப / கூவ என்பதெல்லாம் தமிழ் செய்யுட்களிலும் உண்டு
–முற்றும் – சுபம்–
TAGS – உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை- 4, விவசாய சொற்கள் பட்டியல் , ரிக் வேதம்