உலக இந்து சமய செய்தி மடல் 24-10-2021 (Post No.10,250)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,250

Date uploaded in London – 24 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஞாயிற்றுக் கிழமை  அக்டோபர் 24-ம் தேதி 2021

ஆம் ஆண்டு

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

இந்துக்கள் மீது தாக்குதல் வங்கதேசத்தில் குற்றவாளி கைது

This image has an empty alt attribute; its file name is AVvXsEhWmp3V2MhuDtIul5ZM01hsvRdOuE-Xxv2ruRdZTz5VsZdmjsEJ--6TT1MGXHvnWNBPTP8NkbJpcEnC3rmCi4HnwEeA-B329zgO2lYQ_xPSULzeHKEE7oCkPaMHSoCv8PtXTT7t7gcmgM8PxLdmNxHwIljiwnCkXHsja9g-7dvUwBTiqimH_ZG_kfSo0A=w719-h404

வங்கதேசத்தில் கடந்த 13ம் தேதி துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. அப்போது குரான் நூல் அவமதிக்கப்பட்டதாக வதந்தியை இஸ்லாமிய தீவிரவாதிகள் பரப்பினர்; இதனால் அங்கு வன்முறை வெடித்தது. இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 70க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள், இந்துக்கள் வசிக்கும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 6 இந்துக்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வந்தது., வங்கதேசம் முழுவதும் வன்முறை வெடிப்பதற்கு காரணமான இக்பால் உசைன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். காக்ஸ் பசார் கடற்கடை பகுதியில் இருந்து இக்பால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். குமில்லாவில் துர்கை சிலையின் காலடியில் இக்பால் உசைன் தான் குரான் நகலை வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Xxxx

திருப்பதியில் ரூ.3 கோடியை தாண்டி உண்டியல் வசூல்



திருப்பதியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் உண்டியல் வருவாய் லட்சக்கணக்கில் இருந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் உண்டியல் வருவாயும் கணிசமாக உயர்ந்து வந்தது.


தற்போது திருமலையில் உள்ள பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில்  பக்தர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

உண்டியல் வருவாய் கடந்த ஒரு வாரத்தில் 3 நாட்கள் ரூ.3. கோடியை தாண்டி வசூலாகியுள்ளது.

18-ந்தேதி ரூ.3.1 கோடி, 19-ந்தேதி ரூ.3.23 கோடி, 20-ந்தேதி ரூ.2.57 கோடி, 21-ந்தேதி ரூ.3.18 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.

திருமலையில் உள்ள பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில் நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டது.
இலவச தரிசன டோக்கன் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

Xxxx

ஹிந்து அறநிலையத்துறை கல்லூரிகளில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை: அரசு முடிவு

ஹிந்து அறநிலையத்துறையின் நிதியின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், பணியிடங்களுக்கு ஹிந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு தமிழக மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் இயங்கும் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், காவலர், தூய்மைப்பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த அக்.,13ல் விளம்பரம் வெளியிட்ட விளம்பரத்தில், சம்பந்தப்பட்ட பணிகளுக்கு ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற மதத்தினர் யாரும் கலந்து கொள்ள தகுதி இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த சுஹைல் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது, இந்திய அரசியல் சட்டப்பிரிவு 16 மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. இந்த அறிவிப்பாணையை ரத்து செய்துவிட்டு எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிட ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.


இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணி நியமன நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், ஹிந்து அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தப்படும் கல்லூரிகளில் ஹிந்துக்கள் மட்டுமே நியமிக்க முடியும். ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ஹிந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று விதி உள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கு குறித்து தமிழக அரசும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த விளக்கத்திற்கு மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

xxxxx

கோவில் நிதியில் கல்லுாரி: அரசுக்கு அதிகாரம் உண்டா?

ஹிந்து சமய அறநிலைய துறை சார்பில், தமிழகத்தில், நான்கு கலை அறிவியல் கல்லுாரிகள், இந்த ஆண்டே திறக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளில் அரசு தீவிரமாக உள்ளது.

சென்னை, கொளத்துாரில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் அமைக்கப்படும் கலை அறிவியல் கல்லுாரியில், நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிற புதிய கல்லுாரிகளிலும் இதே நிலை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர் நியமனமும் நடந்து வருகிறது.

இது குறித்து, ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: இதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. அறநிலைய துறைக்கு கல்லுாரி துவக்க சட்டப்படி அதிகாரம் கிடையாது.. அறநிலைய துறை சட்டப்படி, ஒரு கோவில் நிர்வாகம் கல்லுாரி அமைக்க வேண்டும் என்றால், அந்த கோவில் அறங்காவலர் தான் முடிவு செய்ய வேண்டும். கோவில் உபரி நிதியில் இருந்து கல்லுாரி துவங்க வேண்டும் என்றால், உபரி நிதியை குறிப்பிட்டு, ஹிந்து சமய அறநிலைய துறை கமிஷனருக்கு விண்ணப்ப கடிதம் எழுதி, அனுமதி கோர வேண்டும்.

அனுமதி அளிப்பதற்கு முன், அறநிலைய துறை கமிஷனர், இது தொடர்பான அறிவிப்பை பிரதான பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிட வேண்டும். அதில், கோவில் அறங்காவலர் கோரியிருப்பதை குறிப்பிட்டு, இதில் பக்தர்களுக்கு ஏதும் ஆட்சேபனை இருந்தால், ஒரு மாத காலத்துக்குள், அறநிலைய துறைக்கு தெரிவிக்க வேண்டும் என, கோர வேண்டும்.

ஒருவேளை, பக்தர் யாரிடமிருந்தாவது ஆட்சேபனை இருக்குமானால், அது தொடர்பான பிரச்னைகளை தீர்க்க வேண்டும். இவற்றை முடித்துத் தான் அனுமதி அளிக்க வேண்டும். அப்படியொரு அனுமதி இல்லாமல், எந்த கோவில் சார்பாகவும், கல்வி நிறுவனங்களை துவங்க முடியாது. இவற்றை பின்பற்றாமல் கோவில் பணத்தை எடுத்து செலவு செய்து, கல்லுாரி தொடங்கினால், அது, இந்திய தண்டனைச் சட்டப்படி, பத்து ஆண்டுகள் சிறை தண்டனைக்குரிய குற்றமாகும்.


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு, மயிலாப்பூர், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் நிறைய இடங்கள் உள்ளன. அங்கு, கல்லுாரியை துவங்கவில்லை. ஆனால், முதல்வர் தொகுதியில் கல்லுாரி துவங்க வேண்டும் என்ப தற்காக, கோவிலுக்கு சொந்தமான இடமே இல்லாத, தனியார் இடத்தில் துவங்க போவதாக அறிவித்துள்ளனர்.



அறங்காவலர்கள் மட்டுமே கல்லுாரி அல்லது பள்ளி அமைக்க முடியும் என்ற நிலையில், அரசு உத்தரவிட்டு, கல்லுாரி தொடங்குவது சட்ட விரோதம். உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. நான்கு கோவில்கள் வாயிலாக அமைக்கப்படும் கல்லுாரிகளுக்கான ஒப்புதல் அரசாணையை, உயர் கல்வி துறை, முறையான விசாரணை இல்லாமல் வெளியிட்டுள்ளது.

பழநி கோவிலுக்கான செயல் அலுவலர் பதவியை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, 2020 செப்டம்பரில் ரத்து செய்து விட்டது. அரசு மேல்முறையீட்டையும், சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. இதனால், இப்போதும் அந்த கோவிலுக்கு செயல் அலுவலர் இல்லை; அறங்காவலர்களும் இல்லை. இப்படி தான் நான்கு கோவில்களின் நிலையும் உள்ளது. அப்படி இருக்கும்போது, எந்த அறங்காவலரை கொண்டு, கல்லுாரி துவங்க அனுமதி வாங்கினர்?

திருச்செந்துார் கோவிலில் இருந்து, 90 கி.மீ., தொலைவில் உள்ள விளாத்திகுளத்தில், கல்லுாரி அமைக்கின்றனர். தி.மு.க., — எம்.பி., கனிமொழியின் துாத்துக்குடி தொகுதிக்குள் வரும் விளாத்திகுளத்தில் கல்லுாரி அமைய வேண்டும் என்பதற்காக, அப்படி செய்கின்றனர்– என்று ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறினார்

இது தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தியின் சுருக்கம் ஆகும்

xxxxx

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில் குடமுழுக்கு இன்று நடந்தது

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவில் முழுவதும் ரூ. 5 கோடி மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.

இன்று 24-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை குடமுழுக்கு நடந்தது . இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Xxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND

நன்றி, வணக்கம்

tags- tamil hindu news24102021,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: