Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 10,282
Date uploaded in London – 31 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை அக்டோபர் 31-ம் தேதி 2021
ஆம் ஆண்டு
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXXX
போப்பாண்டவர் -மோடி சந்திப்பு – ஆர் எஸ் எஸ் வரவேற்பு
இத்தாலியில் வாத்திகன் நகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிசை நேற்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். 20 நிமிடம் சந்திப்பு என்று நேரம் ஒதுக்கப்பட்டபோதும் இருவரும் உலக விஷயங்களை ஒரு மணி நேரம் அலசி ஆராய்ந்தனர். போப்பாண்டவரை இந்தியாவுக்கு வருமாறு நரேந்திர மோ டி அழைப்பும் விடுத்தார்.
இதற்கு முன்னரும் அப்போதைய போப் இந்தியாவுக்கு விஜயம் செய்தது அடல் பிஹாரி வாஜ்பாயியின் ஆட்சிக் காலத்தில்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
தார்வாட்டில் ஆர் எஸ் எஸ் கூட்டம் வரவேற்பு
போப் – மோடி சந்திப்பை உலகத்தின் மிகப்பெரிய தொண்டர் அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் வரவேற்றது . ஆர் எஸ் எஸ் அமைப்பின் தேஸீய செயற்குழு கூட்டம் கர்நாடக மாநிலத்தின் தார்வாட் நகரில் மூன்று நாட்களுக்கு நடந்தது அதன் இறுதியில் இயக்கத்தின் செயலாளர் தத்தாத்ரேய ஹோஷபாலே பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தருகையில் போப் பிரான்ஸிஸ் – பிரதமர் மோடி சந்திப்பை ஆர் எஸ் எஸ் இயக்கம் வரவேற்பதாகச் சொன்னார் . மோடி, உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர்; போப் பிரான்சிஸ் உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தனிப் பெரும் தலைவர். இருவர் சந்திப்பு இந்தியாவின் நன்மதிப்பை மேலும் உயர்த்தும் – மேலும் ‘வசுதைவ குடும்பகம் – யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘என்பது இந்துக்களின் பண்பாடு. மேலும் இருவரும் இரு நாட்டு தலைவர்கள் என்பதால் இது நாட்டுத் தலைவர்கள் சந்திப்பாகும் என்றும் சொன்னார். இத்தாலியின் தலைநகரான ரோமாபுரிக்குள் ஒட்டிக் கொண்டிருக்கும் குட்டி நாடு வாத்திகன் சிட்டி ஆகும் . இது இந்தியாவின் பெரிய நகர் அளவுக்குக் கூட இல்லை .
தார்வாட் நகரில் நடந்த ஆர் எஸ் எஸ் செயற்குழு கூட்டத்தில் 350 கார்யகர்த்தாக்கள் கலந்து கொண்டனர். இயக்கத்தின் தலைவரான சர்சங்க சாலக் மோகன் பகவத், இயக்கத்தின் செயலாளரான சற்கார்யவாஹ் தத்தாத்ரேய ஹோஷபாலே முன்னிலையில் விவாதங்கள் நடந்தன
வங்க தேசத்தில் இந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள், இஸ்லாமிய தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும் இதைத் தடுத்து நிறுத்த வங்க தேச அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டம் எச்சரித்தது .
நாட்டில் நடக்கும் மத மாற்ற முயற்சிகளையும் ஆர் எஸ் எஸ் வன்மையாகக் கண்டித்தது
.xxx
இத்தாலியில் ‛ஓம் நமச்சிவாயா‘ மந்திரத்தை கூறி பிரதமர் மோடியை வரவேற்ற இந்திய வம்சாவளியினர்
G 20 (ஜி 20) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளியன்று இத்தாலி தலைநகர் ரோமிற்கு சென்றிருந்தார். அப்போதுஅந்நாட்டின் இந்திய வம்சாவளியினர் ‛ஓம் நமச்சிவாயா’ மற்றும் சமஸ்கிருத மந்திரங்களை கூறி வரவேற்றனர்.
இரு நாட்களாக நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட மோடி, வெள்ளியன்று இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள பைசா காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், வெளிவந்த பிரதமர் மோடியை அங்கு கூடியிருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் வணங்கி வரவேற்றனர். அனைவருக்கும் பிரதமர் மோடி வணக்கம் தெரிவித்தார்
பின் அங்கு கூடியிருந்தவர்களில் பலர் ஓம் நமச்சிவாய மந்திரம் மற்றும் பல சமஸ்கிருத மந்திரங்களை ஒலித்து மோடியை வரவேற்றனர். குஜராத்தி மொழியிலும் பக்தி பாடல்களை பாடினர்.
XXXXXXXXXX
தங்க நகை உருக்கும் தி.மு.க . திட்டத்துக்கு கோர்ட் தடை
அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி, தங்க கட்டிகளாக மாற்றி, அதனை வைப்பு நிதியில் வைத்து வரும் தொகையை பயன்படுத்தி கோவிலுக்கு தேவையான பணிகள் செய்யப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல கோவில்களில் அறங்காவலர்கள் பணி நிரப்பப்படாமல் உள்ள நிலையில், கோவில் நகைகளை உருக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு சந்தேகத்தை எழுப்புகிறது என்று கூறினார். இதனை கருத்தில் எடுத்துக் கொண்ட ஐகோர்ட்டு, அறங்காவலர்களை நியமிக்கும்வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
மேலும், கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்க அனுமதி அளிக்கப்படுவதுடன், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கினை டிசம்பர் 15ஆம் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு தள்ளிவைத்தது.
இந்து சமய அறநிலையத் துறை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது சம்பந்தமாக செப்டம்பர் 22ம் தேதி பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரியும் ‘இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட்’ மற்றும் சிலர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், இந்து சமய அறநிலைய சட்டத்தில் கோயிலுக்கு சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை. கோயில் நிர்வாகத்தில் மட்டுமே அறநிலையத்துறை தலையிட முடியுமே தவிர மத வழிபாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது.
வருவாய் ஈட்டுவதற்காக நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதற்கு பதில் ஆக்கிரமிப்பில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு வருவாய் ஈட்டலாம். கோயில் நகைகள் தொடர்பாக முறையாக எந்த பதிவேடுகளும் பராமரிக்கப்படாத நிலையில், நகைகளை உருக்கி வங்கிகளில் டெபாசிட் செய்வது கேள்வியை எழுப்பியுள்ளது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்க அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால் நகைகளை உருக்குவது தொடர்பான சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நகைகளை பொறுத்தவரை உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கோயில்களுக்கு பக்தர்கள் அளித்த காணிக்கை நகைகளை கண்டறியலாம். அறநிலையத்துறை சட்டப் பிரிவின்படி கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக கோயில்களின் அறங்காவலர் குழுதான் முடிவு செய்ய வேண்டும். எனவே, அறங்காவலர்களை நியமிப்பதற்கு முன்பு காணிக்கை நகைகளை உருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக எந்த முடிவையும் அரசு செய்ய கூடாது. இந்த வழக்கில் அரசு பொதுவான பதில் மனுவை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்குகள் டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.
Xxx
கோவில்களில் விரைவில் அறங்காவலர்கள் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
‘கோவில்ளுக்கு விரைவில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டால், அறங்காவலர் நியமன நடவடிக்கையை கண்காணிக்கலாம்’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன்,விசாரணைக்கு வந்தது.
மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, ”நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ கோவில்களில் உள்ள பணியிடங்களுக்கு நியமிக்க, அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால், கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை.”அயல்பணி என்ற முறையில் 100க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டம் இதை அனுமதிக்கவில்லை. எனவே, மேற்கொண்டு நியமனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்,” என்றார்.
அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ”அறங்காவலர்களை நியமிக்க, மாவட்ட அளவில் குழுக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய, விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நான்கு வாரங்களில் குழுக்கள் அமைக்கப்படும்,” என்றார்.
இந்த வழக்கு விசாரணை, ஆறு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதற்கிடையில், மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு விடும் என நம்புகிறோம். மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டால், சட்டப்படி அறங்காவலர்கள் நியமிக்கும் முறையை நீதிமன்றம் கண்காணிக்கலாம்.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.விசாரணையை, டிச., 15க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது.
மாவட்ட குழுக்களுக்கு உறுப்பினர்களை வரவேற்று வெளியிடப்பட்ட விளம்பரங்களில், விண்ணப்பிப்போருக்கான தகுதியை குறிப்பிடவில்லை என, டி.ஆர்.ரமேஷ் சுட்டிக் காட்டினார். உடனே, தலைமை நீதிபதி, விளம்பரத்தில் தவறு இருந்தால், சரி செய்து வெளியிடும்படி, அட்வகேட் ஜெனரலிடம் அறிவுறுத்தினார்.
xxxxx
அமெரிக்க பார்லிமென்டில் தீபாவளி; எம்.பி.,க்கள் உற்சாக பங்கேற்பு
அமெரிக்க பார்லிமென்டில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,க்களுடன் அமெரிக்க எம்.பி.,க்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
அமெரிக்காவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக உடையோர், தீபாவளி பண்டிகையை ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க பார்லிமென்டிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும்.அந்த வகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,க்களுடன், அமெரிக்க எம்.பி.,க்களும் பங்கேற்றனர்.
‘இன்டியாஸ்போரா’ அமைப்பு, அமெரிக்க இந்தியர் அமைப்புகளுடன் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ”ஹிந்து அமெரிக்க கலாசாரம், அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை மேலும் சிறப்பானதாக மாற்றியுள்ளது,” என, பார்லி., உறுப்பினரான ரோ கன்னா குறிப்பிட்டார்.
INDIAN DIASPORA அமைப்பின் நிறுவனர் எம்.ஆர். ரங்கசாமி, இந்தியாவை பூர்வீக மாக உடைய எம்.பி.,க்களான டாக்டர் அமி பேரா, பிரமிளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் உயர் பதவியில் உள்ள இந்தியாவை பூர்வீகமாக உடைய நீரா டான்டன், விவேக் மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அமெரிக்க பெண் எம்.பி.,யான கரோலின் மலோனியும் பங்கேற்றார். இவருடைய முயற்சியால் 2016ல் தீபாவளி குறித்த சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. ”தீபங்களின் பண்டிகையான தீபாவளியை மேலும் சிறப்பிக்கும் வகையில், பொது விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் குறிப்பிட்டார்.
Xxxx
தீபாவளி வாழ்த்துக்கள்
இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளித் திருநாள் நவம்பர் 4ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குஜராத்திகள் இதை நான்கு நாள் விழாவாகக் கொண்டாடுவர் ; புத்தாண்டு தினமாகவும் கொண்டாடுகின்றனர் . இந்துக்கள், சீக்கியர்கள், ஜைன மதத்தினர் ஆகியோரும் இதே நாளைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது ; ராம பிரான் அயோத்தி திரும்பிய நாள் என்பதால் அயோத்தி மாநகரம் விழாக்கோலம் கொண்டுள்ளது. கண்ணபிரான் நரகாசுரனை வதம் செய்ததாலும், உலகிற்கே பட்டாசு மத்தாப்புகளை ஏற்றுமதி செய்யும் சிவகாசி மக்களின் நல்வாழ்வுக்கு ஒளி வீசுவதாலும் மத்தா ப்பு பட்டாசுகளுடன் தமிழ் மக்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். சென்னை முதலிய நகரங்களில் மழை யையும் பொருட்படுத்தால் கடைத் தெருக்களில் கூட்டம் அலை மோதுவதாக இன்று காலை வெளியான தமிழ் நாளேடுகள் செப்புகின்றன. நவம்பர் 3ம் தேதி பிரிட்டிஷ் பார்லிமென்ட் தீபாவளியும் நவம்பர் 6ம் தேதி லண்டன் சவுத் இந்தியன் சொசைட்டி தீபாவளி விழாவும் பிரிட்டனில் நடைபெறுகிறது.
நேயர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் ஞான மயம் குழு பெருமகிழ்ச்சி அடைகிறது .
எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND
நன்றி, வணக்கம்