யானையே சிங்கத்தின் பலத்தை அறிய முடியும்(Post No.10,303)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,303

Date uploaded in London – –   6 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷிதச் செல்வம்

யானையே சிங்கத்தின் பலத்தை அறிய முடியும்: ஒரு பலசாலியே இன்னொரு பலசாலியை அறிய முடியும்!!

ச.நாகராஜன்

சரோஜா பட் தொகுத்த சுபாஷித சதகம் என்ற நூலிலிருந்து சில சுபாஷிதங்களைப் பார்த்தோம். இதோ இன்னும் ஐந்து சுபாஷிதங்கள் :-

குணைர்கௌரவமாவாதி நோச்சைராஸநமாஸ்தித: |

ப்ரஸாதஷிகரஸ்தோபி காகோ ந கருடாயதே ||

உயர்ந்த பதவியை அடைவதனால் மட்டும் ஒருவன் பெரியவன் ஆகி விட முடியாது. நல்ல குணங்களைக் கொண்டிருப்பதாலேயே பெரியவனாக முடியும். காக்கை ஒன்று உயரமான இடத்தில் அமர்ந்திருபப்தால் மட்டும் அது கருடனாகி விட முடியாது.

One becomes great by means of virtues not by occupying high seat. A crow sitting on the top of a place is not regarded as an eagle.

*

ரவிரபி ந தஹதி தாட்யக் யாட்யக் சம்தஹதி வாலுகானிகர: |

அன்யஸ்மால்லப்தபதோ நீச: ப்ராயேண து:ஸஹோ பவதி ||

சூடான ஒரு மணல் குவியல் தரும் வெப்பத்தைச் சூரியனால் கூட தர முடிவதில்லை. இன்னொருவனால் ஒரு உயர்ந்த நிலையை அடைந்தவன் பொதுவாக சகிக்கப்பட முடியாதவனாக இருக்கிறான்.

Even the sun does not burn as much as the (heated) heap of sand. One who has attained a position because of another (person) usually becomes unbearable.

*

குணேஷு க்ரியதாம் யத்ன: கிமாடோபை: ப்ரயோஜனம் |

விக்ரீயந்தே ந கண்டாபிகவி: க்ஷீ ரவிவர்ஜிதா: ||

நல்ல குணங்களை அடைவதில்  முயற்சி செய். மற்றவற்றை அடைவதால் என்ன பிரயோஜனம்? பால் சுரக்க முடியாத பசுக்களின் கழுத்தில் மணியைத் தொங்க விட்டு அடித்தாலும் அது விற்கப்பட முடியாது!

Make effort in (acquiring) virtues. What is the use of doing much ado? Cows devoid of milk cannot be sold off by tying bells (in their necks).

*

குணி குணம் வேத்தி ந வேத்தி நிர்குண:

பலி பலம் வேத்தி ந வேத்தி நிர்பல: |

பிகோ வஸந்தஸ்ய குணம் ந வாயஸ:

கரி ச சிம்ஹஸ்ய பலம் மூஷக: ||

நல்ல குணங்களைக் கொண்ட ஒருவனே இன்னொருவனின் நல்ல குணங்களை உணர்கிறான், அப்படி நல்ல குணங்களைக் கொண்டிராதவன் அல்ல! நல்ல பலம் கொண்ட ஒருவனே இன்னொரு பலசாலியின் பலத்தை அறிகிறான, பலம் இல்லாதவன் அறிவதில்லை. குயில் வஸந்தத்தின் வருகையை அறிகிறது, காக்கை அல்ல! யானையே சிங்கத்தின் பலத்தை அறிகிறது, சுண்டெலி அல்ல!

The meritorious alone recognizes the merit and not one who is devoid of merit. The powerful alone recognizes power (and) not one who is devoid of power. The cuckoo recognizes excellence of spring, not the crow. The elephant knows the prowess of a lion, not the mouse.

*

குணினி குணக்ஞோ ரமதே நாகுணஷீலஸ்ய குணினி பரிதோஷ: |

அலிரேதி வனாத்கமலம் ந தர்துரஸ்தன்னிவாஸோபி ||

நல்ல குணங்களைப் பாராட்டுபவனே நல்ல குணங்கள் கொண்டவரின் சேர்க்கையில் ரமிக்கிறான். நல்ல குணங்களை மதிக்காத ஒருவன் நல்ல குணங்களைக் கொண்டிருக்கும் ஒருவனிடம் சேர்ந்திருப்பதில் திருப்தி அடைவதில்லை. தேனியானது காட்டிலிருந்து தாமரையை நோக்கி வருகிறது, குளத்திலேயே வசித்தாலும் கூட தவளை தாமரையை நோக்கி வருவதில்லை.

One who appreciates virtues enjoys the company of a virtuous person. One who does not respect virtue is not satisfied in the company of a virtuous person. The bee comes from the woods to the lotus but not the frog, even if it stays there (i.e. in the same pond).

English Translation by Saroja Bhate

Source : Subhasita Shatakam Thanks : Saroja Bhate

***

Tags- யானை, சிங்கம்,  பலசாலி, தவளை, தேனி, . குயில்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: