நல்ல வாழ்க்கைக்கு 100 இரகசியங்கள் ! (Post No.10,311)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,311

Date uploaded in London – –   8 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அக்டோபர் 2021 ஹெல்த்கேர் மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

100 இரகசியங்கள் – நல்ல வாழ்க்கையைக் கவர்ந்து இழுத்து அமைத்துக் கொள்ள!

ச.நாகராஜன்

    ‘தி சீக்ரட்’ (The Secret) – இரகசியம் – இந்தத் தலைப்பில் எழுதிய புத்தக வாயிலாகவும் திரைப்படம் வாயிலாகவும் உலகெங்கும் புகழ் பெற்றவர் ஆஸ்திரேலியப் பெண்மணியான ரோண்டா பைர்ன். (Rhonda Byrne)

 50 மொழிகளில் இவரது புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    சரி, சீக்ரட் (இரகசியம்) என்ன சொல்கிறது?

  ஆழ்ந்து படித்து கடைப்பிடிக்கப்பட வேண்டிய சீக்ரட் வழிகளில் முக்கியமான நூறின் தலைப்புகள் மட்டும் இங்கு தரப்படுகிறது.

 1. சந்தோஷத்தைக் கவர்ந்து இழுங்கள்
 2. செல்வத்தைப் பெறுங்கள்
 3. அன்பைக் கண்டுபிடியுங்கள்
 4. நிஜமான நல்ல நண்பர்களை அடையுங்கள்
 5. உங்களுக்கு எதில் அதிக ஈடுபாடோ அதில் ஈடுபடுங்கள்
 6. மற்றவர்களுக்குக் கொடுங்கள்
 7. அன்பைப் பரப்புங்கள்
 8. உங்கள் குறைகளை நீக்குங்கள்
 9. பொறுமையாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
 10. உங்கள் கனவுக் காரைக் கவர்ந்து இழுங்கள்
 11. உங்கள் கனவு இல்லத்தைக் கவர்ந்து இழுங்கள்
 12.  தைரியத்தை அடையுங்கள்
 13. சுயமரியாதையைப் பெறுங்கள்
 14.  ஒரு வணிகத்தைத் தொடங்குங்கள்
 15. ஒரு லக்ஷியத்தைக் கொண்டு அதை அடையுங்கள்
 16. உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துங்கள்
 17. ஊக்கத்தைப் புதுப்பித்துக் கொண்டிருங்கள்
 18. விரிசலான உறவுகளைச் சரி செய்யுங்கள்
 19. ஒரு பேட்டியைத் தொடங்குங்கள்
 20. சந்தேகத்தை நீக்குங்கள்
 21.  மற்றவர்களை ஊக்குவியுங்கள்
 22. ஏழைகளுக்குப் பசியாற உணவு தாருங்கள்
 23. ஒரு தர்மக் கட்டளையைத் தொடங்குங்கள்
 24. உடல் ரீதியான சவால்களை எதிர்கொள்ளுங்கள்
 25. உங்களைத் தாழ்த்தும் நம்பிக்கைகளைக் களையுங்கள்
 26. வாழ்க்கையை இன்னும் அதிகம் அனுபவியுங்கள்
 27. நல்ல ஆரோக்கியத்தைப் பராமரியுங்கள்
 28. உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள்
 29. மற்றவர்கள் உங்களைப் பார்க்கும் முறையை மாற்றுங்கள்
 30. அன்பான ஒரு குடும்பத்தை கட்டமையுங்கள்
 31.  உங்கள் ஞானத்தை அதிகரியுங்கள்
 32. ஒரு புதிய திறமையைக் கற்றுக் கொள்ளுங்கள்
 33. இன்னும் அதிக பாராட்டுதலைப் பெறுங்கள்
 34. வேலையில் இன்னும் அதிகமாக சாதனை புரியுங்கள்
 35. மற்றவர்களுடன் சகஜமாகப் பழகுங்கள்
 36. நல்ல உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுங்கள்
 37. புகை பிடிப்பவரானால் உடனே அதை நிறுத்துங்கள்
 38. மது அருந்துபவரானால் அதை உடனே நிறுத்துங்கள்
 39. போதைப் பொருள்களை அறவே தவிருங்கள்
 40. கோபத்தைத் தவிருங்கள்
 41.      கஷ்ட காலத்தில் வலிமையுடன் நில்லுங்கள்
 42. வலியை நீக்குங்கள்
 43. பகல் கனவைக் காணாதீர்கள்
 44. போபியாக்களிலிருந்து மீளுங்கள்
 45. உடல் எடையை சீராக வைத்திருங்கள்
 46. நன்றி மறவாதீர்கள்
 47. கவன சக்தியைக் கவனமாக வளர்த்துக் கொள்ளுங்கள்
 48. உல்லாசத்தை அதிகப் படுத்திக் கொள்ளுங்கள்
 49. உலகைப் பார்க்கும் உங்கள் பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள்
 50. தூக்க வியாதி இருந்தால் அதை உடனே போக்குங்கள்
 51.  உங்கள் உடலைக் கவர்ச்சிகரமாக ஆக்கிக் கொள்ளுங்கள்
 52. கவலைப் படாதீர்கள்
 53. ஒரு பிரமோஷனையோ அல்லது சம்பள உயர்வையோ பெறுங்கள்
 54. சமூகத்தில் மதிப்பைப் பெறுங்கள்
 55. திருமண உறவை மேம்படுத்துங்கள்
 56. எதிலும் திடமாக நிச்சயமாக இருங்கள்
 57. ஒத்திப் போடுவதைத் தவிருங்கள்
 58. வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்
 59. சமூக அழுத்தத்தை நீக்குங்கள்
 60. குடும்ப உறவை மேம்படுத்துங்கள்
 61.  குறித்த காலத்தில் அனைத்தையும் முடியுங்கள்
 62. குறைந்த பணியில் நிறைந்த ஆதாயம் கொள்ளுங்கள்
 63. அதிக சுதந்திரம் பெறுங்கள்
 64. திறமைசாலி ஆகுங்கள்
 65. மன அழுத்தத்தைக் குறையுங்கள்
 66. சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்துங்கள்
 67. ஊக்கம் கொள்வதோடு மற்றவரையும் ஊக்கப்படுத்துங்கள்
 68. கற்பனை வளத்தைக் கூட்டுங்கள்
 69. கனவுச் சுற்றுலாவில் பயணம் செய்யுங்கள்
 70. உங்கள் புரிதலை மேம்படுத்துங்கள்
 71. ஓய்வு பெறக் கற்றுக் கொள்ளுங்கள்
 72. சமாதானத்தைப் பரப்புங்கள்
 73. நிர்வாகத் திறமையைக் கூட்டுங்கள்
 74. இந்த நாளை இன்னொருவரின் இனிய நாளாக ஆக்குங்கள்
 75. ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழுங்கள்
 76. உங்கள் நினைவாற்றலை மேம்படுத்துங்கள்
 77. உணவு எடுப்பதில் உள்ள கோளாறுகளை நீக்குங்கள்
 78. கடந்த கால துக்கங்களை ஒதுக்கி முன் செல்லுங்கள்
 79. ஏதாவது ஒரு கடைக்குச் சென்றுகொண்டே இருக்க வேண்டும் என்ற பழக்கத்திலிருந்து விடுபடுங்கள்
 80. சாலையில் வேகமாகச் செல்வதை விடுங்கள்
 81. பொறாமைப் படுவதை விடுங்கள்
 82. குணப்படுத்துவதைப் பரப்புங்கள்
 83. எதையேனும் வாங்கிக் கொண்டே இருக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுங்கள்
 84. நம்பிக்கை இல்லாத தன்மையைத் தடுத்து நிறுத்துங்கள்
 85. மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
 86. பாஸிடிவான சுய சித்திரத்தைக் கொள்ளுங்கள்
 87. கூச்சம், வெட்கத்தை உதறி விடுங்கள்
 88. அதிக ஆசையில் உழல்வதை நிறுத்துங்கள்
 89. பேச்சாற்றலை மேம்படுத்திக் கொள்ளுங்கள்
 90. எதையேனும் விடாப்பிடியாகக் கொண்டிருக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்
 91.  அதிர்ச்சி தரும் விஷயங்களைத் தடுத்து நிறுத்துங்கள்
 92. ஆஸ்த்மா அறிகுறிகளைக் களையுங்கள்
 93. மனச்சோர்விலிருந்து விடுபடுங்கள்
 94. வாதம் செய்யும் திறமையை மேம்படுத்துங்கள்
 95. ஒழுங்குக் கட்டுப்பாட்டை மேம்படுத்தி சுயக் கட்டுப்பாடுடன் இருங்கள்
 96. கெட்ட பழக்கங்களைக் களைந்தெறியுங்கள்
 97. நல்ல பழக்கங்களைக் கைக்கொள்ளுங்கள்
 98. நம்பிக்கையுடன் வாழும் உணர்வைப் பெறுங்கள்
 99. நீங்கள் யார் என்ற உங்களின் உண்மையை உணருங்கள்
 100. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் வலிமையைப் பெறுங்கள்

இப்படி வாழ்க்கையின் நூறு ரகசியங்களையும் எளிதில் பெறலாம் – ஒவ்வொன்றின் மீதும் கவனம் செலுத்தினால்.

இதைச் சொல்லும் அற்புத புத்தகமாக ‘தி சீக்ரட்’ அமைந்திருக்கிறது.

உங்கள் எண்ணங்களுக்கு பிரம்மாண்டமான சக்தி உண்டு. நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகிறீர்கள். ஆகவே எதையும் ஆக்கபூர்வ சிந்தனையுடன் பாஸிடிவாக நினையுங்கள்.

ஒரே ஒரு மகத்தான சக்தி மூலமாக மட்டுமே நாம் அனைவரும் உலகத்தில் இயங்குகிறோம்.

இந்த இயக்கத்தில் கவர்ச்சி விதி (The Law of Attraction)  என்பது தான் இரகசியம்!

   உங்கள் மனதிலிருந்து எது வெளியே செல்கிறதோ அதைத் தான் நீங்கள் கவர்ந்து இழுக்கிறீர்கள். நாம் ஒரு காந்தம் போல, அவ்வளவு தான்! 

கோபம், பொறாமை, இயலாமை, வருத்தம், மனச்சோர்வு போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை உடனே பொக்க வல்லவை எவை தெரியுமா?

   ஆக்கபூர்வமான சிந்தனை, சந்தோஷமான உங்கள் வாழ்க்கைத் தருணங்கள், உங்களுக்கு மிக மிகப் பிடித்த பாடல் – இவை போன்றவை தான்!

    இப்படி இவற்றை நினைக்க ஆரம்பித்தால், இதைத் தொடர்ந்து செய்தால் உங்கள் வாழ்க்கை சந்தோஷமானதாக மாறும்; நல்லவை நாடி வரும். ஏனெனில் நீங்கள் தான் அதைக் காந்தம் போலக் கவர்ந்து வரச் செய்கிறீர்கள்!

முயற்சியை ஆரம்பியுங்கள், முயன்றால் முடியாதது ஒன்றில்லை

***

tags- நல்ல வாழ்க்கைக்கு, 100 இரகசியங்கள், Rhonda Byrne, Secret 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: