ஸ்ரீ சத்ய சாயி பாபா! – 1(Post No.10,369)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,369

Date uploaded in London – –   23 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 22-11-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்ரீ சத்ய சாயி பாபா! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

நாளை நவம்பர் மாதம் 23ஆம் தேதி. அவதார புருஷர் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் ஜெயந்தி தினம். அதையொட்டிய இந்த உரையில் எனது அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டு பிறகு பாபாவைப் பற்றிச் சொல்ல எண்ணுகிறேன்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளின் முற்பகுதியில் நவம்பர் மாதம் 23 ஆம் தேதியை ஒட்டிய முன் தினமொன்றில் மதுரையிலிருந்து ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பக்தர்களின் குடும்பங்கள் பல புட்டபர்த்திக்குச் செல்லத் திட்டமிட்டன. அதில் எனது குடும்பமும் ஒன்று. எனது தந்தையார் தினமணி ஸ்ரீ வெ.சந்தானம் எங்களையும் ஒரு காரில் அழைத்துச் சென்றார். மதுரையில் பெரும் வியாபாரியும் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பக்தருமான ஸ்ரீ P.S.A சுப்ரமணியம் செட்டியார் தலைமையில் LIC இல் பணி புரிந்த பெரிய அதிகாரி ஸ்ரீ K R K பட் உள்ளிட்டோர் அவரவர் காரில் சென்றோம்.

புட்டபர்த்தி அடைந்தவுடன் அங்கு ஸ்ரீ கஸ்தூரி அவர்களைச் சந்தித்தோம். அந்தக் காலத்தில் இப்போது காணும் பிரம்மாண்டமான புட்டபர்த்தி இல்லை.

பிரசாந்தி நிலையம் மிகச் சிறிய கட்டிடமாக இருந்தது. அருகே பல சிறிய வீடுகள். அதில் ஒன்றில் ஸ்ரீ கஸ்தூரி இருந்தார். அவருடன் அளவளாவி மகிழ்ந்தோம். மறு நாள் ஸ்ரீ பாபா எங்களை இண்டர்வியூவுக்கு அழைத்தார். எனது தந்தையாருக்கு தன் அங்கை அசைவில் கையை அசைத்து தனது விஸிடிங் கார்ட் ஒன்றை வரவழைத்துக் கொடுத்தார். பல அருளுரைகளையும் கூறினார்.

மிகுந்த மகிழ்ச்சி அனைவருக்கும். திரும்பி ஊர் வந்து சேர்ந்தோம். அன்று முதல் SAI ACTIVITIES சாயி சேவா தொடங்கியது.

எனது தந்தையார் ஏராளமான சாயி கீர்த்தனைகளை இயற்றினார். நேரம் காலம் இல்லை. நினைத்த போது கீர்த்தனைகள் எழும். அதை உடனே எழுதிக் கொள்வார். சங்கீத வித்வான்கள் பலரும் அதைப் பாடி மகிழ்ந்தனர். அதை சாயிபாபாவிடம் சமர்ப்பித்த போது அது ஏற்கனவே எழுதும் போதே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என்றும் பதங்கள் நடனமாடி வந்திருக்கின்றன என்றும் அவர் கூறி அருளினார்.

நான் சேவா தள் அமைப்பில் சேர்ந்து வாராவாரம் மதுரை ஜெனரல் ஹாஸ்பிடல் சென்று சேவை செய்வது, அதி காலை 5 மணிக்கு நகர சங்கீர்த்தன், ஞாயிறு அன்று ஸ்டடி சர்க்கிள், கோவிலில் உழவாரப் பணி, அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மெடிகல் கேம்ப் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டேன். ஏராளமான இடங்களில் பஜனை நடைபெறும். ஒவ்வொருவருக்கும் ஒரு திவ்ய அனுபவம். பல படங்களிலிருந்து விபூதி மழை பொழியும். பகவான் மதுரை விஜயம் செய்தார். அவரது பேச்சை சுத்தானந்த பாரதியார் மொழி பெயர்த்தார்.

சென்னை மாநிலத்தில் மாநில அளவிலான சேவா தள் பேச்சுப் போட்டியில் பங்கு கொண்டேன். அதில் மாநிலத்திற்கான முதல் பரிசைப் பெற்றேன்.சென்னை ஆபட்ஸ்பரியில் நடந்த விழாவில் பாபாவின் திருக்கரங்களினால் அவர் எழுதிய ராமகதா ரஸ வாஹினி நூலை -அவர் கையெழுத்திட்டுக் கொடுத்த நூலை – அவரிடமிருந்து பெறும் பெரும் பாக்கியத்தையும் பெற்றேன்.

இன்னும் பிரசாந்தி நிலைய அனுபவங்கள், மாநாடு, ஆங்காங்குள்ள ஊர்களில் ஏற்பட்ட அனுபவங்கள் என அடுத்தடுத்து ஏராளம் ஏற்படலாயின.

அவர் கலியுகத்தில் அவதரித்த மாபெரும் அவதாரம் என்பதை உணர்ந்த கோடிக் கணக்கான பக்தர்களில் அடியேனும் ஒருவனாக ஆகியதோடு மட்டுமின்றி அவரது வரலாற்றை தமிழில் அற்புத அவதாரம் ஸ்ரீ சத்ய சாயி பாபா என்ற நூலாக எழுதி டிசம்பர் 2002இல் வெளியிட்டேன். 368 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் அவரது பல உரைகளின் பகுதிகளும் கூட ‘அம்ருத சாகரம் என்னும் சாயி உபதேச மஞ்சரி’ என்ற இணைப்பாகத் தரப்பட்டிருந்தது. இந்த எனது முன் உரையுடன், இனி அவரது வாழ்க்கை சரிதத்திற்கு வருவோம்.

      ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் தர்மாவரம் அருகே உள்ளது புட்டபர்த்தி என்னும் சிறிய கிராமம். இங்கு க்ஷத்திரிய வம்சத்தைச் சேர்ந்த ராஜு வம்சத்தினர் நெடுங்காலமாக வசித்து வந்தனர். பாரத்வாஜ கோத்திரத்தையும் ஆபஸ்தம்ப சூத்திரத்தையும் சேர்ந்த ஸ்ரீ கொண்டம ராஜு ‘ரத்னாகர’ என்ற பெயரைக் கொண்டவர். ஆகவே இவரை ரத்னாகர கொண்டமராஜு என அனைவரும் அழைப்பர். இவருடைய மனைவி லக்ஷ்மம்மா சத்ய நாராயண பூஜையைப் பயபக்தியுடன் செய்து வந்தவர். இவருக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவருடைய மூத்த மகனான பெத்த வெங்கமராஜு ஈஸ்வரம்மா என்பவரை மணந்தார். இந்த தம்பதியினருக்கு 1926ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி காலை எட்டு மணிக்கு திருவாதிரை நக்ஷத்திரத்தில்  மூன்றாவது மகனாக அவதார புருஷர் சத்ய நாராயணன் அவதரித்தார். தன் அவதார பணியை நிறைவேற்றக் காத்திருந்த பாலகன் ,1940ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருபதாம் தேதி பள்ளிக்கூடம் நோக்கிச் சென்ற பாலகன், திரும்பி வந்து தன் புத்தகங்களை அண்ணன் வீட்டில் எறிந்து விட்டு, “என் பக்தர்கள் என்னை அழைக்கின்றனர். நான் கிளம்பி விட்டேன்” என்றார்.

அன்று தனது பக்தரான கலால் இன்ஸ்பெக்டரின் வீட்டிற்குச் சென்றார். அங்கு வீட்டைச் சுற்றி இருந்த மாந்தோப்பில் ஒரு கல்லின் மீது அமர்ந்து,

“மானஸ பஜரே குரு சரணம், துஸ்தர பவ சாகர தரணம் என்று பாடி தனது முதல் உபதேசத்தை ஆரம்பித்தார்.

***   தொடரும்

tags- சத்ய சாயி பாபா! – 1, sathya sai

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: