Post No. 10,370
Date uploaded in London – – 23 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கை இல்லாத பெண்களை பேய்மகள் , சூன்யக்காரி என்று சொல்லி உயிருடன் எரித்துக்கொல்வதை உலகம் நன்கு அறியும் . பிரான்ஸ் நாட்டின் வீராங்கனை, பேரழகி ஜோன் ஆப் ஆ ர்க்கை (JOAN OF ARC ஆர்க் நகர ஜோன் ) உயிருடன் எரித்துக் கொன்றதால் இது உலகம் முழுதும் அம்பலமாகியது. பின்னர் போப்பாண்டவர் இதற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு அவளை செயின்ட் / புனிதவதி என்று அறிவித்தார். பெர்னார்ட் ஷா எழுதிய நாடகத்தில் இந்த அநியாயத்தைக் கண்டித்தார் (பெர்னார்ட் ஷா நாடகத்தை லண்டன் சுவாமிநாதன் பி.பி.சி. தமிழோசைக்காக தமிழில் மொழிபெயர்த்துள்ளார் ).
வெள்ளைக்கார மஹா பாவிகள் இதைப் பற்றி எழுதவே மாட்டார்கள்; அது மட்டுமல்ல இது 19-ம் நூற்றாண்டு வரை நடந்தது. அப்படி பெண்களை உயிரோடு எரிக்கையில் ஊரே கூ டி நின்று வேடிக்கை பார்க்கும். கூத்தாடி மகிழ்வார்கள். அங்குள்ள சிறுவர் சிறுமியர் மனதில் அனுதாபம், பரிதாபம் தோன்றக்கூடாது என்பதற்காக அவள் சூன்யக்காரி, மந்திரத்தால் இந்த ஊரையே நாசம் செய்ய முயன்றாள் என்று வதந்தியைப் பரப்புவார்கள் . பின்னர் அவளை கயிற்றால் கட்டி, வைக்கப்போரில் வைத்து கொளுத்தி ஆடிப்பாடி மகிழ்வார்கள். இதற்கெல்லாம் முன்னின்று அனுமதி கொடுப்பவர் கிறிஸ்தவப் பாதிரி. இதே போல மதம் மாறாதவர்களை முஸ்லீம்கள் கொன்று குவித்தார்கள் . இந்த வரலாற்று உண்மை களை ஆதாரபூர்வமாக இந்துக்களுக்குக் கற்பிக்கவேண்டும்.
மாற்று மதத்தினர் இந்து மதத்தினரைத் தாக்கிப் பிரசாரம் செய்தால் இதை அச்சிட்டு அவர்கள் கைகளில் கொடுக்க வேண்டும்.
முதலில் CHAMBERS ENCYCLOPAEDIA சேம்பர்ஸ் என்சைக்ளோபீடியா என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம் .
அதர்வண வேதம் ஐந்தாம் காண்டத்தில் 28-ஆவது மந்திரம் (ஸூக்தம் எண் 171) பேய் ஒட்டும் மந்திரம் ஆகும் .அதுபற்றி வேத மந்திரங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ரால்ப் டி .எச் . கிரிப்பித் RALPH T H GRIFFITH இவ்வாறு கூறுகிறார்
” கெட்ட பிசாசுகளை அழிக்க அக்கினியை நாடும் இப்பழக்கம் ஐரோப்பாவில் உள்ளதைவிட தேவலை போல் உள்ளது. அங்கு சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றிய பயங்கரமான பேய்களுக்கு பெண் மந்திரவாதிகள்தான் கரணம் என்று நம்பினர்; மக்களும் கூட அதை நம்பினர். அம்மந்திரவாதிகள் பொதுவாக ஏழைக் கிழவிகளாக இருப்பார்கள். சுருக்கங்கள் நிறைந்த முகம், ரோமங்கள் அடர்ந்த உதடுகள் , பூனைக் கண்கள், கீச் என்ற குரல், வசைபாடும் நாக்குகள் உடையோர் என்று அவர்களை வருணிப்பார்கள். கிறிஸ்தவ சகாப் தத்தில் சுமார் 90 லட்சம் பெண் மந்திரவாதிகள் எரிக்கப்பட்டதாக டாக்டர் ஸ்ப்ரெங்கர் ” முகமது நபியின் வாழ் க்கைச் சரிதம் என்ற நூலில் கூறுகிறார்- ஆதாரம் சூன்யக் காரிகள் – சேம்பர்ஸ் என்சைக்ளோபீடியா WICHCRAFT ,CHAMBRS ENCYCLOPEDIA.
DR SPRENGHER IN HIS BOOK ‘ LIFE OF MOHAMMED’.
குறிப்பிட்ட அதர்வண வேத மந்திரத்தில் ஜாதவேதஸ் என்னும் அக்கினி தேவன் குறித்துப் பாடும் பாடலில் உயிர்க்கொலை எதுவுமில்லை. பேய் பிசாசுகள் மீது சாபம் மட்டுமே உளது. ஆகையால் கிரிப்பித் இது ரொம்பவும் தேவலை போல இருக்கிறதே. எங்கள் ஐரோப்பா மிகவும் மோசம் என்று சொல்லாமல் சொல்கிறார்.
XXXX
கிரிப்பித் மறைத்த விஷயங்கள்
வயதான, ஆதரவற்ற, தனித்து வாழும் பெண்கள் எவருக்கும் ஐரோப்பாவில் பாதுகாப்பு இல்லை. அவர்கள் எரிக்கப்படுவார்கள். அது மட்டுமல்ல. கிறிஸ்தவ மதத்தை ஏற்காத இளம்பெண்களையும் இப்படி எரித்தார்கள். கிரிப்பித் மிகவும் சாதுர்யமாக, ஜோன் ஆப் ஆர்க் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆர்லியன்ஸ் நகர பேரழகி ஜோன், 19 வயதில் சூன்யக்காரி முத்திரை குத்தப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டாள் . இது 500 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. இறுதியாக நெப்போலியன் இந்த அக்கிரமத்தைக் கண்டித்து அவளை பிரான்ஸ் நாட்டின் தேசீய சின்னம் என்றும் அறிவித்தார். இதற்கு மேலும் இந்த அநியாயத்தைக் கண்டிக்காமல் இருந்தால் பிரான்சும் ஜெர்மனி போல கத்தோலிக்க கிறிஸ்தவத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் என்று கருதி 1920ம் ஆண்டில் நா ங்கள் செய்தது மஹா தப்பு; அவளை இன்று முதல் பு ண்ய ஆத்மா என்று வணங்குவோம் என்று அறிவித்தார் அப் போதைய போப்பாண்டவர்.
கிறிஸ்தவர்கள் இதை 2000 ஆண்டுகளாக செய்து வந்தனர். 1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஹைப்பேஷியா HYPATIA என்னும் பேரழகி எகிப்து நாட்டில் மக்களுக்கு கணிதம் சொல்லிக்கொடுத்தார். அவர் பிற்காலத்தில் கெப்ளர் KEPLER கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் சூரிய சித்தாந்தத்தை 1700 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னார். அவளை கிறிஸ்தவ மத விரோதி என்று முத்திரை குத்தி படுகொலை செய்தனர். கோபர்நிக்கஸ், கலீலியோ போன்ற விஞ்ஞானிகளை கிறிஸ்தவர்கள் கொடுமைப் படுத்தியதை எல்லா புஸ்தகங்களிலும் காணலாம்.
ஹைப்பேஷியா HYPATIA கொல்லப்பட்ட அ லெக்ஸ்சாண்ட்ரியா துறைமுகத்தில் இந்துக்கள் காலனி HINDU COLONY இருந்தது. இந்து வணிகர்கள் அங்கு பெரும் அளவில் இருந்தனர். ஆக , ஹைபேசியா சொன்ன புதுமை விஷயம் இந்துக்களின் கண்டுபிடிப்பே. ஏனெனில் கிரஹணம் பற்றிய தகவல்கள் 2000 ஆண்டுகளாக சங்கத் தமிழ் நூல்களிலும் அதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ரிக் வேதத்திலும் உளது. நாம் நாள் தோறும் பார்க்கும் பஞ்சாங்கத்திலும் உளது. ஆக சூரியனைச் சுற்றித்தான் கிரகங்கள், பூமி முதலியன செல்கின்றன என்பது இந்துக்களுக்குத் தெரியும். அல்லது கிரஹணத்தை சொல்லியிருக்க முடியாது .
கிறிஸ்தவ, முஸ்லீம் படுகொலைகளை மார்க்ஸீயக் கும்பலும், வாத்திகன் ஆதரவு கும்பலும் மறைத்து வருகின்றன. இவற்றை இந்து மத சிறுவர் சிறுமியர்க்கு கற்பது மிகவும் அவசியம் ஆகும் .
இதைவிட கொடூரமான சம் பவம் கிரேக்க நாட்டிலும் இத்தாலியிலும் நடந்தன. கிரேக்க நாட்டில் அவர்களுடைய தெய்வத்துக்கு எதிராகப் பேசிய சாக்ரடீஸ் முதலியோருக்கு கட்டைப் பஞ்சாயத்து நடத்தி கட்டாய விஷம் கொடுத்துக் கொன்றனர். ரோமானிய மன்னர்கள் அசுரர்கள். ராவணன் போன்றவர்கள். அவர்கள் அடிமைகளையும் போர் எதிரிகளையும் சிங்கம் புலிகள் முன்னிலையில் தூக்கி எறிந்து சண்டை போட்டு சாகுங்கள் — என்று சொல்லி வேடிக்கை பார்த்தனர். அதை வேடிக்கை பார்க்க பிரம்மாண்டமான ஸ்டேடியம் கட்டினார்கள் ( கட்டுரையாளர் லண்டன் சாமிநாதன் இரண்டு முறை ரோம் சென்ற போதும் அந்தக் கட்டிடங்களை புகைப்படம் எடுத்து முன்னரே இங்கு வெளியிட்டுள்ளார்.)
90 லட்சம் பெண்களின் ஆன்மா சாந்தி அடைவதாக !
PLEASE GO TO WIKIPEDIA FOR MORE INFORMATION ABOUT HYPATIA OF ALEXANDRA, JOAN OF ARC OF FRANCE.
–SUBHAM–
tags- சூன்யக்காரி பிரான்ஸ் , வீராங்கனை, ஜோன் ஆப் ஆர்க் ,JOAN OF ARC , Hypatia, ஹைப்பேஷியா