Post No. 10,381
Date uploaded in London – – 26 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சூரியன் (SUN) பற்றி விஞ்ஞானிகள் கடந்த 100 ஆண்டுகளாக எழுதிவரும் விஷயங்களை ரிக் வேத முனிவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டனர். இப்படி எல்லாவற்றையும் இந்துக்கள் உரிமை கொண்டாடுவது பலருக்கும் நகைப்பை உண்டாக்கும்.
“ஏனப்பா, குமரப்பா, எதைச் சொன்னாலும் நாங்கள் அன்றே சொல்லிவிட்டோம் என்கிறாயே !மொபைல் போன் MOBILE PHONE பற்றி உங்கள் ரிக் வேதம் சொன்னதா ? இன்டர்நெட் INTERNET என்னும் அற்புதம் பற்றி உங்கள் வேதம் ஏதேனும் செப்பியதா? SPACE TRAVEL ‘ஸ்பேஸ் ட்ராவல்’ பற்றி என்ன பரைஞன்னு? லேது, லேது????
இதற்கு நான் மூன்று ,நான்கு கட்டுரைகளில் பதில் சொல்லி இருக்கிறேன்
சுருக்கமாக மீண்டும் சொல்கிறேன் :-
ஐன்ஸ்டைன் EINSTEIN சொன்னார்: ஒளியின் வேகமே பிரபஞ்சத்தில் மிக வேகமானது LIGHT IS THE FASTEST OBJECT; அதை மிஞ்ச முடியாது என்று .
நான் சொன்னேன் ஐன்ஸ்டைன் 50 சதவிகிதம் கரெக்ட்; ஆனால் ரிக்வேதம் முழுதும் மனோ வேகம் பற்றியே பேசுகிறார்கள் . அதாவது ஒருவர் எண்ண சக்தியைப் THOUGHT POWER பயன்படுத்தி , ஒளி உருவத்துக்கு மாறி பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இதை பிராமணர்களின் தர்ப்பண மந்திரத்திலும், தினசரி செய்யும் காயத்ரி ஆவாஹனத்திலும், திரிலோக ஸஞ்சாரியான நாரதர் கதைகளிலும், மஹாபாரத வன பர்வ SPACE TRAVEL ஸ்பேஸ் ட்ராவலிலும் காணலாம் என்று முன்னரே எழுதிவிட்டேன். ஆகையால் ஐன்ஸ்டைனை விட இந்துக்கள் புத்திசாலி ( அய்ன் + ஸ்டைன் = ஒரு + கல் ; ஜெர்மன் மொழி)
XXX
நவக்ரஹ துதி
நவக்ரஹ துதியில் (ஜபா குஸும …) ஒவ்வொரு கிரஹம் பற்றியும் வருவதை விளக்கி நாம் செவ்வாய், புதன், வியாழன் பற்றி சொன்ன விஷயங்களை இப்போதுதான் விஞ்ஞானம் கண்டுபிடிக்கிறது என்றும் காட்டினேன் .
சில அதிசயங்களை மட்டும் நினைவு படுத்துகிறேன். சனிக்கு மெல்லப் போகும் நொண்டி என்று SATURN IS THE SLOWEST VISIBLE PALNET பெயர். சனி கிரஹம்தான் ஒரு சுற்றுச் சுற்ற 30 ஆண்டுகள் எடுக்கிறது; அதாவது நமக்கு கண்ணுக்குத் தெரியும் கிரகங்களில் ‘சநைஹி’ = மெதுவாகச் செல்லுவோன். அவனுக்கு மட்டுமே மிகப்பெரிய வளையம் RINGS AROUND SATURN உண்டு மறற கிரகங்களில் விட்டு விட்டு சின்ன வளையங்கள். இதனால் ஜோதிட சாத்திரத்தில் மாந்தி என்று அவனைச் சேர்த்தோம். ஆங்கில ‘மாண்டில் mantle’ இதிலிருந்து வந்ததே ; குரு என்றால் கனம் HEAVY ஆனவர் ; பெரியவர்; மற்றவர்களை தூக்கி விடுபவர். இதை நாம் ஜுப்பிடர் JUPITER என்னும் வியாழன் கிரகத்துக்கு சூட்டினோம். இதுதான் பெரிய கிரகம் என்பதை விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறது அது மட்டுமல்ல சிஷ்யனை குரு, தூக்கி விடுவது போல வியாழனுக்கு விண்கலத்தை உந்தி விடும் CATAPULTING POWER சக்தி இருப்பதை இப்போது கண்டுபிடித்திருக்கினார்கள். இது போல சந்திரன், செவ்வாய் புதன் பற்றி நாம் சொன்னதை இனிமேல்தான் வர்கள் கண்டு பிடிக்கப்போகிறார்கள்.
XXX
ஸ்பேஸ் ட்ராவல்- விண்வெளிப் பயணம் ; வெளிக்கிரஹ (E.T.)வாசிகள்
கிரஹம் என்றாலே பிடித்தல் GRIP; GRAVITY ; பாணி கிரஹணம்= கைப்பிடித்தல்= கல்யாணம் .
சந்திர கிரஹணம் = நிழல் பற்றுவதால் – பாம்பின் வாயில் சந்திரன் பிடிக்கப்படுவதால் = ஏற்படுவது. ஆக எல்லா கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை உள்ளதை சம்ஸ்க்ருத சொல்லே விளக்குகிறது. அண்டம் . கோளம் என்றாலே EGG/OVAL SHAPED உருண்டை ; இதை சம்ஸ்க்ருத சொல்லே காட்டும்
வெளி உலக வாசிகள் E.T. பற்றி இந்துக்கள் சொன்ன 7 விஷயங்களை முன்னரே பட்டியலிட்டேன். அங்கு செக்ஸ் SEX BANNED செய்யமுடியாது என்பதால் வெளி உலகவாசிகள் பூமிக்குத் தான் வரவேண்டும். இந்த 7 ‘பாயிண்டு’களை இனிமேல்தான் விஞ்ஞானம் கண்டுபிடிக்கப்போகிறது
XXX
ஆட்டோ ஸஜ்ஜஷன் AUTO SUGGESTION
இதுவரை நான் எழுதாத சில விஷயங்களை கடந்த இரண்டு நாட்களாக எழுதி வருகிறேன் .
அதாவது வேதம் முழுதும் AUTO SUGGSTION ஆட்டோ சஜ்ஜஷன் டெக் னிக் உள்ளது இதை மருத்துவர்கள் பிளாசிபோ PLCEBO என்ற போலி மாத்திரையில் பயன்படுத்துகின்றனர். உங்கள் நம்பிக்கையும், பாசிட்டிவ் எண்ணங்களும் முடியை வளரச் செய்யும்; நோயைத் தீர்க்கும்; பிரச்சினைகளை அகற்றும் ; இதை பெருமளவு பயன்படுத்துவது வேதம் !
XXX.
காஞ்சி பரமாசார்யார் சொன்னது
காஞ்சி பெரியவர் சொன்னதை இன்னும் விஞ்ஞானம் கண்டுபிடிக்கவில்லை. இப்போது மூலக அட்டவவணையில் 118 மூழ்கலாம் உளது . இதற்கு மேல் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். 93 மூலகம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் காஞ்சி பராமசரியா சுவாமிகள் இப்படி கண்டுபிடித்துக் கொண்டே போய் பின்னர் மூலம் ஒன்றே என்பதைச் சொல்லுவார்கள் என்று பேசி இருக்கிறார். விஞ்ஞானம் இன்னும் அந்த நிலைக்கு உயரவில்லை.
XXX
அடடா, சப்ஜெக்டை SUBJECT மறந்து விட்டேனே !
புதிய விஷயம் என்ன?
சூரியனைப் பற்றி புதுச்செய்தி வேதத்தில் உள்ளது !
முன்னர் சூரியனுக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பு பற்றி எழுதினேன் ;
இது அதர்வண வேதத்திலும் தொடர்ந்து பேசப்படுகிறது.
சந்திரனுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு பற்றி எழுதினேன் ; இதை ஒரளவுக்கு பைத்தியக்கார MENTAL HEAALTH CENTRE STAFF ஆஸ்பத்திரி மருத்துவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்
சந்திரனுக்கும் தவரங்களுக்கும் உள்ள தொடர்பை எல்லா வேதங்களும் தொடர்ந்து பேசி வருகின்றன. இதை விஞ்ஞானம் துளிக்கூட அறியவில்லை. ஆனால் இனிமேல்தான் இதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்ள போகிறது .
இன்றும் கடலில் நடைபெறும் அற்புதங்கள் அனைத்தும் பவுர்ணமியில்தான் நிகழ்கின்றன. ஆஸ்திரேலியாவில் 2500 பவளப் பாறைக ள் 1500 மைல் நீளத்துக்குப் பரவியுள்ளன . அவை இனப்பெருக்கம் செய்ய கோடிக்கணக்கான முட்டைகளை வெளியிடுவது பெளர்ணமியில்தான் ; சுவாதி நட்சத்திர மழையில் முத்து உண்டாவதை இனி ஒப்புக்கொள்வார்கள்.
XXX
சூரிய ஆராய்ச்சி
சூரியனுக்கு முன்னர் வாலகில்யர்கள் என்னும் விரல் அளவேயுள்ள முனிவர்கள் 60,000 பேர் செல்வது பற்றி எழுதினேன்
சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS இருப்பதை ரிக் வேத முனிவர் பாடி இருப்பதை எழுதினேன் .
சூரிய கிரஹணத்தை கணக்கிட்டு, அத்ரி முனிவர் செய்த அற்புதத்தையும் மஹாபரதத்தில் கண்ணன் பயன்படுத்தியதையும் எழுதினேன் ,
இப்போது ஒரு புதிய விஷயம்
வேதத்தில் ரிபு RIBHU என்னும் தேவர்கள் மூவர் சூரியனில் வசிப்பதாகச் செப்புகின்றனர்.
முதலில் வேதமும் அது பற்றி வெள்ளைக்காரர் எழுதியதையும் சொல்கிறேன்
ரிபுக்கள் பற்றி நான் முன்னர் எழுதிய ‘மனிதனும் தெய்வமாகலாம்’ என்ற கட்டுரையில்; அவர்கள் தெய்வமான கதையை வள்ளுவரும் பாடி இருப்பதைக் காட்டினேன்.
இந்த ரிபுக்கள் என்னும் தேவர்கள் மூவரும் சூரியனில் இருப்பதாக வேதம் சொல்கிறது. வேதம் சொன்ன கறுப்புப் புள்ளியைச் சொன்ன விஞ்ஞானிகள் இதுவரை ஒன்றும் சொல்லவில்லை; அதாவது வாலகில்யர் என்னும் குட்டை முனிவர் பற்றியும் இந்த ரிபுக்கள் பற்றியும் அவர்களுக்கு இதுவரை தெரியவில்லை !!!
XXX
ரிபுக்கள் யார் ?
அதர்வண வேதம் – கண்டம் 6- பாடல் 47 (சூக்தம் 220)
மூன்று வேளைகளில் செய்யப்படும் வழிபாட்டில் மூன்றாவது நேர வழிபா டு பற்றி ஒரு மந்திரம்:–
3.ருதத்தால் – யக்ஞ பாண்டத்தைப் பொருந்தச் செய்யும் ரிஷிகளின் மூன்றாவது யக்ஞமே இது.
; சொர்க்கத்தை அடைந்துள்ள செளதன்வர்கள் எங்களது சீரிய செயலை வெற்றி அடையச் செய்வார்களாக
இதற்கு விளக்கம் எழுதிய கிரிப்பித் GRIFFITH சொல்கிறார்:–
இவர்கள் , சுதன்வான் என்பவரின் மூன்று மகன்கள் ; ரிபு, விபவான், வாஜன் என்று பெயர்கள். அவர்கள் சூரிய மண்டலத்தில் வசிக்கின்றனர் தங்களுடைய நல்ல செய்கைகளால் தெய்வீகத் தன்மையை அடைந்தனர். மனிதர்கள் தெய்வத்தன்மையை அடைய முடியும் என்பதற்கு அவர்கள் எடுத்துக் காட்டு .
அவர்கள் அங்கீரஸ் முனிவரின் வழிவந்தவர்கள்; மூவரில் மூத்தவர் பெயர் ரிபு என்பதால் ரிபுக்கள் என்னு பொதுவாக அழைக்கப்படுவர்; த்வஷ்டா செய்து கொடுத்த ஒரு கோப்பையிலிருந்து அவர்கள் நான்கு கோப்பைகளை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. ஒரு வேளை, யாக யக்ஞங்களில் அவர்கள் ஒரு புதிய முறையை உருவாக்கியதை வேதங்கள் இப்படிச் சொல்லியிருக்கலாம் ;பேராசிரியர் வில்சன் WILSON சொன்ன விஷயத்தை இங்கே கிரிப்பித் GRIFFITH சொல்லியிருக்கிறார்.
ரிக்வேதம் மேல் விவரம் தருகிறது.:_ ரிபுக்கள்தான் இந்திரனுடைய ரதத்தையும் குதிரைகளையும் உருவாக்கியதாகவும் கடவுளின் உத்தரவின் பேரில் ஒரு கோப்பையை அவர்கள் 4 ஆக்கியதாகவும் இதனால்தான் அவர்கள் தெய்வத்தனமைக்கு உயர்த்தப்பட்டார்களென்றும் தகவல் உளது. அவர்கள் பெற்றோர்களை மீண்டும் இளமைகுத் திரும்புமாறு செய் ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
சூரிய கிரணங்களுக்கும் SUN RAYS ரிபுக்களுக்கும் தொடர்பு இருப்பது போல வும் அவை படுகின்றன.
XXX
எனது கருத்துக்கள்
சூரிய மண்டலத்தில் வசிக்கும் மூவர் என்பதற்கு நமக்கு இப்போது விளக்கம் தெரியவில்லை. அவர்களுடைய சக்திதான் சூரிய கிரணங்கள் என்பது தெரிகிறது. அவர்கள் 4 கோப்பைகளை வைத்ததது என்பதன் பொருளும் ஊகிக்கவேபடுகிறது ; எதிர்காலத்தில் அமெரிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடிக்கலாம்
சூரியனுடன் சுற்றி வரும் குள்ள முனிவர்கள் யார்
https://tamilandvedas.files.wordpress.com › 2011/12
“வாலகில்யர்கள் சக்தி வாய்ந்த … வாலகில்யர்கள் தனியாக யாகம் செய்தனர்.
மனிதனும் தெய்வமாகலாம் -குறள் , ரிக் வேதம் (Post …
http://swamiindology.blogspot.com › …
·
12 Jun 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … “வேள்வியைத் தாங்கும் ரிபுக்கள் மானிட வடிவில் …
சூரியன் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ச…
tamilandvedas.com, swamiindology.blogspot.com … சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS (Already posted in English).
Missing: கருப்பு | Must include: கருப்பு
சூரியனைப் பற்றி 6 கண்டு பிடிப்புகள் வேதத்தில் …
https://tamilandvedas.com › சூர…
5 Nov 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS (Already posted in …
Hindus’ Future Predictions- Part 1 | Tamil and Vedas
https://tamilandvedas.com › 2012/05/20 › hindus-futur…
20 May 2012 — My friends get annoyed whenever I say, “it is already said in our Hindu scriptures”, interrupting their scientific discussions.
You’ve visited this page 2 times. Last visit: 09/09/20
Hindus’ Future Predictions- Part 2 | Tamil and Vedas
https://tamilandvedas.com › 2012/05/20 › hindus-futur…
20 May 2012 — God’s particle and Kanchi Shankaracharya: Kanchi Shankaracharya who attained Samadhi at the age of 100, delivered a lecture in Madras in …
HINDUS’ NEW METHODS OF FORTUNE TELLING! (Post No …
https://tamilandvedas.com › 2018/09/01 › hindus-new-…
1 Sept 2018 — Hindus have several methods of predicting one’s future. I have already given details about rope trick astrology, lizard predictions, …
What Hindus know that Scientists don’t know! | Tamil and Vedas
https://tamilandvedas.com › 2014/04/09 › what-hindus-…
9 Apr 2014 — But I have started to work in this direction by writing two posts: Hindus Future Predictions (Part 1 and Part 2) in this blog.
Hindu almanac | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › hindu-almanac
28 Apr 2019 — Posts about Hindu almanac written by Tamil and Vedas. … Not only that God is not sure about future BREXIT predictions as well He didn’t …
Astrology – Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › tamil-astrology
Can Birds Predict Your Future? By London Swaminathan. Kili Jothitam (Parrot Astrology). South Indians, particularly Tamils, have some strange beliefs.
Vedic predictions | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › vedic-predictions
10 Apr 2015 — They all believed that the behaviour of animals and birds as well as natural phenomena can predict future. Some of their beliefs have some …
MY GREAT DISCOVERIES SO FAR! – Part 1 (Post No.8628)
https://tamilandvedas.com › 2020/09/04 › my-great-dis…
4 Sept 2020 — Tamil and Sanskrit came from the same source as Hindu scriptures say. … Hindus‘ Future Predictions– Part 1 | Tamil and Vedas.
Tamil predictions | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ta…
·
7 Oct 2017 — Like orthodox Hindus find some answer by throwing two differently coloured flowers in … Tamils have novel ways of predicting your future.
speech in Hinduism | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › speech-in-hinduism
20 Feb 2016 — But I have started to work in this direction by writing two posts: Hindus Future Predictions (Part 1 and Part 2) in this blog.
ரிபு | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ர…
22 Jul 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. ‘எழுதாத மறையளித்த எழுத்தறியும் பெருமாள்’—பெரிய …
தெய்வம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › த…
12 Jun 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … “வேள்வியைத் தாங்கும் ரிபுக்கள் மானிட வடிவில் …
—subham–
tags–
சூரியன், ஆராய்ச்சி, ரிபு, வாலகில்யர், சுதன்வான் , இந்துக்கள், கண்டுபிடிப்பு