Post No. 10,386
Date uploaded in London – – 28 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பண்டிகை நாட்கள் – டிச. 4- சூரிய கிரஹணம் (இந்தியாவில் தெரியாது) ; 11- பாரதியார் பிறந்ததினம்; 16- மார்கழி மாதப் பிறப்பு ; 20-ஆருத்ரா தரிசனம்; 25- கிறிஸ்துமஸ்
அமாவாசை- 4; பெளர்ணமி – 18; ஏகாதசி விரத நாட்கள் -14, 29.
சுப முகூர்த்த நாட்கள் 1, 6, 8, 9, 10, 13
xxx
டிசம்பர் 2021 காலண்டர் – 31 வள்ளலார் பொன்மொழிகள் (Post No.10,386)
டிசம்பர் 1 புதன் கிழமை
வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.
XXX
டிசம்பர் 2 வியாழக் கிழமை
ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்
ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை
XXX
டிசம்பர் 3 வெள்ளிக் கிழமை
மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்
விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்
XXX
டிசம்பர் 4 சனிக் கிழமை
தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற
தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்
XXX
டிசம்பர் 5 ஞாயிற்றுக் கிழமை
இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க
இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி
மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
XXX
டிசம்பர் 6 திங்கட் கிழமை
சத்தியவான் வார்த்தை இது தான்உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
XXX
டிசம்பர் 7 செவ்வாய்க் கிழமை
இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
XXX
டிசம்பர் 8 புதன் கிழமை
செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.
XXX
டிசம்பர் 9 வியாழக் கிழமை
என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது
பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
XXX
டிசம்பர் 10 வெள்ளிக் கிழமை
உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி
உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி
பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்
XXX
டிசம்பர் 11 சனிக் கிழமை
திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று
தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ
வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி
மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.
XXX
டிசம்பர் 12 ஞாயிற்றுக் கிழமை
அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான்
ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி
இம்மாலை அம்பலத்தே எம்மானுக் கன்றி
யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ
XXX
டிசம்பர் 13 திங்கட் கிழமை
சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
XXX
டிசம்பர் 14 செவ்வாய்க் கிழமை
தூய சதாகதியே நேய சதாசிவமே
சோம சிகாமணியே வாம உமாபதியே
XXX
டிசம்பர் 15 புதன் கிழமை
தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே
தடம்வளர் புனலே புனல்வளர் நலனே
XXX
டிசம்பர் 16 வியாழக் கிழமை
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
XXX
டிசம்பர் 17 வெள்ளிக் கிழமை
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து.
XXXX
டிசம்பர் 18 சனிக் கிழமை
இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே – துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.
XXX
டிசம்பர் 19 ஞாயிற்றுக் கிழமை
கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காமப்
பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லாச்செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாபக்
கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
XXX
டிசம்பர் 20 திங்கட் கிழமை
மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
XXX
டிசம்பர் 21 செவ்வாய்க் கிழமை
தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்
XXX
டிசம்பர் 22 புதன் கிழமை
திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
XXX
டிசம்பர் 23 வியாழக் கிழமை
எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே
இடையிலே கடையிலேமேல்
ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிரண்
டெய்துவடி வந்தன்னிலே
XXX
டிசம்பர் 24 வெள்ளிக் கிழமை
வேதத்தின் முடிமிசை விளங்கும்ஓர் விளக்கே
மெய்ப்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே
நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே
நவைஅறும் உளத்திடை நண்ணிய நலமே
XXX
டிசம்பர் 25 சனிக் கிழமை
சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்
தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே
XXXX
டிசம்பர் 26 ஞாயிற்றுக் கிழமை
அமரரும் முனிவரும் அதிசயித் திடவே
அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே
கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே
XXXX
டிசம்பர் 27 திங்கட் கிழமை
. ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு
ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு
எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
XXX
டிசம்பர் 28 செவ்வாய்க் கிழமை
ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.
xxx
டிசம்பர் 29 புதன் கிழமை
சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
xxx
டிசம்பர் 30 வியாழக் கிழமை
அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம்
அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம்
வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம்
வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்.
xxx
டிசம்பர் 31 வெள்ளிக் கிழமை
நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.
–SUBHAM—
TAGS– டிசம்பர் 2021 காலண்டர், வள்ளலார், பொன்மொழிகள்,