Post No. 10,398
Date uploaded in London – – 1 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
முதல் பகுதியில் ஒரு புலவர் நான்கே வரிகளில் 22 பிராணிகள், பொருட்களை பட்டியலிட்டு, அதிதி தேவியே எனக்கு பலம் தருக என்று வேண்டியதைக் கண்டோம் . அவர் குறிப்பிட்ட 22 பிராணிகள், பொருட்களின் சிறப்பு என்ன என்பதை நான் என் வியாக்கியா னத்தில் விளக்க முன்வந்தேன். இதோ மற்ற பொருட்களையும் , பிராணிகளையு ம் புலவர் குறிப்பிட்ட தன் காரணம் என்ன என்பதைக் காண்போம்.
அதர்வண வேதம், ஆறாவது காண்டம் , துதி 38 (சூக்தம் எண் 211); பாடல் தலைப்பு –‘பலம்’
பட்டியல் இதோ:
4.நெருப்பு
தீ (FIRE) என்பதை புகழ்ந்து வேதங்களில் ஆயிரக்கணக்கில் மந்திரங்கள் உள்ளன . பிராமணர்கள் வீட்டில் ஒரு காலத்தில் மூன்று யாக குண்டங்கள் இருந்தன என்று சங்கத் தமிழ் நூல்கள் சொல்லும் ; ‘முத்தீ அந்தணர்’ என்று சங்க நூல்கள் பிராமணர்களை புகழ்ந்து பாடும் . அதில் கார்ஹபத்யம் என்னும் அக்கினி அணையவே அணையாது. அதிலிருந்துதான் அவர்கள் யாக யக்ஞங்களுக்கு அக்கினி எடுப்பார்கள். ஒருவரின் இறுதிச் சடங்கின் போது அந்த அக்கினியால் சிதைக்கு தீ மூட்டுவர். அதற்கு முன்னர் அவருடைய மகன், பேரக்குழந்தைகளுக்கு திருமணம் ஆகி இருந்தால் அதிலிருந்து அவர்களும் ஒரு சட்டிப்பானையில் ஒரு அக்கினி மூட்டி இருப்பர். இது அணையவே அணையாது. அதாவது பல நூறு தலைமுறைகளுக்கு வாழையடி வாழையாக அக்கினி தொடரும். மின்சார விளக்கும், தீப்பெட்டிகளும் இல்லாத காலத்தில் அடுப்பெரிக்கவும் இந்த அக்கினியே உதவியது. அது மட்டுமல்ல. பிராமணச் சிறுவர்கள் தினமும் காலையில் அக்கினி மூட்டி ஸமிதாதானம் செய்கையில் எனக்கு ‘ஓஜஸ், தேஜஸ், வர்ச்சஸ் , மேதை போன்ற புத்தி’ தா என்று சொல்லி உடலில் பல இடங்களில் ஹோம சாம்பலை இட்டுக்கொண்டனர் . சுருக்கமாகச் சொல்லின் அக்கினி போல வாழ்வில் ஒளி நிரம்ப வேண்டினர்.
5.பிராமணன்
நெருப்புக்கு அடுத்தாற்போல் பிராமணனை வைத்திருப்பது சிறப்புடைத்து. ஏனெனில் பிராமணன், ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தி, இரண்டும் படைத்தவன் ; அகலாது அணுகாது தீக்காய்வார் போல அவர்களிடம் இருக்க வேண்டும். இதையே ஒரு தமிழ்ப் புலவர் ‘பழகினும் பார்ப்பாரை தீப்போல் ஒழுகு’ என்பார். எவரேனும் ஏதேனும் குற்றம் செய்தால் சபித்து விடுவார்கள்; அது பலித்துவிடும் ; நான் சொல்லுவது புத்தர் தம்ம பதத்தில் 26 ஆவது அதிகாரத்தில் சொல்லும் உண்மைப் பார்ப்பனரை ! பிராமணன் கொலை செய்தாலும் அரசனையே வீழ்த்தினாலும் அவனுக்கு தண்டனையை கிடையாது என்கிறார் புத்தர் தம்மபதத்தில்; இதையே மநுவும் செப்புவான். இது எல்லாம் ‘நடமாடும் தேவர்’= ‘பூசுரர்’ என்று ஸ்ம்ருதிகள் சொல்லும் உண்மைப் பார்ப்பனர் பற்றியது. சாணாக்கியன் போன்ற பலம் கொண்ட பார்ப்பனர் பற்றியது ; பிராமண விரோத நந்த வம்சத்தை வேரொடு பிடுங்கி எறியும் வரை குடுமியை முடிய மாட்டேன் என்று சாணக்கிய சபதம் செய்த பார்ப்பனனைப் போல பலம் தா! என்கிறார் புலவர்
(எச்சரிக்கை :– மது பான விடுதி , மாதர் கேளிக்கை விடுதி, மதுரை முனியாண்டி விலாஸ் பிரியாணிக் கடைக்குச் செல்லும் சென்னை பார்ப்பனர்களை ஒப்பிட்டு நொந்து போய் விடவேண்டாம்!)
6.சூரியன்
சூரியனைப் பற்றி அதிகம் எழுதத் தேவையே இல்லை ; அந்தக் காலத்தில் எல்லோரும் காலையில் 12 முறை கீழே விழுந்து வணங்கி சூர்ய நமஸ்காரம் செய்ததால் கண் ஒளி கிடைத்தது. உடல் ஆரோக்கியமாக இருந்தது. மூன்று வருணத்தினர் பூணுல் அணிந்து, நாள் தோறும் 3 முறை சூரியனை வணங்கி காயத்ரீ மந்திரம் சொல்லி வணங் கினர் ; இதனால் எல்லோரும் மேதாவியாக இருந்தனர் . சூரியன் இருந்தால்தான் மழை பெய்யும்; தாவரங்கள் வளரும்; உணவு கிடைக்கும் ; கிருமிகள் அழியும் என்று வேத மந்திரங்களே விஞ்ஞான உண்மையையும் பேசுகின்றன .
7.யானை
யானையின் மகத்தான பலம் , நினைவு ஆற்றல் ஆகியன உலகப் பிரஸித்தம் . அது மட்டுமல்ல. “யானையால் யானையாத்தற்று” = ‘யானையைக் கொண்டு வேறொரு யானையைப் பிடி’ என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் சொன்னதை வள்ளுவரும் குறளில் சொல்லுவதை காணலாம் .தமிழர்களின் ‘சின்ன மீனை போட்டு பெரிய மீனைப் பிடி’ என்பதற்கு சமம் இது; கணபதியின் உருவத்தை யானையில் காண்பது இந்துக்களின் சிறப்பு
8.சிறுத்தை (Cheetah)
புலிக்கு உள்ள வீரம் சிறுத்தைக்கும் உண்டு. ஆயினும், புலியை விட சிறுத்தை ஒரு படி மேல்; இப்பொழுது ‘என்சைக்ளோபீடியா’, ‘கின்னஸ் புஸ்தக’த்தைத் திறந்து பார்த்தால் உலகிலேயே அதி வேகம் உடைய பிராணி சிறுத்தை என்பதை (Fastest Animal on Earth – Cheetah) அறிவோம். இதைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தனர் இந்துக்கள். ஆகவே சிறுத்தை (Panther, leopard, Cheetah) போல எனக்கு பலம் தா என்று அதிதி தேவியை வேண்டுகிறார் புலவர்/கவி/ ரிஷி/முனிவர்.
சிறுத்தைக்கு சீட்டா cheetah என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் . இதுவே சம்ஸ்க்ருத, அல்லது தமிழ் சொல்லின் அடிப்படையில் பிறந்தது போலும் ; சித்ரக அல்லது சீறுவது என்ற இரண்டு வேர்ச் சொல்லுக்கும் பொருத்தமாக இருக்கிறது.
9.தங்கம்
தங்கம் என்ற உலோகம் இல்லாத பழைய கலாசாரம் உலகில் இல்லை. மனிதன் முதல் முதலில் கண்டுபிடித்த உலோகங்களில் ஒன்று இது ; தங்க பஸ்பம் சாப்பிட்டு 100 ஆண்டு வாழும் முறையையும் மனிதன் கண்டான். பெண்களும் அதை அணிந்து மகிழ்ந்தனர்; மற்றவர்களை மகிழ்வித்தனர். சுடச் சுடரும் ஒளிரும் பொன் போல என்பதிலிருந்து இதன் சிறப்பு விளங்கும். ஞானிகளைப் பொறுத்தவரையில் காமினி ,காஞ்சனம் (பெண்ணும், பொன்னும் ) எதிரிகள் என்பதை ராமகிருஷ்ண பரமஹம்சர் பல கதைகள் மூலம் விளக்குவார்; முனிவர்கள் ‘ஓடும் பொன்னும் ஒக்கவே நோக்குவர்’ என்று கீதையிலும் (6-8; 14-24)தாயுமானவர், சேக்கிழார் பாடல்களிலும் (பெரிய புராணம்) காண்கிறோம். ஆகவே தங்கமும் நமக்கு ஒரு பாடம் கற்பிக்கிறது. அது வீட்டில் இருந்தால் பலம் (asset) என்பதை அறிந்தே அதை பெண்களின் உடலிலும் பூட்டினர்.
10.தண்ணீர்
உலகில் தண்ணீரைப் போற்றும் மந்திரங்கள் சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் மட்டுமே உண்டு. தண்ணீரைப் பற்றியும் அதன் அற்புத குணங்கள் பற்றியும் நூற்றுக்கணக்கான மந்திரங்கள் வேதங்களில் உள்ளன. தண்ணீரை ‘அமிர்தம்’ என்று வேதம் தொடர்ந்து புகழ்கிறது. அதை அப்படியே திருவள்ளுவரும் ‘அமிழ்தம்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லினால் பாடுகிறார். இந்துக்கள் பனி மூடிய இடங்களிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்தனர் என்று சொல்லும் ஆட்களுக்கு ‘செமையடி, மிதியடி, தடாலடி’ கொடுக்கும் பாடல்கள் இவை. பிறப்பு முதல் இறப்பு வரை தண்ணீரைப் பயன்படுத்தும் ஒரே இனம் இந்துக்கள். நீரின்றி அமையாது உலகு என்ற வேதக் கொள்கையை அப்படியே வள்ளுவனும் சொன்னான். இன்றும் பிராமணர்கள், தினமும் மூன்று முறை தண்ணீரை வைத்து சந்தியாவந்தனம் செய்கின்றனர். வேதத்தில் உள்ள ஹோமியோபதி ஹைட்ரோதெரபி (Homeopathy and Hydrotherapy) பற்றி இதே ‘பிளாக்’கில் கட்டுரைகள் உள .
11. பசு
மனித இனத்துக்கு இந்துக்கள் கண்டுபிடித்துக் கொடுத்த மாபெரும் கண்டுபிடிப்புகள்:–
பசுமாடு, குதிரை, இரும்பு, டெசிமல் சிஸ்டம் /தசாம்ச எண்கள் , யோகம், ஆயுர்வேதம்
இவை அனைத்துக்கும் சான்று உலகிலேயே பழைய புஸ்தகமான ரிக் வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் உளது. எகிப்திய, பாபிலோனிய,சீன, மாயா நாகரீகங்களில் அவை இல்லை. இருந்தாலும் போற்றும் அளவுக்கும் இல்லை; அவை போற்றப்படுவதும் இல்லை. கோ மாதாவும் பசும் பாலும் இந்துக்கள் உலகிற்கு அளித்த மாபெரும் கொடை
12.ஆண்மகன்
ஆண்மை என்றால் என்ன, பெண்மை என்றால் என்ன என்பதை விளக்கத் தேவையே இல்லை. ரிக் வேதம் முழுதும் எனக்கு ‘வீர மகன்’ பிறக்க வேண்டும் என்று பாடுகின்றனர். இன்றும் உலகில் மிகப்பெரிய தொழில் ராணுவம் ஏன் ? வீர மகன்கள் இருந்தால்தான் நல்லோர் வாழ முடியும். போர் புரிய மறுத்த அர்ஜுனனை உன் ஆண்மையை இழந்து பேடியாக மாறிவிட்டாயா? என்கிறார் கிருஷ்ணன். ஆக, புலவர் 22 டாபிக் topics குகளில் ஆண் மகன் (புருஷன் = பெர்சன் person is derived from purusha என்ற சொல்லின் மூலம்) என்பதையும் சேர்த்தத்தில் வியப்பில்லை
13.ரதத்தின் அச்சு
‘உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து’ என்று வள்ளுவன் சொன்ன வாக்கு இந்த வேத மந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டதே; ‘அச்சு’ என்பது ஸம்ஸ்க்ருத்ச் சொல். அதிலிருந்து பிறந்ததே ஆக்சிஸ் Axis என்னும் English சொல். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது என்ற வாமன அவதாரக் கதையை விளக்குவதே ‘அச்சு’ உவமை. ‘தோற்றத்தைக் கண்டு ஏமாறாதே’; சிலர் அமைதியாக இருந்து பெரும்பணி ஆற்றுவார்கள் என்பதே இதன் பொருள். பெரிய தேருக்கு –திருவாரூர்த் தேருக்கு அச்சு கழன்றால் என்ன ஆகும்? ஆக. அச்சு போல என்னை ஆக்கு என்கிறார் புலவர். அச்சு போன்ற பலம்!
,14.எருது
சிந்து சமவெளியில் அதிகம் காணப்படும் முத்திரை எருது (BULL) . வேதம் முழுவதும் இந்திரனை எருது, காளை என்றே புலவர்கள் பாடுகின்றனர். காட்டு மிருகங்களில் சிங்கம் எப்படியோ அப்படி நாட்டு மிருகங்களில் எருது. இதனால்தான் கிருஷ்ணர் காளை அடக்கியதை சங்கத் தமிழ் நூலான கலித்தொகை பாடுகிறது ; மஞ்சு விரட்டு ,ஜல்லிக்கட்டு என்பதைக் கண்டுபிடித்தது இந்துக்கள்; இது பாகவத புராணத்தில் உளது; யாதவ குல மக்கள் இன்று வரை நமக்கு காத்து அளிக்கின்றனர். ‘காளை போல பலம் தா’ என்று புலவர் பாடுவதற்கு இதற்கு மேலும் விளக்கம் தேவையா?
15.வாயு
வாயு வேகம், மனோ வேகம் என்பன வேதம் முழுதும் வரும் உவமைகள். தமிழனும் இதே உவமையைக் கையாளுகிறான் புயற்காற்றைக் கண்டவர் களுக்கு இதன் பொருள் நன்கு புரியும் ; ஆக , காற்று போல பலம் தா என்பது ஒரு பொருள்; சுவாசிக்கும் மூச்சுக் காற்று போல (ஆக்சிஜன் ) நான் இருக்க வேண்டும் என்பது இன்னொரு பொருள்; ஏனெனில் பிராணாயாமம் என்னும் ஆயுளை அதிகரிக்கும் டெக்னீக்கைக் கண்டுபிடித்து நாம்தான்; தினமும் அதை பிராமணர்களும் மூன்று வேளைகளில் விதித்தது இந்து மதம்; அந்தக் காலத்தில் 3 வருணத்தாரும் செய்தது ‘சந்தியா வந்தனம்- பிராணாயாமம்’; இந்தக் காலத்தில் பிராமணர்களும் மறந்து வருவது கலியுகத்தின் தாக்கம். ‘மருத் தேவர்கள்’ பற்றிய பாடல்களில் மாருதியின் (காற்று தேவன்) புகழைக் காணலாம் .
16.மழை – .
மழையின் சிறப்பு, பலம், முக்கியத்துவத்தை வேதம், ‘பர்ஜன்யன்’, ‘மருத்’ பாடல்களில் வலியுறுத்துகிறது . வள்ளுவன், ‘வான் சிறப்பு’ என்ற பத்து குறள்களில் விளக்குகிறான். கபிலர் என்ற பிராமண புலவரோ அங்கதச் செய்யுளில் .மழையை புகழ்கிறார் ; எல்லோரும் பாரி, பாரி என்று என் இப்படி பாரியையே பாடுகிறார்கள் ? உலகில் மாரியும் (மழை ) உளதே! என்பார்; ஆக, முனிவர் வேண்டுவது மழை போல சிறப்பு!
To be continued……………………………..
tags – அதர்வண வேதம், பிராணிகள் , பகுதி 2, பாடம்