WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,421
Date uploaded in London – – 7 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதர்வண வேதத்தில் வீடு பற்றி ஒரு துதி உள்ளது. அது தமிழ்க் கவிஞர் பாரதியாரின் ‘காணி நிலம் வேண்டும்’ கவிதை போன்றது . இரண்டிலும் பேராசை எதுவுமின்றி நியாயமான கோரிக்கை, கடவுள் முன்னர் வைக்கப்படுகிறது. இதில் விந்தை என்னவென்றால் தமிழ் மொழி, கிரேக்க மொழி, லத்தீன் மொழி, பாரசீக மொழி , சீன மொழி இலக்கியங்கள் உலகில் தோன்றுவதற்கு முன்னர் இந்தப் பாடலை வேதகால முனிவர் ஒருவர் சம்ஸ்க்ருதத்தில் பாடியுள்ளார்.
வீடு கட்டும்போதும் பயணம் செய்யும்போதும் சொல்லும் துதி என்று மந்திரத்தின் கீழுள்ள அடிக்குறிப்பு கூறுகிறது.
கிராமத்தை விட்டு வெளியேறும்போது ஒரு பயணிகள் கூட்டம் விடை பெறுவது என்றும் அடிக்குறிப்பு கூறுகிறது .முன்னுக்குப் பின், முரணாக இருக்கிறது
ஆ னால் இது கிருஹப் பிரவேச மந்திரம் என்றே தோன்றுகிறது.
xxx
துதியிலுள்ள முதல் மந்திரம்
நல்ல கண்ணுடன் நான் வீட்டுக்கு வந்துள்ளேன்; அஞ்சற்க ..
நீங்கள் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள் .
பொக்கிஷத்தை வென்று, சக்தியுடன், அன்புமிக்க எண்ணத்தோடு வீடுகளுக்கு வந்துள்ளேன்
மந்திரம் 2
இந்த வீடுகள் சுகம் அளிப்பவை ;பால் வளமும் சக்தியும் பெற்றவை .செல்வ வளம் பெற்று உறுதியாக நிற்கும் அவை எங்கள் வரவை அறியட்டும்.
மந்திரம் 3
நல்ல நட்புள்ள இதயங்கள் வாழும் இந்த வீடுகள் எங்கள் வரவை அறியட்டும் . வெளியிலிருந்து வருவோர் எண்ணியுள்ள வீடுகளுக்கு இந்த விஷயத்தை அறிவிக்கிறோம்.
மந்திரம் 4
செல்வ வளம் கொழிப்போரே , மகிழ்ச்சியோடு இனிய பலகாரங்களை உண்டு மகிழ்வோரே! எப்போதும் பசிப்பிணி இல்லாதிருக்க வாழ்த்துகிறோம். தாகம் என்பது இல்லாமல் இருக்கும் அளவுக்கு நீர் வளம் கிடைக்கட்டும்.
மந்திரம் 5
ஆடுகளும் மாடுகளும் இங்கே பெருகட்டும் உணவும் அமிர்தமும் செழிக்கட்டும்
மந்திரம் 6
வீடுகளே , உணவு அதிகரிக்கட்டும். சிரிப்பொலி கேட்கட்டும் ;
பசிப்பிணி இல்லாது ஒழியட்டும்; தாகம் என்பதேயில்லாத அளவுக்கு நீர்வளம் சிறக்கட்டும் எங்களைக் கண்டு அஞ்சற்க.
xxxx
இதை வெளியிலிருந்து வருவோர் சொல்லுவதா ? விடைபெற்றுச் செல்லுவோர் சொல்லுவதா ? தேவதைகள் ஆசீர்வாதம் செய்கின்றனவா ? என்ற கேள்வியை எழுப்பினால். கடைசியிலுக்குள்ள ஆசீர்வாதம் என்பதே பொருத்தமாகத் தோன்றுகிறது; மற்ற புரோகிதர்கள் இப்படி வாழ்த்தும் போது சக புரோகிதர்கள் ததாஸ்து / அப்படியே ஆகட்டும் என்று வாழ்த்துவதை இன்றும் கல்யாண, மங்களைச் சடங்குகளில் காண்கிறோம்.
வேத மந்திரங்களை மொழிபெயர்த்த வெள்ளையர்களுக்கு நம் சடங்குகள் பற்றித் தெரியவும் தெரியாது; தெரிந்தாலும் நம்பிக்கையும் கிடையாது; நம்பிகை இல்லாதது கூடத் தவறில்லை; இந்து மதத்துக்கு எதிரான கொள்கைகளுக்கு ஜெ போடுவதற்காக பல்கலைக் கழகங்களில் காசு கொடுத்து அமர்த்தப்பட்டவர்கள். இந்தியாவுக்கு வராத மாக்ஸ் முல்லரை, இந்தியாவையும் இந்துமதத்தையும் தகர்க்க, கிழக்கிந்தியக் கம்பெனி கூலிக்கு அமர்த்தினர். ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் சம்ஸ்க்ருதம், இந்து மதம் தொடர்பாக அமர்த்தப்பட்டவர்கள், அந்தத்துறையின் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அதில் ஒரு நிபந்தனை கிறிஸ்தவ மதத்தை தூக்கி நிலை நிறுத்த வேண்டும் என்பதாகும். ஆகையால் மாக்ஸ்முல்லர் கும்பல் கிறிஸ்தவ மதம் பற்றி தவறாக ஒரு சொல் கூட சொல்லவில்லை. அதுமட்டுமல்ல ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்தனர்; அவர்கள்தான் இந்துக்கள்; அவர்கள் பூர்வ குடிகளை விரட்டியடித்தனர் என்ற பொய்மை வாதத்தை இறுதி மூச்சு உள்ளவரை சொன்னார்கள்; இதற்கு சங்கத் தமிழ் இலக்கியத்திலோ, அதற்கும் காலத்தால் முந்திய சம்ஸ்க்ருத இலக்கியத்திலோ எள்ளளவும் ஆதாரமே இல்லை. . ஆரிய-திராவிட வாதத்தை காந்தி, அம்பேத்கார், விவேகானந்தர், பாரதியார் முதலியோர் எள்ளி நகை ஆடினர் . இந்த அயோக்கியக் கும்பலுடன் மார்க்ஸீயக் கும்பலும் சேர்ந்து நாட்டைக் கூறுபோடப் பார்த்தனர்; இதுவரை பலிக்கவில்லை (.சிந்து நதி என்ற சொல்லே சங்கத் தமிழில் இல்லை!! )
இந்துமதத்தைப் பின்பற்றுவோருக்கு “கிருஹப் பிரவேசம்” என்பது என்ன என்று தெரியும்
மங்கள கோலம் இடுவர்; மாவிலை, கமுகு, தென்னோலையோடு தோரணம் கட்டுவர் ; குத்துவிளக்கு ஏற்றுவர்; கடவுள் படத்தை வீட்டினுள் முதலில் வைத்து பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்லுவர் ; மணி ஓசை எழுப்பி துஷ்ட தேவதைகளை விரட்டுவர்; பெண்கள் குலவை இடுவர்; பாலிகை தெளித்து செடிகள் வளர்ந்தவுடன் முளைப்பாரியை நீர்நிலைகளில் கரைப்பர். எல்லாம் வளர்ச்சி, வளம் பற்றியவை .
அதர்வண வேத மந்திரங்களுக்கு சரியான பொருள் எழுத வேத பண்டிதர்கள்,பல்துறை வித்தகர்களின் மஹாநாட்டைக் கூட்டவேண்டுவது மிகவும் அவசியம் !
இதோ பாரதி பாட்டு ; தமிழ் தெரிந்தவர்களுக்கு நான் விளக்கமே சொல்ல வேண்டாம். அதர்வண வேத மந்திரத்திலுள்ள கருத்துக்களை பாரதியும் சொல்லும் இடங்களில் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளேன் .
உணவு வளம், நீர்வளம், மகிழ்ச்சி, இனிமை, ஆடல் பாடல், வையம் முழுதும் வாழ்க — இக்கருத்துக்களைச் சொல்லி இயற்கை சூழ்ந்த ஒரு வீடு ஆத்ம திருப்தி தரும் என்று பாடுகிறார் பாரதி.
காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்
காவலுற வேணும், – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
—மகாகவி பாரதியார்.
–subham–
tags- காணி நிலம் வேண்டும் , பாரதியார், நல்ல, வீடு , அதர்வண வேதம்