அதர்வண வேதத்தில் பேய்கள் பட்டியல் (Post No.10,452)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,452
Date uploaded in London – – 16 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

நான்கு வேதங்களில் சுமார் 20,000 மந்திரங்கள் உள்ளன. வேதங்களில் உள்ள பல சொற்களின் பொருள், மாக்ஸ் முல்லர் கும்பலுக்கும் மார்க்ஸீயக் கும்பலுக்கும் தெரியவில்லை. அது போன்ற இடங்களில் சொந்தக் கருத்துக்களை நுழைத்துவிட்டனர். இந்தக் கும்பலில் 30 வெளிநாட்டினர் அடக்கம். சில சொற்களுக்கு எதிரும் புதிருமாக அவர்கள் அர்த்தம் கற்பிப்பது நமக்கு நல்ல ‘தமாஷ்’ GOOD JOKES ஆக இருக்கிறது. அதர்வண வேதத்தில் ஒரு துதியில் சுமார் 39 பேய்களின், துஷ்ட தேவதைகளின் (GHOSTS, EVIL SPIRITS) பெயர்கள் வருகின்றன. இவைகளை மொழி பெயர்த்தால் மிகவும் விநோதப் பெயர்கள் (FUNNY NAMES) வரும். சில பேய்களின் பெயர்களை மொழி பெயர்க்க முடியவில்லை. இவை மட்டும் மனிதர்களின் பெயர்களாக இருந்தால், உடனே அது ‘ஆரியர் அல்லாத பூர்வ குடி மக்கள்’ என்று எழுதி பிரிவினை வாதம் பேசினார்கள் மார்க்சீய- மாக் ஸ்முல்லர் கும்பல். இங்கோ பேய்கள் !! திராவிடப் பேய்களின் பெயர்கள் என்று திட்ட முடியவில்லை; திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான் !

சுமேரியாவில் காணப்படும் பேய்களின் பெயர்களை முன்னே எழுதியுள்ளேன்; ஆனால் உலகில் எந்த நாட்டு இலக்கியத்திலும் இப்படி தொடர்ந்து ஒரே துதியில் சுமார் 40 பேய்களின் பெயர்ப் பட்டியல் இல்லை.

திரைப்படம் எடுப்போருக்கும் , கதை எழுதுவோருக்கும், கார்ட்டூன் படக்கதை, VIDEO GAME வீடியோ கேம் செய்வோருக்கும் நல்ல ஒரு பட்டியல் இது!

இதோ பேய்களின் பெயர்கள் :-
சங்கத் தமிழ் இலக்கியப் பாடல்களிலும் பெண்களைப் பிடிக்கும் – புதிதாகப் பிறந்த குழந்தைகளைத் தாக்கும் பேய்கள்/ தேவதைககள ள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவைகளை விரட்ட ‘ஐயவி’ என்னும் வெண்கடுகைகைப் புகைக்குமாறும் சொல்லப்பட்டுள்ளது. கீழ்கணட அதர்வண வேத துதியிலும் 12 ஆவது மந்திரம் சூரிய கிரணங்களின் சக்தி பற்றிப் பேசுகிறது ஆகையால் பாக்டீரியா- வைரஸ் கிருமிகளை அவர்களை இப்படிப் பெயர்கள் சூட்டி அழைத்தனரோ என்றும் என்ன வேண்டியுள்ளது .

அதர்வண வேதம்- காண்டம் 8- சூக்தம் 439- கருப்ப தோஷம்
அலிம்சம் , வத்சபம் , பலாலம், அனுபலாலம்
சர்க்கும், கோகம், மலிமலுசம், பலீசகம் ,
அசிரேஷம், வவிராசம், ரிஷக்ரீவம், பிரமீளினம் ,
துர்நாமம், கிஷ்கினம் , அராயம், குஸூலர் ,
குடசீலர், ககுபர், கரூமர், ஸ்ரீமங்களை ,
குருந்தர், குகூரபர், கலஜர் , சகதூமஜர் ,
உருண்டர், மட்டமகர் , நபும்சகர், கும்பமுஷ்கர் ,
சாயக்கன், நக்நதன், தங்கல்வன் , கிமீதினன் ,
ஸ்தம்பஜன், துண்டிகன், கருமன் , பலீநசன்
சுனை ரோமம் உள்ளவன் , சடைகேசன் , அரைப்பவன், அதிகம் பற்றுபவன் ,
ஆத்திரன், அருண வண்ணன், சீமுகத்தான், சாலுடன், விரல்களற்றவன்,
இது தவிர முட்டை விழுங்கி, மனித மாமிசம் புசிப்போன் , 2 வாயன், 4 கண்ணன்,
ஐந்து காலன் , இரண்டு முகத்தோன் என்றெல்லாம் மந்திரங்கள் பேசுகின்றன !!!

Ralph T H Griffith கிரிப்பித் என்ற ஒருவர் மட்டும், வேத மொழி பெயர்ப்பில், பக்கத்துக்குப் பக்கம், “எனக்குத் தெரியவில்லை, புரியவில்லை, விளங்கவில்லை, தெளிவில்லை, குழப்பமாக உள்ளது, விடுகதை வடிவில் பேசுகின்றனர்”– என்றெல்லாம் எழுதியுள்ளார். இது போல யூத மத, ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகளிலும் சில பெயர்கள் வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரும் மற்ற ஐரோப்பியர்களும் பல ஸம்ஸ்க்ருதப் பெயர்களை யூகத்தின் பேரில் மொழிபெயர்த்துள்ளனர்.

நாம் கூட பள்ளிக்கூடங்களில் வாத்தியாருக்கும் , மாணவர்களுக்கும் வினோதமான பட்டப் பெயர்களை இன்றும் வைக்கிறோம். திரைப்படங்களில் 007, ஜேம்ஸ்பாண்ட் என்றெல்லாம் பெயர்களைப் பார்க்கிறோம். சீன வைரஸ், பறவைக் காய்ச்சல் என்றெல்லாம் பெயர் சூட்டுகிறோம்.

இதோ சில ஸம்ஸ்க்ருதப் பேய்களின் தமிழ் மொழி பெயர்ப்பு :
வைக்கோல் அரக்கன், அவனைப் பின்தொடர்வோன், இம்சிப்பவன், குயில்/ஓநாய், கள்வன், பலிதன், உஷ்ணன் , ரூபம் அழிப்பவன் , கரடிக் கழுத்தன் , இமைப்பவன், தீமை, குதிர் வயிறன் , குண்டு வயிறன் , கூன முதுகன், கீச்சுக் குரலன் , கலக்கன் , நெல் குத்துவோர் முலையில் இருப்பவன், விராட்டிப் (cow dung) புகையில் வருவோன் வாயால் கடிப்பவன், அம்மண ஆள் .ஈட்டி மூக்கன், குரங்கு மூஞ்சி .
26 மந்திரங்கள் உள்ள இந்தப் பாடலில் பெரும்பாலும் குழந்தைகள், தாய்மார்களைத் தாக்கும் நோய்கள் பற்றியும் அவைகளை ‘பஜம்’, ‘பிங்கம்’ என்ற இரண்டு மூலிகைகள் போக்கி விடும் என்றும் ரிஷி முனிவர் பாடுகிறார்

கிமீதின் KIMIDIN என்ற பெயரையும் அ ராயி ARAYI என்ற பெயரையும் இப்பட்டியலில் காண்கிறோம். அந்த இரண்டு பெயர்களும் உலகின் மிகப் பழமையான புஸ்தகமான ரிக் வேதத்தில் வருகின்றன; கிமீதின் என்ற பெயரைக் கஷ்டப்பட்டு மொழி பெயர்த்து பொருள் காண முயன்றனர். அதை இரண்டு வகையாக மொழி பெயர்த்து , ‘இப்பொழுது என்ன’ ‘இப்பொழுது எப்படி’ என்றெல்லாம் மொழிபெயர்த்து இது உளவாளியாக (Spy) இருக்கலாம் என்றும் எழுதி வைத்துள்ளனர். இனி துப்பறியும் கதை எழுதுவோர் 007 ஜேம்ஸ்பாண்ட், ஷெர்லாக் ஹோம்ஸ் என்று எழுதாமல், கிம் இதானீம் என்று எழுதலாம் !
–subham–
Tgas- அதர்வண வேதம், பேய்கள் ,பட்டியல், கர்ப்ப தோஷம்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: