

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,464
Date uploaded in London – – 19 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகில் முதல் முதல் முதலில் மருத்துவ நூலைக் கற்பித்தவர்கள் இந்துக்களே. ஆயுர் வேதம் என்னும் முறையே உலகின் பழைய மருத்துவ முறை; ஹிப்போக்ர ட்டீஸ் (Greek Physician Hippocrates 460 BCE) என்பவரை மருத்துவத்தின் தந்தை என்று சொல்லுவது பிழை; அந்த கிரேக்க மருத்துவர் பெயரில் எம் பி பி எஸ். மாணவர்கள் உறுதி மொழி சொல்லுவதும் Hippocratic Oath தப்பு. அவர் வாழ்ந்ததோ கி.மு 460. அவருக்கு இ 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சுஸ்ருதர் செயற்கை மூக்கு ஆபரேஷன் பற்றிக்கூட எழுதியதை இன்று உலகம் அறியும். இன்று வரை நம் எம்.பி.பி.எஸ். M B B S மாணவர்க்கு இது தெரியாது!! சுஸ்ருதர், சரகருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நீண்ட மூலிகைப் பட்டியல் அதர்வண வேதத்தில் உள்ளது. இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உலகின் பழைய நூலான ரிக் வேதத்திலேயே உள்ளது. அதன் பிறகு யஜுர் வேதம், அதர்வண வேதம் ஆகிய இரண்டு வேதங்களில் உள்ள தகவல்களை எவராலும் இன்றுவரை உறுதிப்படுத்த முடியவில்லை. இதோ ஆதாரங்கள்:–
ரிக் வேதத்தில் 10-97 துதியில் 107 மூலிகை பற்றிய குறிப்பு உளது. ஆனால் துரதிருஷ்டவசமாக நமக்கு 107 மூலிகைகைள அந்த ரிஷி சொல்லவில்லை
யஜுர் வேதத்தில் அஸ்வமேதம் எனப்படும் ‘குதிரைப் பலி’ யாகத்தில் 200 பிராணிகள், பறவைகள், தாவரங்கள் , யாகத் தீயில் போடப்படுவதாக நீண்ட பட்டியல் உளது. அவைகளில் பல தாவரங்களா, பிராணிகளா, பறவைகளா, பொருட்களா என்று எவராலும் சொல்ல முடியவில்லை; ஒரே சொல்லுக்கு ஆறு வெளிநாட்டுக்காரர்கள் ஆறு வித விளக்கம் சொல்லி சண்டை போடுகின்றனர்.
அதர்வண வேதத்தில் நிறைய பெயர்கள் வருகின்றன. சிலவற்றை சிலர் மூலிகை என்பர்; மற்றவர் இது தேவதை அல்லது பேய் அல்லது நோயின் பெயர் என்பர். நம்மவர்கள் சரக, சுஸ்ருத சம்ஹிதைகளுடன் உட்கார்ந்து கொண்டு ஆராய வேண்டும்.

அடுத்த ஆதாரம்- ஏதோ ஒரு காரணத்துக்காக தர்ப்பைப் புல்லையும். சோம மூலிகையையும் 4 வேதங்களும் ‘இந்திரனே சந்திரனே’ என்று புகழ்கின்றன. இதில் சோம மூலிகை என்ன என்பதே எவருக்கும் தெரியாது. வெள்ளைக்காரர்களுக்குத் தெரிந்தால் பில்லியன் டாலருக்கு Patent பேடண்ட் உரிமை பெற்று Production ப்ரொடக்ஷன் துவங்கி விடுவார்கள். ஆனால் தர்ப்பைப் புல்லை இன்று வரையும் பிராமணர்கள் பயன்படுத்தி வருகின்றனர் . சுமார் 6000 வருடங்களாக மக்கள் புழங்கும் ஒரே சமய சம்பந்தமான தாவரம் இதுதான் . துளசியும் விலவமும் பின்னர் வந்தவை!
உலகில் வேறு எந்த மத நூலிலும் இல்லாத விஷயங்கள் வேதங்களில் உள்ளன. சுமார் 40 உடல் உறுப்புகளின் பெயர்கள் ஒரே துதியில் உள்ளன.
ஏராளமான நோய்களின் பெயர்கள் ஒரே துதியில் உள்ளன ; பாபிலோனிய, எகிப்திய நூல்களில் ஒரு சில மருத்துவக் குறிப்புகள் இருந்தாலும் இப்படி விஸ்தாரமாக இல்லை
கிரேக்க நாட்டு நூல்கள் அனைத்தும் வேதங்களுக்கு பிற்பட்டவை.
ரிக் வேதத்தில் (RV 1-112 -10 and 1-116- 15 ) விஸ்பலா என்ற பெண்மணி ஒரு காலை போரில் இழந்ததாகவும் அஸ்வினி தேவர்கள் , அவளுக்கு இரும்புக் கால் ஒன்றைப் பொருத்தியதாகவும் படிக்கிறோம். அதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் பாண்டிய மன்னனுக்கு தங்கக் கை பொருத்தப்பட்ட செய்தியை தமிழ் இலக்கியத்தில் படிக்கிறோம்.
அதர்வண வேதத்தில் குறிப்பிடப்படும் மூலிகைகளில் கீழ்க்கண்ட 10 மூலிகைகளை முக்கியமாகக் கருதலாம்
1.Apaamaarga அபாமார்க்க ; நிறைய இடங்களில் வருகிறது
2.Arundhati அருந்ததி /சிலாசி /ரோஹிணி /லக்ஷா (also known as Silaaci, Rohini, Laksa)- AV. VI-59-2
3.Karira – கரீர AV V.23
4.Kustha – குஷ்டா AV XIX-39
5.Guggulu – குக்குலு AV XIX -38
(see my research article on Guggulu; even Panini mentioned it in grammatical rules!)
6.Paathaa – பாதா AV II-27
7.Prsniparni -பிருச்னி பர்னீ AV II-25, 7 (also VI-85)
8.Bhrngaraaja – பிருங்கிராஜா AV VI-136
9.Sankhapus pi – சங்க புஷ்பி AV VI-129, VI-139; VII-38
10.Sarsapa – சர்சப AV. VIII-6
சோமம், தர்ப்பை தவிர அதிகம் பேசப்படுவது குஷ்ட மூலிகை, அருந்ததி மூலிகை. அப மார்க , அஸ்வத்த எனப்படும் அரச மரம் ஆகியன ஆகும் .
இதில் அரச மரம் பற்றி தமிழர்களுக்குத் தான் அதிகம் தெரிந்துள்ளது. உலகிலேயே பெரிய மரமான ஆல மரத்தைக்கூட விட்டுவிட்டு அரச மரத்துக்கு ‘அரசு’ என்று ராஜ Royal Name பெயரை சூட்டிய அற்புதத்தை நினைத்துப் பார்க்க வியப்பாக இருக்கிறது. மேலும் அரசு மரத்தைச் சுற்றினால் பிள்ளைப் பேறு உண்டாகும் என்று பழ மொழியும் சொல்லும். புத்தரோ இதன் கீழ் அமர்ந்து ஞானம் பெற்று அதற்கு ‘போதி’ மரம் என்ற பெயரையும் கற்பித்தார். வேத கால முனிவரின் பெயர் மிஸ்டர் அரசமரம்- அதாவது பிப்பலாடன் (Peepul, Pipal, Bodhi = Ficus religiosa = Arasa Maram/King Tree in Tamil)
அருந்ததி என்னும் மூலிகை எலும்பு முறிவைக் குணப்படுத்துமாம். ஆனால் அது என்னவென்று தெரியவில்லை. குஷ்ட என்னும் மூலிகையை இன்றும் உலகம் முழுதும் அதே ஸம்ஸ்க்ருதப் பெயரிலேயே அழைக்கின்றனர். குஷ்டா என்பதை COSTUS கோஷ்டஸ் என்பர்

அது பற்றி வேதம் சொல்லும் தகவல் இதோ :-
மூலிகை பற்றி அதர்வண வேதம் ஆறாவது காண்டத்தில் ஒரு துதி உள்ளது. சூக்தம் எண் 268.. அதில் அஸ்வத்த மரத்துக்கு உயர்ந்த இடம் அளிக்கப்படுகிறது சொர்க்கத்தில் தேவர்களுக்கு அந்த மூலிகை கிடைத்ததாகவும், அது மரணமில்லப் பெருவாழ்வை அளிக்கும் என்றும் ஒரு ரிஷி பாடுகிறார். அது சகல ரோக நிவாரணி என்றும், பனி மலையில் விளையும் தாவரம் என்றும் பாடப்பட்டுள்ளது . இந்த ஸம்ஸ்க்ருதப் பெயரையே (Kushtaa= Costus) தாவரவியல் நிபுணர்கள் சூட்டியுள்ளனர். ஏனெனில் இது பிரதானமாக இந்தியாவில் ஆதிகாலம் முதற்கொண்டே பயன்படுத்தப்படுகிறது காஸ்மீரில் இது அதிகம்; இதே குடும்பத்தில் பல தாவரங்கள் இருப்பதால் இந்திய நூல்கள் சொல்லும் வகையை மட்டுமே பயன்படுத்தலாம். இப்போது பல கம்பெனிகள் இதை விற்பனை செய்கின்றன.
இதே பெயரில் உள்ள குஷ்ட நோயையும் இது போக்கும் என்று நம்பப்படுகிறது.
விலங்குகளில் புலி எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டது மூலிகைகளில் குஷ்டா . இதை சகல ரோக நிவாரணி என்று சொல்ல ‘விஷ்வ பேஷஜ’ (எல்லாவற்றுக்கும் மருந்து) வேதம் அழைக்கிறது; சோமம் என்னும் அற்புத மூலிகைக்கு நிகராகவும் கருதப்படுகிறது ஹோமியோபதி, யுனானி மருதத்துவ முறைகளும் இதை பயன்படுத்துகிறது .புதிதாகப் பிரசவித்த பெண்களின் அறையில் இதன் நறுமணப் புகையை புகைக்கின்றனர் இதனுடைய களிம்பையும் பெண்கள் பயன்படுத்துவர்; தமிழர்கள் ஐயவி என்னும் வெண் கடுகை குழந்தை பெற்ற இடங்களில் நறுமணப் புகையாக ஏற்றி வைத்தனர்.


tags- மூலிகை;,வேதம் , குஷ்ட , அதர்வண