WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,469
Date uploaded in London – – 21 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 20-12-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள் – 1
ச.நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.
காவிரிக் கரை கண்ட மகான்களில் மிகப் பெரும் சித்திகளைப் பெற்று பகவன் நாமத்தை உச்சரித்து அனைவருக்கும் வழி காட்டிய மகான் ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திர ஸ்வாமிகள் ஆவார். இவர் திருவிசைநல்லூர் ஐயாவாளின் சமகாலத்தவர்.
இளமையிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேறிய இவர், பெரும் வித்வான்களுடன் வாதத்தில் இறங்கி ஜெயிப்பது வழக்கம். காஞ்சி காமகோடி பீடத்தில் 57வது பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி அவர்களை குருவாக வரித்தார் இவர்.
இளமைக்காலத்தில் சிவராமகிருஷ்ணன் என்ற பெயரைக் கொண்டிருந்த இவர் தனது உடன் பயிலும் தோழனாகத் திருவிசைநல்லூர் ஐயாவாளைக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் இவரது வாதத்தைப் பொறுக்கமாட்டாத வித்வான்கள் இவரது குருவிடம் இவரைப் பற்றி புகார் செய்யவே, அவர் இவரை அழைத்து, “அனைவரது வாயையும் அடைத்து மூடி விடுகிறாயே, நீ எப்போது உன் வாயை மூடப் போகிறாய்?” என்று கேட்டார்.
அந்த க்ஷணத்திலிருந்தே அவர் மௌனத்தை மேற்கொண்டார். இவருக்குத் இளமையிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது.
ஆனால் வீட்டிலிருந்து வெளியேறி எல்லா இடங்களிலும் சுற்ற ஆரம்பித்தார். நாளடைவில் ஆடைகளையும் களைந்து திரிய ஆரம்பித்தார்.
பின்னர் பெரும் சித்திகளை அடைந்தார். இவரது அருள் விளையாடல்கள் பற்றி வரலாற்றுக் குறிப்புகள் பல உண்டு.
சிலவற்றைப் பார்ப்போம்.
காவேரிக் கரையில் அமைந்துள்ள மஹாதானபுரத்தில் ஒரு நாள் இவரைச் சுற்றி இருந்த சிறுவர்கள், பல மைல்கள் தள்ளி இருந்த மதுரையில் நடக்கும் ஒரு திருவிழாவைக் காண வேண்டுமென்று விரும்பினார்கள். அவர்களது விருப்பத்தைத் தெரிந்து கொண்ட சதாசிவர் அவர்களிடம் கண்களை மூடுங்கள் என்றார். சிறுவர்களும் கண்களை மூடினர். சில விநாடிகள் கழித்துக் கண்களைத் திறந்த போது அவர்கள் அனைவரும் மதுரையில் இருந்தனர்.
ஒரு நாள் தானியக் குவியல் அருகே இவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அந்த நிலத்தின் சொந்தக்காரனான விவசாயி இவரைத் திருடன் என்று நினைத்து இவரை அடிக்கத் தன் கம்பை ஓங்கினான். ஆனால் அசையக் கூட முடியாமல் அப்படியே சிலையாக நின்றான். காலை வரை இந்த நிலை நீடித்தது. தனது தியானத்தை முடித்த சதாசிவர் அந்த விவசாயியைப் பார்த்து சிரித்தார். அவன் உடனே தன் சுயநிலைக்கு வந்தான். இவரைப் பெரிய மகான் என்று உணர்ந்த அவன் இவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.
தியானத்தில் தன்னை மறந்த நிலையில் இருப்பது இவர் வழக்கம். ஒரு முறை காவேரியில் அப்படி ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். வாரங்கள் சில கழிந்தன. கிராமத்தார் மண் குவியலைத் தோண்டிய போது இவர் அதிலிருந்து வெளிப்பட்டார். தன் நிலை உணர்ந்து நடக்கலானார்.
புதுக்கோட்டையை அப்போது ஆண்டு வந்தவர் மஹாராஜா விஜய ரகுநாத தொண்டைமான் (1730-1768). அவர் சதாசிவ பிரும்மத்தின் பெருமையைக் கேள்விப்பட்டு அவரை தனது அரண்மனைக்கு அழைத்து வருவதற்காக அவரிடம் சென்றார். மௌனத்தில் இருந்த சதாசிவர் தன் மௌனத்தைக் கலைக்கவில்லை. திருவரங்குளத்தில் முகாமிட்ட மன்னர் சதாசிவரை வணங்கி வந்தார். சதாசிவ ப்ரஹ்மேந்திரர் அவரை அழைத்து ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை மண்ணில் எழுதித் தந்தார். இது நடந்த வருடம் 1738ஆம் ஆண்டு.
அது மட்டுமின்றி பிக்ஷாண்டார் கோவிலைச் சேர்ந்த கோபால கிருஷ்ண சாஸ்திரி என்பவரை மந்திரியாக நியமித்துக் கொள்ளுமாறும் கூறினார்.
சதாசிவர் மந்திரம் எழுதிய மண்ணை தன் அங்கவஸ்திரத்தில் ஏந்திய மன்னர் அந்த மந்திர மண்ணைத் தன் பூஜையறையில் வைத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சி நடந்த இடம் சிவஞானபுரம் என்னும் ஊராகும். இன்று வரை இது புதுக்கோட்டை அரண்மனையில் உள்ள தக்ஷிணாமூர்த்தி கோவிலில் தொழப்பட்டு வருகிறது.
1732ஆம் ஆண்டு அவர் புதுக்கோட்டையைச் சுற்றி இருந்த காடுகளில் திரிந்து கொண்டிருந்த போது சில வீரர்கள் அவரைக் கண்டு அவரிடம் விறகுகளைச் சுமந்து வருமாறு கட்டளை இட்டனர். அவரும் சந்தோஷமாக விறகைச் சுமந்து சென்றார். அதை சமையலறையில் கொண்டு வைத்தவுடன் அவை எரிந்து விட்டன. இதைப் பார்த்துத் திகைத்துப் போன வீரர்கள் அவர் யார் என்பதை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டனர்.
ஊமையாக இருந்த ஒருவன் அவர் பால் அதீத பக்தி கொண்டான். ஒருநாள் அவன் தலைமேல் கைவைத்து சதாசிவர் ஆசீர்வதித்தார். அவ்வளவு தான், உடனே அவன் பேசத் தொடங்கினான். அவர் தான் பின்னால் மிகவும் பிரசித்தி பெற்ற அக்ஷபுராண ராமலிங்க சாஸ்திரி ஆவார். இந்த சம்பவம் ஸ்ரீ சதாசிவேந்த்ர ஸ்தவத்தில் 22 மற்றும் 26வது செய்யுள்களில் கூறப்பட்டிருக்கிறது.
திருகோகர்ணம் சிவன்கோவிலில் ப்ரஹதாம்பாள் சந்நிதிக்கு அருகே அவர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பது வழக்கம். அவர் தியானம் செய்த இடத்தை இன்றும் அனைவரும் தரிசிக்கின்றனர்.
ஒரு சமயம் கோவில் கர்பக்ருஹத்திற்கு வெளியில் நின்று கொண்டு சிவ நாமாவளி அர்ச்சனையைச் சொல்லிக் கொண்டிருக்க ஒவ்வொரு நாமத்திற்கும் ஒரு புஷ்பம் மூல ஸ்தானத்தில் உதிர்ந்ததாம்.
நிர்வாணமாக அவர் தன்னை மறந்து அலைந்து கொண்டிருந்த போது ஒரு நாள் நவாபின் அந்தப்புரத்தில் செல்லலானார். இதனால் அதிர்ச்சியுற்ற நவாப் அவரைப் பிடிக்குமாறு கட்டளை இட்டான். வீரர்கள் அவரது இரு கைகளையும் வெட்டினர். ஆனால் எதுவுமே நிகழாதது போல அவர் சென்று கொண்டிருந்தார். இதனால் பிரமித்துப் போன முஸ்லீம் நவாப் வெட்டுப்பட்ட கைகளை எடுத்துக் கொண்டு அவர் முன்னால் சென்று மன்னிப்புக் கேட்டான். அந்தக் கைகள் முன் போல இருந்த இடத்தில் ஒட்டிக் கொண்டன. பேசாமல் தன் வழியில் சென்றார் சதாசிவர்.
தொடரும்
Old Articles in the Blog on Nerur
Nerur | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › nerur· Translate this page30 Apr 2019 — We went there around 11 am, right at the Puja time. Even the priest who did the Puja told us many people come at wrong time and see the Samadhi …You’ve visited this page 2 times. Last visit: 01/12/21
Tagged with london swaminathan 11 – Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › london-swaminathan-…1 Dec 2021 — I was so fascinated by Sri Sadasiva Brahmendra’s short and sweet Sanskrit Kritis. So I made it a point to visit Nerur to have his darshan. When …
சதாசிவ பிரம்மேந்திராள் | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › ச…· Translate this page1 May 2019 — WRITTEN by London swaminathan. swami_48@yahoo.com. Date: 1 May 2019. British Summer Time uploaded in London – 6-59 am. Post No. 6329.
Sadasiva Brahmendra | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › sad…· Translate this page3 Mar 2014 — சதாசிவ பிரம்ம யோகீந்திரர் என்பவர் மிகப் … சதாசிவ பிரம்மேந்திராள் என்ற …
–subham—
tags- நெரூர் , சதாசிவ , பிரம்மேந்திராள்