WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,493
Date uploaded in London – – 27 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை -4
அதர்வண வேத பூமி சூக்தத்தை மேலும் காண்போம் .
தாய்ப்பாலின் மஹிமையை அறியாதோர் உலகில் இல்லை; குழந்தைகளுக்கு தாய்ப் பால் கொடுப்பது ஏன் அவசியம் என்று மேலை நாடுகளில் சுகாதாரத் துறைகள் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு வழங்கி வருகின்றன . தாய்ப் பாலின் மஹத்துவத்தை விளக்கும் உவமைகள், உலகிலேயே மிகவும் பழைய புஸ்தகமான ரிக் வேதத்திலேயே உள்ளது. அது மட்டுமல்லாமல் தாய்ப்பாலுக்கு நிகரான பால் கொடுக்கும் ஒரே பிராணி பசு மாடுதான் என்று கண்டுபிடித்து அதை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியதும் இந்துக்களே.
பூமா தேவியை வருணிக்க முயன்ற புலவன், அவளுக்கு தங்க முலைகள், அமுத இதயம்; அவள் கொடுப்பதோ தேன் போன்ற இனிமையான பொருள் என்கிறான். 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி கவி பாட வேண்டும் என்றால் அந்த சமுதாயம் எவ்வளவு உன்னத நிலையை அடைந்திருக்க வேண்டும் ? எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. நான்கு வேதங்களில் 20,000 மந்திரங்களில் உள்ள உன்னத கருத்துக்களை நோக்குங்கால் உலகில் வேறு எந்த கலாசாரமும் அடையாத உயர்ந்த நிலைக்கு இந்து கலாசாரம் சென்றதைக் காணமுடிகிறது
xxxx
இதோ ஆறாவது மந்திரம்
பொருள்
எல்லாம் உடையவளே , செல்வம் சுமப்பவளே, உறுதியாக நிற்பவளே, தங்க முலைகள் தாங்கியவளே , உயிரினங்களின் உறைவிடமே , வைச்வானர அக்கினியை அணிபவளே ; இந்திரனும் ரிஷபனும் எங்களுக்கு செல்வத்தை அளிக்கட்டும்
விஸ்வம்பரா வசுதானீ பிரதிஷ்டா ஹிரண்யவக்ஷஆ ஜகதோ நிவேசனீ
வைச்வாநரம் பிப்ரதீ பூமிரக்னி மிந்த்ரக்ருஷபா த்ரவிணே நோ ததாது – 6
எனது வியாக்கியானம்
விஸ்வ என்றால் ‘எல்லாம்’; ‘உலகம் அளவு வியாபித்த’; விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முதல் சொல்லே இதுதான். இது ஒரு மங்கலச் சொல்;. கவிதைகளைத் துவங்கும்போது ‘அ’ அல்லது ‘உலகம்’ போன்ற மங்கலச் சொற்களுடன் துவக்க வேண்டும் என்பது மரபு. ‘உலகம் உவப்ப’ என்று திரு முருகாற்றுப் படை துவங்கும்; ‘உலகெ லாம்’ என்று பெரிய புராணம் துவங்கும். அதற்குச் சமமான சொல் ‘விஸ்வ’ .
பூமி என்பவள் தாய்; உலகம் முழுதும் இந்தக் கருத்தை இந்துக்களிடம் கற்றது. தாய் தன குழந்தைகளை எப்படிப் பாலூட்டி வளர்க்கிறாளோ அப்படி பூமாதேவியும் மனித குலத்தை வளர்க்கிறாள். பத்தாவது மந்திரத்தில் வரும் உலகப் புகழ்பெற்ற வரிகள் இதை உறுதி செய்யும் ..
இங்கு அக்கினியின் ஒரு பெயரான ‘வைச்வானர’ வருகிறது. உடலில் அக்நி ; அது அணைந்தால் நாம் வெறும் ஜடம்; உலகில் அக்கினி- அதாவது சூரியன் ; அது அணைந்தால் நம் கதி — சகதி .
பூமியில் பத்து மைல் தோண்டினாலே கடும் வெப்பம்; 4000 மைல் தோண்டினால்தான் நடுப்பகுதிக்குச் செல்ல முடியும். எவராலும் தோண்ட முடியாது; ஏனெனில் அக்கினிக் குழம்பு! இதை எல்லாம் அறிந்தவர்கள் வேத காலப் புலவர்கள் என்பது வேறு பல மந்திரங்களில் தொனிக்கிறது.
இன்னொரு சொல் ‘ரிஷப’ ; இதை ரிஷpa என்று அப்படியே மொழிபெயர்த்து விளக்காமல் விட்டுவிட்டார்கள். இதை காளை (ரிஷப வாஹனம்) என்று பொருள் கொண்டு அதை இந்திரனுக்கும் அடை மொழி ஆக்கலாம். ஆனால் வியாக்கியனக்காரர்கள் ஒன்றும் சொல்லவில்லை ; முக்கியமான சொற்கள் “ஹிரண்ய வக்ஷ = தங்க முலைகள்” என்பதாகும் . செல்வத்துக்கு ‘த்ரவிணம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. திரை கடல் ஓடியும் ‘திரவியம்’ தேடு என்று தமிழிலும் சொல்கிறோம். த்ரவிணம், திரவியம் எல்லாம் ஒரே சம்ஸ்க்ருத மூலம் உடையனவே. அதிலிருந்து வந்ததுதான் ட்ரெஷர் TREASURE என்ற ஆங்கிலச் சொல்.
‘நிலை குலையாத’, ‘பொறுமையான’ என்ற இரண்டு அடைமொழிகளை பூமிக்கு வழங்குவது இந்துக்களின் சிறப்பு. ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல’ பொறுமை என்பார் வள்ளுவர். பூமாதேவி பொறுமையின் உறைவிடம்; செல்வத்தின் பிறப்பிடம் ; நோ = நஹ = எங்களுக்கு; முன்னரே விளக்கிவிட்டேன்; வேத காலப் புலவர்கள் ஒருமையில் பேசுவது குறைவு; பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் அவர்கள் கண்ட பெருநோக்கு; ஆகவே எப்போதும் எங்களுக்குக் கொடு என்பர்; எனக்குக் கொடு என்று பேசமாட்டார்கள்
xxxx
இதோ ஏழாவது மந்திரம்
யாம் ரக்ஷந்த்யஸ்வப்னா விஸ் வதானீம் தேவா பூமிம் ப்ருதிவீமப்ரமாதம்
ஸா நோ மதுப்ரியம் துஹா மதோ அக்ஷது வர்ச்சஸா –7
ஏழாவது மந்திரத்தைக் காண்போம்
பொருள்:-
எப்போதும் தூங்காத தேவர்கள், சிறிதும் பிசகாமல் , காக்கும் இடம் பூமி! அவள் எங்கள் மீது தேன் மழை பொழியட்டும் . எங்களுக்கு வர்ச்ச ஸ் என்ற ஆன்மீக ஒளியை அளிக்கட்டும்
எனது வியாக்கியானம் _
வெளி உலக மக்கள் குறித்து இந்துக்கள் வியப்பான செய்திகளை சொல்லுகிறார்கள்; அவர்கள் ஒளி உருவத்தில் உலாவுவார்கள் ; எப்போதும் இன்பத்தில் திளைப்பார்கள்; ஆடல் பாடல் உண்டு; ஆனால் பார்வதியின் சாபத்தால் அவர்கள் செக்ஸ் sex செய்ய முடியாது; பிள்ளை பெற வேண்டுமானால் அவர்கள் பூமிக்கு வரவேண்டும்; ஐன்ஸ்டைன் சொன்ன விதிகளையும் ஒதுக்கிவிட்டு அவர்கள் மனோவேகத்தில் பயணம் செய்ய முடியும். அவர்களுடைய கால்கள் நிலத்தில் படியாது; கண்கள் இமைக்காது.; அவர்களுடைய மாலைகள் வாடாது. (நள தமயந்தி சரிதத்தில் இதை நன்றாக விளக்குகின்றனர் ) திருவள்ளுவரும், திருடர் பற்றி கிண்டல் செய்கையில் அவர்களும் தேவர்களும் ஒன்று; ஏனெனில் இரவில் தூங்குவதில்லை என்று (காண்க குறள் 1073) நக்கல் செய்கிறார்.
இதில் வரக்கூடிய ‘மது’ என்ற சொல்லைக் கவனிக்க வேண்டும்; இதன் பொருள் தேன் அல்லது தேன் போன்ற இனிமை. அஸ்வினி தேவர்களைப் போற்றும் துதிகளில் ரிக் வேதம் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறது. மதுரம் என்றால் இனிமை; பாரதியார் கூட “மது நமக்கு ,மது நமக்கு , மதுரமிக்க தமிழ் நமக்கு” என்று ஆடிப்பாடி கூத்தாடுவதைக் காண்கிறோம் .
Xxxx
எட்டாவது மந்திரத்தில் விஞ்ஞான உண்மை
இது மதத்தில் தசா வ தாவதாரத்தில் முதல் அவதாரம், மச்சாவதாரம். உலகம் முழுதும் முதலில் உலகம் முழுதும் நீரில் மிதந்தது ; நீரிலிருந்தே உயிரினங்கள் தோன்றின. இந்தக் கருத்து உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலும் உளது. இதை முதலில் உலகிற்குச் சொன்னவர்கள் இந்துக்கள். அதன் பிறகு உயிரினம் பரிணாமம் அடைந்த அதே வரிசையையையும் தசாவதாரத்தில் காண்கிறோம். இந்த எட்டாவது மந்திரத்தில் உலகம் எப்படி இருந்தது என்பதை முனிவர் காட்டுகிறார்.
பொருள்
எந்த பூமியானது முதலில் தண்ணீர் மயமாக இருந்ததோ, எந்த பூமியை புனிதர்கள் அபூர்வ சக்தியோடு நாடினார்களோ , எந்த பூமியின் அமுத இருதயம் உயர்ந்த நிலையில் உள்ளதோ அந்த பூமி, உண்மையாலும்
அழிவற்ற தன்மையாலும் மூடப்பட்டுள்ள்ளதோ எந்த பூமாதேவி ஒளியையும் பலத்தையும் எங்களுக்கு அளிக்கட்டும்
யார்ண வே அதி ஸலிலமக்ர ஆஸீத்யாம் மாயாபிரன்வ சரன் மனீஷின ணஹ
யஸ்யா ஹ்ருதயம் பரமே வ்யோ அ மந்த் ஸத்யேனாவ்ருதமம்ருதம் ப்ருதிவ்யாஹா
ஸா நோ பூமிஸ்த் வஷிம் பலம் ராஷ்டே ததாதூத்தமே – 8
எட்டாவது மந்திரத்திலுள்ள ஸத்யம் ஆர்ணவம் = கடல் நீர், ஹ்ருதயம் ராஷ்ட்ரம் =தேசம் பலம், பூமி, பிருத்வீ, உத்தம, மனித = மனீஷின—-Man ஆகியன இன்றும் புழக்கத்திலுள்ள எளிய ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள் ஆகும்.
Xxxxx
To be continued ……………………………..
tags-பூமி சூக்த, ஆராய்ச்சிக் கட்டுரை 4,