WRITTEN BY Dr A Narayanan
Post No. 10,501
Date uploaded in London – – 29 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கண்ணனைக் கடத்திய கன்னியர்
(Uploaded on 2nd January 2022)
தேடியவள் வந்தாளோ
தேடுபவனைக் கண்டாளோ
ஒடியதவ ளுடெம்பெலாம்
ஊதுகுழல் கான ஒலி
உளத்தி லுஞ்சலா டியவன்
உதட்டிலே உறவாடி
தேனுரும் பார்வையிலே
தேரோட்டம் கண்ட சாரதி
ரதியோ இந்த ராதை என்
கதியோ முக மதியோ வென
குழல் தழுவிய கை வார்
குழலி இடை தழுவியது
வண்ண மலர் தேன் உரும்
வண்டினம் போல் வந்தகோபியர்கள்
முகுந்தன் மூச்சுக் காற்றில்
மூர்ச்சித்த ராதையைக் கண்டு
கடத்தினரோ கோவலனை யாதவனோ
மாதவனோ யாவரமிவனோடு
உறவாடபிறவிப் பெரும் பேறாக
பெருந்தன ஆய்ச்சியரை
பிடித்த பேயோ அவ்வஞ்சியர்
கண்ட இடமெலாம் ஒன்றில்
பலவாக நின்றோன் பண்டொரு
நாள் பேய்முலை நஞ்சுண்டனே
நாராயணன்
xxxxxxxxxxxxxxx
POEMS BY DR A NARAYANAN, LONDON
ராதையும் கோதையும்
அந்திமந்தாரைப் பூத்த சந்திவேளையில்
முந்தானையில் முகுந்தனை முடியத் தேடி
வந்த வனிதை ராதையைக் கண்டோடி
ஏங்கிய அவள் மார்பகத்து விமலன் விட்ட
மூச்சுக்காற்று சிந்திய முத்தமோ வெனப்
பேச்சிலா நிலைலயிலவள் கண்கள் சொருக
மேனிப் பெருகிய நீரைப் பருகியதவள்
மேலாடை யாயினும் பால் மணமே
ஆய்ச்சியர் குலப் பெண் மனமேயாக
அவளுடல் பெருகியது பாலோவென்ற
தவள் வெண்ணிறமான மேலாடை
மேவிய நூலிடையை இடைச்சி மகன்
மேகலையாய்த் தழுவ எம்மாதருமவன்
மேய்த்திடும் கறவையாய் சுரந்த பாலில்
திரண்ட அன்பாயமுதாயயராப்பற்றாய்
ஆயன் திருடியுண்ட வெண்ணெயாக
வெண்ணெய் களவாடிய கண்ணன்
பெண்ணுள்ளம் பத்திச்சிறைப் பட்ட
மறையோனென விண்ணோரன்றி
மண்ணோரறியா மாயன் லீலையே
வட மதுரை ராதையின் மேகலையில்
தென் மதுரைக் கோதையின் பாமாலை
தென்றல் சுமந்தத் தேனிசையாயொலிக்க
கன்றொன்று அலருகிறதென்றதனைக்
காக்கச்செல்ல வேண்டுமென்று சாக்கு
சொல்லித் தப்பி வந்த தாமோதரனை
விட்டு விடுவாளோ வில்லிபுத்தூராழ்வான்
விட்டுசித்தன் மகள்! தேடி வந்த வேணு
விலோலனுக்குச் சூடிக்கோடுத்தப் பூ
மாலையில் பாசுரங்களின் மணம் கமழ
மாதவியின் மஞ்சள் முகத்தில் தஞ்ச
மடைந்த மாதவனே கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலன்
நப்பின்னையின் மாலை ஏற்று அவள்
கைப்பற்றித் தீவலம் வந்துத் தாள்பற்றி
மெட்டியிட்டுத் தாரமாக்கிய தரணீதரனே
பண்டொரு நாள் ஆமையாய் அமுதம்
கடைந்த மந்தரகிரியை மத்தாகத் தாங்க
இன்றோ மங்கையர் மனமெனும் தாழியில்
மத்தாகி பத்தியெனுமமுதம் கடைகிறான்
உலகத்தோர் உடலுறவாடல் போகம்
உள்ளத்தினுள்ளனோடுறவாடல் யோகம்
BY DR A. NARAYANAN, LONDON
Xxxxxxxxx
சபரிகிரி சாமியே அருள் தாராய்
சபரி கிரி வாழ் சாமி நமோ நம
சர்வ மங்கள ரூபா நமோ நம
சரணம் ஐயப்பா நமோ நம
அருள் தாராய்
மகர ஜோதியான மணிகண்டனே நமோ நம
மாலையணிந்துன் மலை ஏறுவோம் நமோ நம
மண்டியிட்டு வருவோரை மறவாத மலையோனே
அருள் தாராய்
ஹரி ஹர சுதனாய் அவதரித்தாய் நமோ நம
ஆதியந்த மில்லா ஈசா நமோ நம
நாதி இலலாதர் நாடிடும் தேவா நமோ நம
அருள் தாராய்
இருமுடி கட்டி உன் திருவடி சேவைக்கு
கல்லும் முள்ளுமுள்ள பாதையானாலும்
கால் வருந்தா வந்தோரைக் கைவிடா
கனக கிரி ராஜா நமோ நம
அருள் தாராய்
திரியும் நெய்யும் இட்ட தீபத்தில்
எரியுமோ எங்கள் மேல் சாபமெல்லாம்
ஏற்ற நிலையில் போற்றும் தெய்வமாய்
தேற்றி எம்மைக் காப்பாய் நமோ நம
அருள் தாராய்
ஓதிய வேதமே சரணமயப்பாவென
சாதி சமயம் பாராத தேவனே
தேதியும் கிழமையும் பாராது
தேவை ஒன்றுன் சரணமே ஐயனே
அருள் தராய்
மகர ஜோதியான மணிகண்டனே நமோ நம
மாலையணிந்துன் மலை ஏறுவோம் நமோ நம
மண்டியிட்டு வருவோரை மறவாதமலையோனே
அருள் தாராய்
நாராயணன்
—- subham —–
Tags- ராதையும் கோதையும், சபரிகிரி சாமியே ,அருள் தாராய்