WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,513
Date uploaded in London – – 1 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
PART 1 WAS POSTED YESTERDAY 31-12-2021
இப்பொழுது ஐந்தாவது அற்புதத்தைக் காண்போம்.
அரசனின் குதிரை, வலி தாங்க முடியாமல் தரையில் விழுந்து கதறியது நாட்டிலுள்ள பிரபல மிருக மருத்துவர்கள் வந்து குணப்படுத்த முயன்றனர். அது பலன் தரவில்லை. ZARATHUHSTRA ஜராதுஷ்ட்ரர் நான் குணப்படுத்துகிறேன். ஆனால் குதிரையின் நான்கு கால்களையும் குணப்படுத்த 4 நிபந்தனைகள் என்றார் . மன்னனும் ஒப்புக்கொண்டான்.
இந்தக் கதை 1400 ஆண்டுகளுக்கு முன்னர் திருஞான சம்பந்தர் என்னும் சிறுவன் , மதுரை மாநகரில் கூன் பாண்டியன் என்ற மன்னனை திருநீறு பூசி ‘நின்ற சீர் நெடுமாறன்’ ஆக்கியதை நமக்கு நினைவுபடுத்தும்.
ஜொராஸ்டர் ZOROASTER என்று கிரேக்கர்கள் அழைத்த பாரசீக ஜராதுஷ்ட்ரர் ZARATHUSHTRA OF PERSIA/IRAN , ஆப்கானிஸ்தானில் நடத்திய அற்புதம் இது.
பாதாள சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜராதுஷ்ட்ரர் அழைத்து வரப்பட்டார். சத்திரக் காவலனும் , அரசவை பொறாமைக்காரர்கள் ஜராதுஷ்டிரருக்கு அவப் பெயர் ஏற்படுத்த படுக்கைக்கு அடியில் எலும்பு, மயிர், மாமிசம், நகம் இவைகளை மறை த்து வைத்த உண்மையைக் கக்கினான். ஜராதுஷ்ட்ரர் , நிரபராதி என்பது உறுதியானது.
அவர் குளித்துவிட்டு, குதிரையை ஒரு சுத்தமான துணியில் கிடத்தி மந்திரங்களை உச்சரித்து குதிரையின் ஒரு காலைத் தொட்டார். அது நிமிர்ந்து உறுதியாக நின்றது. இதற்கு நீ எனக்கு நிறைவேற்ற வேண்டிய என் முதல் நிபந்தனை இதோ – “மன்னன் விஸ்தஸ்பா என் மதத்தை- என் கொள்கைகளை ஒப்புக்கொள்ளவேண்டும்”.
அவனும் தலை அசைத்து குதிரையின் மற்ற கால்களையும் குணப்படுத்த வேண்டினான்.இரண்டாவது நிபந்தனையை ஜராதுஷ்ட்ரர் சொன்னார் – “என்னை ராணி ஹுதோக்ஷி வசிக்கும் அறைக்கு அழைத்துச் செல். நான் என் உபதேசத்தை அருளுவேன். அவள் விருப்பப்பட்டால் அதை ஏற்கட்டும் என்றான். மன்னனும் அவரை தன மனைவி வசிக்கும் அந்தப்புர அறைக்கு அழைத்து செல்ல, அவளும் உபதேசத்தைக் கேட்டு மனம் மகிழ்ந்து, அகம் குளிர்ந்து, அந்த மதத்தைத் தழுவினாள் ; சபைக்குத் திரும்பி வந்த ஜராதுஷ்ட்ரர் குதிரையின் இரண்டாவது காலை பிடித்து மந்திரத்தை ஜெபித்தார். அதுவும் குணமாகி காலை நீட்டியது.
குதிரையின் மூன்றாவது கால் இன்னும் வயிற்றை நோக்கி மடித்து கிடந்தது. இப்பொழுது ஜராதுஷ்ட்ரர் மூன்றாவது நிபந்தையை உரைத்தார் – பட்டத்து இளவரசன் ஆகிய அஸ்வந்தியார் என் மதத்தை, நாடு முழுதும் பரப்புவேன் என்று வாளின் மீது ஆணை – சத்தியம் செய்யவேண்டும் .
அவனும் அதற்கு இசையவே மூன்றவது காலையும் குணப்படுத்தினார் ஜராதுஷ்ட்ரர்.
எனது வியாக்கியானம்
ராணியின் பெயர் சங்க இலக்கியத்தில் உள்ளது. சுத்த அக்ஷி – நல்ல கண் நாயகி = அதாவது நக்கண்ணை= இதன் மற்றோரு ஸம்ஸ்க்ருதப் பெயர் – சுலோசனா
இலவசனின் பெயர் – அஸ்வ தேவன் என்பதன் திரிபு = அஸ்பந்திய
இப்போது நாலாவது காலை நிமிர்த்த கடைசி நிபந்தனையை ஜராதுஷ்ட்ரர் புகன்றார்.
சத்திரக் காவலனை அழையுங்கள் எப்படி, யார் பில்லி சூனிய நகம், மயிர், எலும்பு , மாமிசம் முதலியவற்றை என் படுக்கையில் வைத்தது என்ற உண்மையைச் சொல்லட்டும் என்றார் ; அவன் அழைத்து வரப்பட்டான் ; அவன் முழு உண்மைகளையும் கக்கினான். அவன் அரசவையில் அமர்ந்திருந்த பொறாமைக்கார மந்திரி, பிரபுக்களை சுட்டிக்காட்டி இவர்கள்தான் இந்த பில்லி சூனிய, மாந்த்ரீகப் பொருட்களைக் கொண்டு வந்தவர்கள் என்று காட்டினான். உடனே அவர்களைச் சிரச் சேதம் BEHEAD செய்ய மன்னன் உத்தரவிட்டான். ஜராதுஷ்ட்ரர் , மிகவும் கருணையுடன் அவர்களைக் கொல்ல வேண்டாம்; நாடு கடத்தினால் போதும் என்றார். மன்னனும் அப்படியே செய்த்தான் .
குதிரையின் நாலாவது காலையும், மந்திரம் ஜபித்து குணப்படுத்தினார் ஜராதுஷ்ட்ரர் .
இளைஞரான ஜராதுஷ்ட்ரர் அந்த அரசவையின் மூத்த அதிகாரியான பிரசாஸ்திராவின் மகளை மணந்தார் ; அவருக்கு 3 மனைவிகள்; அவர்கள் மூலம் 3 மகன்களும் 3 மகள்களும் பிறந்தனர். 77 வயது வரை வாழ்ந்தார். ஆனால் அவரது கொள்கை பிடிக்காத ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது மனைவி, மகள் , மகன் — ஆகிய அனைவரின் பெயர்களும் ஸம் ஸ்க்ருதப் பெயர்கள் ‘ எப்படி வெள்ளைக்காரர்களும் கிரேக்கர்களும் தமிழ்ப் பெயர்களை உருக்குலைத்தார்களோ அதே போல அவஸ்தன் மொழியில் ஸம்ஸ்க்ருதத்தை எழுதும் போது அவையும் உருமாறிப் போயின
வேத கால கடவுளரின் பெயர்களும் அரக்கர் பெயர்களும் அவர்கள் வேதப் புஸ்தகமான செண்ட் அவெஸ்தாவில் உளது. அவர்கள் அக்கினியை வணங்காமல் ஒரு நாளையும் கழிக்கமாட்டார்கள் ஆயினும் இந்திரனை பின்னுக்குத் தள்ளி , வருணனை முன்னதாக்கியதும் தேவர்களை மட்டம்தட்டி, அசுரர் என்ற சொல்லை உயர்த்திக் காட்டியதும் ஜராதுஷ்ட்ரர் ஒரு புரட்சிக்கு கொடி தூக்கிய பாரசீகன் என்பதைக் காட்டுகிறது. அவர் வாய் மொழியாக வந்ததைவிட பிற விஷயங்களும் அவர்களுடைய மதப் புஸ்தகத்தில் இருக்கின்றன.
வேத கால சாப மந்திரங்கள் போல அவரும் சாபம் இடும் சம்பவங்களும் அவர் வாழ்க்கையில் உண்டு தனக்கு புகலிடம் கொடுக்க மறுத்த ஒருவனுக்கு அவர் சாபம் இடுகிறார். எதிரிகளை ஒழிப்பது பற்றிப் பாடுகிறார்.
எல்லா மதப் புஸ்தகங்களிலும், தமிழ் உள்பட எல்லா இலக்கியங்களிலும், எதிரிப் படை உள்ளது உண்டு. வெள்ளைக்கார, .மார்க்சீய அயோக்கியர்கள் வேத புஸ்தகத்தில் உள்ள எதிரிகளை மட்டும் ‘பூர்வ குடி மக்கள்’ என்று முத்திரை குத்தி, வரலாற்றையே திசை திருப்பினார்கள். அதை நாம் மாற்றி எழுதி உண்மையை உரைக்கவேண்டும். காந்தி, அம்பேத்கார், சுவாமி விவேகானந்தர், பாரதியார், காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொன்ன விஷயங்களை நாம் பரப்பவேண்டும்.
TAGS- ஜராதுஷ்ட்ரர், அற்புதம், ஜொராஸ்டர், குதிரை, கால், செண்ட் அவெஸ்தா
–subham–