ஐந்து இன இந்துக்கள் குடியேறிய நாடுகள் (Post No.10,519)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,519

Date uploaded in London – –    2 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை – PART 6

அதர்வண வேத 12-ஆவது காண்டத்தில் முதல் துதி பூமி சூக்தம் ; 63 மந்திரங்களைக் கொண்ட அந்த அற்புதமான துதியைத் தொடர்ந்து காண்போம்.

மந்திரம் 13

யஸ்யாம் வேதிம் பரிக்ருஹணந்தி பூமியாம் யஸ்யாம் யக்ஞம் தன்வதே விஸ்வகர்மாணஹ

யஸ்யாம் மீயந்தே ஸ்வரவஹ ப்ருதிவ்யா மூர்த்வா சுக்ரா  ஆஹுத்யாஹா புரஸ்தாத்

ஸா நோ பூமிர் வர்தயத்  வர்தமானா –13

எந்த பூமியில் மனிதர்கள் யாக மேடைகளை நிறுவி, பலரும் சேர்ந்து வேள்வி என்னும் துணியை நெய்கிறார்களோ , பிரார்த்தனைக்கு முன்னர் எங்கு உயரமான, ஒளிமிக்க கம்பங்களை நாட்டுகிறார்களோ அந்த பூமாதேவி வளம் பெறட்டும் ; எங்களையும் வளம் பெறச் செய்வாளாகுக — 13

வேள்வி என்னும் கிரியையை ஆடையாக  உருவகப்படுத்தி பலரும் நெய்யும் சித்திரம் இதில் உளது. எங்களுக்கு வளம் தருக என்ற கூட்டுப் பிரார்த்தனையும் இருக்கிறது  ஒளி மிகுந்த யாக ஸ்தம்பங்களையும் புலவர் போற்றுகிறார்.

வர்த்த = வளர்க  (வளம் பெருகுக) என்ற வினைச் சொல் பாஸிட்டிவ் /ஆக்கபூர்வ எண்ணத்தின் பிரதி பலிப்பு  ஆகும்

Xxxx

மந்திரம் 14

யோ நோ த்வேஷத் ப்ருதிவி யஹ ப்ருதான்யாத் யோ அபிதாஸான் மனஸா யோ வதேன

தன் நோ பூமே ரந்தய  பூர்வகுருத்வரி –14

பூமாதேவியே ! எங்களுக்குஆயுதங்களாலும் எண்ணங்களாலும்  தொல்லை தரும் விரோதிகளை நாங்கள் வெல்வோமாக.. முன்னரே நீ உதவிய வாறு செய்வாயாகுக .

எதிரிகள், அவர்களுடைய  மனதாலும் தொல்லை  தருவதாகக் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. சைக்கலாஜிக்கல் பிளாக்மெய்ல் PSYCHOLOGICAL BLACKMAILING  என்று சொல்லலாம். இது புதிதல்ல. முன்னரே நடந்தவைதான். நீ அப்போது உதவியது போலவே இப்போதும் உதவுக என்கிறார் புலவர்  – 14

Xxx

மந்திரம் 15

த்வ ஜாதா ஸ்த்வயி சரந்தி  மர்த்யாஸ்த்வம்  பிபர்ஷித்வி பதஸ்த்வம்  சதுஷ்பதஹ

தவேமே ப்ருதிவி பஞ்ச மானவா  யேப்யோ ஜ்யோதிரப்ருதம்

மர்த் யேப்ய  உத்யந்த் ஸூர்யோ  ரஸ்மிபிராத நோதி – 15

இரு கால், நான்கு கால் பிராணிகள் அனைத்தும் உன் மீது தோன்றின. அவற்றை நீ தாங்கி வளர்க்கிறாய் . உன் மீது ஐந்து இன  மக்கள் தோன்றினார்கள்.  சூரியன்  உதயமாகி அமுத மயமான ஒளியை உன் மீது பரப்புகிறான்.

ஐந்து இன  மக்கள் என்பது ரிக் வேதம் முழுதும் பல இடங்களில் வருகிறது. அவர்களை ஐந்து பெரிய குழுக்கள் என்று வியாக்கியான க்காரர்கள் வருணிக்கிறார்கள் . இவர்கள் சிந்து சமவெளியிலிருந்து ஐரோப்பா முழுவதையும் சென்றதை ஸ்ரீகாந்த் தலகரி எழுதிய புஸ்தகத்தில் காணலாம்.

அவர் அனு , யது, துர்வாச, புரு, த்ருஹ்யு என்ற ஐந்து குழுக்களைக் குறிப்பிட்டு, அவர்களில் த்ருஹ்யு என்னும் இனமும் அனு என்னும் இனமும் ஆசியா மற்றும் ஐரோப்பா  முழுதும் சென்றதைக் காட்டுகிறார்

ANU, DRUHYU, YADU, TURVASA, PURU.

Xxxx

மந்திரம் 16

தா நஹ ப்ரஜாஹா  ஸம் துஹதாம் சமக்ரா வாச்சோ  மது ப்ருதிவி  தேஹி  மஹ்யம் -16

எல்லா உயிரினங்களும் சேர்ந்து எங்கள் மீது ஆசிகளை பொழியட்டும் ;

பூமா தேவியே எனக்கு தேனினும் இனிய வாக்கினை- பேச்சிநை அருளுக –16

‘இனிய உளவாக இன்னாது  கூறல் கனியிருப்பக்

காய் கவர்ந்தற்று’ என்பான் வள்ளுவன்.

அதற்கு இணையாக தேன் போன்ற வாக்கினைக்  கேட்கிறான் புலவன்.

தேன் போன்ற சொற்கள் என்ற தொடர் ரிக் வேதத்திலும் வருகிறது. அஸ்வினி தேவர்கள் பற்றிக் குறிப்பிடும் இடமெல்லாம் தேன் வருகிறது.

பறவைகளும் மிருகங்களும் கூட அருள் மழை பொழியட்டும் என்று வேண்டுவது இயற்கை மீதும் புறச் சூழல் மீதும் உள்ள மதிப்பையும்  மரியாதையையும் காட்டுகிறது —

To be continued………………………………….

tags- ஐந்து இன மக்கள், பஞ்ச ஜனா , இந்து, குடியேற்றம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: