WRITTEN BY B. KANNAN, DELHI
Post No. 10,537
Date uploaded in London – – 7 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Written By B. Kannan, New Delhi
திருப்புகழ்ப் பாடல்களை அடியொட்டி ‘திருப்புகழ் ஞானசச்சிதானந்த வள்ளி கைத்தம்’ எனும் மருத்துவக் குணங்கள் கொண்ட பாடலை இயற்றியுள்ளார். வியாதிகளைக் குணப்படுத்தத் தன்னிடம் எந்தவித விசேஷ சக்தியும் கிடையாது எனவும் தான் வள்ளியின் பாதக் கமலங்களுக்கு அடிமை என்றும் அடிக்கடி கூறுவார். மற்றவர்களுக்குப் பணி செய்வதே தனது தலையாயக் கடமை என்ற உறுதியுடன் இருந்தார்.
திருப்புகழைத் தினமும் குறிப்பிட்ட எந்தப் பாடலுடன் துவக்க வேண்டும் என்பதற்கும் ஒரு வரைமுறை வைத்திருந்தார். ஞாயிறு அன்று ஒரு குறிப்பிட்டப் பாடலுடன் துவங்கி அடுத்த சனிக்கிழமை வரை ஒரு குறிப்பிட்டப் பாடலுடன் முடிப்பதில் யோக சாஸ்திரக் கலையின் அஸ்திவாரம் காணப்பட்டது. தினமும் நம் உடலில் ஒரு குறிப்பிட்ட யோக சக்கரம் ஓடுகின்றது என்றும், சனிக்கிழமை அன்று அனைத்து ஆறு சக்கரங்களும் உடம்பில் ஓடுகின்றன எனவும் கூறுவார். விநாயகர் துதியுடன் தொடங்கி,முருகனை வேண்டுதல், அலங்காரம்,அபிஷேகம் என முடியும். திருப்புகழ்ப் பாராயணத் தவநெறி திருமுறை எனும் இதில் ஆறு படை வீட்டின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன. பாராயணம் முழுவதும் ஆறு யோக சாஸ்திர அடிப்படையில் அமைந்துள்ளது.
சுவாமிகள் இயற்றிய மற்ற நூல்களின் தொகுப்பு அவரது நூற்றாண்டு விழா மலரில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது “வேல் மாறல் மகாமந்திர”மாகும்.
வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப் பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும். ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற்பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும்
அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள வேல்வகுப்பின்,ஔஷத (மருந்து) வகுப்பு-பதினாறு அடிகளை மேலும் கீழுமாகவும், முன்னும் பின்னுமாகவும் ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து , அதனை நான்கு மடங்காக (16×4=64) அறுபத்து நான்கு அடிகளாக அமைய வைத்து, அந்தப்பாராயண முறையை ‘வேல்மாறல்’ என்று தொகுத்து அளித்துள்ளார் வள்ளிமலை சுவாமிகள்.6வது அடியாகிய , ‘திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் என (து) உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே’ என்ற வேல் மஹா மந்திர அடி முதலில் 12 முறையும், நிறைவில் 12 முறையும், நடுவில் 64 முறையும் ஆக மொத்தம் 88 முறை ஓதப்பெறுகிறது.
இந்த 16வது அடி எழுவாய் ஆக அமைய, முதல் பதினைந்து அடிகள் யாவும் பயனிலையாக வருமாறு 16ம் அடியை ஒவ்வொரு அடியிலும் சேர்த்துப் படித்தால் அந்த வரி முழுமை பெறுகிறது. இதுதான் இந்த வேல் வகுப்பின் அபூர்வ அமைப் பாகும்.
https://tamildevotionallyrics.blogspot.com/2017/07/vel-maaral-mahamanthiram-parayanam-tamil.html
தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையே இதற்கு உதாரணமாகச் சொல்கிறார். திரிலோக மந்திரவாதி என்பவன் சுவாமிகள் மீது சூனிய மந்திரம் வைத்துவிட அவரால் பேசமுடியாமல் போயிற்று. முருகனின் அருளால் வேல் காப்பு மந்திரம் மனதில் பதிந்து இருந்ததால்,அந்த 64வரிகளையும் வேறுவகையில் 16 வரிகளாக மாற்றி உச்சரிக்க மந்திரவாதியின் முயற்சி எடுபடவில்லை. மாறாக,அவன் உடல் எங்கும் அனல் தகிக்க அலறியவாறு சுவாமிகளிடம் ஓடோடி வந்து சரணடைந்து. இனி அம்மாதிரி தவறைச் செய்ய மாட்டேன் என உறுதி அளித்தான். அவரது அருளால் பாதிப்பிலிருந்து மீண்டான். அதன் மூலம் இம் மந்திரத்தின் மகத்துவம் பற்றிப் புரிய வந்தது. முருகனின் சில அம்சங்களைப்- வேல், மயில்,பாதம்,வள்ளி போன்றவை-புகழ்ந்துப் பாடுவதால் கிடைக்கப் பெறும் ஒருவித தெய்விக அனுப வத்தை விவரிக்க இயலாது என்றும் குறிப்பிடுவார்.
1941-ம் ஆண்டு முதல் 1950 வரை சென்னையிலும், வள்ளிமலையிலும் மாறிமாறி வசிக்கலானார். வள்ளிமலையில் அவர் தவமியற்றியக் குகை திருப்புகழ்ஆஸ்ரமம் என்றறியப்பட்டு அன்னமிடும் ஆலயமாகத் திகழ்கிறது. சென்னைக்கு வரும்போ தெல்லாம் லிங்கிச்செட்டித் தெருவில் இருந்த தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை இல்லத்தில் தான் தங்குவார். இவர் அருணகிரியாரின் அனைத்து நூல் களுக்கும் உரையெழுதி வெளியிட்டுள்ளார். இவருடையத் தகப்பனார் வடக்குப் பட்டு சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் திருப்புகழ்ச் சுவடிகளைத் தேடிஎடுத்து முதலில் பதிப்பித்தவர். அதனால் அந்த இல்லத்தைத் திருப்புகழின் தாய்வீடு என்றே சுவாமிகள் கருதினார்.
14-4-1950 அன்று மகான் ரமணமகரிஷி சமாதி அடைந்ததைக் காணும் பெரும் பாக்கியம் சச்சிதானந்தருக்குக் கிடைத்தது. பின்னர் அதே ஆண்டு நவம்பர் மாதம் சென்னைத் தம்புச் செட்டி சாலையில் கந்தர் சஷ்டி ஹோமம் ஒன்றை நடத்தினார்.
ஐந்தாம் நாள் அன்று வள்ளி சன்மார்கம் என்ற தலைப்பில் சங்கீத உபன்யாசம் செய்து கொண்டிருந்த ஸ்வாமிகளினால் இடையே சில நிமிடங்கள் பேச முடியா மல் வாயடைத்துப் போய் விட்டது. மிகவும் களைப்புடன் காணப்பட்டார். அதற் குப் பின் சில மணி நேரம் பொறுத்துச் சீடர்களிடம் பேசியவர் அந்த உபன்யா சத்தின் பொழுது தனக்கு முருகன் நேரில் காட்சி தந்தார் எனவும் அதனால்தான் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது என்றும் கூறினார். அதன் பின் 12 வது நாள் (1950 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி) கார்த்திகை, அஸ்வினி நட்சத்திரம், திரியோ தசி திதி கூடிய தினத்தன்று மாலை நான்கு மணி அளவில் நெற்றிப் பொட்டின் நடுவில் பிளவு ஏற்பட்டு இரத்தக் கசிவு தோன்ற, அதிலிருந்து ஸ்வாமி களின் ஜீவன் பிரிந்து,சமாதி அடைந்தார்.
வள்ளி மலைப் பகுதியில் ஆலயத்துக்கு அருகில் இருந்த குகையில் (அவர் சமாதி அடைவதற்கு பல நாட்களுக்கு முன்னரே தன்னுடைய சமாதி நிலைக்கு ஏற்பாடு செய்திருந்த இடத்தில்) அவரது பூத உடல் அடக்கம் செய்யப்பட்டுச் சமாதி எழுப்பப் பட்டுள்ளது. ஒரு புண்ணியப் புருஷரின் ஆன்மா அங்குஅடங்கியிருந்துப் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறது.
மகாசமாதி குருபூஜை, திருப்புகழ்ப் பாராயணம், பொங்கி அம்மன் வழிபாடு, அன்னதானம் போன்ற வைபவங்கள் வெகுசிறப்பாக நடந்தேறுகின்றன.
இறைத் திருவருளால் அறிவுமறி தத்துவமும்,அபரிமித வித்தைகளும். இமைப் பொழுதில் கைவரப் பெற்றவர். இவர் ஒரு ஞானி, யோகி,சித்தர், ஏன் ஒரு பக்தரும் கூட! வாகீச கலாநிதி கி.வா.ஜ.அவர்கள் சுவாமிஜி அருணகிரிநாதரின்
மறு அவதாரமே எனப் பாராட்டுகிறார். ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர் இன்னும் ஓர்படி மேலே போய் திருப்புகழ் சாமி முருகனின்அவதாரமே எனப் போற்றுகிறார்.
ஶ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் குருவருளால் வள்ளிமலைப் பணிபுரிந்த அழகர் சச்சிதானந்தர் அகம் அமர்வேள் பதம் போற்றிவணங்குவோம்.
–subham–
tags- வள்ளி மலை