ஹரி யூபா  என்பதே ஹரப்பா HARAPPA  ஆனது  புதிய சான்று (Post No.10,541)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,541

Date uploaded in London – –    8 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2014ம் ஆண்டு, 2018ம் ஆண்டில் எழுதிய இரண்டு கட்டுரைகளில் ஹரி = தங்க , யூபம் = நெடுந்தூண் என்ற இரண்டு சொற்களே உலகப் புகழ் பெற்ற ஹரப்பா HARAPPAN CIVILIZATION நாகரீக நகரத்தின் பெயரைக் கொடுத்தது என்று எழுதி,  புறநானூறு, ரிக் வேத சான்றுகளை சமர்ப்பித்தேன் . இப்போது அதர்வண வேதத்தையும் படித்து முடித்துவிட்டேன். அதில் மேலும் தெளிவான சான்று கிடைத்து விட்டது. அது மட்டுமல்ல. ஹரி, ஹ்ரீ என்ற சொல்லை வைத்து சிலேடைக் கவி (DOUBLE ENTENDRE= SLESHMA) எழுதிய வேதகாலப் புலவன் பற்றிய வியப்பான தகவலும் கிடைத்துள்ளது.

YUPA POST IN UJJAIN COIN

அதர்வண வேதம் (அ .வே AV-20-30, 31 .)  – 20-ஆவது காண்டம் – பாடல்  30, 31 — சூக்த எண் 618, 619 SUKTAS

பாடிய  புலவர் பெயர் – வரு சர்வ ஹரிர்வா !

புலவர் பெயரிலேயே ‘ஹரி’ வந்து விடுகிறது !!

இந்தப் பாடலில் 5 மந்திரங்கள் உள்ளன . ஒவ்வொரு மந்திரத்திலும் ஒரே சப்தத்தை வைத்துப் புலவர் சொற் சிலம்பம் ஆடுகிறார்.

ஹ்ரி = எடுத்துக் கொள் TO TAKE

ஹர்யத = மகிழ்ச்சி DELIGHTFUL

ஹர்யன் = அன்புள்ள LOVING, DEAR, DARLING

ஹரி = குதிரை HORSE IN TAWNY OR BAY COLOUR

ஹரித் = பொன் நிறமுள்ள ; GOLDEN, YELLOW; ALSO GREEN

BAY = REDDISH BROWN; TAWNY= ORANGE BROWN; IN SUN LIGHT GOLDEN COLOUR

யூபம் YUPA என்பதை ( Sacrificial Post யூபம் = நெடுந்தூண்) யாகம் செய்யும் மண்டபத்தில் கிழக்கு பக்கத்தில் நிறுவுவார்கள் இதில் நெய்தடவுவார்கள் அல்லது வர்ணம் பூசுவார்கள் . முடிந்த பின்னர் தங்கத் தகடும் அடித்திருக்கலாம் . இப்போதும் கூட கோவில் த்வஜ ஸ்தம்பங்கள் = கொடி மரங்கள் மரத்திலும், உலோகத்திலும் இருப்பதைக் காண்கிறோம். பணக்கார கோவில்களாக  இருந்தால், முழுவதும் தங்கத் தகடுகளை அடித்து அழகு செய்கிறார்கள் . இப்படி நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதையும் இந்த துதி காட்டுகிறது ; ஆக தங்கத் தூண் இருந்த நகரம் ஹரப்பா என்பது ஹரி+ யூப என்பதிலிருந்து வந்தது உறுதியாகிறது.

யூபம் என்ற சொல் தெரியாத தமிழன் சங்க காலத்தில் இல்லை . இதை புறநானூறு உறுதி செய்கிறது (கீழே உள்ள இணைப்புகளில் முழு விவரமும் உள்ளது )

இப்போது அ .வே.துதியைக் காண்போம்

மந்திரம் 1

பெரிய அஸெம்பிளியில் / சபையில் நான் உன்னுடைய இரண்டு குதிரைகளைப் புகழ்வேன் . யுத்த வீரனே, உன்னுடைய இனிமையான பானத்தையும் இசைப்பேன்; அவன் நெய்யைப் போல பொற்காசுகளைப் பொழிகிறான். பொன் வடிவமுள்ள உன்னில் என் துதிகள் நுழையட்டும்

மந்திரம்  2

வானுலகத்துக்குச் செல்லும் தங்க குதிரைகளைப் போல , முற்கால ரிஷிகள் பொன் மயமான உன்னைப் புகழ்ந்தது போல , பசுக்களாலும் , புரவிகளாலும் போற்றப்படும் அந்த இந்திரன் பலம் பெறட்டும் .

மந்திரம்  3

அவனுடைய வஜ்ராயுதம் உலோகத்தால் ஆனது. அது  பொன் வர்ணம் உடையது  அவன் நிறமும் மஞ்சள் தான் / தங்கம்தான் பொற்   கைகள் உடையவன் . அவன் சிவந்த கோபத்தாலும் , வலிமையான பற்களாலும் சம்ஹாரம் செய்கிறான்.  அவன் தொடர்பான எல்லாமே தங்கம்தான்

மந்திரம் 4

வானத்திலும் பொன்மய வஜ்ராயுதத்தைக் காணலாம். அது பொற்கொடி போல பரவுகிறது . பொன் தாடைகள் உள்ள அது அஹி (Ahi)  என்னும் பாம்பு அரக்கனை (Dragon)  வீழ்த்தியது .பொன் குதிரை உடைய அவன் ஆயிரம் சுவாலைகள் உடையவன் .

மந்திரம் 5

பொன் கேசமுள்ள இந்திரனே , முற்காலத்தில் உன்னைப் பாடிப் பரவியபோதும் நீ மகிழ்ச்சி அடைந்தாய். பிறப்பிலேயே தங்கத்துடன் பிறந்தவன் நீ . நல்ல துதிகளை நீ வரவேற்கிறாய்

இதே புலவர் பாடிய இரண்டாவது துதியிலு ம் இதே கருத்துக்கள் வருகின்றன . இரண்டும் ரிக் வேத 10-96 துதியை இரண்டாக்கப் பகுத்துக் கொடுக்கப்பட்டவையே.

இதில் வரும் முக்கிய சொல் – அய மயன் – இதை இரும்பு இதயம் (Iron Hearted) கொண்டவன் என்று வில்சன் (Prof. Wilson) மொழி பெயர்க்கிறார்

xxxx

எனது வியாக்கியானம்

இந்திரன் என்ற சொல்லை வெளி நாட்டினர் , ‘இடி/மின்னல்’ என்றும்,’ மன்னர்’ என்றும், ‘தேவர் தலைவன்’  என்றும் இடத்திற்குத் தக மொழி    பெயர்த்துள்ளனர்.

காஞ்சி பராமசர்ய சுவாமிகளும் இந்திரன் என்பது பல பொருள்களைக் கொண்டது என்கிறார்.

மழை என்று கொண்டால்  தங்க நிற மின்னல் நம் கண்களுக்கு முன்னால் வரும்.

அய (Ayas= Iron) என்பதை இரும்பு என்று மொழி பெயர்க்கின்றனர். உண்மையில் இதன் பொருள் – உலோகம் (Metal).

தமிழர்கள் ‘பொன்’ என்ற சொல்லை இன்றும் பல பெயர்களில் பயன்படுத்துகின்றனர் .

திருக்குறளிலேயே பொன் என்பது இரும்பினாலான தூண்டில் முள்ளையும், தங்கத்தையும் குறிக்கிறது கோவிலில் ஐம்பொன் சிலைகள் என்பது ஐந்து உலோகங்களைச் (Five Metals or alloys) சொல்கிறது.

வானிலுள்ள சூரியனையும் இங்கே 1000 சுவாலை என்று வருணிக்கின்றனர்.

கர்ணனும் தங்கமும்

இந்திரன் மூலம் குந்திக்குப் பிறந்த கர்ணனும், தங்க கவசம், குண்டலங்கள் ஆகியவற்றுடன் பிறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண கோணத்தில் இதை நோக்கினால், அவனை கங்கை நதியில் மிதக்க விடுவதற்கு முன்னர் அவனது தாய் குந்தியே இப்படி கவசம் போட்டிருப்பார் என்று கருதலாம்.

மாய மந்திரம் என்ற கோணத்தில் அணுகினால், இந்திரன் போல பிறப்பிலே யே அவை வந்தன எனலாம்.

இது ரிக்வேதத்தில் (RV.10-96) இருப்பதால் இதன் பழமை நன்கு விளங்கும்

சம்ஸ்க்ருதம் தெரிந்தவர்கள் ஹ்ரீ என்ற வேர்ச் சொல்லை புலவர் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார் என்று சுவைத்து மகிழலாம்.

இரும்பு இதயம் iron heart  அல்லது உலோக இதயம் metal heart  என்பது ரிக் வேத காலத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . இந்தப் பாட்டை எப்படி வேண்டுமானாலும் வியாக்கியானம் செய்யும்படி அமைந்துள்ளது. பிற்காலத்தில் யமகப் பாடல் தோன்ற இது வழி வகுத்தது என்றால் மிகையாகாது. ஆனால் இங்கு சிலேடை என்னும் இரட்டுற மொழிதல் யுள்ளது தெளிவு.

பசு என்பதை சூரியன் என்றும் பசுவின் வீடு என்பது பிரபஞ்சம் என்றும் அங்கு சூரியன் பிரகாசிக்க இந்திரன் வழி  செய்கிறான் என்றும் ரிக் வேத வியாக்கியானம் இயம்பும். இந்திரன் என்ற சொல் சக்திவாய்ந்த இறைவன் என்றே பொருள்படும். வேதத்துக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் இதைக் காணலாம்.

இந்திரனை ‘வேந்தன்’ KING என்கிறார் தொல்காப்பியர். கோன், தேவன் என்ற சொற்கள் அரசனையும் இறைவனையும் குறிப்பதை சங்க இலக்கியத்தில் காண்கிறோம். மன்னர்களின் மனைவியரை தேவி (Devi) என்றே புறநானூற்றின் அடிக்குறிப்புகள் காட்டுகின்றன.

MY OLD ARTICLES

ரிக் வேதத்தில் ஹரப்பா நகரம்? | Tamil and Vedas

https://tamilandvedas.com › ரிக்-…

· Translate this page

1 Nov 2014 — உலகின் மிகப்பழைய நூல் ரிக்வேதம். … ஆகவே ஹரி யூப என்பது வேத கால நகரம் என்ற …

சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப …

https://tamilandvedas.com › சங்க-…

23 Apr 2018 — Yupa is on seen in the right. சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப நெடுந்தூண் (Post No.4943).


சங்க இலக்கியத்தில் யூபம்; இந்தோநேஷியாவில் …

https://tamilandvedas.com › சங்க-…

5 Jul 2018 — யூபம் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள்: … நெடுந்தூண்– அகநானூறு 220. XXX. யூபம் …

என்னுடைய முந்தைய சிந்துவெளிக் கட்டுரைகள்:

WRITTEN BEFORE 2014

சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
பதி – வதி – மதி: சிந்து சமவெளியில் உண்டா? 20-10-2014
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை
(15/10/12)‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14
சிந்து சமவெளி – பிராமணர் தொடர்பு (Post No 1033, Date 10-5-14)

–SUBHAM–

Tags  —  ஹரப்பா, ஹரி, யூப, அதர்வண வேதம் , சிலேடை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: