சங்க இலக்கியத்தில் புதிய டாக்டர்; வேதத்தில் பழைய டாக்டர் (Post No.10569)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,569

Date uploaded in London – –    16 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகிலேயே பழைய புஸ்தகம் ரிக் வேதம்; அதற்கு ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும்  சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் கி.மு 4000 முதல் 6000 வரை தேதி குறித்தனர் (Herman Jacobi and B G Tilak). மாக்ஸ்முல்லர் கும்பல் கி.மு 1200 க்குப் பின்னர் இதை யாரும் வைக்கமுடியாது என்று சொன்னது. பேராசிரியர் வில்சன், கோல்ட்ஸ்டக்கர் போன்றோர் கொடுத்த அடியில் “இல்லை இல்லை; நான் சொன்னதன் கருத்து என்னவென்றால் அதற்கும் பின்னர் யாரும் காலம் சொல்ல முடியாது என்பதுதான். உண்மையில் அது கி.மு 1500 அல்லது அதற்கும் முன்னதாக இருக்கலாம்” என்று சொல்லி நழுவிக்கொண்டார் மாக்ஸ்முல்லர். அப்படிப்பட்ட பழைய வேதத்தில் டாக்டர் , மருந்து, மூலிகைகள்,சாவா மருந்து/அமிர்தம், அற்புத மருந்து /சோமம் , ஆயுர்வேத மருந்துகள் பற்றி நிறைய மந்திரங்கள் உள்ளன. ராமாயணக் கதை அறிந்த சின்னக் குழந்தைக்குக் கூட ஹநுமார்த்தான் உலகில் முதல் டாக்டர் என்பது தெரியும். லெட்சுமணன் மயக்கம் போட்டவுடன் இமயமலைக்குப் பறந்து போய் சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்தார்.. லெட்சுமணனும் குணமடைந்தார் .

ரிக் வேதக் கவிதைகள், யஜுர் வேதக் கவிதைகளில் பேஷஜம் / மருந்து, பிஷக்/டாக்டர் என்ற சொற்கள் வருகின்றன. இது அக்கால மருத்துவ அறிவைக் காட்டுகிறது. இதை மெய்ப்பிக்கும் விதத்தில் சுஸ்ருதர், சரகர் என்ற மருத்துவர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவ நூல்களையும் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிக் குவித்தனர். பிற்காலக் கவிஞர்கள் “நோய் என்பது பிறவித் தளை என்றும் அந்த ஜனன -மரண சுழற்சி நோயைப் போக்கவல்ல மருத்துவர் கடவுள்” என்றும் கூறிப் போந்தார்கள்

.

தமிழன் வழி தனீ ………………………. வழி

சங்க இலக்கியத்தின் காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமேயில்லை. அவர்களுக்கும் மருத்துவம், நோய்கள், அதற்கான காரணம் என்பதெல்லாம் நன்கு தெரியும்.. ஒரு புலவன் மிகவும் சாதுர்யமாக ‘பசிப்பிணி == பசி என்னும் நோய்’ என்ற சொல்லைக் கண்டுபிடித்து அந்த நோய்க்கு மருந்து கொடுக்கும் (உணவு) டாக்டர் இந்த ஊரில் இருக்கிறார் என்றும் பாடுகிறார்.

விவரங்களைப் படிப்பதற்கு முன்னர் ஒட்டு மொத்தக் கருத்து என்ன என்பதைக் காண்போம். அதாவது நோய் என்ற ஒன்று உண்டு; அதற்கு மருந்து என்று ஒன்று உண்டு. அதைத் தீர்க்கும் வைத்தியர் ஒருவர் உண்டு.

அதாவது வேத காலம் முதல் தற்காலம் வரை மனிதர்களுக்கு உடல்நல பிரச்சினை முக்கியமாகக் கருதப்பட்டது.

xxx

ரிக் வேதம்

1-43-2- Rudra’s medicines ரிக் வேதம் (ரி.வே.) 1-43-2 ருத்ரன் என்னும் சிவனின் மருந்துகள் பற்றிப் பேசுகிறது

1-43-4-Rudra, the possessor of healing remedies. Prayer for health and wealth. 1-43-4 ருத்ரனிடம் குணப்படுத்தும் மருந்துகள் உண்டு என்று சொல்கிறது. மேலும் ஆரோக்கியம் வேண்டும் என்றும் கோருகிறது.

வேதம் முழுதும் ஏராளமான மந்திரங்கள் 100 ஆண்டுக்கால ஆரோக்கியமான வாழ்வு வேண்டும் என்றும் பிராரத்னை வருகிறது

இது ஒரு எடுத்துகக்கட்டு. இது போல நிறைய எடுத்துக்கட்டுகள் உள்ளன

Xxxx

ரிக் வேதத்துக்கு அடுத்தாற்போல் வருவது யஜுர் வேதம் இதிலுள்ள ருத்ரம்- சமகம் என்ற பகுதியில்தான் சைவர்களின் தாரக மந்திரமான ‘ஓம் நம சிவாய’ வருகிறது. அதில் சிவன், பவன், ருத்ரன் முதலிய அத்தனை பெயர்களும் ஒரே இறைவனைக் குறிக்கிறது என்பது தெளிவாகிறது. தமிழ் தெரியாத வெள்ளைக்காரர்கள் சிவன் வேறு, ருத்ரன் வேறு என்று உளறிக்கொட்டினார்கள். ருத்திரன் என்பது வேத காலத்திலேயே இப்படி இரண்டு பெயர்களில் (ருத்ரன்- சிவன்)  என்று  பரவியது. தமிழிலும் சிவன் என்பது 1500 ஆண்டுகளுக்கு முன்னர்வந்த பெயர்தான். சங்க இலக்கியம், தொல்காப்பியயத்தில் சிவன் என்ற சொல் கிடையாது.  ரிக்வேதம் போலவே முக்கண்ணன்(திரயம்பகன்), நீல கண்டன் முதியன உண்டு. சுருங்கச் சொல்லின் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இடத்தலும் ஒரு பெயர் சிறப்பிடம் பெறுகிறது. இப்போதும் கூட பார்வதி தேவியை பகவதி முதல் பவானி வரை ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் வழி படுகிறார்கள்

இந்தப் புகழ் மிகு ருத்ரத்தில் கடவுளை– சிவ பெருமானை – பேஷஜ ம்,பிஷக் — மருந்து , மருத்துவன் என்று போற்றுகின்றனர்.

பிற்காலத்தில் வந்த விஷ்ணு ஸஹஸ்ர நாமம் முதலியவற்றிலும் பேஷஜம், பிஷக், வைத்ய என்ற சொற்களால் இறைவனைப் போற்றுகின்றனர். ஆயினும் ஆதி சங்கரர் போன்ற உரை ஆசிரியர்கள் பிறவி என்னும் நோய்க்கு — அதாவது மீண்டும் பிறவாத நிலைக்கு — மருந்து கொடுக்கும் டாக்டர் இறைவன் என்று உரை எழுதினார்கள். இதை ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களிலும் காண்கிறோம்.

xxxx

தமிழன் கண்ட பசிப்பிணி மருத்துவன்

தமிழ் நாட்டில் ஊர் தோறும் வைத்தியர்கள்/ மருத்துவர்கள் இருந்திருக்க வேண்டும். இதனால்தான் வள்ளுவனும் மருந்து என்று ஒரு அத்தியாயமே எழுதிவிட்டார். புறநானூற்றுப் புலவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடிய  பாடலில் பசிப்பிணி மருத்துவன் என்று சிறுகுடி பண்ணன் கிழானைப் பாடுகிறார்.

பசிப்பிணி மருத்துவன் இல்லம்

அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே — புறம் 173

என்று பாடுகிறார்.

xxx

மேலும் சில யஜுர் வேத கருத்துக்கள்

மனிதர்கள் மட்டுமன்றி பிராணிகளும் நலமுடன் வாழ வேண்டும் என்று யஜுர் வேதம் வேண்டுகிறது.

வயது முதிர்ந்தோர் வரை பிறந்த குழந்தைகள் வரை ந லமுடன் வாழவும் முனிவர்கள் வேண்டுகின்றனர்.

இந்திரன் என்ற சொல் ஆயிரத்துக்கும் மேலான இடங்களில் ரிக் வேதத்தில் மட்டுமே வருகிறது. அங்கு சுமார் 10,000 மந்திரங்கள்தான் . இது தவிர மற்ற மூன்று வேதங்களில் இன்னும் 10,000 மந்திரங்கள் உள்ளன. இந்திரன் என்றால் தலைவர், தலையாய சக்தி, இறைவன், மன்னன் என்ற பல பொருட்கள் உண்டு. தமிழிலும் கூட இறைவன், கடவுள் என்பதை மன்னனுக்கும் பயன்டுத்துகிறோம். இடி, மழைக்கு  அதிதேவதை இந்திரன். அவனுடைய மகன் மருத் Marut ; அதாவது காற்று , மின்னல் .மருத் என்னும் கடவுள் பற்றியும் பல துதிகள் உள்ளன. அவரையும் “கடல் , மலை மீதுள்ள மருந்துகளைக் கொண்டுவருமாறு வேத முனிவர்கள் வேண்டுகின்றனர். பிற்காலத்தில்  மாருதி என்னும் அனுமன் மருந்து கொண்டுவருவதற்கான பீடிகை போலும் இது!

—-subham—-

tags- பசிப்பிணி, மருத்துவன், டாக்டர், ருத்ரன், பேஷஜம், பிஷக், பிறவித் தளை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: