நிகழ்காலத்தில் வாழ்க! (Post No.10,567)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,567
Date uploaded in London – – 16 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

சம்ஸ்கிருதச் செல்வம் : சுபாஷிதம்

நிகழ்காலத்தில் வாழ்க!
ச.நாகராஜன்

கதே ஷோகோ ந கர்தவ்யோ பவிஷ்யம் நைவ சிந்தயேத் |
வர்தமானேன காலேன வர்தயந்தி விசக்ஷணா: ||

One should not lament over the past nor should one think about the future. The wise always live in the present;

கடந்த காலத்தைப் பற்றி ஒருவன் வருந்துவதோ அல்லது எதிர்காலத்தைப் பற்றி நினைப்பதுமோ கூடாது. அறிஞர்கள் நிகழ்காலத்திலேயே எப்போதும் வாழ்வர்.

*
அநுகூலே விதௌ தேயம் யத: பூரயிதா ஹரி: |
ப்ரதிகூலே விதௌ தேயம் யத: சர்வே ஹரிஷ்யதி ||

One should go on giving when fortune is favourable, because Lord is the supplier. One should give away even when fortune is not favourable, because (fate) is going to take away (everything).

அநுகூலமான காலத்தில் ஒருவன் இருக்கும் போது அவன் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் ஹரி தான் கொடுப்பவன். அநுகூலமில்லாமல் ப்ரதிகூலமாக காலம் இருக்கும் போதும் ஒருவன் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் விதி அனைத்தையும் எடுத்து விடப் போகிறது.
*
ஸ்தான ப்ரஷ்டா ந ஷோபந்தே தந்தா: கேஷா நகா நரா: |
இதி விஞாய மதிமான் ஸ்வஸ்தானம் ந பரித்யஜேத் ||

Teeth, hair, nails and men do not look graceful if they abandon their respective place. Knowing this a wise person should not leave his place.

பற்கள், தலைமுடி, நகம், மற்றும் மனிதர்கள் தங்களது உரிய இடத்தை விட்டு அகன்றால் சோபிக்க மாட்டார்கள். இதை அறிந்து புத்திசாலியான ஒருவன் தனது ஸ்தானத்தை விட்டு ஒரு போதும் அகலக் கூடாது.
(தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை என்ற திருக்குறளை இங்கு ஒப்பு நோக்கலாம். குறள் எண் 964)
*
பரோக்ஷே கார்யஹந்தாரம் ப்ரத்யக்ஷே ப்ரியவாதினம் |
வர்ஜயேத்தாத்யஷம் மித்ரம் விஷகும்பம் பயோமுகம் ||

One should abandon a friend who causes harm (to one’s work) behind one’s back and speaks sweet words in front of one, like a pitcher filled with poison, containing milk, only on the surface.

ஒரு குடத்தில் விஷத்தை நிரப்பி மேலே மட்டும் பால் இருப்பது போல, முன்னால் சிரித்த வண்ணம் இருந்து பின்னால் ஒருவனது வேலைக்கு தீங்கு இழைக்கும் நண்பனை ஒருவன் துறந்து விட வேண்டும்.
*
ருணஷேஷச்சாக்னிஷேஷ: சத்ருஷேஷஸ்ததைவ ச |
புன: புன: ப்ரவர்தந்தே தஸ்மாச்சேஷம் ந ரக்ஷயேத் ||

The debt that is left (unpaid), the remains of (unextinguished) fire, and the surviving enemies always grow again. Therefore the remains of such things should not be protected.

கொடுக்காமல் பாக்கி வைத்திருக்கும் கடனும், முழுவதுமாக அணைக்காமல் விட்டு விட்ட நெருப்பும், இன்னும் இருக்கும் எதிரிகளும் மீண்டும் வளர்ந்து விடுவர். ஆகவே மீதமிருக்கும் படி அவற்றை விட்டு விடக் கூடாது.
**

tags – சுபாஷிதம், நிகழ்காலம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: