பொறுமைக்கு உதாரணம் பூமாதேவி – தமிழன் கண்ட உண்மை (Post No.10,575)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,575

Date uploaded in London – –    18 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 11

பொறுமைக்கு உதாரணம் பூமாதேவி – தமிழன் கண்ட உண்மை

PATIENCE AND EARTH

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப்  பொறுத்தல் தலை –குறள் 151

அதர்வண வேத பாடல் / மந்திரம் 28 வரை கண்டோம். 63 மந்திரங்கள் உள்ள இந்த துதியில் இதோ 29-ஆவது மந்திரம் :-

மந்திரம் 29

விம்ருக்வரீம் ப்ருதிவீ மா வதாமிம் க்ஷமாம் பூமிக்கு ப்ரஹ்மணா வாவ்ருத்தானாம்

ஊர்ஜம் புஷ்டம் பிப்ரதிம்மன்னபாகம்  க்ருதம் த்வாபி  நி ஷீதேம பூமே -29

பொருள்

பொறுமையின் சின்னமே பூமியே! தூய்மை செய்பவளே! ஆன்மீக பலத்தால் வலு அடைபவளே ! சக்தி, வளம் ஆகியன உடையவளே ,  உணவையும் நெய் யையும் உடையவளே! உன் மீது உட்கார்ந்து ஓய்வு எடுக்கலாமா? 

இந்த மந்திரத்தில் பூமியின் பொறுமை போற்றப்படுகிறது. இந்த அற்புத விஷயத்தை இமயம் முதல் குமரி வரையுள்ள புலவர்கள் பாடியுள்ளனர். இது இந்துக்களின் சொந்தக் கண்டுபிடிப்பு.

எத்தனை வெட்டுகிறோம், எத்தனை தோண்டுகிறோம்; அப்படியும் அம்மாவை எட்டி உதயும் குழந்தை போல எங்களை அணைக்கிறாயே என்று இந்துக்கள் வியக்கின்றனர். ஆகையால் மீண்டும் மீண்டும் கும்பிடு போடுகின்றனர்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப்  பொறுத்தல் தலை –குறள் 151

பரிபாடல் என்னும் சங்க இலக்கிய நூலிலும் (2-55) இதே கருத்து வருகிறது

‘நோன்மை நாடின் இருநிலம் யாவர்க்கும்’ (உன்னுடைய பொறுமை நிலத்தைப் போன்றது)

சம்ஸ்க்ருதத்தில் எண்ணற்ற இடங்களில் வருகிறது

ரகு வம்சம் (18-9) என்னும் காவியத்தில் காளிதாசனும் க்ஷமா என்று பூமியைக் குறிப்பிடுகிறான்

XXX

WATER AND PURITY

மந்திரம் 30

சுத்தா ந ஆபஸ்தன்வே க்ஷரந்து ந யோ னஹ ஸேதுரப்ரியே தம் நி தத்மஹ

பவித்ரேண ப்ருதிவி மோது புனாமி –30

சென்ற பாட்டில் உள்ளது போலவே இங்கும் தூய்மை போற்றப்படுகிறது

  எங்கள் உடல் சுத்தம் டைய தூய நதி நீர் பெருக்கெடுக்கட்டும். எங் களை ஆக்கிரமிக்க நினைப்போர் விஷயத்தில் வாளாவிருக்க மாட்டோம். நான் என்னையும் சுத்தம் செய்து கொள்கிறேன்

இந்துக்களின் வாழ்வில் நீர் என்பது பிறப்பு முதல் இறப்புவரை தொடர்புடையது. அதை ரிக் வேதமும் மீண்டும் மீண்டும் விதந்து ஓதுகிறது ; ஆகையால் அவர்கள் தினமும் குளிக்கும் வெப்ப மண்டலத்தைச் TROPICAL zone சேர்ந்தவர்களே; குளிர்ப் பிரதேசத்திலிருந்து வந்தவர்கள் இல்லை.

Xxxx

STUMBLING BLOCKS

மந்திரம்/ பாடல் 31

யாஸ்தே ப்ராசீஹி ப்ரதிசோ யா உதீசிர் யாஸ்தே பூமி அதராத் யாஸ்ச பஸ்யாத்

ஸ்யோநாஸ்தா மஹ்யம் சரதே பவந்து மா நி  பப்தம் புவனே நிஸ்ரியாணஹ –31

பொருள்

உன்னுடைய கிழக்கு திசையில் வசிப்போரும் , வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் வசிப்போரும்

என்னிடம் இனிமை பாராட்டட்டும். அங்கு நான் இன்பமாக பயணிப்பேன் ஆகுக; இந்த உலகில் நான் வாழும் காலம் வரை தடுமாறக்கூடாது”.

இது மிகவும் பொருளுள்ள பாடல். கவச மந்திரங்களை போல நான்கு திசைகளில் இருந்தும் நன்மையே வந்தெய்துக என்று வேண்டிவிட்டு, ‘தடுமாறக்கூடாது என்று சொல்லுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1. இவ்வாறு நான் நாலு திசையிலும் செல்லும்போது உடல் ஆரோக்கியம் இருக்க வேண்டும்

2. உள்ளத்தில், செய்கையில், சொல்லில் தடுமாறக்கூடாது. அதாவது திரிகரண சுத்தி; மனம், மொழி, மெய் மூன்றிலும் தூய்மை இருக்க அருள்வாயாகுக. ஏற்கனவே சொன்ன தடுமாறக் கூடாது என்ற பதங்கள் மீண்டும் வருவதைக் கருத்திற்கொள்ள வேண்டும். ஒரு முறை, உடல் தடு மாற்றத்தையும் இரண்டாம் முறை, உள்ளது தடுமாற்றையும் மனதிற் கொண்டு பாடியிருப்பார் போலும் !

இதில் இன்னொரு சுவையான மொழி இயல் LINGUISTICS MATTER  விஷயமும் வருகிறது. பிராமணர்கள் தினமும் மூன்று முறை  செய்யும்  சந்தியா வந்தன மந்திரத்தில் அவர்கள் 4 திசைகளையும் நோக்கி மந்திரங்களைச் சொல்லுவார்கள்.அதிலும் பிராச்யை , தக்ஷிணாயை, பிரதீச்யை, உதீச்யை என்றே சொல்லி நமஸ்கரிக்கின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து திசை வழிபாடு இருக்கிறது. அதுமட்டுமல்ல ,

புறநானூற்றில் கூடலூர்க் கிழார் பாடிய அற்புதப் பாடல் வருகிறது (புறம் 229); சேர மன்னன் மாந்தரஞ் சேரல் இறக்கப்போவதை முன் கூட்டியே அறிவித்தது ஒரு எரி கல் . அதில் ‘பிராச்யை’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லை ‘பாசி என்றும்’ உதீச்யை என்ற சொல்லை ‘ஊசி’ என்றும் தமிழ் மயமாக்கியது வியக்கத்தக்க ஒன்று. கூடலூர்க் கிழார் சம்ஸ்க்ருத மன்னன்!!

அவர் தமிழ்ப்படுத்தினாலும் அது மற்றவர்களுக்கும் புரிந்து இருப்பது இமயம் முதல் குமரி வரை சம்ஸ்க்ருதம் புழங்கியதைக் காட்டுகிறது. மேலும் இதே பாட்டில் பங்குனி மாதம், மேஷராசி முதலிய விஷயங்களும் வருவதால் யவனர்களிடமிருந்து இந்துக்கள், நாள் கிழமைகளை கற்றுக்கொண்டனர் என்ற பொய்மை வாதம் தவிடு பொ டி ஆகிறது.

XXXX

பாடல் 32

மா நஹ பஸ்சான்மா  புரஸ்தான்னுதிஷ்டா மோத்தராத்தராதுத

ஸ்வஸ்தி பூமே நோ பவ மா விதன் பரிபந்தினோ வரீயோ யாவயா வதம் –32

பொருள்

மேற்கு திசையில் இருந்தோ கிழக்கு திசையில் இருந்தோ எங்களைத் தள்ளாதே; வடக்கு, தெற்கு திசையில் இருந்தோ எங்களைத் தள்ளாதே”.

பூமாதேவியே எங்களிடம் கருணை காட்டு; வழிப்பறி செய்யும் கொள்ளையர் எங்களைக் காணாமல் போகட்டும்; அதி பயங்கர ஆயுதங்களை எங்களிடமிருந்து தொலைவில் வைப்பாயாகுக –32

கிட்டத்தட்ட சென்ற பாடல் போன்றதே. திசைகளைத் தவிர வழிப்பறி கொள்ளையரும் வருகின்றனர் இது பழங்கால இந்தியாவின் நிலையைக் காட்டுகிறது மஹாபாரதத்தில் தமயந்தி சென்ற வழியில் கொள்ளையர் நடத்திய தாக்குதல் விரிவாக உள்ளது. சங்கத் தமிழ் நூல்களில் வழிப்பறி கொள்ளையர் வருகின்றனர். இப்போதும் கடற்கொள்ளையர்கள் கப்பல்களைக் கடத்திச் சென்று கொள்ளை அடிப்பதை பத்திரிக்கையில் படிக்கிறோம்.; ஆயுதமற்ற அமைதியான சமுதாயத்தை வேண்டுவதும் இப்பாடலின் அச்சிறப்பே.

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் என்று பாரதிதாசன் பாடினார் . காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் எழுதிய ஸம்ஸ்க்ருதக் கவிதையை எம்.எஸ். சுப்புலட்சுமி, ஐக்கிய நாடுகள் சபையில் பாடியதால் அது உலகம் முழுதும் ஒலிபரப்பாகியது . உலக நட்புடன் துவங்கும் அந்த மைத்ரீம் பஜத பாடல் யுத்தம் த்யஜத   என்ற வரிகளுடன் முடிகிறது . ‘போர் செய்வதைக் கைவிடுங்கள்’ என்ற அவ்வரிகளின் SOURCE ‘மூலம்’ வேதத்தில் உள்ளது. அதர்வண வேதத்தில் ஆயுதங்கள் தொலைவில் ஒழியட்டும் என்ற வரிகள் உள்ளன..

இமயம் முதல் குமரி வரை நம் சிந்தனை ஒன்றே.

TO BE CONTINUED…………………

TAGS- பூமி, பொறுமை, அகழ்வாரை , பூமிஸூக்தம்-11

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: