விருக்ஷ தேவி துளஸி கௌடாவிற்கு பத்ம ஸ்ரீ பட்டம்! (Post No.10583)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,583
Date uploaded in London – – 21 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன்

2021 ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்களுள் கர்நாடகாவைச் சேர்ந்த துளஸி கௌடாவும் ஒருவர்.

அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் இவரைப் பற்றிய செய்திகள் சுவையானவை; ஆச்சரியகரமானவை.
உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஹளகி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ஹொன்னளி என்ற கிராமத்தில் வாழ்பவர்.
இவருக்கு இப்போது வயது 72.

அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து பத்ம ஸ்ரீ விருதைப் பெற்ற போது கர்நாடகா மட்டும் மகிழவில்லை; இந்தியாவே மகிழ்ந்தது.

30000 மரங்களை அவர் இதுவரை நட்டிருக்கிறார்!
மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளிட்ட தாவர வகைகளில் இவரது ஞானம் அபாரமானது.

காடு பற்றிய என்சைக்ளோபீடியா இவர்.
ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தனது கணவனை 17ஆம் வயதிலேயே இழந்து விதவையானார்.
பின்னர் தன்னார்வலராக வனத் துறையில் சேர்ந்தார். சில காலம் கழித்த பின்னர் இவரது வேலை வனத்துறையால் உறுதிப் படுத்தப்பட்டது.

அறுபது ஆண்டுகளாக 30000 மரங்களை இவர் நட்டிருக்கிறார்.
நீரின் தரம் அதிகரிக்க வேண்டுமா, நீர் வளம் சிறந்து இருக்க வேண்டுமா அப்போது மரங்கள் அதிகமதிகம் தேவை என்பதே இவரது தாரக மந்திரம்.
அதே போல மண் வளம் சிறக்கவும் காடுகளே காரணம் என்கிறார் இவர்.

சுற்றுப்புறச் சூழல் சிறக்கவும், காற்றின் நச்சுத் தன்மை நீங்கி அது சுத்தமாக இருக்கவும் காடுகள் இன்றியமையாதது என்று கூறும் இவர் மரங்களின் பால் அலாதி அன்பு கொண்டவர்.


தினமும் நூற்றுக் கணக்கான மரங்களை அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் வெட்டித் தள்ளுகிறோம். அதே அளவோ அதற்கு அதிகமாகவோ மரங்களை நட்டு வளர்க்க வேண்டியது நமது தலையாய கடமை அல்லவா என்று கேட்கிறார் இவர்.
மரங்களின் பால் இவர் கொண்டுள்ள அன்பைப் பார்த்த மக்கள் இவருக்கு ‘விருக்ஷ தேவி’ என்ற செல்லப் பெயரைச் சூட்டி அழைக்கின்றனர்.

இவர் பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பதிவில் குறிப்பிட அதை அனைத்து மக்களும் வரவேற்றனர்.

8-11-2021இல் இவர் பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றார்.
நமது நாடு அதிகம் துளஸிகளை வேண்டி இருக்கும் தருணத்தில் முன்னோடியாக இருந்து அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் இவரைப் பாராட்டிப் போற்றுவது அனைவரின் கடமையாகும்!

tags- துளஸி கௌடா


Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: