WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,618
Date uploaded in London – – 1 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சகத்வீபம் என்பது ஈரான் நாடா? சங்க இலக்கியத்தில் மர வழிபாடு -2
நேற்றைய கட்டுரையில், ஏழடுக்கிய பாலை பற்றி பரி பாடலிலும் காளிதாசனின் ரகு வம்சம் மற்றும் சாகுந்தலம் நாடகத்திலும் கண்டோம் . அதே போல ஏழிலைகள் கொண்ட சிற்பங்களை கி.மு 900 அஸீரிய நாகரீகத்தில் கண்டோம். மூன்றிலும் புனிதத் தன்மை உளது.
இதோ மேலும் சில மரம் விஷயங்கள்
காளிதாசன் நூல்கள்
மேக தூதம் 25- கிராம சதுக்கத்தில் புனித அரச மரம்:_
காளிதாசன், மேகத்தை தனது காதலி இருக்கும் இடத்திற்கு தூது அனுப்புகையில் குறுக்கிடும் தசார்ணம் என்னும் நாடு பற்றி வருணிக்கிறான் . அங்கே தினமும் இல்லத்தரசிகள் வழங்கும் பலி உணவினை காக்கைகள் உண்டுவிட்டு பெரும் ஆரவாரத்துடன் கூடு கட்டும் காலம் இது. கூடுகள் கிராம சைத்யங்களில் இருக்கும்.
இதற்கு உரைகாரர்கள் எழுதிய பாஷ்யத்தில் மேடைகள் அமைக்கப்பட்ட மரங்களென்றும் ஆல் , அரசு முதலியவற்றைச் சுற்றி இப்படி மேடை அமைப்பர் என்றும் உள்ளது
இதே பாட்டில் அன்னப் பறவைகள் மானஸ ஏரியை நோக்கிப் பறக்கும் காட்சியும் உள்ளது. பறவைகள் குடியேற்றம் பற்றிய கட்டுரையில் புறநானுற்றுப் புலவரும் இது பற்றிப் படியுள்ளதை முன்னரே எழுதியுள்ளேன் (புறம் 67)
xxx
ரகு வம்சம் 17-12 பல்வேறு மரம் செடி கொடிகளுடன் அபிஷேகம் :–
மன்னன் அரியாசனத்தில் அமர்ந்தபோது அறுகு , யவ தானிய முளை , ஆலம் பட்டை, இளம் தளிர் இவைகளை வைத்து ஆரத்தி எடுத்ததாகவும் உரைகாரர்கள் கூறுவார்கள்.
“புற்களில் அரசன் அருகம் புல் ; அது போல நீயும் சிறந்த அரசனாகுக” என்று பட்டமேற்கும் சம்ஸ்க்ருத மந்திரங்கள் கூறுகின்றன. ஆகவே பட்டமேற்கும் மன்னர்கள் அருகம்புல் மீது கால் வைத்த ஏறினார்கள் என்ற அரிய செய்தியை தொல்பொருட் துறை பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி ‘யாவரும் கேளிர்’ என்ற அவரது நூலில் கூறுகிறார். இது 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வழக்கம் என்பது காளிதாசன் மூலமாகவும் நமக்கு கிடைக்கிறது.
சாகுந்தலத்தில் சகுந்தலா எப்படியெல்லாம் மரங்களைப் போற்றி வளர்க்கிறாள் என்றும் காளிதாசன் காட்டுகிறான்
XXX
வட இந்தியா முழுதும் வட சாவித்திரி விரத த்தின்போது இன்றும் பெண்கள் ஆலமர வழிபாடு செய்கின்றனர்
சங்க இலக்கிய நூல்கள்
புற நானூறு 198- வ.வ . பேரி சாத்தன் — ஆலமரக் கடவுள்
புற நானூறு 199 – மகா பத்மன் – கடவுள் ஆலம்
“காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம்
வேல் கெழு குருசில் “
பெரும்பதுமனார் பாடிய அடுத்த பாடலில் ,
“கடவுள் ஆலத்துத் தடவுசினைப் பல் பழம்
நெருநல் உண்டனம் என்னாது பின்னும்” …..
என்று பாடுகிறார்.
ஜல்லிக்கட்டுக்கு வரும் யாதவ குல இளைஞர்கள் ஆலம் , மரா மரங்களின் கீழ் உறையும் தெய்வத்தை வணங்கிவிட்டு வந்ததாக முல்லைக் கலி பாடிய நல்லுருத்திரனார் பாடுகிறார்
Xxxx
குறுந்தொகை 87- கபிலர் பாடியது — மரத்திலுள்ள கடவுள் கொடியோருக்கு துன்பம் கொடு ப்பார்.
கபிலர் பாடிய குறுந்தொகைப் பாடலில்
“மன்ற மரா அத்த பே எ முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூ உ மென்ப யாவதும்
கொடியரல்ல ரெங்குன்று கெழு நாடர்” — பாடல் 87
என்பார்
பொருள்-
பொது இடத்தில் மரத்தின் கண் தங்கும் அச்சம் ஊட்டும் கடவுள் கொடுமையுடையாரை வருத்தும் என்று அறிந்தோர் கூறுவர்
கலித்தொகை 101-14/15 மற்றும் பரிபாடல் 8-65/68 வரிகளில் கடவுள் வசிக்கும் மரங்கள் வருவதைக் காணலாம்
அக நானூறு 70- கடுவன் மள்ளனார் பாடல் – ஆல மரத்தின் கீழ் அமர்ந்து இராம பிரான் ,வானர என்ஜினீயர்களுடன் கடல் மீது பிரிட்ஜ் கட்டுவது பற்றி ஆலோசனை.
xxx
நற்றிணை 83- மகாதேவன்பாடல்- கடவுள் முதுமரம்
நற்றிணையில் பெருந்தேவனார் பாடிய பாடலில் கூகையை நோக்கி ஒரு பெண் பாடுவதாக அமைந்துள்ளது. கடவுள் உறைகின்ற பருத்த மரத்தின் மீது இருக்கும் ஆந்தையே இரவில் குரல் எழுப்பி எல்லோரையும் எழுப்பிவிடாதே என்கிறாள் . இவ்வாறு கடவுள் வசிக்கும் மரம் என்ற கருத்து நெடுகிலும் காணப்படுகிறது .
சம்ஸ்க்ருத நூல்களிலும் இக்கருத்து உளது
இது தவிர நாணயங்களில் ‘மேடை அமைக்கப்பட்ட மரம்’ உள்ளது
சிற்பங்களிலும் மரங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. பகவத் கீதையில் 15-1ல் வரும் அஸ்வத்த/ அரச மரம் பற்றிய உவமை எல்லோரும் அறிந்ததே 99ஊர்த்வமூலம் அதஸ் சாகம………………..
இவற்றிலிருந்து நாம் அறிவது என்ன ? மரங்களில் கடவுள் உறைவர் ; அவர்கள் தீயோரைத் தண்டிப்பர் ; மரங்களில் உள்ள தெய்வங்கள் வணங்குதற்குரியர் என்ற கருத்துக்கள் காளிதாஸனிலும் சங்க இலக்கியத்திலும் காணக்கிடக்கிறது
–subham—
tags- சங்க இலக்கியத்தில், மர வழிபாடு,
Kannan B
/ February 2, 2022மிக நன்ற ஆராய்ச்சி க் கட்டுரை. இந்த மர வழிபாட்டைப் பற்றியத் தகவல் ஹர்ஷதேவர் எழுதிய சிருங்கார சம்ஸ் கிருத நாடகம் ரத்னாவளியிலும் வருகிறது. முதன்முதலாக ஹோலி பற்றிய விரிவான வர்ணனை முதலாம் அங்கத்திலேயே இடம் பெறுகிறது. காமதேவன் வழிபாடு எப்படி அசோக மரத்தின் கீழ் நடத்தப்படுகிறது என்பதையும் அறியமுடிகிறது. ஒவ்வொரு மரத்தையும் எப்படிப் பெண்கள் “வழிபட்டால்” பூ பூக்கும், காய் காய்த்துப் பலனளிக்கும் என்பதும் விவரிக்கப் படுகிறது.
இவ்விவரம் உபயோகமாய் இருக்கும் என நம்புகிறேன்.
நன்றி.
B.Kannan
Delhi
Tamil and Vedas
/ February 2, 2022THANKS. VERY USEFUL INFORMATION. IF U HAVE THE COPY, PLEASE WRITE AN ARTICLE FOR OUR BLOG. IF NOT I WILL GET THE BOOK FROM THE LIBRARY AND COLLECT THE DETAILS.
Kannan B
/ February 2, 2022I have the original text with translation, commentary by M.R.Kale, Pune.
I will write surely. Just we are recovering from Omicron. I will sart in a few day’s time.
Kannan
Tamil and Vedas
/ February 2, 2022THANKS.