பெண்கள் எட்டு வகை ; அறிந்து கொள்க (Post No.10,641)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,641

Date uploaded in London – –    8 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பருவம் அடைந்த பெண்களை 4 வகைககளாகவும், ஏழு வகைகளாகவும் பிரிப்பது பற்றி முன்னர் சில கட்டுரைகள் எழுதினேன். ஆனால் எட்டு வகையான பெண்கள் உண்டு என்ப தற்கு நாட்டிய சாஸ்திரம் முதலான நூல்களில் தகவல் கிடைக்கிறது.

இதோ எட்டு வகைப் பெண்கள்

பரத முனிவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்க்ருத மொழியில் எழுதிய நாட்டிய சாஸ்திரத்தில் 24 ஆவது அத்தியாயத்தில் எட்டு வகை கதா நாயகிகளை அஷ்ட நாயிகா (ASHTA NAYIKA) என்ற பெயரில் விளக்குகிறார்.

1.வாசகஸஜ்ஜா — கணவனுடன் இணைய அலங்காரம் செய்துகொண்டு தயாராக இருக்கும் பெண்மணி

2.விரஹோத கண்டிதா – பிரிவுத் துயரில் விரக தாபத்துடன் உள்ள பெண்

3. சுவாதீன பத்ரிகா – கணவனை த ன்  கைப்பிடிக்குள் வைத்திருக்கும் பெண்

4.கலஹாந்த்ரிதா – கணவனுடன் சண்டையிடும் பெண்

5.கண்டிதா – கணவன் போக்கால் கஷ்டப்படும் பெண்

6.விப்ரலப்தா – கணவனால் விலக்கப்பட்ட பெண்

7.ப்ரஸீத பத்ரிகா – வெளிநாடு சென்ற கணவருக்காக காத்திருக்கும் பெண்

8.அபிசாரிகா – கணவன் அல்லது காதலனை நோக்கி வலியச் செல்லும் பெண்

இந்த எட்டு வகைகளுக்கும் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை முதலிய அகத்திணை நூல்களில் நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன.

XXXXXX

பகவான் கிருஷ்ணருக்கு எட்டு மனைவிகள் இருந்ததாக பாகவத புராணம் கூறுகிறது .

கிருஷ்ணனின் எட்டு மனைவியர் பெயர்கள் –

ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ரவிந்தா, யாக்ஞஜித், பத்ரா , லட்சுமணா.

XXXX

இந்திரலோகத்திலும் அவனுக்கு மிகவும் நெருக்கமான எட்டு பெண்கள் இருந்தனர்; அவர்களின் பெயர்கள் பின் வருமாறு :–ஊர்வஸி , மேனகா , ரம்பா, பூர்வசிதீ , ஸ்வயம்ப்ரபா ,பின்னகேசி , ஜனவல்லபா ,க்ருதாசி /திலோத்தமா).

XXX

காமசாஸ்திரத்தில் அஷ்டநாயிகா பெயர்களை சிறிது மாற்றியிருக்கிறார்கள். ஒரே பெண்ணுக்கு இரண்டுவிதமான பெயர்கள் இருந்தது இதற்காக காரணமாக இருக்கலாம்.

சம்ஸ்க்ருத நாடகங்களிலும் இந்த வகைப் பெண்கள் சித்தரிக்கப்படுகின்றனர்

பிற்காலத்தில் அபிசாரிகா போன்ற சொற்கள் உண்மைப் பொருளை இழந்து வேசி/ அவிசாரி  என்னும் கீழ்த்தரத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது ; பழங்காலத்தில் தடைகளையும் மீறி துணிவுடன்  காதலனை நாடி ஓடும் பெண் என்ற நல்ல பொருளே இருந்தது.

TAGS- எட்டு வகை, பெண்கள், கிருஷ்ணர், எட்டு மனைவி, பெயர்கள், இந்திர லோகம்

XXX

OLD ARTICLES IN THIS BLOGபெண்கள் வகை | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

· 

10 Oct 2019 — 23 Jun 2012 – Tagged with பெண்களின் ஏழு வகைகள் … பெண்கள் எத்தனை வகை? … நாயிகா: கணவனை தன் …பெண்களின் ஏழு வகைகள் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

· 

23 Jun 2012 — பெண்கள் எத்தனை வகைபெண்களை வடமொழி வித்தகர்கள் நாலு வகையாகவும், பரத சாஸ்திர …பெண்கள் 4 வகை | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

18 May 2019 — தங்கம் 4 வகைபெண்கள் 4 வகை, பிரளயம் 4 வகை! … ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)).பெண்கள் 4 வகை- நாட்டிய சாஸ்திரக் கூற்று! (Post …

https://tamilandvedas.com › பெ…

·

10 Oct 2019 — 18 May 2019 – தங்கம் 4 வகைபெண்கள் 4 வகை, … ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)).

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: