ஞானப் படகு, ஞான விளக்கு,  ஞானத் தீ,  ஞானக் கண் , ஞான வேள்வி , ஞானத் தவம் (Post.10,648)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,648

Date uploaded in London – –    10 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞானப் படகு ஞான விளக்கு  ஞானத் தீ  ஞானக் கண் , ஞான வேள்வி , ஞானத் தவம் 

பகவத் கீதையை ஆத்ம ஞானத்திற்காக படிப்பது அவசியம். அதற்குப் பின்னர் அதிலுள்ள இலக்கிய நயத்துக்காகவும் படிக்கலாம். கிருஷ்ணன் போர்க்களத்தில் பேசினாலும் தெளிவாக உவமைகளுடன் பேசுகிறார். ஆனால் போர் துவங்குவதற்கு முன்னர்தான் இந்த சம்பாஷணை நடந்தது .

நமக்கு ஒரு சந்தேகம் வரும். முதல் அத்தியாயத்திலேயே தாரை தம்பட்டைகள் முழங்கின ; போர் முரசுகள் ஒலித்தன. அவரவர் கையிலுள்ள சங்குகள் ஊதின . அதையும் கூட முதலில் செய்தவர்கள் துரியோதனாதிகள்தான். அப்படி இருக்க, 700 ஸ்லோகம் உடைய 1400 வரிகள் உடைய உரையாடல் நடந்திருக்குமா? அப்போது எதிர்த் தரப்பினர் என்ன செய்திருப்பார்கள் என்றெல்லாம் நாம் எண்ணலாம். உண்மையில் வருணனைகள்- குறிப்பாக விஸ்வரூப தரிசன வருணனைகள் –முதலியவற்றை நீக்கிவிட்டால் பேசிய பகுதி இன்னும் குறைவே. அதிலும் திரும்பத் திரும்ப சொன்ன கருத்துக்கள் எல்லாம் சஞ்சயன் வாயிலாக வந்து வியாசர் எழுத்தில் பொறிக்கப்பட்டபோது கொஞ்சம்  கூடுதலாகத்தான் வரும்.

உங்கள் நண்பர்களுடன் டெலிபோனில், WHATSAPP வாட்ஸப்பில் அரைமணி நேரம் பேசுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே ரிக்கார்ட் RECORD  செய்து எழுதிப்பாருங்கள். அரை மணி நேர பேச்சு அரை பகவத் கீதை அளவுக்கு வந்து விடும்!!!

ஞானம் என்னும் சொல்லுடன் பல சித்திரங்களை சேர்த்து, கிருஷ்ணன் விளக்குகிறார்.; இதோ ஒரு சின்ன பட்டியல் :-

பகவத் கீதை அத்தியாய எண்களும் ஸ்லோக எண்களும் பின்வருமாறு

ஞானப் படகு – 4-36

ஞான விளக்கு- 10-11

ஞானத் தீ – 4-3, 19

ஞானக் கண் – 15-10

ஞான வேள்வி – 4-33; 9-15; 18-70

ஞானத் தவம்  – 4-10

ஞான யோகம்- 3-3; 16-1

அது சரி போர் முழக்கம் செய்தாகிவிட்டது; இரு தரப்பும்; பின்னர் கிருஷ்ணனும் அர்ஜுனனும் பேசிக்கொண்டு இருக்கையில் எதிர் தரப்பில், SUSPENSE சஸ்பென்ஸ் வந்திருக்காதா ? அல்லது SUSPICION ஸஸ்பிஷன் / சந்தேகம் ஆவது வந்திருக்காதா என்று நாம் எண்ணலாம். பழங்காலத்தில் நடந்தது தர்ம யுத்தம்; எதிரி கையில் ஆயுதம் எடுத்தால்தான் அவனுடன் சண்டை போடுவர்; அவர்கள் வேடிக்கை பார்க்கையிலோ, தண்ணீர் குடிக்கையிலோ தாக்க மாட்டார்கள். ஆக அர்ஜுனனும் அவனது சகோதரர் நால்வரும் ஆயுதம் எடுக்காதவரை துரோணரோ பீஷ்மரோ சண்டையை துவக்க மாட்டார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கண்ணன் விடுவதாக இல்லை; நம்ம ஊரில் அரசியல் மேடைகளில் எவர் கையிலாவது MIKE மைக் கிடைத்தால் எப்படி அவர் முதுகைத் தட்டி உட்கார வைக்கும் வரை பேசுவாரோ அப்படி கிருஷ்ண பரமாத்மாவும் .வெட்டி முழக்கு கிறார் ; ஆயினும் கூட நம்மவூர் சிறந்த பேச்சாளர் போல சில, பல உவமைகளை உருவகங்களையும் அள்ளி  வீசுகிறார்.

பகவத் கீதை அத்தியாய எண்களும் ஸ்லோக எண்களும் பின்வருமாறு

ஞானப் படகு – 4-36

ஞான விளக்கு- 10-11

ஞானத் தீ – 4-3, 19

ஞானக் கண் – 15-10

ஞான வேள்வி – 4-33; 9-15; 18-70

ஞானத் தவம்  – 4-10

ஞான யோகம்- 3-3; 16-1

ஒரு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் பார்ப்போம்

மனிதனும் கடவுள் ஆகலாம்.; ஆசை, பயம், கோபம் இல்லாமல் என்னைச் சரண் அடைந்தவர்கள் என் மயமாகி விடுவர் ;இந்தஞானத் தவத்தால் அவர்கள் பரிசுத்தமானவுடன் என்னை போல ஆகி விடுவார்கள் கோபமே இல்லாமல் வாழ்வது ஒரு தவம்; ஆசையே இல்லாமல் வாழ்வதும் ஒரு தவம்; பயமே இல்லாமல் வாழ்வதும் ஒரு தவம். இவைதான் ஞானத் தவம்; கையில் கால் பணம் தேவை இல்லை; இதை யாரும், எந்த ஜாதியினரும், மதத்தினரும், கடவுள் நம்பிக்கையே இல்லாதவரும் கூட இதைக் கடைப்பிடிக்கலாம். வள்ளுவனும் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்கிறார்.

ரிக் வேதமும் கூட ‘வித்வான் அம்ருத இஹ பவதி’ என்று புருஷ சூக்தத்தில் சொல்கிறது .

பாரதி பாடல் நெடுகிலும் கீதையின் தாக்கத்தைக் காணலாம். அவரும் ‘ஞான வாள்’ முதலியன பற்றிப் பாடுவதோடு எல்லோரும் அமர நிலையை அடையும் நிலையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என்று மூன்று முறை உறுதிபடக் கூறுகிறார்.

4-19ல் கண்ணன் ஞானத் தீயில் ஆசைகளைப் பொசுக்கினவனை மக்கள் பண்டிதர்கள்/ அறிவாளிகள் என்று அழைப்பர் என்கிறார்.

4-27ல் ஞான தீபம் பற்றி உவமிக்கையில் அறியாமை என்னும் இருள் அகன்றால் இந்திரியங்கள் செய்யும் தொழில்களை வேள்வியில் பொசுக்கலாம் என்று சொல்கிறார்.

தீயில் மந்திரம் சொல்லி ஆஹுதி கொடுப்பது மட்டுமே வேள்வி என்பதல்ல. குணங்களைக் கடைப்பிடிப்பதும் ஒரு வகை வேள்வியே.

இந்து மாதத்தில் பாவ மன்னிப்பு உண்டு. பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் கூட இதற்கான மந்திரத்தை உச்சரிக்கிறார்கள்.; பாவிகளுக்குள் கொடும்பாவியாக ஒருவன் இருந்தாலும் கூட ஞானம் என்னும் படகினால் அந்த பாவ நதியைக் கடந்து விடலாம் என்று 4-36 ல் பகர்கிறார். ஆக ஒரே நாலாம் அத்தியாயத்தில் கண்ணன் ஞானம் என்னும் சொல்லை வைத்து சிலம்பம் ஆடுகிறார் என்றே சொல்லவேண்டும்.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் கூட தங்கள் பாடல்களில் இறைவனை  ஞான விளக்கு, தீபம்  என்று பாடிப் பரவியுள்ளனர்!

(ஞான) சக்ஷு = கண், ப்லவ = படகு, தீப = விளக்கு, அக்கினி = தீ, தபஸ்= தவம்

–SUBHAM

tags- ஞானப் படகு, ஞான விளக்கு , ஞானத் தீ,  ஞானக் கண் , ஞான வேள்வி , ஞானத் தவம் , பகவத் கீதை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: