100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 2 (Post No.10,649)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,649
Date uploaded in London – – 11 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘ஹெல்த்கேர்’ சென்ற இதழ் கட்டுரையின் தொடர்ச்சி..
100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 2
ச.நாகராஜன்
(26 முதல் 55 முடிய)

 1. புரிந்து கொள்ளுங்கள் :
  மற்றவர்களின் உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்; புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு தனித் திறனாகும்.
  இந்தத் திறனை உங்களை மூளை எளிதாகக் கற்க முடியும். இதனால் மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்று ஒரு தனித் திறனைப் பெற்றவர்கள் ஆவீர்கள்.
 2. குழுவாகச் சிந்தியுங்கள். ஒரு குழுவாக அமைந்து ஒரு பொருளைப் பற்றிச் சிந்திக்கும் போது பல்வேறு யோசனைகளும், கருத்துக்களும் உருவாகும். இது சிந்தனையில் ஊக்கப்படுத்தும் ஒரு புதிய மூளை ஆற்றலைக் கூட்டுவதற்கான, படைப்பாற்றலை அதிகப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்.
 3. உங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கட்டுரை வடிவத்தில் எழுதுங்கள்.
  எழுதுவது என்பது நினவாற்றலை அதிகப்படுத்தும். அத்துடன் எண்ணங்களை சரியான முறையில் வெளிப்படுத்த வழி வகுக்கும். ஒரு பொருள் பற்றி அகலமாகவும் ஆழமாகவும் சிந்திக்க,
  எழுதுவது ஒரு சிறந்த வழியாகும். டயரி, அல்லது இணைய தள ப்ளாக்குகள் அல்லது பத்திரிகைகளுக்கு எழுதுவது என்பது மூளை ஆற்றலைக் கூட்டும். கதைகள் எழுத ஆரம்பித்தால் ஒரு புதிய மட்டத்திற்கு உயரலாம்.
 4. ஹிப்நாடிக் யோசனை என்பது பொய் அல்ல; நிஜம் தான். தனக்குத் தானே ஆழ்நிலை ஹிப்னாடிஸத்தைக் கொண்டால், அது மன அழுத்தத்தை நீக்கும். வலியைத் தாங்கும் தன்மையை அதிகரிக்கும். சிந்தனையைத் தெளிவாக்கும். இந்தச் சிறந்த வழியை மேற்கொண்டு பார்த்தால் நல்ல பலன் தெரியும்.
 5. 14வது யோசனையாக தொலைக்காட்சியைப் பாருங்கள் என்று தரப்பட்டுள்ளது. உண்மை தான், அதைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் தேவைக்கு அதிகமாக அதற்கு விடாப்பிடி ‘அடிக்ட்’ ஆக ஆகி தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தால் ஆபத்து தான். மூளை வேலை செய்வது மிக மெதுவாகும். மூளைத் திறனைக் குறைக்கும். ஆகவே ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிச்சயமாகத் தொலைக்காட்சியைப் பார்க்காதீர்கள்.
 6. 22வது யோசனையாக ஓவியம் வரையுங்கள் என்று சொல்லப்பட்டிருகிறது. ஓவியம் என்பதை வெறும் பென்சிலால் கூட வரையலாம். ஆனால் நல்ல வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து தூரிகை வைத்து வரைவது சிறப்பாகும். இது படைப்பாற்றலை ஊக்குவிக்கும். வலது பக்க மூளையை முழு ஆற்றலுடன் பயன்படுத்த வண்ண ஓவியம் வரைவதே வழி.
 7. அழுவதில் தவறில்லை. சோக நிகழ்ச்சி ஏற்பட்டால் என்ன செய்வது? தவிர்க்க முடியாத சோகத்தில் உணர்ச்சிகளை வடிகாலாக வெளிப்படுத்தி அழுது விட்டால் மனம் ஆறுதல் அடையும். மூளையில் இரத்த ஓட்டம் ஆரோக்கியத்துடன் பாயும். உண்மையில் பல நிலைகளில், அழுவது மூளையை உள்புறமாக சுத்தப் படுத்துவதாகும். இது மூளை ஆற்றலைக் கூட்டும்.
 8. புதிர்களை விடுவியுங்கள்.
  புதிர்களை விடுவிப்பது மூளை இயக்கத்தை ஊக்குவிக்கும் ஒன்றாகும். சிந்தனைக்குச் சவாலாக வேடிக்கையாக அமையும் புதிர்கள் மூளையின் இடது பக்க இயக்கத்தை ஊக்குவிக்கிறது. வலது பக்க காட்சிப்படுத்தும் மையத்திற்கு இது தகவலைப் பரிமாறுகிறது.
 9. நியூரோ ஃபீட்பேக் (neurofeedback) என்பது உங்கள் மூளை அலை அமைப்பை கட்டுப்படுத்துகிறது. இது மூளை அமைப்பை கட்டுமானம் செய்வதோடு மூளை நெட் வொர்க்கை நெகிழ்வடையச் செய்கிறது. இந்தக் கலையைக் கற்பதற்குச் சற்று செலவாகும் என்பது ஒரு உண்மை!
 10. நான் என்னும் அகங்காரத்தை விட்டால் அது அந்த அகங்காரத்துடன் சேர்ந்து வரும் உணர்ச்சிகளை உதறித் தள்ளுவதாகும். உடன் விளைவாக ஏற்படுவது பகுத்தறிவுடன் ஆராயும் முனைப்பான அறிவு நமக்குள்ளே புகுவது தான்.
  பகுத்தறிவோ தன்னை உணர வழி வகுக்கும். அதாவது எதிர்காலம் பற்றிய சரியான கணிப்பைக் கொண்டு மூளையை ஆரோக்கியத்துடன் வைத்து நல்ல முடிவுகளை எடுக்க வழி வகுக்கும்.
  தியானம், சுய ஹிப்னாடிஸம், உள்ளார்ந்து விசாரம் செய்வது இவை எல்லாமே சுய விழிப்புணர்வூட்டுவதற்கான வழிகளாகும்.
 11. கல்லூரியிலோ பள்ளியிலோ படிப்பவர் என்றால் அநதப் படிப்பு மூளை ஆற்றலைக் கூட்ட வல்ல ஒரு வழியாகும். பள்ளி, கல்லூரியில் படிக்கவில்லை என்றாலும் எப்போதுமே எதையாவது கற்றுக் கொண்டே இருக்கலாமே!
 12. சதுரங்க விளையாட்டு – செஸ் – மனதின் ஆற்றலை – மூளை ஆற்றலைக் கூட்டும் ஒரு விளையாட்டூ ஆகும். பல விதத் திறன்களை இதன் மூலம் பெறலாம்.
 13. சிற்பக் கலை: எதையேனும் சிற்ப அடிப்படையில் செய்வது புதிய திறன்களை வண்ணத்திலும் வடிவத்திலும் ஏற்படுத்தும். இது, படைப்பாற்றலை ஊக்குவித்து இடம், அமைப்பு, பகுத்துப் பார்த்து முடிவு எடுப்பது ஆகியவற்றில் முன்னேற்றத்தை நல்கும்.
 14. சைக்காலஜி டு டே என்ற பிரசித்தி பெற்ற உளவியல் இதழ் ஆராய்ச்சிக் கட்டுரை சுவையான தகவல் ஒன்றைத் தருகிறது. தனது மரபு பற்றி அறிவோர் மூளைத் திறன் பற்றிய சோதனைகளில் முதல் இடத்தைப் பெறுகின்றனர். இதன் காரணம் சரியாகத் தெரியவில்லை என்றாலும் முன்னோர் மரபு பற்றி அறிவோர் தற்காலத்திய நடப்பை நன்கு அறிபவர்கள் ஆகின்றனர்.
 15. நல்ல ஒரு விவாதம், பேச்சு மூளை ஆற்றலைக் கூட்டுகிறது என மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் கூறுகின்றனர்.
 16. எதையும் எப்போதும் ஒரே மாதிரியாகச் செய்து கொண்டே இருக்காமல் சில செயல்களை தன்னிச்சையாக அப்போதே வேறு மாதிரியாகச் செய்து பாருங்கள்.
 17. நல்ல உடல் பயிற்சி மூளைக்கு நல்ல ரத்த ஓட்டத்தைத் தருகிறது. அதற்கான ஆக்ஸிஜன் அப்போது கிடைக்கிறது. ஆகவே அதிக சக்தி கிடைக்கிறது. சிந்திக்கும் ஆற்றல் கூடுகிறது. அப்போது மூளைக்குப் பெரிதும் தேவையான Human Growth Hormone சுரக்கிறது.
 18. உங்கள் இடது கையைப் பயன்படுத்திப் பாருங்கள். (இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் வலது கையைப் பயன்படுத்த வேண்டும்), இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, இது சிந்தனையை வலுவாக்கும் என்று கண்டுபிடித்துள்ளது.
 19. நல்ல தூக்கத்தை அனுபவித்துத் தூங்குவது மூளை ஆற்றலைக் கூட்டிச் சரியாக சிந்திக்க வைக்கிறது.
 20. இதயம் சம்பந்தமான நோய் இருக்கிறதா, அதிக அளவில் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா என்பதைச் சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.
 21. டயபடீஸ் -நீரிழிவு நோய் – இருக்கிறதா என்று சோதித்து அறியுங்கள்.
 22. சேவை நிறுவனங்களில் தன் ஆர்வலராகச் சேருங்கள். இது மன ஆற்றலைக் கூட்டுகிறது; மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
  45 Strength Training மூளை ஆற்றலைக் கூட்டும். எடைகளைப் படிப்படியாக அதிகரித்துத் தூக்குவது BDNF – Brain derived Neurotrophic Factor -ஐக் கூட்டுகிறது. இது நரம்பு செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
  46.நடனப் பயிற்சியும் நல்லது தான். அது மனதிற்கான சவால்களைத் தருகிறது. திட்டமிடல், மற்றவர்களுடன் இணைந்து இருத்தல் உள்ளிட்ட பல ஆற்றல்களை அது வளர்க்கிறது.
 23. கோல்ஃப் விளையாடுவது மூளையின் அமைப்பில் உணர்ச்சிகளை அறிந்து கட்டுப்படுத்தும் பகுதியைச் செம்மை ஆக்குகிறது.
 24. யோகா பழகுங்கள். ஒரே நிலையில் நிலையாக மனதை வைத்திருப்பது, கவனக் குவிப்பு, மூளை ஆற்றல் திறன் கூடுதல் இவை எல்லாம் யோகாவினால் அடையும் பலன்கள். மூளைத் திறன் குறையாமல் இருக்க யோகா ஒரு வழியாகும்.
 25. பகலில் ‘பவர் நேப்’ (Power Nap) எனப்படும் சக்தி தரும் தூக்கத்தைக் கொள்ளுங்கள் ஒரு மணி நேரம் இப்படி உறங்குவோர் தெளிவான சிந்தனை ஆற்றலையும் கூடவே நினைவாற்றலையும் கூட்டிக் கொள்கின்றனர்.
 26. புல்வெளியில் புல் செதுக்குவது மன அழுத்தத்தைப் போக்கும் ஒரு இரசாயனத்தை வெளிப்படுத்துவதோடு நினைவாற்றலையும் கூட்டுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
 27. பல் இடுக்குகளைச் சுத்தம் செய்தல் : பல் இடுக்குகளில் சேரும் பலவித உணவுத் துகள்களனது, மூளை நாளங்கள் ஊட்டச் சத்தைப் பெறுவதைத் தடுக்கிறது. ஆகவே அவற்றைச் சுத்தமாக வைத்திருந்தால் மூளைத் திறனும் கூடும்.
 28. தலையைத் தொங்க விட்டுப் படுதிருப்பது நினைவாற்றலைக் கூட்டும். ஏனெனில் இரத்தமானது மேம்பட்ட முறையில் மூளைக்குச் செல்கிறது.
 29. Anagram என்பது ஆங்கிலத்தில் ஒரு வித விளையாட்டு. அதாவது ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துக்களை மாற்றி அமைத்து இன்னொரு புதிய வார்த்தையை உருவாக்குவதே அனக்ராம். எடுத்துக்காட்டாக ஒரு வார்த்தை இதோ: A GENTLEMAN என்பதை மாற்றினால் வருவது ELEGANT MAN!
  இதை விடுவிப்போர் முன்னர் சொன்னது போல உடலில் தலை பாகத்தைச் சற்றுக் கீழே தொங்க விட்ட பின் புதிரை விடுவித்தால் மற்றவரை விட சீக்கிரமாக வெற்றியைப் பெறுகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.
 30. ஆழ்ந்து சுவாசித்தல் : ஆழ்ந்து சுவாசிக்கும் போது ஆக்ஜிஜன் அளவுகள் அதிகமாகி மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. 10 முதல் 15 நிமிடம் வரை தினமும் ஆழ்ந்து சுவாசித்தால் போதும். அது ஒரு பெரிய நல்ல மாற்றத்தை உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் – ஏனெனில் அப்போது மூளை ஆற்றலின் திறன் அபரிமிதமாகக் கூடும் என்பதால்!
 31. நடைப் பயிற்சி : உடல் பயிற்சி மிக நல்ல விளைவை உடலில் ஏற்படுத்தும் என்பது உறுதி. நடைப் பயிற்சி மூளை ஆற்றலை வெகுவாகக் கூட்டுகிறது. நடைப்பயிற்சி மனதை ஓய்வான நிலையில் நிலை நிறுத்துகிறது. மூளை சிறப்பாகச் சிந்திக்க ஆரம்பிக்கிறது. அது மூளையை அங்கும் இங்கும் சற்று அலைபாய விடுவதோடு பிரச்சினை தரும் சிந்தனைகளை அப்புறப்படுத்துகிறது.
  *** தொடரும்

tags– 100 வழிகள் ,  மூளை ஆற்றல்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: