பக்தி எத்தனை வகைப்படும்? நாரதரின் பதில்! (Post.10,660)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,660
Date uploaded in London – – 15 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

பக்தி எத்தனை வகைப்படும்? நாரதரின் பதில்!
ச.நாகராஜன்

இறைவன் மீது கொண்டிருக்கும் பக்தி பல வகைப்படும்.
இதற்கு உதாரணமாக பக்தர்களின் வரலாறைப் பார்த்தாலேயே நமக்கு பக்தி பல வகைப்படும் என்பது புரியும்.
பக்தியின் வகைகளை நாரதர் தனது நாரத பக்தி சூத்திரத்தில் மிகத் தெளிவாகப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
பக்தி பதினோரு வகைப்படும்.
அவையாவன:
1) குண மாஹாத்ம்யாசக்தி
2) ரூபாசக்தி
3) பூஜாசக்தி
4) ஸ்மரணாசக்தி
5) தாஸ்யாசக்தி
6) சக்யாசக்தி
7) காந்தாசக்தி
8) வாத்ஸல்யாசக்தி
9) ஆத்மநிவேதனாசக்தி
10) தன்மயாசக்தி
11) பரமவிரஹாசக்தி
பக்தியில் ஐந்து வித அங்கங்கள் உண்டு.
1) உபாசக 2) உபாஸ்ய 3) பூஜா த்ரவ்ய 4) பூஜா விதி 5) மந்த்ர ஜபம்

குண மாஹாத்ம்யாசக்தி (Love for the glorious qualities of the Lord) என்பது இறைவனின் எல்லையற்ற மஹிமை வாய்ந்த குணங்களின் மீது பக்தியாகும்.
ரூபாசக்தி (Love for his ravishing beauty) இறைவனின் எல்லையற்ற அழகின் மீது பக்தி கொண்டிருப்பதாகும்.
பூஜா சக்தி (Love for worship) என்பது பூஜை செய்வதில் விருப்பமாகும்.
ஸ்மரணாசக்தி (Love of constant remembrance) என்பது இறைவனை இடைவிடாது ஸ்மரணை செய்வதாகும்.

தாஸ்யாசக்தி (Love of service) என்பது இறைவனுக்கு தாஸ்யமாக சேவை செய்வதில் அடங்காத ஆர்வமாகும்.

சக்யாசக்தி (Love of His companionship as a friend) என்பது அவனுடன் தோழமை கொண்டிருப்பதில் உள்ள விருப்பமாகும்.

காந்தாசக்தி (Love of Him as that of a wife for her husband) என்பது ஒரு மனைவி தன் கணவன் மீது கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பு போல இறைவன் மீது அன்பு கொண்டிருப்பதாகும்.

வாத்ஸல்யசக்தி ( Love of Him as a son) என்பது ஒரு மகனின் மீது தாய் கொண்டிருக்கும் வாத்ஸல்யம் போல இறைவன் மீது அன்பு கொண்டிருப்பதாகும்.

ஆத்மநிவேதனாசக்தி (Love of Self Surrender to Him) என்பது தன்னை இறைவனுக்கு ஆத்ம நிவேதனம் செய்வதாகும்.

தன்மயாசக்தி (Love of complete absorption in Him) என்பது அவனிடத்திலேயே தன்மயமாவதை – லயிப்பதை – குறிப்பதாகும்.

பரமவிரஹாசக்தி (Love of the pain of separation from Him0 என்பது அவனை விட்டு நீங்கிய ஒவ்வொரு கணமும் விரஹத்தால் துடிப்பது போல இருப்பதாகும்.

ஆக இப்படிப்பட்ட பதினோரு வித பக்தியால் இறைவனை வழிபட்டு அவனை அடையலாம்.
இன்னும் பல வகை பக்திகளும் அவரவர் மனப்பக்குவத்திற்கேற்ப இருக்கலாம். அவையும் பக்தி தான்!
ஒரே பக்தருக்கு ஒவ்வொரு சமயத்தில் வெவ்வேறு விதமாக பக்தியும் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக இராமகிருஷ்ண பரமஹம்ஸரைக் கூறலாம்.
வாத்ஸல்ய பக்திக்கு யசோதை; சக்ய பக்திக்கு அர்ஜுனன் என்று இப்படி ஒவ்வொரு வகையான பக்திக்கும் இதிஹாஸ புராணங்களில் ஏராளமான உதாரணங்கள் உண்டு.
ஆழ்வார்கள், நாயன்மார்கள் சரிதத்திலிருந்தும் நமக்குப் பல்வேறு வகையான பக்திக்கான உதாரணங்கள் கிடைக்கும்.
ஒரே வார்த்தையில் சொல்லப் போனால் இறைவனிடம் அன்பு பூண்டு அவனை வழிபடுவதே பக்தியாகும்.
நாரத பக்தி சூத்ரத்தில் 82வது சூத்ரம் இந்த பதினோரு வகை பக்திகளைக் குறிப்பிடுகிறது.
நாரதரின் பக்தி சூத்ரத்தில் மொத்தம் 84 சூத்ரங்கள் உள்ளன.
பக்தி பற்றிய அற்புதமான ரகசியங்களை இந்த சூத்திரங்கள் விளக்குகின்றன!


tags- பக்தி, வகை , நாரதர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: