ஈனர்களை ஒரு போதும் அண்டாதே! (Post No.10,674)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,674
Date uploaded in London – – 20 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷிதம்
ஈனர்களை ஒரு போதும் அண்டாதே!
ச.நாகராஜன்

வஹேதமித்ரம் ஸ்கந்தேன யாவத்காலவிபர்யய: |
அதைவமாகதே காலே கடம் பிந்த்யாதேவாஷ்மனி ||

காலம் கனியாத வரையிலும் ஒருவன் தன் எதிரியை தோளில் சுமக்க வேண்டும். காலம் கனிந்து விட்ட நேரத்தில், குடத்தை பாறையில் மோதி உடைப்பதைப் போல, அவன் அந்த எதிரியை அழிக்க வேண்டும்,

One should carry his enemy on the shoulder as long as the time is unfavourable. As soon as the proper time arrives, he should destroy him as one would break a pitcher on a stone.

ஜ்யாயாம்ஸமபி ஷீலேன விஹீனம் நைவ பூஜயேத் |
அபி சூத்ரம் ச தர்மக்ஞம் சத்வ்ருத்தமபிபூஜயேத் ||

ஒருவன் மூத்தவனாக இருந்த போதிலும் கூட நல்ல நடத்தை உடையவனாக இல்லாதிருப்பின் அவனை மதிக்கக் கூடாது.
இதற்கு மாறாக, கீழ் ஜாதியில் பிறந்திருந்தாலும் கூட ஒருவன் நல்ல நடத்தையுடன் தர்மத்தைக் கடைப்பிடிப்பவனாக இருந்தால் அவனை மதிக்க வேண்டும்.

One should not respect a person devoid of good conduct even though he is elder. (On the contrary) even a person of low caste should be honoured if he knows rules of good conduct and behaves properly.

ஹீனசேவா ந கர்தவ்யா கர்தவ்யோ மஹதாஸ்ரய: |
பயோபி ஷௌண்டிகீஹஸ்தே வாருணீ த்யபிதீயதே ||

ஈனர்களை ஒரு போதும் அண்டக் கூடாது. ஒருவன் எப்போதும் மஹத்தானவர்களையே நாட வேண்டும். மதுவை விற்கும் ஒரு மாதுவின் கையில் பால் இருந்தால் கூட அது மது என்றே கூறப்படும்.

Mean people should not be resorted to. One should take refuge with great people. Even the milk in the hand of a wine selling women is mentioned as wine.

வசஸ்த்தத்ரைவ வக்த்வ்யம் யத்ரோக்தம் சபலம் பவேத் |
ஸ்தாயிபவதி சாத்யந்தம் ரங்க: சுக்லபடே யதா ||

ஒருவன் தனது பேச்சு எங்கு பலிக்கிறதோ அங்கு தான் பேச வேண்டும், உதாரணமாக, வெள்ளைத் துணியில் ஒரு வண்ணம் சேர்க்கப்படுவது மிக வேகமாக நடக்கும்.

One should speak in a place where his speech will be effective. For instance, a colour added to a white cloth is very fast.

ய: ஸ்வபாவோ ஹி யஸ்ய ஸ்யாத்தஸ்யாஸௌ துரதிக்ரம: |
ஸ்வா யதி க்ரியதே ராஜா ததிங்க நாஸ்நாத்யுபானஹம் ||

ஒருவன் தனது ஸ்வபாவத்தை விடுதல் என்பது முடியாது.
நாயை ராஜாவாக்கினாலும் அது செருப்பு தின்பதை விடாது!

It is not possible for one to overcome one’s own nature. Does a dog give up eating shoes even when he is made a king?

(English Translation by Saroja Bhate)


tags- ஈனர், நாய, ராஜா, 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: