IF YOU DONT SEE PICTURES, PLEASE GO TO SWAMIINDOLOGY.BLOGSPOT.COM
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,679
Date uploaded in London – – 21 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆயிரம் (Thousand/AAYIRAM is not a Tamil word) என்பது தமிழ் சொல் அல்ல என்பதை மொழியியல் வல்லுநர்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். ஆயிரம் 1000 என்ற எண் தொல்காப்பியம், புறநானூறு, திருக்குறள் முதலிய 2000 ஆண்டுப் பழமையான நூல்களில் உள்ளது. உலாகிலேயே பழைய நூலான ரிக் வேதத்தில் ஆயிரம் என்பதை சஹஸ்ரம் (Sahasra) என்று கூறினார்கள். இன்றும் கோவிலில் சகஸ்ரநாம அர்ச்சனை இருக்கிறது அதைத் தமிழில் மொழிபெயர்த்த மாணிக்கவாசகர் முதலிய அடியார்கள் ஆயிரம் நாமம் என்றே மொழிபெயர்த்துள்ளனர். ஆக நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோரே ஆயிரம் என்பதற்கு மூலம் ‘சஹஸ்ரம்’ என்று ஒப்புக் கொண்டுள்ளனர். வேறு தமிழ் சொல் இருந்தால் அவர்கள் அதை ஒப்புக்கொண்டு இருப்பர்.; பயன்படுத்தியும் இருப்பார்கள்
1935-ம் ஆண்டு ஆ னந்த விகடன் அகராதியும் ‘சகஸ்ரம், பத்து நூறு’ என்றே பொருள் வழங்கியுள்ளது ..
ஆயிரத்துக்கு வடக்கில் இந்தி முதலிய மொழிகளில் ஹஜார் Hazar என்று சொல்லுவார்கள். உண்மையில் ஆழ ஊன்றிப் பார்த்தால் ஆயிரம், ஹஜர் இரண்டுமே சஹஸ்ரத்தில் இருந்து பிறந்ததே என்பதை அறியலாம்.
ஆயிரம் என்பதை ரிக் வேதம் பல நூறு முறை பயன்படுத்துகிறது. ஆனால் தமிழில் 2700 ஆண்டுகளில் குறைவான முறையே பயன்படுத்தப்படுகிறது .சங்க காலத்தைச் சேர்ந்த 18 மேல் கணக்கு நூல்களிலும் (பத்துப்பாட்டு+ எட்டுத் தொகை =18) அதற்குப்பின்னர் தோன்றிய திருக்குறள் முதலான 18 கீழ்க்கணக்கு நூல்களிலும் — ஏறத்தாழ 2700 ஆண்டுகளுக்கு –மிகக்குறைவான முறையே ‘ஆயிரம்’ வந்துள்ளது. கீழே எந்த இடங்கள் என்பதைக் கொடுத்துள்ளேன் .
அது சரி ‘சஹஸ்ரம்’ (1000) எப்படி ஹஜார் ஆகியது ? எப்படி ஆயிரம் ஆகியது? என்ற கேள்வி எழுகிறதல்லவா ? இதற்கு மொழியியல் ரீதியில் (Linguistically) விடை கண்டால் நாம் அதை ஏற்கலாம்.
‘ச’ என்ற எழுத்தில் எ ந்தச் சொல்லையும் தமிழில் துவங்கக் கூடாது என்று தொல்காப்பியர் தடை விதித்தார். சங்க இலக்கியத்தில் உள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய ‘ச’– சொற்கள் அனைத்தும் ஸம்ஸ்க்ருதச் சொற்களே. அதற்குப் பின்னர் வந்த திருக்குறளிலும் பெரும்பாலும் அப்படித்தான்.
ரிக் வேதத்தில் வந்த ‘சபா’ முதலிய சொற்களில் ‘ச’- வை நீக்கி நாம் ‘அ’ போட்டு ‘அவை’ என்கிறோம்.
அதே போல தமிழில் ஹ , ஷ , ஸ , ஜ வரும் இடம் எல்லாம் வேறு எழுத்துக்களைப் போட்டு நிரப்புகிறோம்.
‘ஹம்’சம் என்றால் ‘அன்’னம் என்று மாற்றுகிறோம்.
‘ஹவிஸ்’ என்ற ரிக் வேத சொல்லை ‘அவி’ என்று சங்க இலக்கிய புலவர்கள் மாற்றினார்கள்.
இதை இப்பொழுது சஹஸ்ரத்தில் போட்டுப் பார்ப்போம் :-
ஸ = அ /ஆ (S=A)
ஹ =அ (H=A) A+A= AA
ஸ் =அ (S= a) A= Y
ர Ra
ம் M
அ +அ = ஆ (a+a= Aa
அதற்குப்பின்னர் உள்ள மூன்றாவது எ – ய ஆக மாறுகிறது
ஆக ஆயிரம் என்று சொல்லுவது காதுக்கினியதாக (Euphony) இருக்கிறது.
இவ்வாறு மருவுவது பல சொற்களில் வருகிறது
Xxx
xxx
சஹஸ்ரம் எப்படி ‘ஹஜார்’ HAZAR ஆகியது என்று பார்ப்போம் :_
கிரேக்க, பாரசீக மொழிகளில் ‘ச’ எழுத்து கிடையாது. இதனால் தான் அவர்கள் நம்மை சிந்து நதிக்கு அப்பாலுள்ள நாடு என்பதை ஹிந்து (ஸ்தான் ) என்று பகன்றார்கள் சிந்து= ஹிந்து. Sindhu+ Hindhu
இதை அப்படியே ஹஜாரில் போட்டுப் பார்ப்போம்
ஸ = ஹ
ஹ = ச/ஜ
ஸ் = ர்
ர்
ஹஜார் என்பதை ஹஜர் என்றும் ஹசர் என்றும் இந்தியாவுக்கு வடமேகே வழங்குகிறார்கள் . ரிக் வேத சம்ஸ்க்ருதம் போல பழமையான மொழி என்று கருதப்படும் அவஸ்தன் (Avestan Language)மொழியில் முதல் பத்து எண்கள் அப்படியே ஸம்ஸ்க்ருதம்தான். மேலும் ஜெண்ட் அவஸ்தா எனப்படும் பார்ஸி மத வேத புஸ்தகத்தில் பழமையான காதா பகுதி முழுதும் வேதத்துக்கு மிக நெருக்கமானது மாக்ஸ்முல்லர் முதலியோர் ஒரு காலத்தில் தேவாசுர மோதல் வந்தவுடன் அவர்கள் ஈரானுக்குக் குடியேறினார்கள் என்று கூறுகிறார்கள் ; காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் இதை சொல்லி இருக்கிறார்.
Xxxx
சஹஸ்ரம் எப்படி தவுசண்ட் THOUSAND ஆகியது?
தவுசண்ட் (Thousand) என்பதும் ஸம்ஸ்க்ருதமே .ஐரோப்பியர்களுக்கு மூல மொழியான பழைய ஜெர்மானிய மொழியில் துஸ் செண்டு Duszend என்று இருந்ததே தவுசண்ட் ஆனதாக சொற்பிறப்பியல் (Etymology பகுதியில் செப்பியுள்ளனர் அதற்கு விளக்கம் சொல்லுகையில் துஸ் Thuz என்பது பெரிய, பெருமளவு என்று எழுதி வைத்து சென்ட் (Centum) என்பதற்கு 100 என்று எழுதியுள்ளனர். இது தவறு. மூக்கைத் தொட்டுக் காட்டடா மகனே என்றால், முட்டாள் பயல் கையைக் கழுத்துக்குப் பின்னே கஷ்டப்பட்டு வளைத்து மூக்கைத் தொடும் கதை இது ; ‘தஸ’ என்பது அவஸ்தன் மொழியிலும் 10 தான். நேரு வந்த ஹிந்தி மொழியிலும் பத்து தான். ஆக பத்து நூறு என்பதே ‘துஸ் சென்ட்’ = தவுசண்ட் (10X100)
அது சரி , Cent= Kent) சென்ட் என்ன ஸம்ஸ்க்ருதமா? ஆமாம், உலகறிந்த சம் க்ருதச் சொல். இந்தோ ஐரோப்பிய மொழிகள் சதம் (100) என்பதை சென்டம் Centum Group என்று ஒரு குழு செப்பியதாகவும் மற்றோரு குழு சதம் (Satam) என்றே கொண்டதாகவும் மொழி இயல் அறிஞர்கள் பிரித்துக் காட்டுகின்றனர். சென்ட் , கென்ட் (Cent= Kent= Hundred) ஆக மாறி ஹன்ரட் HUNDRED ஆனதாம். இதெல்லாம் மொழி இயற் அறிஞர்கள் கூற்று. ஆக துஸ் = தஸ் +கெண்ட் /செண்ட் (ரெட்) எல்லாம் ஸம்ஸ்க்ருதமே.
இதுதான் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை
ஸஹஸ்ரம் உருமாறி ஆயிரம், ஹஜார் , தவுசண்ட் ஆன கதை.
இதோ அவெஸ்தன் மொழியில் எண்கள் |:-
1-ஐவஸ்
2-துவ
3-த்ரயஸ்
4–ஸத்வாரஸ்
5- பஞ்ச
6-ஸ்வஸ்
7- ஹப்த
8-அஷ்ட
9- நவ
10-தச
100- சதம்
1000- சொல் கிடையாது
நாம் எழுதும்போது ‘ஒன்று’ என்போம்; பேசும்போது ‘ஒன்னு’ என்போம்.
நாம் எழுதும்போது ‘’ஐந்து’ என்போம்; பேசும்போது ‘’அஞ்சு’’ என்போம் .1400 வருடங்களுக்கு முன்னர் திருஞான சம்பந்தரே ’அஞ்சு என்றுதான் தேவாரத்தில் பாடியுள்ளார். அவஸ்தன் மொழியிலும் கொஞ் சம் மாற்றம் இருப்பதைக் காணலாம் ; பிராகிருதம், பாலி மொழிகளிலும் இது போல திரிபு அடைவதைக் காண்கிறோம் .
ஆக, ஆழ்வார்களும் நாயன்மார்களும் அப்படியே ‘சகஸ்ர’ என்பதை ஆயிரம் என்று பாடியுள்ளதாலும், குறைவான இடத்தில் மட்டுமே அந்த எண் வருவதாலும், மொழியியல் ரீதியில் ஸஹஸ்ரம் , ஆயிரம் ஆனதாக பிரபல மொழியில் வல்லுநர்கள் . சொன்னதாலும் அவெஸ்தன், பழைய ஜெர்மானிய மொழியில் பத்து நூறு என்று சொல்வதைத் தவிர வேறு சொற்கள் இல்லாததாலும், உலகிலேயே பழைய நூலான ரிக் வேதத்தில் எண்ணற்ற இடங்களில் ஸஹஸ்ரம் வருவதாலும் ஒரிஜினல் ஆயிரம் சஹஸ்ரம் என்று அறிக
xxxx
இலக்கியத்தில் ஆயிரம்
தொல் 1-391, 392; குற்றி.30-1, 65-1, 70-1, ; 2-406; 3-59
பொருந.247; மது.11; பதிற்று .21-38; பரி 1-1, 3-22, 41, 13-27;
காளி 105-15; புறம் 391-21; குறள் .259; பழமொழி 165; சிலம்பு.3-162, 5-164, 6-20, 11-37, 14-68, 15-38, 25-63, 28-69; இது தவிர மணி மேகலையில் 7 இடங்கள்; முத்தொள் .101
Xxx subham xxxx
Tags- தவுசண்ட் ஆயிரம், சஹஸ்ரம், ஹஜார், இலக்கியத்தில், அவெஸ்தன்