WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,686
Date uploaded in London – – 24 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சம்ஸ்கிருத பஹிராலவ வகைப் புதிர்க் கவிதைகள்!
ச.நாகராஜன்
சம்ஸ்கிருத புதிர்க் கவிதைகள் அலாதி இன்பத்தைத் தருபவை. இவற்றை விடுவிப்பதற்கு எல்லையற்ற சாமர்த்தியமும், மொழி அறிவும் தேவை.
இங்கு இரு கவிதைகளைக் காண்போம்:
கேஸரத்ருமலேஷு சம்ஸ்தித: கீத்ருஷோ பவதி மத்தகுஞ்சர: |
தத்தவத: சிவமபேக்ஷ்ய லக்ஷணீர் அர்ஜுன: சமிதி கோத்ருஷோ பவேத் ||
மதம் பிடித்த ஒரு யானை கேஸர மரத்தின் அருகே இறக்கும் போது என்ன நடக்கிறது?
விடை: தான – வகுல -ப்ரமர – ஹிதா: – தேனீக்களுக்கு அதன் நிண நீர் ஆதாயமாக அமைகிறது.
தனது உண்மையான குணாதிசயங்களுடன் சிவபிரான் சாந்தப்படுத்திய போது அர்ஜுனன் போர்க்களத்தில்
எப்படி போர் புரிந்தான்?
அரக்கர் கூட்டத்தைப் பற்றிய கவலை இல்லாமல்! – தானவ – குல – ப்ரம – ரஹிதா:
தானவகுலப்ரமரஹிதா: என்ற சொற்றொடர் தான – வகுல -ப்ரமர – ஹிதா என்றும் தானவ – குல – ப்ரம – ரஹிதா: என்றும் இரு விதமாகப் பிரிக்கப்பட்டு இரு கேள்விகளுக்கும் உரிய விடையை
அருமையாகத் தருகிறது.
இது பஹிராலவ வகைப் புதிர் என்று அழைக்கப்படுகிறது.
What happens to a rut-shedding elephant when it dies in the vicinity of a kesara-tree?
(dana- vakula-bhramara-hitah:- beneficial to the bees in the kesara-tree by its ichor)
Having propitiated Lord Siva by his true characterristics, how does Arjuna fare in the battlefield?
(Danava-kula- bhrama-rahitah: – free from the worry of hordes of demons)
Translation by A.A.R)
**
இன்னொரு புதிர்க் கவிதையைப் பார்ப்போம்:
கே ஸ்திரா: கே ப்ரியா: ஸ்த்ரீணாம் கோப்ரியோ நக்தமாஹ்வய: |
ந்ருத்ய,ம் கீத்ருஷீ ரம்ப நதி கீத்ருக் தனாகமே ||
எது உறுதியாக இருக்கிறது?
மலைகள் – அகா:
பெண்களுக்கு அன்புக்குரியவர் யார்?
கணவர்கள் – தவா:
யாரைக் கண்டால் பிடிக்காது?
எதிரியை – ரிபு
இரவை அழைப்பது எப்படி?
ஓ, இருளே – ரஜனி
எப்போது நாட்டிய அரங்கம் இன்பத்தைத் தருகிறது?
அகலமாக இருக்கும் போது – தரங்க
மேகம் இருக்கும் பருவத்தில் நதி எப்படி இருக்கும்?
அகாத – வாரி – புர – ஜனித – தரங்க – ஆழமான நீருடன் அலைகளைக் கொண்டதாக இருக்கும்.
ஒரே ஒரு சொற்றொடர் – அகாதவாரிபுரஜனிதரங்க
இது அகா, தவா, ரிபு, ரஜனி, தரங்க, அகாதவாரிபுரஜனிதரங்க என ஆறு விதமாகப் பிரிக்கப்பட்டு
ஆறு கேள்விகளுக்கும் விடையைத் தருகிறது.
இதுவும் பஹிராலவ வகைப் புதிர் வகைக் கவிதை தான்!.
Which are firm?
(agah: – mountains)
Who are beloved women?
(Dhavah: – husbands)
Who Is disliked?
(ripu – enemy)
Address the night ?
(rajani – O, night)
When is dancing floor pleasing?
(tataranga _ When the floor is broad)
How is river in the season of clouds?
(Agadha- vari-pura- janita – Taranga – Having waves in the deep water)
( Translation by A.A.R)
எப்படி ஒரு அருமையான மொழியாக சம்ஸ்கிருதம் அமைந்திருக்கிறது!
tags- சம்ஸ்கிருத, புதிர்க் கவிதை ,பஹிராலவ,