ஶ்ரீநகர்! (Post No.10,692)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,692
Date uploaded in London – – 26 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஶ்ரீநகர்!
ச.நாகராஜன்
பாரதத்தில் காஷ்மீரி பண்டிட்கள் படும் பாடு அனைவரும் அறிந்த ஒன்றே. 1947 இல் இந்திய பிரிவினை தோன்றிய நாளிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதிகளால் அவர்கள் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல!

1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த கோர கொலைகள், கற்பழிப்புகள். கோவில் இடிப்புகள், பலாத்காரங்கள் சொல்லும் தரமல்ல!
ஆனால் அன்று என்ன நடந்தது என்பதைச் சொல்லும் படமாக வெளி வர இருக்கும் படம் : ஶ்ரீநகர்!

அந்தப் படத்தின் ட்ரெயிலர் இப்போது வைரலாக ஆகி அனைவராலும் பார்க்கப்படுகிறது.
3 நிமிடம் 42 விநாடிகள் ஓடும் இந்த ட்ரெயிலர் கண்களைக் கலங்க வைக்கிறது.
BJP எம் எல் ஏ, வாஸிம் ரிஜ்வி (WAZIM RIZVI) அவர் தயாரிக்கும் படம் இது.

ஒரு உண்மையைச் சொல்ல, அதுவும் படமாகக் காண்பிக்க எவ்வளவு துணிவு வேண்டும் – செகுலர் இந்தியாவில்.
அந்தத் துணிச்சல் வாஸிம் ரிஜ்வியிடன் உள்ளது.

ட்ரெயிலர் வெளியாகி இப்போது அனைவராலும் பார்க்கப்படுகையில் ஜிஹாதிகள் கூக்குரலிடுகின்றனர்; ஆக்ஷேபணை தெரிவிக்கின்றனர்.
வழக்கம்போல போலி செகுலரிஸ்டுகள் (அதாவது ஹிந்து விரோத எதிர்ப்பு சக்திகள் என்று அர்த்தம்)
இதற்கு பல்வேறு அமைப்புகளின் பேரால் கண்டனங்களைத் தெரிவித்து விட்டனர்.

இப்படிப்பட்ட செகுலரிஸ்டுகள் கொலை கொள்ளை நடக்கும் போது தடுப்பதுமில்லை; அவை நடந்த பின்னர் கண்டனம் தெரிவிப்பதுமில்லை.
சாமர்த்தியமாக தமிழ் திருட்டு யூ டியூபர்கள் போல சீப்பால் தலைவாரிக் கொண்டு வேறு ஒரு காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்!
ஆனால் இந்த ஜிஹாதி வன்முறைகளைக் காட்டி ஒரு படம் எடுத்தால் ஓடி வந்து விடுவார்கள் கண்டனம் தெரிவிக்க கச்சை கட்டிக் கொண்டு!
என்ன பரிதாபம் பாருங்கள், பாரத ஹிந்துக்களின் நிலை!

இதைப் பற்றிய செய்தியை வெளியிட்டு ஆங்கில வார இதழான TRUTH, குர் ஆன் வாசகங்களை அப்படியே
தந்திருக்கிறது இப்படி :-
Few verses from Quoran, published by Oxford University Press (translated by A.J.Arberry) 1955:-

We must cast terror into the hearts of unbeliever, their lodging shall be the fire. (3:44)
Surely those who disbelieve in our science- we shall certainly roast them at fire as often as their skins are wholly burnt. We shall give them in exchange other skin that they may taste the forment. Lo! Lo! God (Allah?) is Almighty, all wise. (4:59)

போலி செகுலரிஸ்டுகளை அடக்கி விட்டு நல்ல இஸ்லாமியப் பேரறிஞர்கள் ஒன்றிணைந்து ஜிஹாதிகளின்
தீவிரவாதத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
உலக மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு இது தான்!

tags- ஶ்ரீநகர்,காஷ்மீரி பண்டிட்கள்


Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: