IF YOU DONT SEE THE PICTURES HERE, PLEASE GO TO swamiindology.blogspot.com
இலங்கையில் கல்கி அவதாரம்: கல்கி புராணம் கூறும் அதிசய விஷயம்- Part 1 (Post.10,703)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,703
Date uploaded in London – – 1 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கல்கி புராணத்தில் பல அதிசய விஷயங்கள் இருக்கின்றன.இந்தப் புஸ்தகம் லண்டனில் பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ளது. ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள மூல நூலை தமிழில் க. தேசிகாச்சாரியார் மொழி பெயர்த்துள்ளார். விலை 12 அணா .
இந்த நூல் பிரிட்டிஷ் லைப்ரரியில் 1903ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி சேர்க்கப்பட்ட முத்திரை உள்ளது. அப்போது பிரிட்டிஷ் மியூசியத்தில் இந்தப் பழைய புஸ்தகங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன
நைமிசாரண்யத்தில் செளநகாதி மகரிஷிகள் சூத புராணிகரைப் பார்த்து வினவிய கேள்விக்கு அவர் பதில் சொல்லும் வகையில் அமைந்துள்ளது நூல்.
பிரம்மா முறையிட்டதன் பேரில் விஷ்ணு பதில் சொல்கிறார் :
“ஒய் கமலாசனே ! நான் சம்பளம் என்னும் சிம்மளத் தீவில் பரம பாகவத சிரோன் மணியான விஷ்ணு யசஸின் பாரியையான ஸுமதியின் இஷ்டத்தைப் பூரணம் செய்ய பிராதாக்கள் நால் வருடன் ஆவிர்பாகம் பண்ணி, கலியை நாசம் செய்கிறேன்.
அதே சிம்மளத் தீவில் பிருஹத்ரதன் மகளாக பத்மாவதி பிறக்கப் போகிறாள். அவள் என்றும் என்னைவிட்டுப் பிரியாத லெட்சுமி ஆவாள். அவளை திருமணம் செய்துகொள்வேன். பின்னர் கலியுகத்தை நாசம் செய்து, கிருத யுகத்தை ஸ்தாபித்து ஸ்ரீ வைகுண்டத்துக்குத் திரும்புவேன்.” இதைக் கேட்ட ரிஷி முனிவர்கள் பரம சந்தோசம் அடைந்தனர்.
ஒவ்வொரு அத்தியாயமும் சுருக்கமாகவே உள்ளது. 20 ஆவது அத்தியாயத்தில் கங்கை நதியின் பெருமையும் 21 ஆவது அத்தியாயத்தில் புராணச் சுருக்கமும் உளது
xxx
கங்கையின் 8 பெயர்கள்
கங்கையின் பெருமை கூறுமிடத்து , கங்கை நதிக்கரையில் நின்று கொண்டு,
ஓ கங்கா மாதாவே , லோகபாவனி , சுர சுந்தரி, ஹரி பதாப்ஜ ஸம்பூதே , – திரிபதகே , ஜான்னவி, வைஷ்ணவி – சகர வம்ஸ மோக்ஷப்ரதே என்று எட்டு திருநாமங்களை உச்சரிப்பானால் அவனை ஸமஸ்த ரோகங்களும் மனோ வியாதிகளும் தரி த்திரங்களும் அணுகாது .
(இத்துடன் உள்ள இணைப்புகளையும் காண்க)
XXXX
என் கருத்து
சிம்மளத் தீவு என்ற பெயர் இலங்கைத் தீவையே குறிக்கிறது என்பது என் கருத்து. சிங்கத்துடன் தொடர்புள்ள ஸம்க்ருதப் பெயர் உடைய தீவுகள் இரண்டுதான் – 1. சிம்ஹ புரி என்று அழைக்கப்படும் சிங்கப்பூர்; 2.சிலோன், ஸ்ரீ லங்கா என்று அழைக்கப்படும் சிம்ஹள / சிங்கள தேசம்..
அங்கே விஷ்ணுயஸஸ் – சுமதியின் புத்திரராக 4 சகோதர ர்களுடன் , கல்கி அவதாரம் செய்வார். அவர் பிருஹத் ரதன் புதல்வியான பத்மாவதியை கல்யாணம் செய்துகொண்டு கலியுகத்தை நாசம் செய்து கிருத யுகத்தை நிறுவுவார்.
XXXX
புஸ்தகத்தில் முதல் 4 பக்கங்களில் ‘கலியுக தர்மம்’ என்ற தலைப்பில் பல அதிசய நிகழ்ச்சிகள் பட்டியல் இடப்பட்டு இருக்கின்றன.
இதை கற்பனை என்று கருதினாலும், ஒருவர் 100 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருதத்தில் வெளியிட்டு, அதை ஒருவர் தமிழில் மொழி பெயர்த்து, 12 அணா விலையில் விற்றிருப்பது அக்கால மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது.
12 அணா என்பது இப்போதைய மதிப்பில் 120 அல்லது 1200 ரூபாய் கூ ட ஆகி இருக்கும் ஏநெனில் பணத்தின் மதிப்பு ஒவ்வொரு 5 ஆண்டிலும் இரு மடங்கு ஆகி விடும் (12-24-48-96-192-…..)
xxx
இனி முதல் 4 பக்கத்தில் உள்ள அதிசய நிகழ்வுகளைக் காண்போம். சம்ஸ்க்ருத ஸ்லோ ககங்கள், கிரந்த எழுத்தில், கொடுக்கப்பட்டுள்ளன.
கலியுகத்தில் நடக்கப்போகிற அக்கிரமங்களை வியாச பகவான் சூத முனிவருக்கு உபதேசிக்கின்றார்.
1.ஓ சூத முனிவரே , கலியுகம் வரும்போது மனிதர்கள் (30) முப்பதடிப் பிராமண முள்ளவர்களாயிருந்து முடிவில் (3) மூன்றங்குலப் பிரமாணம் முள்ளவர்களாய் ஆகப்போகிறார்கள்.
2.கலியுகத்தில் ஜனங்கள் எல்லோரும் அன்ன விக்கிரயம் (selling food) பண்ணப் போகிறார்கள் . அந்தணர்கள் மந்திரங்களை விற்கப் போகிறார்கள் . ஸ்திரீகள் யாவரும் பதிவிரதா தர்மத்தை விற்கப்போகிறார்கள்
( என் கருத்து- மக்கள் பத்தில் ஒரு பங்கு உயரம் குறையும் ; பெரும்பாலோர் வீட்டில் சமைக்காமல் ஹோட்டல், மெஸ் என்ற இடத்தில் சாப்பிடுவார்கள். பிட்ஸா, பர்கர், இட்லி , தோசை கடைகள் பெருகும். பெண்களிடத்தில் ஒழுக்கம் குறையும்; பிராமணர்கள், பணக்கார மக்களுக்கு மட்டும் பூஜை, புனஸ்காரங்களைச் செய்து அவர்களை மட்டும் உபசரிப்பார்கள் . உண்மையான பக்தர்களை ‘அம்போ’ என்று விட்டுவிடுவார்கள் )
3.பிராமணர்கள், வேதங்களை கீழ்ப்பட்ட ஜாதியாருக்குச் சொல்லிப் பிழைக்கப்போகிறர்கள் .. பிராமண ஸ்த்ரீகள் மோர், தயிர்- பால் – முதலானதுகளை விற்கப் போகிறார்கள் .வைஸ்யர்கள் எல்லோரும் மாம்சத்தை விற்கப்போகிறார்கள் .
4.கலியுகத்தில் பிராமணாதி மூன்று வருணத்தாரும் ஸ்வ (சுயமான தொழில்) கர்மத்தை இழந்து வயிறு நிறைப்பதிலும் மாதர்களைப் புணர்வதிலும் ஆசை உள்ளவர்களாய் இருப்பார்கள். சூத்திரர்கள் நற்செய்கை, நல்லொழுக்கம் உடையவர்களாய் இருப்பார்கள்.
( என் கருத்து :- அரசாங்கமே கீழ்ஜாதியினர்க்கு கோவில் பூஜைகளில் இட ஒதுக்கீடு முறையை அமல் படுத்தி , அதிகம் பேரை அதில் ஈடுபடுத்துவர். அப்போது பிராமணர்கள் அவர்களுக்கு கற்பிக்கும் கட்டாயம் ஏற்படும்.. பிராமனாப் பெண்களும் பால் பிஸினஸ் (Dairy ) முதலி யவற்றைச் செய்வார்கள்; வைசியர்கள் திரைகடல் ஓடித் திரவியம் தேடாமல் மாமிசம் வெட்டும் தொழிலில் இறங்கிவிடுவார்கள்; நாலாவது வருணத்தார் மட்டும் கடவுள் பக்தி ஒழுக்கத்துடன் வாழ்வர்; அதாவது தலைகீழ் மாற்றம் ஏற்படும் என்பதை இப்படி விளக்கினார். )
5.ஸ்திரீகள் எல்லோரும் எட்டாவது வயதில் புத்திரர்களை பிரசவிப்பார்கள் . நியாயம் அநியாயம் இல்லாமல் புருஷனைப் புணருவார்கள்
6.மாதர்கள் எல்லோரும் பன்றிகளைப் போல பத்து எட்டு குழவிகளைப் பெறுவார்கள் . இரு கரத்தாலும் சிரத்தைச் சொரியப்போகிறார்கள் .
( என் கருத்து – இப்போதே இதை முஸ்லீம் நாடுகளிலும் மேலை நாடுகளிலும் காண்கிறோம். அதாவது TEEN AGE PREGNANCY ‘டீன் ஏஜ் பிரெக்னன்சி’ என்பது மேலை நாடுகளில் ஒரு பெரிய பிரச்சனை.. இளம் வயதில் குழந்தைகளைப் பெற்றுவிட்டு முதல் கணவரைப் பிரிந்து வாழ்வது அதிகரிக்கிறது . சோமாலி முஸ்லீம்கள் குடும்பங்களில் 8 முதல் 12 குழந்தைகளை பார்க்கலாம். 4 குழந்தைகளுக்கு குறைந்த முஸ்லீம் குடும்பங்களைப் பார்ப்பது அரிது. இதே வேகத்தில் போனால் அவர்கள் தொகை அதிகரிக்கும் என்று சொல்லத் தேவை இலலை . இரு கரத்தால் தலையை சொரிவார்கள் என்பதன் பொருள் – பிரச்சனை அதிகரிப்பதால் தலை மயிரைப் பிய்த்துக் கொள்வார்கள் என்று அறியலாம்
தொடரும் …………….
XXXXXXXXXX SUBHAM XXXXXXXXXXXXXXX
TAGS- இலங்கை, கல்கி அவதாரம்:, கல்கி புராணம் , Part சிம்மளத் தீவு, விஷ்ணுயசஸ் 1 ,