WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,715
Date uploaded in London – – 5 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
1967 முதல் தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடை பெற்று வருகிறது. அதற்குப் பின்னர் வந்த தமிழ் புஸ்தகங்களில் ஏராளமான திராவிட விஷமங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் நிறைய பாதிக்கப்பட்டவர் திருவள்ளுவர்தான். நெடுஞ்செழியன் போன்றோர் எழுதிய விளக்கவுரைகளைப் படித்தால் திருவள்ளுவர் தற்கொலை செய்துகொள்வார். தமிழ் பிளாக் BLOGS குகளில் அவர் குறளின் குரல் வளையை நெரிப்போரைக்கண்டால் திருக்குறள் என்பதை நான் எழுதவில்லை என்று சொல்லிவிட்டு ஒடி ஒளிந்து கொள்வார்.
ஒரு நூலுக்குப் பல உரைகள் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுதான். காளிதாசரின் சில நூல்களுக்கும் மனு ஸ்ம்ருதி போன்ற சட்டப்புஸ்தகங்களுக்கும் 60, 70 உரைகள் கூட உள்ளன. திருக்குறளுக்கு பத்துப் பேர் எழுதிய உரைகளில் நமக்கு 5 கிடைத்து இருக்கின்றன. அவை அனைத்தும் எதிரும் புதிருமாக இராது. ஒன்றுக்கு ஒன்று அனுசரணையாகாவே இருக்கும். அப்படி எதிர் உரைகள் தந்தாலும் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்பதைச் சொல்லி நமது கருத்தைச் சொல்லலாம். நான் கூட ‘இந்திரனே சாலுங் கரி’ என்ற குறள் வரிகளுக்கு பரிமேல் அழகர் எழுதிய உரை தவறு என்று காட்டி பதின்மர் உறையில் ஒருவரும், புத்தரும் இந்திரனின் ஒழுக்கத்தைப் புகழ்ந்து கூறிய வரி என்று ஆதாரம் காட்டி நிரூபித்துள்ளேன்.. வேதங்களுக்கு சாயனர் எழுதிய வேத பாஷ்ய உரைகளை சங்கர மடங்கள் ஏற்பதும் இல்லை; புகழ்வதும் இல்லை. ஆனால் சாயனர் மகா மேதாவி என்று ஏற்றுக்கொள்வர்.
சுருங்கச் சொன்னால் உரை பேதங்களை எல்லோரும் வரவேற்றுள்ளனர்.
திராவிட உரைகள், அப்படியல்ல. அது விஷ(ம)ம்! எடுத்துக்காட்டுகள் தருகிறேன். இதன் மூலம் நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்த தமிழ் நூலின் உரைக்கும் 1965-க்கு முந்தைய நூல்களை நாடுங்கள்.
திருவள்ளுவர், அவ்வையார் பற்றிய பழைய கதைகளை புது நூல்களில் காணமுடியாது. அது தவறு என்று வாதாடுவோரும் பழைய கதைகளைச் சொல்லிவிட்டு, தனது கருத்துக்களை சொல்லலாம். ஏனெனில் அந்தக் கதைகள் பழைய நூல்கள் எல்லாவற்றிலும் உள
xxxx
புலியூயூர் கேசிகன்.
புலியூயூர் கேசிகன். புற நானூறு உரையைப் படித்தால் எவ்வளவு விஷமம் செய்திருக்கிறார் என்பது விளங்கும். பாரதியார் பாடலில் அவர், துலுக்கன் என்று எழுதிய வரிகளைக்கூட, பொதுமக்களுக்குப் பயந்து, துருக்கன் என்று சில அறிஞர்கள் மாற்றினாராம்.
இதே போல காஞ்சி பரமாசார்யார் பேசிய உரைகளில் கூட சில விஷயங்களை ரா.கணபதி ‘எடிட் செய்துள்ளார். ஆர் எஸ். எஸ். இ யக்கத்தின் பெருந்தலைவர், மஹா யோகி, கோல் வால்கர் எழுதிய BUNCH OF THOUGHTS BY M S GOLWALKAR ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ நூல் கூட ‘எடிட்’ செய்து வெளியிடப்படுகிறது. இவ்விரண்டுக்கும் காரணம் சிலர், பழைய விஷயங்களை இடம், பொருள், ஏவல் இல்லாமல் கண்டபடி உபயோகப்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான்.
ஏசுநாதர் ஆங்கிலத்தில் பேசவில்லை ; அவர் அராமிய மொழியில் கதைத்தார். அதைக் கிரேக்க மொழியில் உருக்குலைத்தனர். அதன் அடிப்படையில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேம்ஸ் என்பவர் ஆங்கிலத்தில் தந்தார். அதற்குப் பின்னர் நூற்றுக்கண்ணாக்கான மாற்றங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் பதிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ள ஒரிஜினல் கிரேக்க மொழி பைபிளை மொழி பெயர்க்க எவருக்கும் துணிவு இல்லை. அப்படி மொழிபெயர்த்தால் 1000 கணக்கில் மாற்றங்கள் வரும் என்பது அதை எட்டிப்பார்த்த, தொட்டுப்பார்க்க, அறிஞர்களுக்கு விளங்கியது.
தொல்காப்பியயத்தில் 2000 பட பேதங்கள் இருந்தன. ஆனால் பெரும்பாலும் பிரதி எடுத்ததில் ஏற்பட்ட எழுத்துப் பிழைகள்தான்; கருத்துப் பிழைகள் அல்ல. ஆகையால் பெரிய சர்ச்சைக்கு இடமில்லை.
மேற்கூறிய எல்லாவற்றில் இருந்தும் வேறுபட்டது திராவிட உரை விஷ(ம)ம்.
XXXXX
இதோ சில எடுத்துக்காட்டுகள்.
‘பார்ப்பார்’ என்ற சொல்லை புறநானூற்றில் குரவர் (குரு ) என்று மாற்றியுள்ளார் புலியூர் கேசிகன். இந்த விஷமத்தை தவறு என்று காட்ட நமக்கு ஆதாரமும் உள்ளது.
இதற்கெல்லாம் மூல காரணம் ‘கழக வெளியீடு’ என்பது அவ்வை துரைசாமிப்பிள்ளை எழுதிய நீண்ட உரையிலிருந்து தெரிகிறது
சங்க இலக்கியத்தின் பழைய நூல்களில் ஒன்று புறநானூறு. ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் காண்போம்.
புறம் பாடல் 34
பாடியவர்- ஆலத்தூர் கிழார்
சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது
“ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்
பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும் வழுவாய் மருங்கில் கழு வாயும் உள என,
நிலம்புடை பெயர்வதாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என அறம் பாடின்றே”
நன்றி கொன்றவருக்கு பரிகாரமே இல்லை. ஆனால் பிரமணர்களையோ, பசுக்களையோ, பெண்களையோ அவமானப்படுத்தியோருக்கு பரிகாரம் உண்டு.
பெண்களின் கருவை சிதைத்தோர்க்கு — என்பது இரண்டாவது வரி. இதில் கரு என்பதும் , சிதை என்பதும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்
இந்தப் பாடலில் மூன்றாவது வரியை கவனியுங்கள் ‘பார்ப்பார்’ என்ற சொல்லை குரவர் என்று புலியூர் கேசிகன் மாற்றியுள்ளார். இதை பாரி நிலையம் 1995ல் வெளியிட்டுள்ளது.இது விரிவாக்கிய, புதிய பாதிப்பு என்றும் உள்ளது.
இது வேறு பதிப்புகளில் இல்லாத ஒன்று. இது உரை வேறுபாடு அல்ல. பார்ப்பன துவேஷத்தால் கலக்கப்பட்ட விஷம்.
குரவர் என்ற சொல்லை சங்க இலக்கிய சொல்லடைவு நூல்களிலும் காணவில்லை.குரவர் என்பதை சரி என்று சொல்வோரும் அது ‘குரு’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவமே என்பதை ஒப்புக்கொள்ளவேண்டிவரும். காரணம் – தொல்காப்பியடித்திலோ சங்க இலக்கியத்திலோ ‘குரவர்’ இல்லை.
வர்த்தமானன் பதிப்பக வெளியீட்டில் குரவர் என்று போட்டுவிட்டு உள்ளே உரையில் அந்தணர் என்று எழுதியுள்ளார் மாணிக்கனார். அவர் அரைகுரையாக ‘காப்பி’ அடித்தது இதில் புலனாகிறது.
1958-ம் ஆண்டு. எஸ்.ராஜம் புறநானூற்றுப் பதிப்பில் ‘பார்ப்பார்’ என்றே உளது
நன்றி கொன்றவருக்கு பரிகாரமே இல்லை. இது வால்மீகி ராமாயண (4-34-12) ஸ்லோகத்தின் கருத்தை ஒட்டி எழுந்தது.
இதற்கெல்லாம் மூல காரணம் கழக வெளியீடு என்பது அவ்வை துரைசாமிப்பிள்ளை எழுதிய நீண்ட உரையிலிருந்து தெரிகிறது. கழக வெளியீட்டின் பல பதிப்புகளில்- குறிப்பாக திருமந்திர உரையில்- பார்ப்பன விரோத கருத்துக்களை நிறையவே காணலாம். அதாவது ‘யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளி போட்டுக்கொண்ட’ உரைகள்.
மேலும் அவ்வை துரை சாமிப்பிள்ளை, இதே பாடலில் காலை அந்தி, மாலை அந்தி என்று பிராமணர்களின் சந்தியாவந்தனம் பற்றிச் சொல்வதும், ரத்தி , சிதைத்தல் முதலிய ஸம்ஸ்க்ருத சொற்களை பயன்படுத்துவதும் தமிழ் இலக்கியம் முழுதும் பசுவையும் பிராமணர்களையும் இணைத்தே பாடி இருப்பதையும், 43-ஆவது பாடலில் சோழர்கள் “பார்ப்பார் நோவன செய்யலர்” (சோழர்கள் பிராமணர்களுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டார்கள் ) என்ற வரி வருவதையும் எடுத்துக் காட்டுகிறார். இறுதியாக தரும சாத்திர நூல்களில் இந்த மூன்று பாவ செயல்களும் (கோ ஹத்தி, பிரம்மஹத்தி , ப்ரூனுஹத்தி = பசு, பார்ப்பனர், கரு கொலைகள் ) சேர்ந்தே வருவதையும் துரைசாமிப் பிள்ளை காட்டுகிறார்.
சைவ சித்தாந்த கழகப் பதிப்பு விஷமிகளை சங்க இலக்கிய சொல்லடைவுகள் நிராகரித்தது மகிழ்ச்சிக்குரிய செயல் ஆகும்.
XXX
TAMIL JOKERS
பலரும் தங்கள் பெயர்களை தமிழ்ப்படுத்திக்கொண்டதாக நினைப்பதும் தவறு. சூர்ய நாராயண சாஸ்திரி என்ற மதுரைப் பார்ப்பனர் இதைத் துவக்கிவைத்தார். அவர் துவேஷத்தின் பெயரில் செய்யாமல் தமிழ் அபிமானத்தில் செய்ததை அவர் எழுத்துக்களில் காணலாம்.100 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழை முதலில் செம்மொழி என்று அறிவித்தவர்ம் அவரே
பரிதி மாற் கலைஞர் என்று அவர் பெயரை மாற்றினாலும் அதில் பரிதி, கலைஞர் என்ற சொற்கள் தமிழ் இல்லை என்பது அவருக்குத் தெரியும்.
ஐராவதம் என்பதை வெள்ளை வாரணம் என்று மாற்றினாலும் வாரணம் ஸம்ஸ்க்ருதமே. கருணா நிதியோ முழுக்க ஸம்ஸ்க்ருதப் பெயர். அது போதாதென்று கலைஞர் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லையும் சேர்த்துக் கொண்டார். அவர் எழுதிய தொல்காப்பியப் பூங்கா நூல் பற்றி தனியாக எழுதுகிறேன் .
இந்த வரிசையில் பெரிய Joker ஜோக்கர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளைதான். தமிழ் வாழ்த்து என்று ஒரு பாடலை எழுதி அதில் முழுவதும் ஸம்ஸ்க்ருத்ச் சொற்களைப் போட்டுவிட்டு ’ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையாவுன்’’என்று தமிழை ப் பாராட்டி எழுதி எழுதி “நான் ஒரு முட்டாளுங்க நல்லா படிச்சவங்க நாலு பே ரு சொன்னாங்க” — என்ற சந்திரபாபு வின் திரைப்படப் பாடலையும் நினைவுபடுத்துகிறார்.
தமிழில் நாடகமே இல்லை என்ற குறையைப் போக்க ஒரு ஆங்கில நாடகத்தைத் தழுவி மனோன்மணீயம் என்ற நாடகத்தை சுந்தரம் பிள்ளை எழுதினார் . பரணர் பாடலில் உள்ள 80 வரலாற்றுச் செய்திகளை விட்டு விட்டு ஊர் பேர் தெரியாத ஒரு ஆங்கில நாடகத்தை எடுத்துக்கொண்டு அதற்கு ஸம்ஸ்க்ருதப் பெயர் சூட்டி வெளியிட்டார். நல்ல வேளையாக சுவையும் தரமும் இல்லாத அந்த நாடகத்தை ஒருவரும் படிப்பதில்லை.
சம்ஸ்கிருதத்தைக் குறைகூறி சுந்தரம் பிள்ளை எழுதியதை தமிழ்நாடு அரசே நீக்கிவிட்டது. சிதைக்கப்பட்ட தமிழ் மொழி வாழ்த்தை எல்லோரும் பாடிக் கொண்டிருக்கிறார்கள்: ‘’ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையாவுன்’’ என்ற வரிகளை நீக்கி பாட்டையே சிதைத்துவிட்டார்கள்.
—- SUBHAM —
tags– திராவிட, அறிஞர் , உரை, புலியூர் கேசிகன், புறநானூறு