IF U DONT C PICTURES, GO TO MY OTHER BLOG swamiindology.blogspot.com
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,721
Date uploaded in London – – 7 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தொல்காப்பியப் பூங்கா என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய நூலில் பக்கத்துக்குப் பக்கம் கப்ஸா விட்டிருக்கிறார்; அதாவது கதை அளந்து இருக்கிறார். நல்ல வேளை , கப்ஸா அடிப்பதற்கு முன்னர் இளம்பூரண அடிகளும் நச்சினார்க்கினியரும் (மதுரை பாரத்வாஜ கோத்திரப் பார்ப்பான் ) என்ன சொன்னார்கள் என்று எழுதிவிட்டு தன கருத்தைச் சொல்கிறார். முன்னுரை எழுதிய கருணாநிதி, அன்பழகன் , நன்னன் ஆகியோர் இதுவரை தொல்காப்பியர் பற்றிய கருத்துக்களை நிராகரிக்கின்றனர். ஐந்திரம் என்று ஒன்று இல்லை, அகஸ்தியர் என்ற ஒருவர் இல்லை போன்ற பல பொன்மொழிகள்!
இன்று பாரதியார் போன்றோர் பாடிய பாடல்களில் , அதற்கு முன்னர் கம்பன் பாடிய, பரஞ்சோதி முனிவர் பாடிய பாடல்களில் எல்லாம் அகஸ்தியர்- தமிழ் தொடர்பு பாராட்டப்பட்டுள்ளது. அதையும் கூட சில இடங்களில் திரித்துக் காட்டியுள்ளனர் இவர்கள் சொல்லாமல் மறைக்கும் விஷயங்கள் அதிகம். ஒரே ஒரு எடுத்துக்காட்டை மட்டும் தருகிறேன்.
பனம்பாரனார் பாயிரத்தை ஏற்றுகொள்வோரும் நாலு வேதத்தில் வல்லவரான அதங்கோட்டு ஆச்சாரியார் ஏன் தொல்காப்பியருக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தார் என்பதை விளக்கவில்லை. கருணா நிதியோ எல்லாம் கதை என்று சொல்லி கதை அளக்கிறார்.
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” – என்ற பொருள் அதிகார சூத்திர உரையை மட்டும் எடுத்துக் கொள்வோம் ;
“அய்யர்” என்பது பிராமண புரோகிதர் இல்லை “உயர்ந்தோர்” என்று சொன்னவர் “கரணம்” என்ற சொல் தமிழ் சொல் அல்ல என்பதைச் சொல்லவில்லை. அவர் மறைத்தாரா அல்லது அவருக்கே தெரியாதா என்பதை யாம் அறியோம்.
கரணம் என்பது விதிகள், சடங்கு என்ற பொருளில் திருமண விஷயத்தில் பயன்படுகிறது . இதற்கான காரணம் மஹா பாரதத்தில் உள்ளது. ஒரு ரிஷியின் மனைவியை மற்றோருவர் இழுத்துக் கொண்டுபோனபோது அவளுடைய மகன் இது என்ன அக்கிரமம் என்று கதறுகிறான். அதற்கு விளக்கம் சொல்கையில் முன்காலத்தில் இப்படி விதிமுறைகள் இல்லாமல் வாழ்க்கை நடந்ததாகவும் பின்னர்தான் ஊர் அறிய சடங்குகளோடு கல்யாணம் நடத்தும் முறை வந்ததாகவும் மஹாபாரதம் சொல்கிறது. இதைத் தான் தொல்காப்பியர் “பொய்யும் வழுவும்” என்கிறார். அதைக்கட்டுப்படுத்த எழுந்த சடங்கு விதிகள்தான் “கரணம்” (INSTRUMENT) .
‘கரணம்’ தொல்காப்பிய பொருள் அதிகாரத்தைத் தவிர பதிற்றுப் பத்து பதிகத்தில் மட்டுமே வருகிறது. பதிகத்தில் வருவதை சங்க இலக்கியப் பகுதியாக ஏற்பது இல்லை
பொருள் அதிகாரம் – 3-140, 141, 142, 143, 144
பின்னர் சிலப்பதிகாரம், மணிமேகலையில் ஓரிரு இடங்களில் வருகிறது.
இதனால் தாமஸ் லெஹ்மான் , தாமஸ் மால்டன் (A Word Index for Cankam Literature by Thomas L and Thomas M) தொகுத்த சொல்லடைவில் “கரணம்” இல்லை
xxxxx
கரணம் – தமிழ்ச் சொல் இல்லை
அய்யர் யாத்தனர் கரணம் , மலர் 48, தொல்காப்பியப் பூங்கா , கலைஞர் மு.கருணாநிதி
மலர் 46-ல் கோவலன்-கண்ணகி கல்யாணம் ஏன் தோற்றுப்போனது என்று காரணம் சொல்கிறார்.
சிலப்பதிகார வரிகள் :- “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து” — திருமணம் நடந்தது
“பார்ப்பனர் ஓதிய மந்திரமும்- கோள் பார்த்துக் குறித்த நல் ஓரையும் அவர்களைப் (கோவலன்-கண்ணகி) பாதுகாத்திடவில்லை” என்று கருணாநிதி சொல்கிறார்.
xxxx
எனது உரை
தமிழர் காதில் நன்றாகப் பூ சுற்றுகிறார் . எப்படி?
ஐயர் மந்திரம் இல்லாத கல்யாணம் எல்லாம் வெற்றியாம். இதை எழுதியவருக்கு எத்தனை மனைவி என்று அறிக !!!
xxx
இதற்குப்பின்னர் தமிழில் முதல் முதலில் உரை எழுதிய இளம்பூரண அடிகளையும் அவரை அடியொற்றி உரை எழுதிய நச்சினார்க்கினியரையும் குறைகூ றுகிறார் அவர்கள் இருவரும் நால் வருண அடிப்படையில் உரை எழுதினர் என்று கருணாநிதி சொல்கிறார்.
தொல்காப்பிய பொருள் அதிகார சூத்திரம் :
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”
-பொருள் அதிகாரம் , கற்பியல் நூற்பா 4
பக்கம் 306-ல் வெள்ளை வாரணார் விளக்கத்தை சேர்த்துள்ளார்
“அய்யர் என்பது சிறப்புடைய பெரியோரைக் குறிக்கும் தமிழ்ச் சொல் ஆகும். ஆர்ய என்பதன் திரிபாக பிறழ உணர்ந்து உரை எழுதியோரும் உண்டு”.
இதற்குப் பின்னர் அடிக்கடி சந்தித்த காதலன் காதலிக்கு திருமணம் செய்ய முடிவு செய்தவுடன் ஒருவர் ‘அய்யரை அழைப்போம்’ என்றார் ; வேறு குலத்தவர் எதற்காக? என்று ஒருவர் கேட்க “இந்த அய்யர் அறநெறி வகுத்த பெரியவர்” என்ற விளக்கம் வேறு!!!
xxxx
எனது கருத்து
இதில் விளக்கப்படாத விஷயம் ‘கரணம்’ என்ற சொல். அது தமிழ்ச் சொல் அல்ல .
எப்படி நிரூபிக்க முடியும் ?
தொல்காப்பியத்தைத் தவிர சங்க இலக்கியத்தில் எங்கும் இந்தச் சொல் இல்லை! தமிழில் முழுக்க முழுக்க தமிழர் கல்யாணத்தை விவரிக்கும் இரண்டே பாடல்கள்தான் உண்டு- அக நானூறு 86, 136.
அதிலும் இச் சொல் இல்லை. மேலும் அங்கும் ரோகிணி (சகடம்) நட்சத்திரத்தில் கல்யாணம் செய்த குறிப்புதான் உளது. அதை வராஹ மிஹிரர் நூல்களிலும் காண்கிறோம். அதுவும் சகடம்/வண்டி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் ( ச- எழுத்தில் சொற்கள் வராது என்பது தொல்காப்பிய விதி)
தொல்காப்பியம் தவிர கரணம் வரும் இடமெல்லாம் “கரத்தால் செய்யக்கூடிய பணிகளே கரணம்” என்றும் அவை தந்திர கரணம், சித்திர கரணம் , நாட்டிய கரண முத்திரைகள் என்றே சிலப்பதிகாரத்தில் வருகிறது
கரணம் என்பதை நாம் ‘உபகரணம்’ முதலிய இடங்களில் இன்றும் பயன்படுத்துகிறோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி என்ற சம்ஸ்க்ருத – தமிழ் பேரறிஞர் இது ஹோமச் சடங்கை குறிக்கும் சொல். இது யாக்ஞ வாக்ய ஸ்ம்ருதியில் உளது என்று காட்டுகிறார்.
அக்நவ்கரணம் – யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி 1-150
இது ஒன்றை மட்டும் காட்டினால் நாம் ஒதுக்கித் தள்ளிவிடலாம் அவரோ புறநானூற்றிலும் தொல்காப்பியத்திலும் உள்ள ஏராளமான விஷயங்களை 1946-ல் எழுதிவிட்டார்.
இறுதியாக ஒரு சொல்- “ஐயர் யாத்தனர்” என்று தொல்காப்பியர் சொன்னதே அது “ரிக்- அதாவது செய்யுள் = மந்திரம்” என்றும் விளங்கும். இன்றும் ரிக் வேத கல்யாண மந்திரங்கள் (Rig Veda 10-85) எல்லா பிராமணர் வீடுகளிலும் முழங்குகிறது. யாத்தல் என்றால் ‘கட்டுதல்’, ‘செய்யுள் இயற்றல்’; யாப்பு- செய்யுள் இலக்கணம்.
மேலும் தமிழர்கள் கல்யாணத்துக்குப் பயன்படுத்தும் வதுவை (திருமணப் பெண், மனைவி) என்பதும் ஸம்ஸ்க்ருதச் சொல்லே. ஆக முழு தமிழர் திருமணத்தைக் காட்டும் அகம்.86, 136 பாடல்கள், சம்ஸ்க்ருதத்தில் உள்ள பழக்க வழக்கங்களைக் காட்டுகின்றன (உ.ம் . சகடம்/ரோகிணி நட்சத்திரம், வதுவை)
காதல் (களவு முறைக்) கல்யாணங்களில் எத்தனை தற்கொலைகள் , எத்தனை கொலைகள், எத்தனை கள்ளத் தொடர்புகள் என்பதை நாள்தோறும் நமக்கு பத்திரிகைகள் அளிக்கின்றன ; அதாவது கருணாநிதி சொல்வது பொய்/ கப்ஸா என்று நமக்குக் காட்டுகின்றன ; இந்தியாவிலேயே அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலம் மஹாராஷ்டிரமும் தமிழ்நாடும் தான் என்று நமக்கு கலகைகளஞ்சிய தகவல்களும் சொல்கின்றன. அதில் பெரும்பாலானவை காமம், கள்ளத் தொடர்பு, காதல் என்பதையும் நாளேடுகள் நிரூபிக்கின்றன.
மேலும் காதல் கல்யாணமும் புதிதல்ல . மனு ஸ்ம்ருதி சொல்லிய எட்டுவகைத் திருமணங்களை அப்படியே தொல்காப்பியர் சொன்னதையும் தமிழ் அறிஞர்கள் அறிவர். உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலம் நாடகம் காதலில் மலர்ந்ததே. சங்க காலத்திலேயே பேகன், DIVORCE டைவர்ஸ் செய்ததையும் ஆங்கே புலவர்கள் சமாதானம் செய்ததையும் சங்க இலக்கியம் செப்புகிறது.
பகவத் கீதை ஸ்லோகத்தில் காமம், க்ரோதம், லோபம் என்ற மூன்றுதான் நரகத்தின் நுழைவாயில்கள் GATE WAYS TO HELL என்று கிருஷ்ண பரமாத்மா சொன்னதையும் இன்று சிறை ச் சாலைகள் நிரூபிக்கின்றன.
50, 60 ஆண்டுகளாக திராவிடர்கள் விடும் கப்ஸாக்களை படிப்பதற்கு முன்னர், வை தாமோதரம் பிள்ளை, ந.மு வேங்கடசாமி நாட்டார், வையாபுரிப் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் முதலிய அறிஞர்கள் எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும்
xxxxx
1935 ஆனந்த விகடன் தமிழ் அகராதியில் கரணம்
கரணம்
அந்தரித்தியம், அறுதிச் சீட்டு, உபகரணம், எண்ணிக்கை,
எது, ஐம் பொறி , கணிதம், கலவி, காரணம், கூத்து , செய்கை,
கூத்தினோர் விகற்பம், நற்செய்கை, பஞ் சாங்கத்தில் ஒன்று,
விருப்பம், கையாற் செய்யும் தொழில், இந்திரியம், அந்தக்கரணம், மனம்,
விவாகச் சடங்கு, தலை கீழாகப் பாய்கை , கருவி, எண் , சாசனம், கணக்கன்,
கருமாதிச் சடங்குக்கு உரிய பண்டங்கள், உடம்பு, மணச் சடங்கு, நாகவம்,
கி மிஸ்துக்கினம் , கரண காரணம், புணர்ச்சி, சாதகதமம், சாத ன பத்திரம் ,
தத்துவம், துணைக்கருவி, விநோதக்கூத்து ஆறினுள் ஒன்று,சாசனம், புத்தி,
கன்மேந்திரியம், அகம்காரம், பவம் , பாலவம், கவுல வம், வனசை , சகுனி,
பத்திரம், சதுர்பாதம், தைது லை , கரசை.
xxxx
Sanskrit dictionary
[«previous (K) next»] — Karana in Sanskrit glossary
Source: DDSA: The practical Sanskrit-English dictionary
Karaṇa (करण).—a. [kṛ-lyuṭ]
1) Making, doing, effecting, producing.
2) (Ved.) Clever, skilled; रथं न दस्रा करणा समिन्वथः (rathaṃ na dasrā karaṇā saminvathaḥ) Rv.1.119.7.
-ṇaḥ 1 (Ved.) An assistant. यमस्य करणः (yamasya karaṇaḥ) Av.6.46.2.
2) A man of a mixed tribe.
3) A writer, जज्ञे धीमांस्ततस्तस्यां युयुत्सुः करणो नृप (jajñe dhīmāṃstatastasyāṃ yuyutsuḥ karaṇo nṛpa) Mb.1.115. 43; Ms.1.22.
4) A child. cf. …… करणः शिशौ । शूद्राविशोः सुतेऽपि स्यात् (karaṇaḥ śiśau | śūdrāviśoḥ sute’pi syāt) Nm.
-ṇam 1) Doing, performing, accomplishing, effecting; परहित°, संध्या°, प्रिय° (parahita°, saṃdhyā°, priya°) &c.
2) Act, action.
3) Religious action; Y.1.251.
4) Business, trade.
5) An organ of sense; वपुषा करणोज्झि- तेन सा निपतन्ती पतिमप्यपातयत् (vapuṣā karaṇojjhi- tena sā nipatantī patimapyapātayat) R.8.38,42; पटुकरणैः प्राणिभिः (paṭukaraṇaiḥ prāṇibhiḥ) Me.5; R.14.5.
6) The body; उपमानमभूद्विलासिनां करणं यत्तव कान्तिमत्तया (upamānamabhūdvilāsināṃ karaṇaṃ yattava kāntimattayā) Ku.4.5.
7) An instrument or means of an action, न तस्य कार्यं करणं न विद्यते (na tasya kāryaṃ karaṇaṃ na vidyate) Śvet.6.8; करणं च पृथग्विधम् (karaṇaṃ ca pṛthagvidham) Bg.18.14.18. उपमितिकरणमुपमानम् (upamitikaraṇamupamānam) T. S.; तस्य भोगाधिकरणे करणानि निबोध मे (tasya bhogādhikaraṇe karaṇāni nibodha me) Mb.3.181.19.
8) (In Logic) The instrumental cause which is thus defined :व्यापारवद- साधारणं कारणं करणम् (vyāpāravada- sādhāraṇaṃ kāraṇaṃ karaṇam).
9) A cause or motive (in general).
10) The sense expressed by the instrumental case (in gram.); साधकतमं करणम् (sādhakatamaṃ karaṇam) P.1.4.42; or क्रियायाः परिनिष्पत्तिर्यद्- व्यापारादनन्तरम् । विवक्ष्यते यदा यत्र करणं तत्तदा स्मृतम् (kriyāyāḥ pariniṣpattiryad- vyāpārādanantaram | vivakṣyate yadā yatra karaṇaṃ tattadā smṛtam) ||
11) (In law) A document, a bond, documentary proof; Ms.8.15,52,154.
12) A kind of rhythmical pause, beat of the hand to keep time; अनुगर्जितसंधिग्धाः करणै- र्मुरजस्वनाः (anugarjitasaṃdhigdhāḥ karaṇai- rmurajasvanāḥ) Ku.6.4.
13) (In Astrol.) A Division of the day; (these Karaṇas are eleven).
-bava, bālava, kaulava, taitila, gara, vaṇija, viṣṭi, śakuni, catuṣpāda, nāga and [rkistughna].
14) The Supreme Being.
15) Pronunciation.
16) The posture of an ascetic.
17) A posture in sexual enjoyment. बोभुज्यते स्म करणेन नरेन्द्रपुत्री (bobhujyate sma karaṇena narendraputrī) Bil. ch.42. वात्स्यायनोक्तकरणैर्निखिलैर्मनोज्ञै । संभुज्यते कविवरेण नरेन्द्रपुत्री (vātsyāyanoktakaraṇairnikhilairmanojñai | saṃbhujyate kavivareṇa narendraputrī) || Ibid.45.
18) A field.
19) Plastering with the hand.
2) The usage of the writer caste.
21) The Principle of intelligence; दृष्टाः करणाश्रयिणः (dṛṣṭāḥ karaṇāśrayiṇaḥ) Sāṅ. K.43.
22) (In Astron.) Name of a treatise of Varāhamihira on the motion of planets.
-ṇī 1) A woman of a mixed caste. माहिष्येण करण्यां तु रथकारः प्रजायते (māhiṣyeṇa karaṇyāṃ tu rathakāraḥ prajāyate) Y.1.95.
2) Absurd or irrational number.
-sutā f. An adopted daughter.
–subham —
Tags- ஐயர் யாத்தனர் கரணம் , தொல்காப்பியம், கருணாநிதி, கப்ஸா , பொய் உரை , தமிழ் சொல் இல்லை