PICTURE OF SAPTA RISHI STARS WITH VASISTHA AND ARUNDHATI
Post No. 10,724
Date uploaded in London – – 8 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இந்தியாவிலும் மற்ற பூமியின் வட கோளார்த்த நாடுகளில் வசிப்போரும் இரவு நேரத்தில் வானத்தின் வடக்கு திசையில் பார்த்தால் தெரியும் நடசத்திரக்கூட்டத்துக்குப் பெயர் சப்தரிஷி மண்டலம் . இதற்கு வானசாஸ்திர வரைபடத்தில் இன்றும் உள்ள பெயர் – பெருங்கரடி நட்ச த்திரக் (Ursa Major= Great Bear Constellation) கூட்டம். ஹிந்து மத ரிஷி (Rsi) வெளிநாடுகளில் எப்படி கரடி (Rksa= Ursa= Arktos) ஆனார் என்பது பற்றி சுவையான கதை உளது. இந்த சுவையான கதை, நமக்கும் கிரேக்க நாட்டுக்கும், ஈரான் போன்ற நாடுகளுக்கும் இடையே வேத காலத்திலேயே தொடர்பு இருந்ததையும் காட்டுகிறது. அலெக்ஸ்சாண்டருக்குப் பின்னரே இந்திய- கிரேக்க தொடர்பு வந்தது என்ற வெள்ளைக்காரன் – கொள்ளைக்காரன் – சித்தாந்தத்தையும் போட்டு உடைக்கிறது.
தமிழில் சப்தரிஷி மண்டலம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இமயம் முதல் குமரிவரை வழிபடப்படும் நடத்திரங்கள் சப்த ரிஷி மண்டலம் என்னும் 7 விண் மீன் களாகும் . அதிலும் குறிப்பாக வசிஷ்ட நடசத்திரத்தைச் சுற்றிவரும் அருந்ததி நட்சத்திரத்தையும் குமரி வரையுள்ள இந்துக்கள் வணங்கி வருகின்றனர்.இந்துக்களின் வாழ்வுடன் வேத காலம் முதல் பின்னிப் பிணைந்தது 7 நக்ஷத்திரங்கள்.
நற்றிணைப் பாடல் 231 :- முதல் சான்று
மையற விளங்கிய மணி நிற விசும்பின்
கைதொழு மரபின் எழுமீன் போலப்
பெருங்கடல் பரப்பின் இரும்புறந்தோயச்
………………………………. (புலவர் இளநாகனார்)
பொருள்
மாசற விளங்கிய நீலமணி போன்ற நிறத்தையுடைய ஆகாயத்தின் கண்ணே தோன்றி உலகத்தாரால் கைதொழப்படும் தகுதி உடைய முனிவரின் தோற்றமாகிய ஏழு மீன்களைப்போலே பெய்ய கடற்பரப்பின் கண்ணே ……………………..
இதிலிருந்து சபதரிஷி மண்டல நடசத்திரங்களை வணங்குவது மரபு என்றும் அது நெய்தல் நில காதலன், காதலிக்கும், தோழிக்கும் தெரிந்த உண்மை என்பதும் விளங்கும்.
புலவர் இளநாகனார் சொல்லுவது போல, இருண்ட வானத்தை நீங்கள் அண்ணாந்து பார்த்தால் வடதிசையில் பட்டம் பறப்பது போல 7 நட்சத்திரங்களைக் காணலாம். ஆஸ்திரேலியா , தென் அமெரிக்கா , தென் ஆப்ரிக்கா போன்ற தென் கோளார்த்த நாடுகளில் தெரியாது.
இந்தப் பட்டத்தில் 4 நட்சத்திரங்கள் ஒரு சதுரம் போலவும், மீதி 3 பட் டத்தின் ‘வால்’ போலவும் இருக்கும். வால் பகுதிதான் மிகவும் முக்கியமானது; அதில் கடைசி நட்சத்திரத்துக்கு முந்தைய நட்சத்திரம் வசிஷ்ட மகரிஷி. அதைச் சுற்றிவரும் நட்சத்திரம் அருந்ததி. அது தெரிந்தும் தெரியாமலும் மாறி மாறி தோன்றும். இதைப் பார்ப்பது இந்துக்களின் திருமணச் சடங்கில் அருந்ததி காட்டல் அல்லது அருந்ததி பார்த்தல் என்று அழைக்கப்படும்.
திருமண நாளன்று முதல் இரவு அறைக்குள் நுழைவதற்கு முன்னர் தமிழர்கள் இதை பார்க்கவேண்டும். உடனே அதைக்ககாட்டும் பிராஹ்மண புரோகிதர் இப்படி இணைபிரியாமல் வாழுங்கள் என்று சொல்லி வாழ்த்துவார் . இது வேதம், மனு ஸ்ம்ருதி, சங்க இலக்கியம், பிற்கால சிலப்பதிகாரம், திருக்குறள் முதலிய நூல்களில் வருகிறது. இதை முன்னரே எழுதியுள்ளேன் . இதோ சுருக்கமாக ..
“இதோ தமிழர்கள் வணங்கிய வடக்கத்திப் பெண் அருந்ததி:—
FROM MY OLD ARTICLE கட்டுரை எண்:- 1131; தேதி—26 ஜூன் 2014.’அற்புதப் பெண்மணி அருந்ததி!’
1)“வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை” (புறநானூறு 122)
மலையமான் திருமுடிக்காரியின் மனைவி பற்றி கபிலர் பாடிய பாடல் இது. உனது மனைவி வடமீன் (அருந்ததி) போன்று (புரையும்) கற்பிற் சிறந்தவள். (மடமொழி அரிவை= இனிய சொற்களை உடைய பெண்).
2)“அருந்ததி அனைய கற்பின் “(ஐங்குறுநூறு 442, பேயனார் பாடிய பாடல்)
3)விசும்பு வழங்கும் மளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் (பதிற்றுப்பத்து 31—27/28)
பொருள்:– வான உலகத்தில் திரியும் தெய்வப் பெண்களில் சிறந்தவளான புகழ்மிகு விண்மீன் அருந்ததிக்கு நிகரானவள்.
எந்தக் கற்புக்கரசியைப் புகழ்ந்தாலும் அவளை இப்படி அருந்ததியோடு ஒப்பிடுதல் தமிழர்தம் மரபு.
4)பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையின் கற்பின் நறுநுதல் (பெரும்பாணாற்றுப்படை 302-303)
5)வடமீன் போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலித்தொகை 2—21)
6)கடவுள் ஒருமீன் சாலினி (பரிபாடல் 5).
7)தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் (சிலப்பதிகாரம் 1-27)
8)சாலி ஒருமீன் தகையாளை — (சிலப்பதிகாரம்)
9)அங்கண் விசும்பின் அருந்ததி அன்னாளை (சிலப்பதிகாரம்)
சிலப்பதிகாரத்தில் கண்ணகியை வருணிக்கும் இளங்கோ அடிகள், அவளை அருந்ததிக்கு ஒப்பீட்டுப் பாடிய வரிகள் இவை.
இதை கிரேக்கர்கள் ஏன் கரடிகள் என்று அழைத்தனர் ? என்பதைக் காண்போம்
ரிக்ஸ = கரடி – சம்ஸ்க்ருதம்
உர்சா = கரடி – லத்தீன் மொழி (URSA= R/ursa=Rishaya)
ஆர்க்ட்டோஸ் = கரடி = கிரேக்க மொழி
சப் தரிஷி மண்டலம் = URSA MAJOR = GREAT BEAR= DIPPER= CHARLES’ WAIN = HIPPOPOTAMUS = SEVEN OXEN ETC.
WAIN= WAGON= VAHANA IN SANSKRIT
அலெக்ஸ்சாண்டருக்கு முன்னரே நமக்கும் கிரேக்க நாட்டுக்கும் தொடர்பு உண்டு என்பது பிதகோரஸ் தியரம் (Pythagoras Theorem) முதலியவற்றில் இருந்து தெரிகிறது. அலெக்ஸ்சாண்டர் இந்தியா வந்த காரணமே ரிஷி முனிவர்களை சந்திக்கத்தான் . அலெக்சாண்டரின் குரு போன்றவர் அரிஸ்டாட்டில்; அவரது குரு பிளாட்டோ; அவரது குரு சாக்ரடீஸ்; அவரது குரு உபநிஷத ரிஷிகள்; ‘உன்னையே நீ அறிவாய்’ என்ற அவரது வாசகம் பகவத் கீதை, உபநிஷத்தில் உள்ள வாசகம்; உபதேசம்
Rishis of Upanishads- Pythagoras- Socrates- Plato- Aristotle- Alexander
மேலும் இந்துக்களை போல 7 நட்சத்திரங்களையும் ஒருசேர கிரேக்கர்கள் , ரோமானியர்கள் பார்க்கவில்லை. 4 வேடர், 2 நாய்கள் அல்லது 3 நாய்கள் அல்லது கரடிகள் –இப்படியெல்லாம் கதை எழுதினர் ; நாம் ஒ ருவர்தான் 7 புனிதர்களின் பெயர் சூட்டி இன்றுவரை நட்சத்திரங்களையும் வணங்குகிறோம். ரிஷிகளையும் வணங்குகிறோம். பிராமணர்கள் தினமும் 3 வேளை செய்யும் சந்தியாவந்தனத்தில் 7 ரிஷிகள் பெயரையும் சொல்லுவார்கள். அதே வரிசையில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி இலக்கண புஸ்தகத்தில் எழுதியுள்ளார். தமிழ் நாட்டில் 2000 ஆண்டுகளாக சந்தியாவந்தனம் நடைபெறுவதை புறநானூற்றின் 34 ஆவது பாடலில் காலை அந்தி, மாலை அந்தி என்று புலவர் ஆலத்துர் கிழார் பாடுகிறார். இன்ன பிற காரணங்களால், கிரேக்கர்கள் அரைகுறையாகக் காப்பி அடித்த விஷயம்தான் இந்த ரிஷி= கரடி மர்மத்தின் பின்னணி.; விளக்கம் பெற தொடர்ந்து படியுங்கள்
Xxxxxx
தொல்காப்பியத்தில் உள்ள ஓரை (Orai= Hora= Hour) என்ற சொல்லும் கிரேக்க ஹோரா (Hora in Greek is Hour in English) என்பதிலிருந்து வந்ததே என்று சொல்லி வையாபுரிப்பிள்ளை போன்ற அறிஞர்களும் கூட மதிமயங்கிப் போனார்கள். இதனால் தொல்காப்பிய காலத்தையும் ஜோதிட சாஸ்திரத்தில் ஹோரை குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னரும் வைத்தார். அதுபற்றி விவாதிக்க நான் இப்போது வரவில்லை.
வெள்ளைக்காரன் சித்தாந்தம் என்ன என்பதைச் சொல்லவே அந்த உதாரணம். ஹோமர் எழுதிய கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலியட் அல்லது ஆடிஸி Iliad and Odyssey (சில நாடுகளில் ஒடிஸி என்று உச்சரிப்பர்) காவியங்களில் ஒரு சம்ஸ்க்ருத சொல் இருந்து, அதே சொல் அதற்கு முந்தைய ரிக் வேதத்தில் வந்தால் , பார்த்தீர்களா! நாங்கள் அன்றே சொன்னோம்; நாம் அனைவரும் ஒரு காலத்தில் மத்திய ஆசியாவில் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தோம். ஆரியர் என்று பெயர் கொண்ட நாடோடிக் கும்பல் கைபர் கணவாய் வழியே இந்தியாவுக்குள் நுழைந்தது. நாங்கள் கோமணத்தோடு ஜெர்மனிக்குள்ளும் கிரேக்கம் முதலிய நாடுகளுக்கும் சென்றோம். அப்போது பயன்படுத்திய சொல்லில் இதுவும் ஒன்று என்பர்.. அதாவது அவர்கள் இந்துக்களிடமிருந்து கடன் வாங்க வில்லையாம்.
ஹோரை போன்ற சொற்கள் முதலில் கிரேக்க மொழியில் வந்து, பின்னர் நமது ஜோதிட சாஸ்திரத்தில் வந்தால் பார்த்தீர்களா, நாங்கள் அன்றே செப்பினோம். இந்துக்களுக்கு கணக்கும் தெரியாது; ஜோதிடமும் தெரியாது. நாங்கள் ஐரோப்பியர்கள்தான் எல்லாம் சொல்லிக் கொடுத்தோம் என்று கதைப்பார்கள்.
அவர்கள் கையாளும் மூன்றாவது தந்திரமும் உண்டு. திடீரென்று இலக்கியம், எழுத்து எதுவும் இல்லாத முண்டா மொழி Munda Language பெயரைச் சொல்லுவார்கள்; பிராஹுய் மொழி என்பார்கள் (அதில் 99 சதம் சம்ஸ்க்ருதம் மூன்றே எண்கள் தமிழ்!!) திடீரென்று அவர்களே குப்தர் காலத்தில் வந்தவை என்று சொன்ன புராணக் கதைகளை சான்று காட்டுவார்கள். திடீரென்று நமக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்த சாயனர் எழுதிய வேத பாஷ்யத்தைக் காட்டுவர். சாயனர் சொல்லாத ‘ஆரிய’, குமாரில பட்டர் சொல்லாத ‘’திராவிட “இனம்” பற்றிக் கதைப்பார்கள், அவர்கள் இருவரும் ஆரிய திராவிட என்ற சொற்களை இனம் என்ற பொருளில் பயன்படுத்தவே இல்லை. திசையைக் குறிக்கவும்,ஒருவர் ‘பண்பாடும் நாகரீகமும் நன்னடத்தையும் உள்ளவர்’ என்பதைக் குறிக்கவே பயன்படுத்தினர். தமிழ் சங்க இலக்கியத்திலும் பாரதியார் பாடல் முழுவதும் ‘ஆரிய’ என்ற சொல் இந்தப் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது. சுருங்கச் சொன்னால் அவர்கள் யாதுதானர்கள். வாலமீகியும் ரிக்வேதமும் பயன்படுத்தும் யாதுதானர்களின் பொருள்= வேறு வேறு உரு எடுத்து மயக்கும் ராக்ஷஸர்கள்.
TO BE CONTINUED………………………………..
XXXXXXXXXX
PICTURE OF SRI LANKAN STAMP ON URSA MAJOR
Tags- கரடி, ரிஷி, சப்த ரிஷி, நட்சத்திரம் , எழுமீன் , ஏழு கிரேக்க, லத்தீன் , ஊர்சா,