Post No. 10,738
Date uploaded in London – – 12 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புறநானூற்றில் மிஸ் MISS நப்பசலை எழுதிய கவிதை எண்.174
அவளுடைய முழுப்பெயர் மாறோக்கத்து நப்பசலை .
அவர் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய 2 அதிசய கண்டுபிடிப்புகளை சொல்கிறார். அதுவும் கூட முதல் ஐந்தே வரிகளில் சொல்கிறார். அது மட்டுமல்ல; அதில் சிலேடை (இரு பொருள் PUN) வைத்துப் பாடுகிறார். பெரிய அறிவாளி ஆக இருக்க வேண்டும்!!!
பின்னணி என்ன?
சோழ மன்னன் , பகைவரிடம் தோற்றுப்போய்,முள்ளூர் மலையில் ஒளிந்து கொண்டிருந்தான். அதனால் அந்நாடு வருந்தியது. சோழிய ஏனாதி திருக்கண்ணன் அம் மன்னனுக்கு உதவி செய்து மீண்டும் அவனை அரியணையில் அமர்த்தினான். அவனைப் பாராட்டி நப்பசலை பாடிய பாடல் இது .
“அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு
…………………………. புறம். 174
பொருள்
மற்றவரை வருத்தும், அச்சம் பொருந்திய அசுரர் , ஞாயிற்றை எடுத்துக்கொண்டு போய் மறைத்தனர். தொலைவில் விளங்கக்கூடிய அந்த ஞாயிற்றைக் காணாததால் இருள் உலகதத்தாரின் கண்ணை மறைக்க, வட்டமான உலகத்தின் நோய் / துன்பம் நீங்குமாறு , மிகுந்த வன்மை உடைய ‘மை’ போன்ற கரிய நிறம் கொண்ட மேனியனான திருமால் , அந்த ஞாயிற்றைக் கொண்டுவந்து, இந்த உலகத்தின் இருள் நீங்குவதற்காக வா னத்தில் நிறுத்தினான் . அது போல………
இங்கு மிகப்பழங்கால சூரிய கிரஹணம் (SOLAR ECLIPSE) பற்றிய அருமையான விஞ்ஞான உண்மை வெளிப்படுகிறது. இரண்டாவது இந்த பூமி வட்டமானது (EARTH IS ROUND) என்பதை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பெண்மணி சொல்கிறார் (பருதி ஞாலம்=ROUND EARTH)
ஆனால் பருதி என்பது சம்ஸ்க்ருதம். சூரியனுடனும் இந்தச் சொல் சில பாடல்களில் வருகிறது கோவிலில் காட்டும் ‘பரி வட்டம்’, ஐரோப்பிய மொழிகளில் வட்டத்தின் சுற்றளவைக் குறிக்க பயன்படும் PERI METER பெரி மீட்டர் முதலிய நூற்றுக்கணக்கான சொற்கள் சம்ஸ்க்ருதத்தில் இருந்து பிறந்தவை. மேலும் இவர் சொல்லும் சூரிய கிரஹணக் கதை ரிக் வேதத்திலும் மகாபாரதத்திலும் புராணத்திலும் வரும் கதையாகும் .
அதை முதலில் பார்த்துவிட்டு சிலேடைச் (PUN) சுவைக்கு வருவோம் .
மூன்று சூரிய கிரஹணங்கள் பழைய சம்ஸ்க்ருத நூல்களில் உள ; அவையாவன :-
1. அனுமன் சூரியனை விழுங்கிய கதை ; (அகஸ்தியர் கடலை குடித்தார் என்றால் அவர்தான் முதல் முதலில் , பிராமணன் கடலைக் கடக்கக்கூடாது என்று மனு நீதி நூல் சொன்னதையும் மீறி முதல் முதலில் சமுத்திரத்தைக் கடந்தார் ; தென் கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று 1500 ஆண்டுகளுக்கு கொடிகட்டிப் பறந்த பிரமமாண்டமான ஹிந்து சாம்ராஜ்யத்தை மலேசியா, சிங்கப்பூர், லாவோஸ், வியட்நாம் , தாய்லந்து , இந்தோனேஷியா , பிலிப்பைன்ஸ் நாடுகளில் நிறுவினார் என்று பொருள்.) அது போல அனுமன் பிறந்த போது ஒரு சூரிய கிரஹணம் ஏற்பட்டது என்பதை இப்படிச் சொல்வர்.
இரண்டாவது கதை மஹா பாரதத்தில் உள்ள பிரசித்தமான கதை:
சக்ர வியூஹத்தில் சிக்கிய அபிமன்யுவை 13-வது நாள் போரில் கவுரவர்கள் கொல்கின்றனர். இதற்குப் பழிவாங்குவதற்காக சிந்து-சரஸ்வதி நாகரீக பகுதியை ஆண்ட ஜயத்ரதனை மறுநாள் மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் வெட்டிக் கொல்வேன் என்று அர்ஜுனன் சூளுரை செய்கிறான். மறுநாள் சூரிய அஸ்தமனம் நெருங்கிவிட்டது. அர்ஜுனன், ஜயத்ரதனை நெருங்கக் கூட முடியவில்லை. ஆனால் கிருஷ்ணனுடன் ஒரு ரஹஸ்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. மறுநாள் சூரிய கிரஹணம். இது பாண்டவர்களில் மிகப்பெரிய வானியல் நிபுணர்களான (Great Astronomers Nakula- Sahadeva) நகுல- சகதேவன் போன்றோருக்கே தெரியும். சூரிய கிரஹணத்தில் சூரியன் மறைந்துவிட்டான் என்பதை அறியாத கவுரவர்கள் அஸ்தமனம் ஆகிவிட்டது என்று எண்ணி ஆயுதங்களைக் கீழே போடுகின்றனர். கிருஷ்ணனுக்கு அது கிரஹணம் என்றும் எந்த முழு சூரிய கிரகணமும் 7 நிமிடங்களுக்கு மேல் நீடிக்க முடியாது என்றும் தெரியும் . சில நிமிடங்களுக்கு பின்னர் அர்ஜுனனனுக்கு சிக்னல் SIGNAL தருகிறார். அவன் அம்பால் ஜயத்ரதன் தலையை சீவி எறிகிறான். இதை சூரிய கிரஹணம் என்று சொல்லாமல் கிருஷ்ண பரமாத்மா, தனது சுதர்சன சக்கரத்தால் சூரியனை மறைத்தார் என்று கிருஷ்ண பக்கதர்கள் செப்புவர். சூரிய சந்திரர்களைப் ராகு, கேது பாம்புகள் விழுங்குவதுதான் கிரஹணம் என்று பாமர மக்களுக்குச் சொல்லும் கதை போன்றதே இதுவும்.!
சூரிய கிரஹணம் அமாவாசையிலும் சந்திர கிரஹணம் பவுர்ணமியிலும்தான் வரும் என்பது இந்துக்களுக்குத் தெரியும். மஹாபாரத யுத்தம் அமாவாசையில் துவங்கியது ; 18 நாள் நடந்தது . பின்னர் எப்படி நடுவில் ஒரு அமாவாசை சாத்தியம் என்று பலர் நினைக்கலாம். மகாபாரத யுத்தம் 18 நாட்களே நீடித்தது உண்மைதான். ஆனால் யுத்தம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் நடந்தது (Alternate days) .
மூன்றாவது குறிப்பு உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் வருகிறது. சப்த ரிஷிக்களில் ஒருவரான அத்ரி மக ரிஷி மிகப்பெரிய வான சாஸ்திரி. அவர் சூரியனை மறைவிடத்தில் இருந்து பிடித்து வந்து வானத்தில் நிலைநாட்டியதை பல வேத காலப் புலவர்களும் குறிப்பிடுவர். உண்மையில் அவருக்கும் சூரிய கிரஹணம் பற்றியும் அதன் காலம் எவ்வளவு நீடிக்கும் என்பதும் நன்கு தெரியும் . அவர் வானத்தில் சூரியனை மீண்டும் நிறுத்தினார் என்ற வரி வேதத்தில் அடிக்கடி வருகிறது இதையும் மனதிற்கொண்டு நப்பசலை பாடி இருக்கலாம்
ஆக நப்பசலை சொன்ன கிரஹணம் எது என்பதைக் காண்போம்.; அத்தோடு தமிழன் மட்டுமே உலகம் உருண்டை என்பதைச் சொன்னானா என்றும் அடுத்த பகுதியில் காண்போம் ………………..
தொடரும்………….
tags- மாறோக்கத்து நப்பசலை,சூரிய ,கிரஹணம், உலகம் உருண்டை, அணங்குடை அவுணர்