Post No. 10,741
Date uploaded in London – – 13 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழ்ப் பெண்ணின் மஹத்தான 2 கண்டுபிடிப்புகள் – Part 2
ஆக மாறோக்கத்து நப்பசலையார் சொன்ன கிரஹணம் எது என்பதைக் காண்போம்.; அத்தோடு தமிழன் மட்டுமே உலகம் உருண்டை என்பதைச் சொன்னானா என்றும் அடுத்த பகுதியில் காண்போம் ………………..
இரண்டாவது பகுதி……………..
சம்ஸ்க்ருத நூல்களான ஆர்ய படீயம் , பிருஹத் சம்ஹிதா ஆகியவற்றில் பழைய விஷயங்கள் இருந்தாலும் இன்று நமக்கு கிடைத்துள்ள நூல்களின் காலம் 5 அல்லது 6- ஆ ம் நூற்றாண்டு என்றே கருடத்ப்படுகிறது. மேலும் குப்தர் கால வராஹ அவதார சிலைகளில் கூட மூக்கின் மேல் பூமி உருண்டை இல்லை. ஆனால் கிரேக்கர்களோ இதற்கு முன்னர் பூமி உருண்டை என்று சொன்னதாக என்சைக்ளோபீடியாக்கள் காட்டுகின்றன. 2000 ஆண்டுப் பழமையான் சங்க இலக்கியத்தில் உள்ள சொற்கள் பூமி உருண்டை என்று சொல்லுவதால், இந்தியாவில் தமிழர்களே இதை முதலில் சொன்னதாக பெருமை பேசலாம்.
முதல் பகுதியில் ‘பருதி ஞாலம்’ (Round Earth) என்று நப்பசலை என்ற பெண்மணி பாடியிருப்பதைக் கண்டோம். அவர் சொன்ன கிரஹணம் மஹாபாரத ஜயத்ரதன் கொல்லப்பட்ட நாளில் ஏற்பட்ட சூரிய கிரஹணமாகவே இருக்கவேண்டும். கிருஷ்ண என்றால் கருப்பு நிறம் ;அவரது செய்யுளிலும் கண் மை போன்ற கருப்பு நிறம் கொண்ட ‘அஞ்சன வண்ணன்’ இருக்கிறது. அவர் பாராட்டிய ஆள் பெயரும் திரு கண்ணன் = ஸ்ரீ கிருஷ்ணன். அவர் காப்பாற்றியது ராமர் உதித்த சூரிய குலத்தைச் சேர்ந்த சோழ மன்னன்.
மகாபாரதத்திலும் சூரியன் (கிரஹணம்) மூலமாக கிருஷ்ணன் அர்ஜுனனைக் காப்பாற்றி அரியணையில் அமர்த்தினான். அன்று அவன் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் உயிர்துறப்பேன் என்று சபதம் செய்திருந்தான். இந்த சிலேடை நயம் தோன்ற மிஸ். நப்பசலை பாடியது வியப்புக்குரியது.
ஏனாதி திருக்கண்ணன் = மஹாபாரத கண்ணன்
சோழ குல மன்னர் = சூரிய வம்சத்தவர்
அவர்களைக் காப்பாற்றியது சூரிய (கிரஹணம்)
.
சங்க கால ஏனாதி திருக்கண்ணன் உருவம் நமக்குத் தெரியாது. ஒருவேளை அவரும் கண்ண பரமாத்மா போல ‘காக்கா கருப்பாக’ இருந்திருப்பார் போலும்!
xxx
உலகம் உருண்டை (Earth is Round)
இதில் ஒரு வியப்பான விஷயம் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் முதல் முதலில் உலகம் உருண்டை என்று வந்தாலும் அந்த சொற்கள் அனைத்தும் சம்ஸ்க்ருத மூலம் உடையதாக உள்ளன.
முதல் பகுதியில் பருதி = வட்டம் கண்டோம். அது பெரி, பரி Peri, Pari என்று ஐரோப்பிய மற்றும் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதைக் காட்டினேன்.
இது தவிர சங்க இலக்கியத்தில் வட்டம் என்பதற்கு ‘மண்டிலம்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் பயன்படுகிறது. பல பாடல்களில் ஆதித்ய மண்டலம் என்று சூரியனைக் குறிக்கவே பயன்படுகிறது ஒரு சில பாடல்களில் சந்திரன், வட்ட வடிவ கண்ணாடியைக் குறிக்கப் பயன்படுகிறது ஆனால் 4, 5 பாடல்களில் பூமியைக் குறிக்கப்பயன்படுகிறது . கீழே காண்க :-
முதலில் ஏனைய சொற்களைக் காண்போம்
வட்டம் – ஸ்பியர் sPHERE- ஸ்பரி – பரி
வட்டம் – சர்க்கிள் Circle – சக்ர – சகடம் Sakata (சங்க இலக்கியத்திலும் சகடம்/வண்டி உண்டு)
வட்டம் – GLOBE குளோப் – கோளம்
வட்டம் = ROLL உருள் – ரோல்
வட்டம் – ROUND உருண்டை – ரவுண்ட்
வட்டம் – RATHA/ ROTATE ரதம் – ரொட்டேட் – ரோட்டரி
வட்டம் – WHEEL வலம் = வீல்
ஒரு சொல் ஆங்கிலத்தில் இருந்தால் அதன் மூலம் லதீன் அல்லது கிரேக்கம் அல்லது பழைய ஜெர்மானிய மொழியில் இருக்கும். இவை அனைத்தும் சம்ஸ்க்ருதத்தில் இருந்து பிறந்தவை. நமது மொழியின் பெயரைச் சொல்லாமல் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்பர் வெள்ளைக்காரர்கள். மேற்கூறிய எல்லா தமிழ் சொற்களும் ஆங்கிலத்தில் இருப்பதால் அவை தூய தமிழ்ச் சொற்கள் ஆகாது. ஆனால் நான் சொல்லுவது போல உலகின் பழங்கால மொழிகள் அனைத்தும் தமிழ் மற்றும் சம்ஸ்க்ருத மொழியில் இருந்தே வந்தன என்பதை ஒப்புக்கொண்டால் இந்தப் புதிருக்கு விடைகாணலாம் . ஆங்கிலத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள் உள ; ஹோமர் கால கிரேக்கத்தில் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன. இவை எல்லாம் நமது மேற்கத்திய குடியேற்றத்தைக் (Westward Migration from India) காட்டும்.
xxxx
பாகவதத்தில்
அகநாநானூறு 59-ம் பாடலில் கண்ணன்- கோபியர்- யமுனை/தொழுனை நதி குறிப்பு கிடைக்கிறது. இதற்குப் பின்னர்தான் பாகவத புராணம் வந்தது என்பது வெள்ளைக்காரன் முடிவு. இதனால் பாகவத புராணத்தில் வரும் பிரம்மாண்ட, ஜகத் அண்ட, அண்ட கோச என்பன சங்க இலக்கியத்துக்கும் பிற்பட்டவை என்று பலரும் கருதுவர் ; பாகவதத்தில் அண்ட = முட்டைவடிவ இருக்கிறது; ஆனால் கிருஷ்ண பக்தி கி.மு 200 ஐ ஒட்டிய காலத்திலேயே பரவியது, , அகஸ்தோக்ளிஸ் வெளியிட்ட பலராமன்- கிருஷ்ணன் உருவ நாணயத்தாலும் விதிஷாவில் உள்ள ஹெலியோடோரஸ் கருட தூபியாலும் தெரிகிறது
xxx
தமிழ் இலக்கிய சான்றுகள்
அகநானூறு 104-5, புறநானூறு 30-3, 367-1;குறுந்தொகை 300-7
முந்நீர் மண்டிலம் ,அகநானூறு 104-5, மதுரை மருதன் இளநாகனார் (கடல் சூழ்ந்த வட்ட வடிவ பூமி)
பரிப்புச் சூழ்ந்த மண்டிலம் , புறம் 30-3
நாகத்தன்ன பாகார் மண்டிலம் ,புறம் 367-1
,கடல் சூழ் மண்டிலம் பெறினும் ,குறுந்தொகை 300-7(கடல் சூழ்ந்த வட்ட வடிவ பூமி)
குறைந்தது 4 இடங்களில் வட்ட வடிவ பூமி பற்றி 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியம் பேசுகிறது.
முடிவுரை –
பூமி உருண்டை என்பதை தமிழ் இலக்கியமே (இந்தியாவில்) உறுதி செய்கிறது மஹாபாரத சூர்ய கிரஹணத்தையே நப்பசலை குறிப்பிடுகிறார். வட்ட வடிவம் பற்றிய எல்லா தமிழ் சொற்களும் சம்ஸ்க்ருதத் தொடர்புடையன. இவற்றில் பூமியை வட்டம் என்று வருணிக்கும் மண்டிலம், பரிதி என்பதும் அடக்கம்.
–subham–
tags- மண்டிலம், பூமி, வட்டம் , பருதி , நப்பசலையார்