Post No. 10,751
Date uploaded in London – – 16 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதத்தில் ஏறத்தாழ 400 புலவர்கள், ரிஷிகள், கவிஞர்கள் பெயர்கள் உள்ளது .
அவர்களுடைய பெயர்களை வேத அநுக்ரமணி தருகிறது.அதுதான் உலகின் முதல் INDEX இன்டெக்ஸ். உலகிற்கே இன்டெக்ஸ், பொருளடக்கம் என்பதை புஸ்தகத்தில் போடும் பழக்கத்தைக் கற்பித்தவர்கள் இந்துக்கள்தான் !
நேற்று இரண்டாவது பகுதியில் ‘ரிஷப’ என்ற பெயருள்ள சில கவிஞர் பெயர்களைக் கொடுத்தேன். பலரும் சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவரை அவர்களுடன் தொடர்புபடுத்தி பேசுவார்கள். அது நிரூபிக்கப்பட்டால் (Jain Religion) சமண மதத்தின் பழமை விளங்கும் .
ரிக் வேதத்தில் 30 பெண் புலவர்கள் இருக்கின்றனர்.உலகில் 4000, 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வளவு பெண் கவிஞர்களைக் காண முடியாது. ரிக் வேதத்துக்கு 2000 அல்லது 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சங்கத் தமிழ் நூல்களில் மேலும் சுமார் 30 பெண் புலவர்களைக் காண்கிறோம். இந்த 60 பெரும் 2000 ஆண்டுகளுக்கு முந்தையவர்கள் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. பாரத நாட்டில் இமயம் முதல் குமரி வரை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி இருந்தது, நாம்தான் உலகிற்கே நாகரீகத்தைக் கற்பித்தவர்கள் என்பதைக் காட்டுகிறது.
இந்தப் பகுதியில் கிருஷ்ணர், கோதை என்னும் பெயர்கள் வருவதைக் கவனிக்கவும்
XXXX
இது மூன்றாவது பகுதி :-
இதுவரை 100 புலவர்களைக் கண்டோம்.
101.க்ருத யஸா ஆங்கிரச 9-108
க்ருத்னு பார்கவ 8-79
க்ருஷ காண்வ 8-55
க்ருஷ்ண ஆங்கிரச 8-85/87, 10-42/44
கேது ஆக்னேய 10-156
கய ஆத்ரேய 5-9/10
கய ப்ளாட 10-63/64
கர்க பாரத்வாஜ 6-47
கவிஸ்திர ஆத்ரேய 5-1
க்ருத்சமட 2-1; 9-86
கிருஹபதி சஹஸ்ரபுத்ர 8-102
கோதம ராஹுகண 1-74/93; 9-31
கோதா 10-134
கோபவன ஆத்ரேய 8-73/74
கோஸூக்தி காண்வாயன 8-14/15
கெளரிவீதி சாக்த்ய 5-29, 9-108; 10-73/74
சங்கப் புலவர்களில் வெள்ளிவீதி என்ற பெயருடன் ஒப்பிடுக.
கர்ம தாபஸ 10-114
கர்ம ஸெளர்ய 10-181
கோர ஆங்கிரஸ 3-36
இதே பெயரில் கிருஷ்ணரின் குரு ஒருவர் இருந்தார் .
கோஷா காக்ஷிவதீ 10-39/40
சக்ஷு மானவ 9-106
சக்ஷு ஸெளர்ய 10-158
இங்கு தாபஸ, மானவ முதலிய மனுக்களின் பெயர்கள் வருகின்றன. இவர்கள் 14 மனுக்களில் சிலரா அல்லது அவர்களுடைய பெயர்களைத் தாங்கியவரா என்பது பற்றி ஏற்கனவே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள் ளேன் .
சித்ரமஹா வாசிஷ்ட 10-122
ச்யவன பார்கவ 10-19
‘சித்ர’ என்ற பெயர் மஹாபாரதம், சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் ஆட்களின் பெயர்களில் வருகிறது. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் பெருஞ்சித்திரனார் உண்டு. இவர்கள் நாகர்கள் (ஓவியர்) என்பாருமுளர்.
ஜமதக்னி பார்கவ 3-62; 8-101; 9-62, 65, 67; 10-137, 167
இவர் பரசுராமரின் தந்தை; ராமர் காலத்ததுக்கு சற்று முந்தியவர்.
128.ஜய ஐந்திரன் 10-180
ஜரத்கர் ண ஐராவத 10-76
ஜரிதா சாரங்க 10-142
மஹாபாரதத்திலும் இந்தப் பெயர் வருகிறது
ஜூஹூ பிரம்மஜாயா 10-149
ஜுதி வாதரசன 10-136
ஜேதா மாதுசாந்தச 1-11
தபு மூர்த்தா பார்ஹபஸ்த்ய 10-182
தான்வ பார்த்தியா 10-93
திர சேய் ஆங்கிரஸ
த்ரசா தஸ்யு பெளரு குத்ஸ்ய 4-42; 5-27;9-110
த்ரித ஆப்த்ய 1-105; 8-47; 9-33/34, 102; 101/7
த்ரிசிர த்வாஷ்ட்ர 10-8/9
த்ரிசோ க காண்வ 8-45
த்ரையாருண த்ரை வ்ரஷ் ண 5-27; 9-110
த்வஷ்டா கர்ப கர்த்தா 10-184
தக்ஷிண ப்ராஜா பத்ய 10-107
தமன யாமாயண 10-16
திவ்ய ஆங்கிரஸ 10-107
தீர்க்க தமா ஒளசத்ய 1-140/164
துர்மித்ர கெளத் ஸ 10-105
துவஸ்யு வாந்தன 10-100
த்ர்த்தாச்யுத ஆகஸ்த்ய 9-25
தேவ ஜாமாயஹ இந்த்ர மாதரஹ 10-153
தேவமுனி ஐரம்மத 10-146
தேவராத வைச்வாமித்ர (காண்க சுனஸ்சேப )
தேவல காஸ்யப 9-5/24
தேவவாத பாரத 3-23
154. தேவ ஸ்ரவா பாரத 3-23
த்ரிசிர த்வாஷ்ட்ர போன்ற ரிக் வேத அசுரர் பெயரும் இங்கே வருகிறது
அது மட்டுமல்ல ; 3 என்ற எண்ணுடன் பல பெயர்கள் உள்ளன. சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரீகத்திலும் 3 கோடுகள் அதிகம் காணப்படுவதால் வேத கால பெயர்களாக இருக்கலாம் . ‘பாரத’ என்ற பெயரும் சிலர் பெயரில் காணப்படுவதால் அவர்கள் பரதன் வழிவந்தவர்களாவோ , அவரது முன்னோடிகளாகவோ இருக்கலாம் .
இதுவரை 154 புலவர்களைக் கண்டோம்
தொடரும் ……………………….
tags- ரிக் வேதம், புலவர்கள், ரிஷிகள், கவிஞர்கள் , பட்டியல்-3