WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,752
Date uploaded in London – – 17 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மார்ச் 2022 ஹெல்த்கேர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
மார்பக கான்ஸர் அபாயத்தைத் தவிர்க்கச் சில வழிகள்!
ச.நாகராஜன்
கான்ஸர் என்பது பரம்பரையாக வரும் ஒரு வியாதி அல்ல. என்றாலும் கூட, மார்பகம், ஓவரியன் எனப்படும் முட்டையகம், பெருங்குடல் மலக்குடல், ப்ரொஸ்டேட் எனப்படும் சுக்கிலவகம் ஆகிய இவற்றில் வரும் கான்ஸர் நோய் குடும்பங்களில் பரம்பரையாக வந்தால் அந்தக் குடும்பத்தைச் சார்ந்த மற்றவருக்கும் வரலாம்.
BRCA1, BRCA2 ஆகிய இரண்டு மரபணுக்களும் கான்ஸர் அபாயத்தை அதிகரிப்பவை. இவை மட்டுமல்ல, ஆய்வாளர்கள் சமீபத்தில் இன்னும் 100 வகையான மரபணு வேறுபாடுகள் மேலே கூறிய மார்பக மற்றும் இதர வகை கான்ஸர் அபாயத்தைத் தருபவை என்று கண்டு பிடித்துள்ளனர்.
குடும்பத்தில் கான்ஸர் யாருக்கேனும் இருந்து, இது பற்றிய கவலை ஏற்பட்டது எனில் உங்கள் குடும்ப டாக்டரைக் கலந்தாலோசியுங்கள். தேவை எனில் மரபணு சோதனை ஒன்றை எடுங்கள்.
இந்த சோதனையின் பெயர் NHS மரபணு சோதனை. பாஸிடிவ் என்று சோதனை முடிவு இருந்தது என்றால் அடுத்து செய்ய வேண்டியது என்பதை டாக்டர் நிர்ணயிப்பார். அத்தோடு வாழ்க்கை முறை மாற்றத்தை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் சில சோதனைகளின் முடிவுகள் சரியான முடிவுகளைத் தருவதில்லை என்பது இதில் உள்ள கெட்ட அம்சம்.
இந்த சோதனை எப்படி நடத்தப்படும்? உங்கள் இரத்தம் எடுக்கப்பட்டு, கான்ஸர் அபாயம் உள்ள மரபணு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆறு முதல் எட்டு மணி நேரத்திற்குள் முடிவைத் தெரிந்து கொள்ளலாம்.
BRCA1, BRCA2 மரபணு சோதனை எடுப்பது இன்னொரு வழி! இதன் முடிவு வர 4 முதல் 8 வாரங்கள் ஆகும்.
சோதனை நிச்சயமாக பாஸிடிவ் என்று வந்தால் பல விருப்பத் தேர்வுகள் உங்களுக்கு உண்டு.
சர்ஜரி செய்து கொள்ளலாம். மார்பகத்தைத் தொடர்ந்து கண்காணித்து வரலாம்.
மார்பகத்தில் கான்ஸர் வரும் அபாயம் என்றால் வருடாந்திர ப்ரெஸ்ட் (Breast) -மார்பக ஸ்கீரினிங் செய்து கொள்ளலாம்.
ஓவரியன் மற்றும் ப்ரொஸ்டேட் கான்ஸர் அபாயத்தைக் கண்டுபிடிக்க இப்போதைக்கு ஒரு ஸ்கீரினிங் டெஸ்டும் இல்லை.
Faulty BRCA எனப்படும் தவறான மரபணு இருப்பது தெரிந்தால் வாய் வழியே சாப்பிடும் மாத்திரை (oral contraceptive pill )களைத் தவிர்க்கவும்.
ஹார்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெராபி (HRT) மேற்கொள்ளக் கூடாது.
மது அருந்துபவர் என்றால் அதைத் தவிர்க்க வேண்டும்.
உடல் எடை கூட இருந்தால் அதைக் குறைக்கும் வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் கான்ஸர் பற்றிய மிகுந்த அபாயம் உள்ள சில பெண்மணிகளுக்கு tamoxifen, raloxifen மற்றும் anastrozolole தரலாம் என NICE
பரிந்துரைக்கிறது.
NICE என்பது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கேர் எக்ஸெலன்ஸ் (National Institue for Health and Care Excellence) என்ற பிரிட்டனில் உள்ள அமைப்பாகும்.
tags– மார்பக கான்ஸர்