Post No. 10,754
Date uploaded in London – – 17 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
400 ரிக் வேத ரிஷிகள் புலவர்கள் முனிவர்கள் கவிஞர்கள் பட்டியல்-4
ரிக் வேதத்தில் ஏறத்தாழ 400 புலவர்கள், ரிஷிகள், கவிஞர்கள் பெயர்கள் உள்ளது .
அவர்களுடைய பெயர்களை வேத அநுக்ரமணி தருகிறது.அதுதான் உலகின் முதல் INDEX இன்டெக்ஸ். .
இதோ நாலாவது பகுதி …..
155.தேவஸ் ரவா யாமயான 10-17
தேவாஹா 10-51, 10-53
தேவாதிதி காண்வ 8-4
தேவாபி ஆர்ஷ்டிசே ன 10-98 (மஹாபாரத காலம் )
த்யு தான மாருத 8-96
த்யும்ன விஸ்வசர் சனி ஆத்ரேய 5-23
த்யும்னிக வாசிஷ்ட 8-87
த்ரோண சார்ங்க 10-142 (மஹாபாரத காலம் )
த்வித ஆப்த்ய 9-103
த்வித ம் ருக்த வாஹ ஆத்ரேய 5-18
தருண ஆங்கிரஸ 5-15
த்ருவ ஆங்கிரஸ 10-173
நபஹ ப்ரபேதன வைரூப 10-112
நர பாரத்வாஜ 6-35/36
நஹுஷ மானவ 9-101
நாபாக காண்வ 8-39/42
நாபானெதிஷ்ட மானவ 10-61/62
இது முக்கியமான பெயர். மநு சொன்னதைக் கேட்காமல் முரண்டு பிடித்ததால் சுமேரியாவுக்கு அனுப்பப்பட்டவர்.
இதிலுள்ள பெயர் உத்தானபிஷ்டிம் என்றும் பைபிளில் நாபா= நோவா என்றும் பாரசீக ஜொராஷ்டிரர் புஸ்தகங்களில் இதே எயரிலும் உள்ளதால் பிரளய காலத்துக்குப் பின்னர் இந்துக்கள் சுமேரியா முதலிய இடங்களுக்குச் சென்றதற்கு நல்ல இலக்கிய சான்று கிடைத்துள்ளது.
நாபானெதிஷ்ட மானவ என்றால் மநுவுக்கு அடுத்து வந்தவர் என்று பொருள்.
நாரத காண்வ 8-13; 9-104/105
நாராயண 10-90
இதுவும் முக்கியமான பெயர். நாராயண என்பதற்கு நீரையே இருப்பிடமாகக் கொண்டவர் என்று பொருள். இந்த நீர் என்பது ரிக் வேதத்தில் வருவதை வைத்து சில அரை வேக்காடுகள் ரிக் வேதத்தில் தமிழ்ச் உள்ளது என்று உளறிவைத்தனர். ஆனால் நீரெய்ட்ஸ் Nereids என்ற நீர்த்த தேவதைகளை தமி ழுக்கம் முந்தைய கிரேக்க புராணக் கதைகள் காட்டுகின்றன. கிரேக்கத்தில் ஒரு சொல் இருந்தால் அது சம்ஸ்க்ருத மூலம் உடைய சொல் என்பது வெளிநாட்டினர் வாதம். ஆனால் நான் எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் அது பிழை என்று காட்டியுள்ளேன். சுமார் 50 தமிழ்ச் சொற்கள் கிரேக்க மொழியில் உள்ளன. இவை அலெக்ஸ்சாண்டர் காலத்துக்கும் முந்தியவை. ஆகவே தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் மூல மொழி ஒன்றே; அதிலிருந்து சென்றவைதான் அந்தச் சொற்கள் என்றும் திராவிட மொழிகே க்கு டும்பம் என்பது பிதற்றல் என்றும் காட்டியுள்ளேன்.
நித்ருவி காஸ்யப 9-63
நீபாதிதி காண்வ 8-34
ந்ர் மேத ஆங்கிரஸ 8-89/90, 98/99, 9-27, 9-29
நர மேரு என்ற பெயரை எகிப்திய மன்னர் பட்டியலில் கி.மு.3000 லும், நப தேவர மண்டூகதேவ என்ற பெயரை கி.மு.2000 லு ம் காணலாம்.
நப என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு ஆகாயம், வானம் என்று பொருள்.
நேம பார்கவ 8-100
நதா கெளதம 1-58/64; 8-88; 9-93
பதங்க ப்ராஜாபத்ய 10-177
பரமேஷ்டி ப்ரஜாபதி 10-129
பராசர சாக்த் ய 1-65/73; 9-97;
பரு ச்சேப தைவோதாசி 1-127/139
182.பர்வத காண்வ 8-12; 9-104/5
பவித்ரா ஆ ங்கிரஸ 9-67;9-73,9-83
பரசுராம ஜமதக்னி 10-110 (ராமர் காலத்து ரிஷி)
பாயு பாரத்வாஜ 6-75
புனர்வத்ஸ காண்வ 8-7
புருமீள ஆங்கிரஸ 8-71
புரு மீள செளஹோத்ர 4-43/44
புருஷமேத ஆங்கிரஸ 8-8/90
புரூருவ ஐல 10-95,
புருஹன்மா ஆங்கிரஸ 8-70
புஸ்திகு காண்வ 8-59
பூத தக்ஷ ஆங்கிரஸ 8-94
பூரண வைஸ் வாமித்ர 10-160
பூரு ஆத்ரேய 5-16/17
ப்ருது வைன்ய 1-48
முன்னர் கண்ட பரசுராமர், புரூரவஸ், ப்ருது , வேனன் ஆகியோர் கதைகள் புராணங்களில் விரிவாக உள்ளன. டிக் வேதத்தை வரலாறு என்று நம்புவோர் இந்தப் புராணக் கதைகளையும் வரலாறு பூர்வ மன்னர்கள் என்றே கருத வேண்டும்
ப்ரசத்ர காண்வ 8-56
பெளர ஆத்ரேய 5-73/74
ப் ரகாத காண்வ 8-1, 8-48, 8-62/65
ப்ரசேத ஆங்கிரஸ 10-164
ப்ரஜாபதி பரமேஷ்டி 10-129
ப்ரஜாபதி வாகிய 3-38; 3-54/56; 9-84
ப்ரஜாபதி வைஸ் வாமித்ர 3-38, 3-54/56; 9-101
ப்ரஜாவான் ப்ரஜாபத் ய 10-183
ப்ரதர்தன காசிராஜ 9-96, 10-179
இது முக்கியமான பெயர்; மஹாபாரதத்தில் காசிராஜாவின் புத்திரிகள் அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்போர் எப்படி கதையின் போக்கையே மாற்றுகின்றனர் என்பதை அறிவோம். வேத காலத்திலேயே காசி மன்னன் இருப்பதும் அவன் பெயர் பிரதர்தனன் என்பதும் தெரிகிறது. . இதே பெயர் விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும் மிட்டன்னியன் நாகரீகத்திலும் (MITANNIAN CIVILIZATION 1380 BCE கி.மு.1380) வருவது குறிப்பிட்டத்தக்கது. காசி முதல் துருக்கி வரை கி.மு 1380க்கும் முன்னரே, மன்னர் பெயர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது
இது வரலாற்றுச் சிறப்புமிக்க பெயர். மஹாபாரத உத்தியோக பர்வமும் திவோதாசன் புத்திரன், மாதவியின் மகன், யயாதியின் தெளஹித்திரன் (அபிதான சிந்தாமணி , பக்கம் 1119) என்று கூறுகிறது. சத்ருஜித் என்பது மறறொரு பெயர் என்றும் சொல்கிறது. ஆக இது மிகவும் பிரபலமான பெயர். துருக்கி வரை சென்றுவிட்டது. யயாதி என்ற பெயரில் மூவர் இருப்பது போல பிரதர்தனன் பெயரிலும் பலர் இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
ப்ரதி க்ஷத்ர ஆத்ரேய 5-46
ப்ரதி ப்ரப ஆத்ரேய 5-49
ப்ரதி பானு ஆத்ரேய 5-48
209.ப்ரதி ரத ஆத்ரேய 5-47
SO FAR 209 RISHI NAMES LISTED
TO BE CONTINUED…………………………………….
tags- ரிக் வேத ரிஷிகள், புலவர்கள், முனிவர்கள் , கவிஞர்கள் ,பட்டியல்-4,