Post No. 10,759
Date uploaded in London – – 19 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக்வேத கால புலவர்கள், முனிவர்கள், ரிஷிகள், கவிஞர்கள் பட்டியல் -6
கடந்த 5 நாட்களில் 261 புலவர்களைக் கண்டோம்
262.ரஃஷோகா பிராஹ்ம 10-162
ராஹுகண ஆங்கீரஸ 9-37/38
சங்க இலக்கியத்தில் புறநானூற்றுப் புலவர் ஒருவர் பெயர் பிரம்மா.
இதேபோல பிராக்ருத நூலான காதா சப்த சதி யிலும் கவிஞர் பிரம்மா உண்டு.
ராஹு , கேது முதலிய கிரஹங்கள் பெயர்களையும் இது வரை கண்டோம்.
ராத ஹவ்ய ஆத்ரேய 5-65/66
ரேணு வைஸ்வா மித்ர 9-70; 10-89
ரேப காஸ்யப 8-97
இதில் காணும் பல ரிஷிகளின் பெயர்களை பிராமணர்கள் தினமும் மூன்று முறை சொல்லும் அபிவாதயே மந்திரத்தில் சொல்லுவதால் பிராமணர்கள் 4000 ஆண்டு வரலாற்றின் பெட்டகங்களாக, பொக்கிஷங்களாகத் திகழ்கிறார்கள். சங்க இலக்கியத்தில் உள்ள கோத்திரங்களை முன் ஒரு கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன் .
ரேபசுனு காச்யபவ் 9-99/100
ரோ மஸா 1-126
நல்லவேளை, இப்படி ஒரு முனிவர் பெயர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்திருந்தால் வெள்ளைக்கார்கள் இவருக்கு ரோமானிய முத்திரை குத்தி இவரும் கைபர் கணவாய் வழியாகப் பின்னர் வந்திருக்கலாம் என்று எழுதியிருப்பார்கள் . இவர் 4000 ஆண்டுகளுக்கு முந்தியவர்.
லப ஐந்த்ர 10–119
இந்திர என்பது ஒரே ஆளின், மன்னரின், கடவுளின் பெயர் அல்ல என்பதற்கு இதுவும் சான்று. ராவணனின் மகன், இந்திரனையும் ஜெயித்ததால் அவனுக்கு இந்திரஜித் என்று பெயர். ஆதிகாலத்தில் வாழ்ந்த அகஸ்திய மகரிஷி இந்திரனை சபித்த கதையையும் படிக்கிறோம். ஆகையால் பல இந்திரர்கள் இருந்ததை அறியலாம்.
லுச தானகா 10-35/36
முன்னர் கண்ட லப என்பதை ‘லவ’ என்றும் சொல்லலாம். ப=வ மாற்றம் நிறைய உண்டு; ஆனால் லுச என்ற பெயர் சுமேரிய, பாபிலோனிய நாகரீகத்தில் வரும் பெயர் ஆகும்.
லோபாமுத்ரா 1-179
இந்தப் பெண்மணி பற்றி நிறைய கதைகள் உண்டு. நச்சினார்க்கினியர், இவரை தொல்காப்பியர் கால பெண்ணாகக் காட்டுகிறார். அது தவறு. இராமாயண கால அகஸ்தியர் வேறு.
தொல்காப்பிய முனிவரின் குரு – அகஸ்தியர் வேறு.
வத்ஸ ஆக்னேய 10-187
வத்ஸ காண்வ 8-6
வத்ஸ ப்ரி பாலந்தன 9-68; 10-45/46
வம்ரு வைகானஸ 10-99
வருண 10-124
இதை வருணன் என்ற வேத காலக் கடவுளே பாடியதாகவும் சொல்லலாம். அவர் பெயரை வைத்துக் கொண்ட புலவராகவும் இருக்கலாம் ; பெயர் தெரியாத புலவராக இருந்தால் அவர் பாட்டில் வரும் சிறப்பு சொற்றோடரை அவருக்கு சூட்டுவதை ரிக் வேதத்தில் 20, 30 புலவர் விஷயத்தில் காண்கிறோம். சங்க நூல்களைத் தொகுத்தோரும் இப்படி தேய்புரி பழங் கயிறு, செம்புலப் பெயல் நீர் என்று பெயரிட்டுள்ளனர்.; அவர்கள் ரிக் வேதத்தை அப்படியே பின்பற்றியுள்ளனர்.
வவ்ரி ஆத்ரேய 5-19
வச ஆஸ் வ்ய 8-46
வசிஷ்ட மைத்ராவருண 7-1/32; 7-33; 7-34/104;9-67; 9-90; 9-97; 10-137
வசிஷ்ட புத்ரஹ 7-33
வசு பாரத்வாஜ 9-80/82
வசு கர்ண வாசுக்ர 10-65/66
வஸுக்ருது வாசுக்ர 10-20/26
வசுக்ர 10-28
வசுக்ர ஐந்த்ர 10-27; 10-29
வசுக்ர வாசிஷ்ட 9-97
வசுக்ரபத்னீ இந்திர னுசா 10-28
வசுமனா ரோவ் ஹிதாஸ்வ 10-179
289. வசுரோசிச ஆங்கிரஸஹ ஸஹஸ்ரம் 8-34
290.வசு ஸ்ருத ஆத்ரேய 5-3/6
291.வசூயவஹ ஆத்ரேயஹ 5-25/6
சுமார் 11 புலவர் பெயரில் வசு என்ற சொல் வந்துள்ளது .
ஆயிரம் என்ற எண்ணும் இருப்பது குறிப்பிடத்தக்கது .
வாக் ஆம்ப்ருணி 10-125
வாதஜுதி வாதரசன 10-136
வாமதேவ கெளதம 4-1/17; 18, 19; 4-45/48
விப்ர ஜுதி வாதரசன 10-136
விப்ர / வசு பந்து கெளபாயன அல்லது லவ்பயான 5-24;10-57/60
விமத ஐந்த்ர 10-20/26
விமத ப்ராஜாபத்ய 10-20/26
விரூப ஆங்கிரஸ 8-43/44; 8-75
300.விஸ்வவத் ஆதித்ய 9-13
இதுவரை 300 புலவர்கள் பெயர்களைக் கண்டோம்
To be continued………………………………………
tags- புலவர்கள் பட்டியல்-6