Post No. 10,762
Date uploaded in London – – 20 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
301. விவ்ரஹ்தா காஸ்யப 10-163
விப்ராத் ஸெளர்ய 10-170
விஸ்வக கார்ஸ் னி 8-86
விஸ்வகர்மா பெளவன 10-81/82
விஸ்வ மணி பெளவன் 10-81/82
விஸ்வமனா வையாஸ் வன 8-23/26
விஸ்வ வாரா ஆத்ரேயி 5-28
விஸ்வ சாமா ஆத்ரேய 5-22
விஸ் வாமித்ர காதினஹ 3-1/12; 3-24/53; 3-57/62; 9-67;10-137
விஸ் வாவசு கந்தர்வ 10-139
விஸ்ணு ப்ராஜாபத்ய 10-184
விஹவ்ய ஆங்கிரஸ 10-128
வீதஹவ்ய ஆங்கிரஸ 6-15
வ்ர்ஷ ஜான 5-2
வ்ர் ஷகண வாசிஷ்ட 9-97
316. வ்ர்ஷா கபி ஐந்த்ர 10-86
வ்ர்ஷாநாக வாதரசன 10-136
வேன பார்கவ 9-85; 10-123
வேன என்பது வரலாற்றில் முக்கியமான பெயர். அவனைக் கெட்ட அரசர் பட்டியலில் மநு ,சேர்த்துள்ளார். அவனை மக்களே புரட்சி செய்து கொன்றுவிட்டனர். ஆனால் அவன் தொடையைக் கடைந்து ப்ருதிவீ என்ற புத்திரனை உருவாக்கி மன்னன் ஆக்கினர் ரிஷிகள். இதனால் பூமிக்கு ப்ருத்வி என்று பெயர்.பிரெஞ்சுப் புரட்சிக்கும் முன்னர் மக்கள் எழுச்சியில் இறந்த முதல் மன்னன் வேனன். அவன் உடலில் இருந்து CLONING க்ளோனிங் என்னும் அதி நவீன விஞ்ஞான முறையில் வேறு ஒருவர் உருவாக்கப்பட்டது போல கதை செல்கிறது. இந்த வேன பார்கவ ரிஷிக்கும் அந்த மன்னருக்கும் தொடர்பு உண்டா, இருவரும் ஒருவரா என்பது ஆராய்ச்சிக்கு உரிய விஷயம்.
XXX
வைகானசஹ சதம் 9-66
இதுவரை இரு வைகானச பெயர்கள் வந்துள்ளன. வைஷ்ணவர்கள் பின்பற்றும் வைகானச ஆகமத்துக்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டா என்று ஆராயலாம். பெயரில் சதம் / 100 என்ற எண் வந்துள்ளது. முன்னர் 1000 என்ற எண் , சில பெயர்களில் கண்டோம். தமிழில் கண்ணாயிரம் என்ற பெயர்களை இன்றும் காண்கிறோம்.
XXX
வ்யஸ்வ ஆங்கிரஸ 8-26
வ்யாக்ரபாத வாசிஷ்ட 9-97
புலிக்கால் முனிவர் (வ்யாக்ர பாத) தமிழ்நாட்டின் சிதம்பரம் முதலிய ஊ ர்களுடன் தொடர்புடையவர் . தமிழ் நாட்டில் குறைந்தது 9 புலியூர்கள் உண்டு.
சம்யு பார்ஹஸ்பத்ய 6-44/46
சகபூத நார்மே த 10-132
எகிப்து நாட்டில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாண்ட மன்னரின் பெயரும் நார்மெர் NARMER . சக த்வீபத்தின் பெயரும் இந்த ரிஷி அல்லது மன்னரின் பெயரில் உள்ளது ஆராய்ச்சிக்குரியது.
பழங்காலத்தில் ஆடசி புரிந்த மன்னர்களும் புரோகிதர் போலவே அதிகாரங்கள் PRIEST KINGS உடையவர்கள். அது மட்டுமல்ல புறநானூற்றில் உள்ளது போலவே பல மன்னர்களும் கவி ஞர்களாக இருந்துள்ளனர். ரிக் வேதம் முழுதும் உள்ள வரலாற்றை சிலர் மட்டுமே ஆராய்ந்துள்ளனர். இது மஹாநாடு கூட்டி ஆராய வேண்டிய விஷயம்.
இந்தப் பெயர் நர்மதை நதியுடன் தொடர்புடையதா என்றும் ஆராயலாம்.
XXXX
சக்தி வாசிஷ்ட 7-32; 9-97; 9-108
வசிஷ்டரின் புதல்வரான சக்தி பற்றியும் விச்வாமித்ரருடன் உள்ள மோதல் பற்றியும் நிறைய கதைகள் உள்ளன.
சங்க யாமயான 10-15
சசி பெளலோமி 10-159
வரும் ஒரு பெண் கவிஞர். 30 பெண் புலவர்கள் பெயரை முன்னரே கொடுத்துள்ளேன்.
சதப்ரபேதன வைரூப 10-113
சபர காக்ஷி வத 10-169
சபர , சபரி என்பதெல்லாம் வேடர் குலப் பெயர்கள்
சச கர்ண காண்வ 8-9
சச கர்ண– என்றால் முயல் காது ; அந்தக் காலத்திலும் இப்படி பட்டப் பெயர்கள் உண்டு. தமிழ்ப் புலவர்களில் ஒருவர் பெயர் நரித் தலை ; அவர் பெயர் நரிவெரூவுத் தலையார்.
XXX
சஸ்வதீ ஆங்கிரஸீ 8-1
பெயரே பெண்பால் புலவர் என்பதைக் காட்டுகிறது.
சார்யாத மானவ 10-92
மநு குடும்பத்தினரின் பெயர்களில் மானவ ஒட்டிக்கொள்ளும் ; இந்தப் பெயர்களை தனியாக ஆராய்தல் அவசியம் ஆகும்.
சச பாரத்வாஜ 10-152
சிபி ஒளசிநார 10-179
தமிழ் இலக்கியத்தில் மிகவும் அடிபடும் மன்னர் சிபிச் சக்ரவர்த்தி; சோழர்கள் தமிழர்கள் அல்ல ; அவர்கள் ஆதிகாலத்தில் வடமேற்கு இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டிற்குக் குடியேறியவர்கள் இதை முன்னரே தனி ஆராய்ச்சிக் கட்டுரையாக எழுதியுள்ளேன். சூரிய குலம் என்று கல்வெட்டுகளில் வருவதற்கு முன்னரே புறநானூற்றின் பழைய பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் புறாவுக்காக உயிர் கொடுத்த சிபியின் பெயர் வருகிறது. தமிழர்களின் பழமையை ரிக் வேத காலத்துக்குத் தள்ளும் குறிப்பு இது. சங்க இலக்கியத்தில் அதிகமாக அடிபடும் மன்னர் சிபி ஒருவரே.
இதே போல அதிய மான் முதலியோர் கரும்பு (இக்ஷ்வாகு) வம்சத்தினர் என்று அவ்வையார் பாடுவது பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரையையும் படிக்கவும்
சிரிம்பித பாரத்வாஜ 10-155
சிசு ஆங்கிரஸ 9-172
இவர் ஞான சம்பந்தர் போல குழந்தையாக இருக்கும்போதே கவி பாடியவர் போலும் !
சிறு பெண்ணாக வீணை வாசித்து புகழ்பெற்ற பேபி காயத்ரீ , கல்யாணம் ஆகி BABY பேபி பெற்ற பின்னரும் அவரை நாம் பேபி காயத்ரீ என்றே கடைசி வரை அழைக்கிறோம் . அது போல சிசு / பேபி / குழந்தை என்ற பெயர் ஒட்டிக்கொண்டு இருக்கலாம். எங்கள் வீட்டில் சகோதர சகோதரிகளுக்கு பாட்டு சொல்லிக்கொடுத்தவர் பெயர் பால கிருஷ்ண ஐயங்கார் . அவர் வாக்கிங் ஸ்டிக் WALIKNG STICK இல்லாமல் நடக்க மாட்டார். அவ்வளவு தள்ளாத வயது. இருந்த போதிலும் அவரை நாங்கள் கிழட்டுக் கிருஷ்ண ஐயங்கார் என்று சொல்லவில்லை.
இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் வ்ருஷ கபி / SEXY MONKEY செக்சி குரங்கு என்ற ரிக் வேத பாடலை வைத்து வெளிநாட்டினர் அவர்கள் செய்யும் செக்ஸ் விஷயங்களை எல்லாம் எழுதித் தள்ளியுள்ளனர் ; அந்தப் பெயர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வருவதுடன் இங்கே புலவர் பட்டியலிலும் உளது. ஆக பெயரை மட்டும் வைத்து உளறிக்கொட்டுவோருக்கு இது ஒரு எச்சரிக்கை .
XXX
சுனஸ் சேப ஆஜிகர்த்தி 1-24/30
சுனஸ் சேப என்றால்’ ‘நாய் வால்’ என்று பொருள்; யாகத்தில் பலி கொடுக்க இவரை அரிச்சந்திர மஹாராஜா யூப கம்பத்தில் கட்டிவைத்திருந்த பொது அந்தப் பக்கம் வந்த விசுவாமித்திரர் புரட்சி செய்கிறார். அவரை விடுவித்து தேவராதன் என்று பெயர் சூட்டி வேத ரிஷி பட்டியலில் சேர்த்துவிட்டார். இந்த நாய்வால், அஜீகர்த்தர் என்ற ஏழைப் பிராஹ்மணனின் புதல்வர்.; அவர்கள் நாய்வாலை விற்றுவிடுகின்றனர்.
இறுதியில் நாய்வாலும் பலி இடப்படவில்லை. அதற்க்கு முன்னரோ பின்னரோ புருஷ மேத யக்ஞத்தில் யாரும் பலி இடப்பட்டதாக வரலாறும் இல்லை. ஆனால் பெயரை மட்டும் வைத்து வெள்ளைக்கார ர்கள் புஸ்தகம் புஸ்தகமாக எழுதித் தள்ளிவிட்டனர் ; உண்மையில் சொல்லப்போனால் பைபிள், பெரிய புராணம் முதலியவற்றில்தான் உண்மையில் நடந்த நர பலி பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பையனுக்கு ஏன் ‘நாய்வால்’ என்று பெயர் என்பதையும் எவரும் ஆராயவில்லை
உண்மையில் புருஷ மேதம் / மனித யாகம் பதிற்றுப்பத்து என்ற சங்க நூலிலும் உள்ளது.
ஏய் பார்ப்பனப் புலவரே உமது கவிதை கண்டு மெச்சினோம்; உமக்கு என்ன வேண்டும் என்று சேர மன்னன் வினவுகிறான்.உடனே பாலைக் கெளதமனார் என்ற அந்தப் புலவர் நானும் என் மனைவியும் உடலோடு சொர்க்கம் புகவேண்டும் என்கிறார்கள். அசந்து போன சேர மன்னன் பல்யானை செல் கெழு குட்டுவன், அது எப்படி முடியும் என்று வினவ, நான் சொல்லும்படி பத்து வேள்விகளை இயற்று. பத்தாவது வேள்வியின்போது என்ன நடக்கிறது என்று பார் என்கிறார் சேர மன்னன் செய்த பத்தாவது யாகத்தன்று பார்ப்பனப் புலவரும் பார்ப்பனியம் மாயமாய் மறைந்து விடுகின்றனர். இதுதான் புருஷ மேத யக்ஞம் என்பது என் கருத்து.
XXX
சுனஹோத்ர பாரத்வாஜ 6-33/34
ஸ்யாவாஸ் வ ஆத்ரேய 5-52/61; 5-81/82; 8-35/38; 9-32
ஸ்யேன ஆக்னேய 10-188
ஸ்யேன என்றால் பருந்து, களுக்கு என்று பொருள்
தமிழில் பல ஆந்தை பெயர்கள் உண்டு. இது ஆந்தையூர் என்பதிலிருந்து வந்ததாகச் செப்புவர். இது விவாதத்துக்குரிய விஷயம்
ஸ்ரத்தா காமாயாநீ 1-151
பெண் புலவர்
ஸ் ருத கக்ஷ ஆங்கிரஸ 8-92
341- ஸ்ருத பந்து கெளபாயன / லவ்பயான 5-24; 10-57/60
இதுவரை 341 ரிஷிகள் பெயர்கள் பட்டியலிடப்பட்டன
தொடரும் ………………………………
TAGS- ரிஷிகள் பெயர்கள்-7