Post No. 10,766
Date uploaded in London – – 21 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
400 ரிக்வேத புலவர்கள், ரிஷிகள் பட்டியல்– 8 (Last Part) Post.10,766
இந்தப் பட்டியலுடன் நிறைவு அடைகிறது
342.ஸ்ருதவித் ஆத்ரேய 5-62
ஸ்ருஷ்டிகு காண்வ 8-51
சம்வனன ஆங்கிரஸ 10-191
சம்வர ன ப்ராஜாபத்ய 5-33/34
சம்வர்த ஆங்கிரஸ 10-172
சங்குசுக யாமயான 10-18
சத்யத்ரி வாருணி 10-185
ஸத்யஸ்ரவ ஆத்ரேய 5-79/80
ஸதா ப்ரண ஆத்ரேய 5-44
சத்வம்ச காண்வ 8-8
சத்ரி வைரூப 10-114
ஸப்தகு ஆங்கிரஸ 10-47
சப்தவத்ரி 8-73
சப்தவத்ரி ஆத்ரேய 5-78
சப்திவஜம்ப ர 10-79/80
சப்ர த பாரத்வா ஜ 10-181
சரமா 10-108
இது முக்கியமான பெயர் . இந்த நாயின் கதை கிரேக்க நாடு வரை சென்று உருமாறிவிட்டது. அந்த மொழியில் ‘ச’ இல்லாததால் பெயரை ஹெர்மஸ் HERMES என்று மாற்றிவிட்டனர்.
XXXX
ஸர்வ ஹரி ஐந்த்ர 10-96
ஸவ்ய ஆங்கிரஸ 1-51/57
சச ஆத்ரேய 5-21
சச என்பதற்கு ஒரு பொருள் முயல்; முன்னர் முயல் காது என்று ஒரு பெயரைக் கண்டோம்.
ஸஹதேவ வார்சகிர 1-100
ஸஹதேவ என்ற பெயர் துருக்கி வரை சென்றுவிட்டது. இந்த மஹா பாரத பெயர் சாதேவனார் என்று தமிழ்ப் புலவர் பட்டியலிலும் வந்து விட்டது.
XXXX
சாதன பெளவன 10-157
சாரிஸ்ர்க்க சார்ங்க 10-142
ஸர்ப்ப ராக்ஞி 10-189
இந்தப் பெண் கவிஞரின் பெயர் பாம்பு ராணி. சித்து-சரஸ்வதி நதி தீர நாகரீகத்திலும், கிரேக்க நாட்டிலும் இரு கைகளில் 2 பாம்புகளைப் பிடித்துக்கொண்டு நிற்கும் உருவங்களைக் காண்கிறோம். ரிக்வேதத்தில் பாம்புராணி என்று முன்னரே கட்டுரை எழுதியுள்ளேன்.
XXX
சிகதா நிவாவரி 10-86; பெண் கவிஞர்
சிந்துக்க்ஷித் ப்ரையமேதா 10-75
சிந்துத் த்வீப அம்பரீஷ 10-9
இந்த இரண்டு பெயர்களும் முக்கியமான பெயர்கள். சிந்து-ஸரஸ்வதி நதி தீர INDUS VALLEY, SARASVATI RIVER BNK CIVILIZATION மன்னர்கள்; மகாபாரதத்திலும் சிந்து சமவெளி மன்னர்களைக் காண்கிறோம்.
வேத காலத்திலேயே காசி முதல் ஈரான் வரை புலவர்கள் பெயர்களும் மன்னர் பெயர்களும் இருப்பதாலும் ராமாயண காலத்திலேயே இந்துக்கள் இலங்கை வரை சென்றதாலும் உலகின் மிகப்பெரிய நாகரீகம் இந்து நாகரீகம் என்பது இலக்கியத்தில் நிரூ பிக்கப்படுகிறது
XXXX
ஸுகக்ஷ ஆங்கிரஸ 8-92/93
இவர் பெயர் நல்ல கண். தமிழிலும் நல்ல கண்ணு என்ற பெயர் உண்டு
சுகீர்த்தி காக்ஷி வத 10-131
நல்ல புகழ் என்று பொருள். பொதுவாக கீர்த்தி என்பது பெண்கள் பெயர்களில் அதிகம்
சுதம்பர ஆத்ரேய 5-11/14
இதுவரை வந்த பெயர்களில் குறைந்தது 4 பெயர்களிலாவது எண் 7 (ஸப்த ) இருக்கிறது. உலகில் இப்படி 100, 1000, 3, 7 எண்களுடன் உள்ள பெயர்களை இன்றும் இந்துக்களிடம் மட்டுமே காண்கிறோம். சிந்து வெளியிலும் எண் மூன்றும் ஏழும்தான் அதிகம். அது வேத கால நாகரீகம் என்பதற்கு எண்களையும் ஒரு ஆதாரமாகக் கொள்ளலாம்.
XXXX
371. சுதாஸ் பைஜாவன 10-133
இது வரலாற்றுச் சிறப்புமிக்க பெயர். கால்டு வெல் கும்பலுக்கும் மாக்ஸ்முல்லர் கும்பலுக்கும் வேட்டுவைக்கும் மன்னன் பெயர். ரிக் வேதம் முழுதும் பல இடங்களில் இந்த தாஸருக்கு வசிஷ்டர், விசுவாமித்திரர் ஆதரவு- அநாதரவு பற்றி பேசப்படுகிறது. சுதாஸ் சம்பந்தப்பட்ட வரலாற்றை வைத்து ஒரு கோடு போட்டு அவருக்கு முந்தையவர் யார் யார், பிந்தியவர் யார் யார் என்று கண்டுபிடிக்கலாம். ரிக் வேதத்தில் 500 ஆண்டு கால வரலாறு உள்ளதாக ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். பிற்காலத்தில் காளிதாஸ், சூர்தாஸ், துளசிதாஸ்,, புரந்தரதாஸ் , கனக தாஸ் என்று பல பெயர்கள் தோன்ற மூல கரணம் இவர்.
சுகர்ணோ = நல்ல கர்ணன் என்பது போல நல்ல தாசன் = சுதாஸ் என்று பெயர்.
XXXX
ஸு தீதி ஆங்கிரஸ 8-71
சுபர்ண காண்வ 8-59
சுபர்ண தார்க்ஷ்ய 10-144
சுபந்து கெளபாயன 5-24; 10-57/60
சுமித்ர வாத்ர்யஸ்வ 10-69/70
சுமித்ர கெளத்ஸ 10-105
சுராதா அல்லது சுமேத வார்சகிர 1-100
சுவேதா சைரிஷி 10-147
சுஹஸ்த்ய கெளசே ய 10-41
சுஹோத்ர பாரத்வாஜ 6-31/32
“சு” என்றால் நல்ல என்று பொருள்; தமிழிலும் நிறைய பெண்களும் ஆண்களும் தங்கள் பெயர்களை “நல்” என்று துவக்கினர் ; அவர்கள் அப்படியே வேத கால மரபைப் பின்பற்றினர். தமிழில் முன்னொட்டு PREFIX கிடையாது , பின்னொட்டுகள் SUFFIX மட்டுமே உண்டு என்று சொன்ன சிந்துவெளி ஆராய்ச்சி அரை வேக்காடுகளுக்கு செமை அடி கொடுக்கும் பெயர்கள் இவை.
XXX
சூர்யா சாவித்ரி 10-85
உலகம் வியக்கும் கல்யாண மந்திரத்தைப் பாடிய பெண் புலவர்களில் இவரும் ஒருவர்.
XXX
சு வேதா , சு ராதா என்பன பெண் பால் பெயர்களாக இருக்கலாம்.
கஸ்தூரி, மாணிக்கம் போன்ற பெயர்களை பெண்களும் ஆண்களும் வைத்துக் கொள்ளுவதால் கவனத்துடன் செய்ய வேண்டிய ஆராய்ச்சி இது .
XXX
சோபரி காண்வ 8-19/22
சோமாகுதி பார்கவ 2-4/7
ஸ்தம்ப மித்ர சாரக 10-142
ஸ்வஸ் யாத் ரேயஹ 5-50/51
ஹரிமந்த ஆங்கிரஸ 9-72
ஹர்யத ப்ராகாத 8-72
ஹவிர்த்தான ஆங்கி 10-11/12
XXXX
ஹிரண்ய கர்ப ப்ராஜா பத்ய 10-121
392.ஹிரண்ய ஸ்தூப ஆங்கிரஸ 1-31/35; 9-4; 9-69
இது வரை 392 புலவர்கள் பெயர்களைக் கண்டோம். இது தவிர யஜுர், சாம, அதர்வண வேதங்களில் மேலும் பல புலவர்கள் பெயர்கள் உள்ளன. செய்யுள் நடையில் உள்ள உபநிஷத்துக்களையும் சேர்த்தால் பட்டியல் இன்னும் நீளும். வெளிநாட்டினர் கணக்குப்படி, அவர்கள் பிற்காலத்தியவர் என்பதால் நான் இதில் சேர்க்கவில்லை.
XXXX
வேத அநுக்ரமணியைத் (INDEX OF VEDIC POETS AND POEMS) தொகுத்தவர் அற்புதமான பணியைச் செய்துள்ளார். இதைப் பார்த்த ஹாலன் என்ற மன்னன் 700 ப்ராக்ருத மொழி காதல் பாடல்களைத் தொகுத்தான். அதைப் பார்த்த தமிழர்கள் கி.பி. நாலாம் நூற்றாண்டில் சங்கப் பாடல்களைத் தொகுத்தனர்.
இந்தத் துறையில் — பெயர்கள் பற்றிய விஷயத்தில் — நீண்ட ஆராய்ச்சி தேவை. YANA “யான” என்று முடியும் பெயர்களை நாம் இப்போது காண முடிவதில்லை. காஸ்யப, அத்ரி முதலிய ரிஷிகள் பெயர்களை இன்றும் கடல்களில் CASPIAN SEA, ADRIATIC SEA காண்கிறோம்.
ஹிரண்ய என்றால் பொன் / தங்கம் GOLD ; இது BIG BANG பிக் பேங் எனப்படும் மாபெரும் பிரபஞ்ச வெடிப்புடன் தொடர்புடைய பெயர்!!!
ஆத்ரேய, ஆங்கிரஸ ரிஷிகள் வம்சம் அதிகம் காணப்படுகின்றன.
21/27 என்று நான் எழுதி இருந்தால் 21 முதல் 27 வரை அதே புலவர் யாத்தவை என்று பொருள்.
சில எண்கள் இரண்டு புலவர்களுக்கு ஒரே எண்ணாக இருக்கும். அப்படி இருந்தால் இருவரும் சில சில மந்திரங்களைக் கண்டு பிடித்தார்கள் என்று பொருள்.
இந்தப் பட்டியல் ஆங்கில நூலில் இருந்து எடுக்கப்பட்டது. ஒரே துதியில் சிற்சில மந்திரங்களை மட்டும் சில ரிஷிக்கள் பாடியிருப்பார்கள் ; அப்படிப்பட்ட சின்ன குறிப்புகளை நான் COPY ‘காப்பி’ செய்யவில்லை.
ஏற்கனவே பெண் புலவர்கள் பெயர்களையும், மன்னர்கள் பட்டியலையும் தனியாக வெளியிட்டிருக்கிறேன்.
சங்க இலக்கியம் போலவே மன்னர்களும் பெண்களும் கவி புனைந் திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாம் எழுதும் வரலாற்றுப் புஸ்தகங்களில் இந்தப் பெயர்களைச் சேர்க்க வேண்டும்.
சுபர்ண ,ஸ்யேன என்பது கருடன், கழுகு , பருந்து EAGLE, FALCON போன்ற பறவைகளைக் குறிக்கும். இன்று அமெரிக்கா போன்ற நாடுகளின் தேசீய சின்னத்தில் உள்ள கருடன், வேத காலத்தில் சிறப்புமிக்க பறவையாகத் திகழ்ந்தது. கழுகும் , பருந்தும் சோம லதா என்னும் செடியைக் கொண்டு தந்ததாக நிறைய பாடல்கள் உள்ளன. அதற்கெல்லாம் மாக்ஸ்முல்லர், கிரிப்பித் GRIFFITH கும்பல்களால் விளக்கம் சொல்ல முடியவில்லை .
–SUBHAM—
TAGS- 400, ரிக்வேத புலவர்கள், ரிஷிகள் , பட்டியல்– 8,