WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,771
Date uploaded in London – – 23 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷித செல்வம்
கல்வியறிவு பெறுவதைத் தடுக்கும் ஆறு தடைகள் யாவை?
ச.நாகராஜன்
அருமையான சில சுபாஷிதங்கள் இதோ:
பிபீலிகார்ஜிதம் தான்யம் மக்ஷிகாஸஞ்சிதம் மது |
லுப்தேன சஞ்சிதம் த்ரவ்யம் சமூலம் ஹி வினஷ்யதி ||
எறும்பினால் சேகரிக்கப்படும் தானியம், தேனீக்களினால் சேகரிக்கப்படும் தேன், பேராசை பிடித்தவனால் சேகரிக்கப்படும் பணம் ஆகியவை அனைத்தும் முற்றிலுமாக அழிந்துபடும்.
Grains collected by ants, honey stored by bees and wealth stored by a greedy person get totally destroyed.
*
யத்க்ரீடை: பாம்சுபி: ஸ்வலக்ஷணைர்வல்மீக: க்ரியதே மஹான்|
ந தத்ர பலசாமர்த்யமுத்யோகஸ்தத்ர காரணம் ||
சிறிய தூசித் துகள்களினால் பெரிய புற்றை உருவாக்கும் பூச்சிகள், அவற்றின் பலத்தினால் அவற்றை உருவாக்கவில்லை, அவற்றின் உழைப்பினாலேயே அவற்றை உருவாக்குகின்றன.
The fact that a big antihill is created by insects by means of fine particles of dust is due not to (their) power but to (their) industriousness.
*
ஸ்வச்சந்தத்வம் தனார்தித்வம் ப்ரேமபாவோர்த போகிதா|
ஆவினீதத்வமாலஸ்யம் வித்யா வக்னகராணி ஷட் ||
இன்பச் செய்கைகளில் ஈடுபடல், பணத்தில் ஆசை, ப்ரேம பாவனை, இன்பம் அனுபவித்தல், ஆணவம், சோம்பேறித்தனம் ஆகிய ஆறும் வித்யை (கல்வி அறிவு) அடைவதைத் தடுக்கும் தடைகளாகும்.
Acting at pleasure, desire for money, attachment, enjoyment, arrogance and laziness are the six thins which create obstacles in the way of knowledge.
*
சம்ப்ரம: ஸ்நேஹமாக்யாதி வபுராக்யாதி போஜனம் |
வினயோ வம்சமாக்யாதி தேஷமாக்யாதி பாஷிதம் ||
குழப்பம் நட்பைக் காட்டுகிறது. உண்ட உணவைச் சொல்கிறத் உடல். நல்ல குடும்பத்தைக் காட்டுகிறது வினயமாகப் பேசுதல். எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்பதை மொழி காட்டுகிறது.
Confusions speaks of affection. The body tells about the diet. Politeness commuuncates good family. Languge indicated the country.
*
கரபதரஸத்ருஷமகிலம் புவனதலம் யத்ப்ரஸாதத; கவய: |
பஷ்யந்தி சூக்ஷ்மமதய: ஸா ஜயதி சரஸ்வதி தேவீ ||
கையில் இருக்கும் இலந்தைப் பழத்தைப் பார்ப்பது போல உலகு அனைத்தையும் புத்தி கூர்மையுள்ள கவிஞர்களைத் தன் அருளினால் பார்க்க வைக்கும் சரஸ்வதி தேவிக்கு ஜயம் உண்டாகட்டும்!
May the Goddess Sarasvathi by victorious, by whose grace poets with sharp intellect see the whole world as if a jujube on the palm of the hand.
**
(English Translation by Saroja Bhate)
tags— கல்வியறிவு , ஆறு தடைகள்