Post No. 10,779
Date uploaded in London – – 25 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரசாந்தி, பிரசன்ன பகவத் கீதையில் சுவையான சொற்கள்
புட்டபர்த்தி கிராமத்தில் ஸ்ரீ சத்ய பாபா நிறுவிய பிரசாந்தி நிலையம் அவருடைய காலத்தில் உலகப் புகழ் பெற்றுவிட்டது. இந்த பிரசாந்தி என்ற அருமையான சொல் பகவத் கீதையில் உள்ள சொல் என்பது பலருக்கும் தெரியாது.
ஆண்களும் பெண்களும் பிரசன்னா என்ற பெயரை வைத்துக் கொள் வதைக் காண்கிறோம். இந்த பிரசன்னா என்ற சொல்லும் பகவத்கீதையில் உள்ளது.
பிரசாந்த — அதிக சாந்தி , மன நிம்மதி.
பிரசன்னா – அருள் கனிந்த முகம்
Xxx
இதோ பிரசாந்த, பிரசன்ன வரும் இடங்கள்
ப்ரசாந்த மனஸம் 6-27 – மிக சாந்தமான மனம், சாந்தியில் நிலைத்த மனத்தினனும்
प्रशान्तमनसं ह्येनं योगिनं सुखमुत्तमम्।
उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम्॥२७॥
ப்ரஸா²ந்தமநஸம் ஹ்யேநம் யோகி³நம் ஸுக²முத்தமம்|
உபைதி ஸா²ந்தரஜஸம் ப்³ரஹ்மபூ⁴தமகல்மஷம் ||6-27||
ஹி ப்ரஸா²ந்தமநஸம் = ஏனெனில் மனம் சாந்தமாக
அகல்மஷம் ஸா²ந்தரஜஸம் = மாசு நீங்கி, ரஜோ குணம் ஆறி
ப்³ரஹ்மபூ⁴தம் = பிரம்மமேயாகிய
ஏநம் யோகி³நம் = இந்த யோகிக்கு
உத்தமம் ஸுக²ம் உபைதி = மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது
மனம் சாந்தமாய், ரஜோ குணம் ஆறி, மாசு நீங்கி, பிரம்மமேயாகிய இந்த யோகிக்கு மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது. (6-27)
http://www.sangatham.com/bhagavad_gita/gita-
xxx
ப்ரசாந்தஸ்ய 6-7 அமைதியான உள்ளம் உடையவனுக்கு
ப்ரசாந்தாத்மா 6-14 – அமைதியான உள்ளம் உடையவன் , அலையாத மனத்தனாய்
xxxx
ப்ரசன்ன சேதஸஹ 2-65 தெளிந்த மனம் உடையவனுக்கு
ப்ரசன்னேன 11-47 அருள் கனிந்த , அன்புடன் கூடிய
श्रीभगवानुवाच
मया प्रसन्नेन तवार्जुनेदं रूपं परं दर्शितमात्मयोगात् ।
तेजोमयं विश्वमनन्तमाद्यं यन्मे त्वदन्येन न दृष्टपूर्वम् ॥११- ४७॥
ஸ்ரீப⁴க³வாநுவாச
மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேத³ம் ரூபம் பரம் த³ர்ஸி²தமாத்மயோகா³த் |
தேஜோமயம் விஸ்²வமநந்தமாத்³யம் யந்மே த்வத³ந்யேந ந த்³ருஷ்டபூர்வம் || 11- 47||
ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
அர்ஜுந = அர்ஜுனா
ப்ரஸந்நேந = அருள் கொண்டு
மயா ஆத்மயோகா³த் = என்னுடைய யோக சக்தியினால்
பரம் தேஜோமயம் = மிகச் சிறந்ததும் ஒளி மயமானதும்
ஆத்³யம் அநந்தம் = முதல் ஆனதும் முடிவற்றதுமான
யத் மே விஸ்²வம் ரூபம் = எந்த என்னுடைய விஸ்வ ரூபத்தை
தவ த³ர்ஸி²தம் = உனக்குக் காட்டப் பட்டதோ
இத³ம் த்வத் அந்யேந = இவ்வடிவம் உன்னைத் தவிர (வேறு எவராலும்)
ந த்³ருஷ்டபூர்வம் = பார்க்கப் படவில்லை
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, யான் அருள்கொண்டு ஆத்ம யோகத்தால் எனது பரவடிவை நினக்குக் காண்பித்தேன். ஒளிமயமாய் அனைத்துமாய், எல்லையற்றதாய், ஆதியாகிய இவ் வடிவத்தை இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாரும் பார்த்ததே கிடையாது.
http://www.sangatham.com/bhagavad_gita/gita-
xxx
இனி பிரசன்னா, பிரசாந்த் , சாந்தி என்று பெயர் வைக்கத் தயங்க வேண்டியதே இல்லை.
பிரசாந்தி நிலையத்துக்குச் சென்றோருக்கு, செல்வோருக்கு , தெளிந்த, ஆரோக்கியமான சிந்தனைகள் மலரும் என்பதிலும் ஐயமில்லை .
–subham–TAGAS- பிரசன்னா, பிரசாந்த் , சாந்தி, பிரசாந்தி